சற்றே பெருமுச்செறிந்து நான் பொறுமை காக்கிறேன், சுற்றியும் நடக்கும் தீமைகளையும் அதை செயற்படுத்தும் அரக்கர்களையும் இன்றே ஒரு சூரசம்ஹாரம் செய்யும் வரம் ஒன்று எனக்குத் தா என்று இடமும் வலமும் ஓடி, மேல் நோக்கி கை கூப்பி ஏதோ ஒரு பெருஞ்சக்தியிடம் வேண்டுகிறேன்....!
ஆன்மீகம் என்ற பெயரால் அத்துமீறல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நித்யானந்தன் என்ற புழுவினை இக்கணமே இந்த பிரபஞ்சத்தை அசைத்து உருட்டி நகர்த்திக் கொண்டிருக்கும் சக்தி அசைத்துப் போட்டு விடக் கூடாதா என்ற என் கோப அக்னி சூடேறி கண்களின் வழியே ரெளத்ரமாய் பரவ எண்ணங்கள் அதே கதியில் எழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. திறந்தே விடட்டும் நெற்றிக் கண் என்று புருவ மத்தியில் எண்ணங்களைச் சேர்த்து அதை இக்கட்டுரையாக்கியிருக்கிறேன்.
கற்றாயா? தெளிந்தாயா? பகின்றாயா? சாந்த சொரூபியாய் உன்னில் நீயாய் இருந்தாயா? அகண்ட திறந்த வெளியில் நீ கற்றதை லெளகீக இச்சைகளின்றி மனிதர்களுக்குப் பயிற்றுவித்தாயா? மானுடக்கூட்டம் தெளிந்தது என்ற திருப்தியில் உனது மெளனங்களின் அடர்த்தியில் நிர்சங்கற்ப சமாதியில் உன்னை உகுத்தாயா? இதுவெல்லாமற்று நீ நடத்தும் நாடகங்களின் பெயர்தான் ஆன்மீகமா? தன்னிலை உணர்ந்த உன்னதமா? நீ துறவியா? நீ சன்மார்க்க விதிகளை பரப்புரை செய்யும் சாந்த சொரூபியா....?
அப்பட்டமாய் ஒரு தேசத்தின் வேரிலிருந்து கிளைத்த வழிமுறையின் சூத்திரங்களை வாசித்து அதில் சிலவற்றை உணர்ந்து கிஞ்சித்தேனும் அவற்றைப் பின்பற்றமால் முற்றிலும் எதிர் திசையில் பயணிக்கும் நித்யானந்தர் என்னும் இராஜ சேகரா? உனக்கும் நீ சார்ந்திருப்பதாக கூறும் ஒரு வழிமுறைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை இக்கணமே அறுதியிட்டு எம்மளவில் எம்மவருக்கு அறிவிக்கிறோம்.
தியானத்தை கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லுமிடத்தில் ஆரம்பிக்கிறது முதல் முரண். அதற்கு கட்டணம் வசூலித்தது இரண்டாவது முரண். ஆன்மீக சேவை என்பது என்ன? என்றறியா பாலகனே, நீ சமூக சேவை செய்யவேண்டும் என்று யார் உன்னிடம் வந்து மண்டியிட்டு அழுதார்கள். ஆன்மிகத்தை அறிகிறேன் பேர்வழி என்று அத்துமீறி மனிதர்களைக் குழப்பி விட்டு அநீதிகளை இழைக்கும் நீ கடவுளா?
நீதான் கடவுளென்றால் நாங்கள் சாத்தானை வணங்கி விட்டுப் போகிறோம்!
தன்னில் தன்னை உணர்ந்த முக்தன் மனிதர்களுக்குp போதிக்க வேண்டியது... நிலையாமையை, தான் கற்றுக் கொண்ட ஒழுக்கத்தை, தன்னில் இருக்கும் அமைதியை, பிரபஞ்ச சூத்திரத்தில் இருந்து உமது மூளைக்குள் ஏறிக் கரைந்து போன சத்தியத்தைப் போதிக்க உனக்கு லட்சங்களில் பணம் எதற்கு...?
ஆன்மீகம் உனது பணி, ஆன்ம பலத்தை மனிதர்களுக்கு விதைப்பது உமது கடமை. இன்ன பிற சமூக நல அக்கறை உமக்கு இருந்தால், உம்மிடம் கற்க வரும் மனிதர்களை.... இருக்கும் சமூக நல இயக்கங்களுக்கு, அனாதை ஆசிரமங்களுக்கு, ஏழைகளுக்கு, முதியோர் இல்லங்களுக்கு நேரடியாய் சென்று உதவிகள் செய்யுமாறு பணிக்கலாம்தானே?
முற்றும் துறந்த துறவியெனில் நிர்வாகமும் பதவியும் உமக்கெதற்கு? காலமெல்லாம் ஆன்மீகத்தின் வேர்கள் பரவி நின்று எப்போதும் நல்வழி காட்டும் பூமியும் பாரதம்தான், காலமெல்லாம் ஆன்மீகத்தின் பெயரால் எம்மக்களை சீரழித்து சின்னாபின்னமாக்கி, அதன் பொருட்டு பலதரப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களை பிறப்பித்த ஒரு தேசமும் பாரதமும்தான்...!
ஆன்மிக அரைகுறை நித்தியானந்தாவின் முகத்திரையை எல்லாம் வல்ல பெரும் சக்தி நவீன கால தமது அஸ்திரத்தின் மூலம் கிழித்தெறிந்தது. நித்யானந்தன் இல்லறவாசியாக இருப்பது தவறு என்று பரதகண்டத்தில் இருக்கும் பூர்வாங்க வழிமுறை நிர்ப்பந்திக்கவில்லை. பிரம்மச்சார்யம் என்பதை ஒரு வழிமுறையாக சூழல்கள் பொருந்தி வருபவருக்கான சாஷ்டாங்கமாத்தான் பார்க்கச் சொல்லியிருக்கிறது.
இல்லறம் என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது என்று யாரோ ஒரு குருட்டுப் பார்வைகள் கொண்டவன் எங்கோ போதித்து செல்ல...இந்த நித்யானந்தர்களுக்கு தம்மை பிரம்மச்சாரிகள் என்று அறிவித்து ஆசி வழங்குவதே பெரிய சுத்த புருசர்கள் என்று தம்மைக் காட்டிக் கொடுக்கும் நிகழ்வாய் அறியப்பட்டது.
நீ பெண்ணோடு சல்லாபித்ததில் யாதொரு குற்றமும் இல்லை நித்யானந்தா ஆனால் நீ பிரம்மச்சார்யன் என்று கோடாணு கோடி மனிதர்களின் மனதினின் விதைத்த நம்பிக்கை நச்சுதான் குற்றமாகிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல சத்தியம் உன் துகிலுரித்த பின்னும், வேண்டிய பாடங்களை பிரபஞ்சம் குறைவற்று வழங்கிய பின்னும் மீண்டும் மீண்டும் நீ பல்வேறு பொய்களைச் சொல்லி உன்னை நிரூபிக்க முயலும் குரூர புத்தியின் பின்னால் ஒளிந்திருக்கிறது உனக்குள் இருக்கும் மிருகம்.
18 சித்தர்களில் இல்லறத்தார்கள் இருந்தார்கள், மாமுனிகள் எல்லாம் மனைவிகளைக் கொண்டிருந்தார்கள், இது காலத்தின் வரலாறு, ஆனால் உன்னைப் போன்ற கத்துக் குட்டி கன்று குட்டிகள் இன்று போதிக்கும் பாடங்கள் எல்லாம் எம்மைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உன் மட மூளை இன்னமும் அறியாமல் நீ இன்னமும் மக்களைக் கூட்டுகிறாயா? நீசனே!!! குண்டலினையை உயர எழுப்ப நீ சவால் விடுகிறாயா? சத்திய வழிமுறைகளை கேலிக்குரியாதாக்குகிறாயா?
ஓராயிரம் பேர் உன் முன்னால் பைத்தியங்கள் போல எம்பி எம்பிக் குதிக்க நீ மாலைகள் இட்டு காவியுடுத்தி கையசைத்து சிரிக்கிறாயா? கயவனே? உன்னை ஊடகங்களில் காட்சிப்படுத்தியவர்களின் மனதில் ஒராயிரம் குற்றங்கள் இருக்கலாம் ஆனால் அவற்றைக் கூட ஏற்றுக் கொண்டு விடலாம் ஏனென்றால் அவர்கள் தங்களை சுத்த சித்த புருஷர் என்றும் தம்மைக் கடவுளர் என்றும் எப்போதும் கூறியதில்லை. அவர்கள் சாதரண மானுடர்தாம் உள்நோக்கங்கள் இருக்கலாம் ஆனால் உன் நோக்கம் சரியானாதா?
இனியும் நீ ஒரு மதத்தின் ஆன்மிகத் தலைவன் என்ற பதம் கொள்ள வேண்டாம். எம்மக்களை சீர்திருத்துகிறேன் பேர்வழி என்று எம்மை சீர்கெடுக்கவேண்டாம். காலமும் வாழ்க்கையும் உனக்கு ஏற்கனவே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டது. ஒரு ஆன்மீகவாதி என்று அறிவித்துக் கொண்ட உனக்கு, முற்றும் துறந்தவன் என்று கொக்கரித்த உனக்கு தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் இப்போதும் நீ அடங்கவில்லை எனில் இன்னமும் கொடுமையான பாடங்களை எடுக்கும்....நீ உன்னைக் காத்துக் கொள்...!
எம் மக்களை தத்தம் அறிவுகள் காக்கும்...!
எம் மக்களே....! ஆன்மீகம் என்ற பெயரில் பணம் வசூலிப்பவன் முதல் திருடன்.
ஆன்மீகம் கற்றுத் தருகிறேன் என்று கூறுவது போலி வழிமுறை. ஆன்மீகம் உங்களுக்குள் உள்ள ஒரு விசயம், அதை தனித்தமர்ந்து நீவீர் உம்மை உற்று நோக்கி உமது குறை நிறைகளை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது சத்திய புருசர்களாக நீங்கள் மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்தே விடும். ஒரு நல்ல குரு உங்களை உற்று நோக்குகிறார், உங்களிடம் தாம் போதிக்க விரும்புவதை பெரும்பாலும் உங்களைக் கொண்டே செய்ய வைக்கிறார்கள்...
ஆன்மீகம் கற்றுத் தருகிறேன் என்று கூறுவது போலி வழிமுறை. ஆன்மீகம் உங்களுக்குள் உள்ள ஒரு விசயம், அதை தனித்தமர்ந்து நீவீர் உம்மை உற்று நோக்கி உமது குறை நிறைகளை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது சத்திய புருசர்களாக நீங்கள் மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்தே விடும். ஒரு நல்ல குரு உங்களை உற்று நோக்குகிறார், உங்களிடம் தாம் போதிக்க விரும்புவதை பெரும்பாலும் உங்களைக் கொண்டே செய்ய வைக்கிறார்கள்...
ஆன்மீகம் என்பது ஓவ்வொரு மனிதனிதனும் தன்னையும் தன் சுற்றுப் புறத்தையும் உணர்ந்து உள்வாங்கி வாழ வழி சொல்லும் ஒரு வழிமுறை. இதை நித்யானந்தர் போன்ற ஆசாமிகள் தடம் புரட்டி விட்டு போடும் கூத்துக்களை எல்லாம் ஆளும் அரசுகளும் மக்களும் பொறுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டுமா என்ன?
உங்களில் யாராய் வேண்டுமானாலும் இப்படிபட்ட ஆசாமிகளை ஆதரிப்பவர்களாக இருக்கலாம். உங்களில் உறவினர்கள் நண்பர்கள் அல்லது வேறு தெரிந்தவர்கள் கூட இருக்கலாம். எல்லோரையும் அவசர கதியில் அழைத்து தத்தம் பணிகளை செவ்வனே செய்யச் சொல்லுங்கள்....
எவனொருவன் தன்னுடைய கடமையை தன்னை உணர்ந்து செய்கிறானோ, எவன் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் இயன்றவரையில் துன்பம் தராமல் வாழ்கிறானோ அவனெல்லாம் கடவுளே....!
இருப்பது எல்லாம் கடவுளர்தாம்...கடவுளுக்கு நான் நெருக்கமானவன் அல்லது நான் மட்டும்தான் கடவுள் என்று எவரேனும் கூறி வந்தால் பாரதி சொன்னது போல காறி உமிழ்ந்து, மோதி மிதித்து விரட்டியே அடிப்போம்..!
தெளிவான சமுதாயத்தின் அங்கத்தினராவோம்...! கூர்மையான பார்வைகள் கொள்வோம்...!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
30 comments:
நாட்டில் பல நித்தியானந்தர்கள் உள்ளனர். மக்கள் உணர்ந்தால் சரி.
//ஆன்மீகம் உனது பணி, ஆன்ம பலத்தை மனிதர்களுக்கு விதைப்பது உமது கடமை. இன்ன பிற சமூக நல அக்கறை உமக்கு இருந்தால், உம்மிடம் கற்க வரும் மனிதர்களை.... இருக்கும் சமூக நல இயக்கங்களுக்கு, அனாதை ஆசிரமங்களுக்கு, ஏழைகளுக்கு, முதியோர் இல்லங்களுக்கு நேரடியாய் சென்று உதவிகள் செய்யுமாறு பணிக்கலாம்தானே?//
பணம் வாங்கி சேவை செய்வதாக சொல்லும் எல்லா சாமியார்களுக்கும் பொருந்தும் வரிகள்.நல்ல பதிவு..!!
/*
நீதான் கடவுளென்றால் நாங்கள் சாத்தானை வணங்கி விட்டுப் போகிறோம்!
*/
நெத்தியடி வரிகள்...
/*
இருப்பது எல்லாம் கடவுளர்தாம்...கடவுளுக்கு நான் நெருக்கமானவன் அல்லது நான் மட்டும்தான் கடவுள் என்று எவரேனும் கூறி வந்தால் பாரதி சொன்னது போல காறி உமிழ்ந்து, மோதி மிதித்து விரட்டியே அடிப்போம்..!
தெளிவான சமுதாயத்தின் அங்கத்தினராவோம்...! கூர்மையான பார்வைகள் கொள்வோம்...!
*/
உண்மையான தெளிவான அறிவுள்ள சிந்தனை வரிகள். வாழ்த்துக்கள்.
வணக்கம்
நண்பரே தங்களின் இந்த பதிவு அறியாமையில் வாழ்ந்து வரும் மக்களுக்குக்கு மிகப்பெரும் அறியுரை ஏமாற்று காரர்களுக்கு மிகப் பெரிய சரியான சாட்டை அடி தங்களின் சிந்தனையில் உதிர்த்த இந்த முத்தான வாக்கியங்கள் எல்லா மக்களுக்கும் சென்றடையும் வகையில் காப்பி எடுத்து கொடுக்க தங்களின் அனுமதியை கோருகிறேன் வளரட்டும் தங்களின் இப்பணி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் எனது அருமை நண்பரே .வணக்கம் .
நண்பரே தங்களின் இந்த பதிவு அறியாமையில் வாழ்ந்து வரும் மக்களுக்குக்கு மிகப்பெரும் அறியுரை ஏமாற்று காரர்களுக்கு மிகப் பெரிய சரியான சாட்டை அடி தங்களின் சிந்தனையில் உதிர்த்த இந்த முத்தான வாக்கியங்கள் எல்லா மக்களுக்கும் சென்றடையும் வகையில் காப்பி எடுத்து கொடுக்க தங்களின் அனுமதியை கோருகிறேன் வளரட்டும் தங்களின் இப்பணி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் எனது அருமை நண்பரே .வணக்கம் .
//ஆன்மீகம் என்ற பெயரால் அத்துமீறல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நித்யானந்தன் என்ற புழுவினை இக்கணமே இந்த பிரபஞ்சத்தை அசைத்து உருட்டி நகர்த்திக் கொண்டிருக்கும் சக்தி அசைத்துப் போட்டு விடக் கூடாதா என்ற என் கோப அக்னி சூடேறி கண்களின் வழியே ரெளத்ரமாய் பரவ எண்ணங்கள் அதே கதியில் எழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. திறந்தே விடட்டும் நெற்றிக் கண் என்று புருவ மத்தியில் எண்ணங்களைச் சேர்த்து//
Control...Control :)
எல்லாஞ்சரி.... படத்தப் போட்டு எது விளம்பரம் தறீங்க..
எழுத்துக்களே நல்ல படம் காமிக்குதே..
கடந்த ஒரு வாரமாகவே நித்யானாந்தா ராஜசேகரன் மீதான கோபம் மனதுக்குள் அடைகாத்துக்கொண்டிருக்கிறது.எனது எண்ணத்தின் சாரத்தை பதிவு அப்படியே பதிவு செய்கிறது.
நித்யானந்தா ராஜசேகரன் குறித்தான திரைமறைவு காட்சிகள்,இப்போது ரஞ்சிதாவுடன் வந்து துணிவோடு பேட்டி தரும் வைபவங்கள்,திசை திருப்பல்கள்,நக்கீரன் காட்சி மற்றும் சாட்சி அமைப்புகள்,அரசியல் பின்புலங்கள் என பல்வேறு கோணங்கள் இருப்பதற்கும் அப்பால் கார்பரேட் குரு மையப்புள்ளியின் பிரம்மச்சரியத்தை கொச்சைப்படுத்திய அயோக்கியத்தனம் மன்னிக்க முடியாத ஒன்று.
மனிதர்களை தெய்வமாக பார்த்தால் யாருமே நித்யானந்தர்களாகதான் முயர்ச்சிப்பார்கள்
நியாயமான கருத்துக்கள்.இந்த ஏமாற்றுக்காரனும்,அவன் பின் செல்லும் பைத்தியக்காரன்களும் திருந்துவார்களா? சந்தேகம் தான்.
சில ஜென் கதைகள்,வாழ்க்கை நெறி, சுய முன்னேற்ற வழிமுறைகள் பற்றிய புத்தகங்கள் படித்து இருந்தால் போதும் தான் ஒரு சாமியார் என்று சிலர் எண்ணி கொண்டதின் விளைவு...!!
ஆதரிப்பவர்களும் தங்கள் ஆதரவை நியாயபடுத்துறாங்க !!
ஆதங்கம், ஆவேசம் தாங்கிய நல்ல படைப்பு !
\\கற்றாயா? தெளிந்தாயா? பகின்றாயா? சாந்த சொரூபியாய் உன்னில் நீயாய் இருந்தாயா? அகண்ட திறந்த வெளியில் நீ கற்றதை லெளகீக இச்சைகளின்றி மனிதர்களுக்குப் பயிற்றுவித்தாயா? மானுடக்கூட்டம் தெளிந்தது என்ற திருப்தியில் உனது மெளனங்களின் அடர்த்தியில் நிர்சங்கற்ப சமாதியில் உன்னை உகுத்தாயா? இதுவெல்லாமற்று நீ நடத்தும் நாடகங்களின் பெயர்தான் ஆன்மீகமா? தன்னிலை உணர்ந்த உன்னதமா? நீ துறவியா? நீ சன்மார்க்க விதிகளை பரப்புரை செய்யும் சாந்த சொரூபியா....?\\ இதெல்லாம் சாமியாருக்கு Mandatory Requirements என்று எந்த சட்டம் சொல்கிறது, நீங்களாக ரொம்பவும் எதிர் பார்த்தால் அதற்கு நானா பொறுப்பு? [இது நித்தியின் பதில். ஹி..ஹி....ஹி...]
\\தியானத்தை கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லுமிடத்தில் ஆரம்பிக்கிறது முதல் முரண். அதற்கு கட்டணம் வசூலித்தது இரண்டாவது முரண். \\ சட்டப்படி நான் எந்த தவறும் செய்யவில்லை. உங்களுடைய வரையரைப் படி நான் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. -By Rajasekhar @ Ranjithananda.
\\\ஆன்மீக சேவை என்பது என்ன? என்றறியா பாலகனே, நீ சமூக சேவை செய்யவேண்டும் என்று யார் உன்னிடம் வந்து மண்டியிட்டு அழுதார்கள். \\ மக்களை கரைசேர்க்க என்னை நானே அர்ப்பணித்துக் கொண்டேன், நானாகவே சென்று அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு ஞான ஒளியை ஏற்றுகிறேன். உங்கள் கட்டளைக்கு காத்திருக்க வேண்டியதில்லை,-By Rajasekhar @ Ranjithananda.
\\நீதான் கடவுளென்றால் நாங்கள் சாத்தானை வணங்கி விட்டுப் போகிறோம்! \\ என்னுடைய முக்கியமான பன்ச் டயலாக்கை மறந்து விட்டு பேசுகிறீர்கள். "நான் கடவுள் என்று சொல்ல வரவில்லை, நீங்கள் எல்லோரும் கடவுள் என்பதைச் சொல்ல வந்திருக்கிறேன்". அடுத்த பன்ச், "ஆன்மீக குரு தேவையில்லை என்று போதனை செய்யும் குரு நான்"
\\தன்னில் தன்னை உணர்ந்த முக்தன் மனிதர்களுக்குp போதிக்க வேண்டியது... நிலையாமையை, தான் கற்றுக் கொண்ட ஒழுக்கத்தை, தன்னில் இருக்கும் அமைதியை, \\ இது நீங்க தயார் செய்த சிலபஸ், நான் அதை எதுக்கு நடத்தனும், நான் என்னோட சிலபஸ் ஐத்தான் நடத்துவேன்.
\\பிரபஞ்ச சூத்திரத்தில் இருந்து உமது மூளைக்குள் ஏறிக் கரைந்து போன சத்தியத்தைப் போதிக்க உனக்கு லட்சங்களில் பணம் எதற்கு...?\\ ரஞ்சிதாவைக் கரெக்ட் செய்வதற்கு.
\\ஆன்மீகத்தின் பெயரால் எம்மக்களை சீரழித்து சின்னாபின்னமாக்கி, அதன் பொருட்டு பலதரப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களை பிறப்பித்த ஒரு தேசமும் பாரதமும்தான்...!\\ அதென்னது, கடவுள் இல்லைன்னு சொன்னால் அதற்குப் பெயர் பகுத்தறிவா? பகுத்தறிவு நிஜமாவே உள்ள ஒருத்தன் எல்லாத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால் நிச்சயம் இறைவன் இருக்கிறான் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள், கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள், காட்டு மிராண்டி.
\\இல்லறம் என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது என்று யாரோ ஒரு குருட்டுப் பார்வைகள் கொண்டவன் எங்கோ போதித்து செல்ல...இந்த நித்யானந்தர்களுக்கு தம்மை பிரம்மச்சாரிகள் என்று அறிவித்து ஆசி வழங்குவதே பெரிய சுத்த புருசர்கள் என்று தம்மைக் காட்டிக் கொடுக்கும் நிகழ்வாய் அறியப்பட்டது.\\ அரசியல் வாதி, நான் யோக்கியன் மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பதவியில் அமர்ந்த பின்னர் லட்சம் கோடிகளில் சுருட்டுகிரானே , அதற்க்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏமாந்தவன் போலிச் சாமியார் மட்டும் தானா?
\\எம் மக்களே....! ஆன்மீகம் என்ற பெயரில் பணம் வசூலிப்பவன் முதல் திருடன்.
ஆன்மீகம் கற்றுத் தருகிறேன் என்று கூறுவது போலி வழிமுறை. ஆன்மீகம் உங்களுக்குள் உள்ள ஒரு விசயம், \\ குரு தேவையில்லை என்று சொல்கிறீர்கள், ஆனால் \\அதை தனித்தமர்ந்து நீவீர் உம்மை உற்று நோக்கி உமது குறை நிறைகளை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது சத்திய புருசர்களாக நீங்கள் மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்தே விடும்.\\ இதையும் நீங்கள் போதிக்க வேண்டித்தானே இருக்கிறது? குரு தேவையில்லை என்பது உண்மையானால், அதை நீங்கள் சொல்லாமலேயே ஒவ்வொருக்கும் ஏன் தெரிந்திருக்க வில்லை? [இதை நான் கேட்கிறேன், ஹி...ஹி...ஹி...]
\\எவனொருவன் தன்னுடைய கடமையை தன்னை உணர்ந்து செய்கிறானோ, எவன் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் இயன்றவரையில் துன்பம் தராமல் வாழ்கிறானோ அவனெல்லாம் கடவுளே....!இருப்பது எல்லாம் கடவுளர்தாம்...\\ நித்தி வேண்டாமுன்னு சொல்லிட்டு, நீங்க இன்னொரு போதனையை ஆரம்பிச்சிட்டீங்களே!! ஆரம்பத்தில நித்தி கூட இப்படித்தான் ஆரம்பிச்சிருப்பார், காசு பணம் வந்தது, அதைப் பார்த்ததும் ரஞ்சிதாவும் வந்தாள் விழுந்தான் ராஜசேகர்.
முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்
ஜெய தேவ் @ உங்களின் ஆழமான வாசிப்புக்கு முதற்கண் நன்றி. வரி வரியா எடுத்து அதற்கு கருத்துரை இட்டிருக்கும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இந்த கருத்துரைக்கு பதில் சொல்லும் தார்மீக இருக்கிறது. மற்றதெல்லாம் தாங்கள் வாசித்து மகிழ்ந்த இடங்கள் என்று கொள்கிறேன்.
//நித்தி வேண்டாமுன்னு சொல்லிட்டு, நீங்க இன்னொரு போதனையை ஆரம்பிச்சிட்டீங்களே!! ஆரம்பத்தில நித்தி கூட இப்படித்தான் ஆரம்பிச்சிருப்பார், காசு பணம் வந்தது, அதைப் பார்த்ததும் ரஞ்சிதாவும் வந்தாள் விழுந்தான் ராஜசேகர்.
//
மேலே தாங்கள் கூறியிருக்கும் விமர்சனங்கள் போல எதுவும் தனக்கு வந்து விடுமோ என்று எண்ணியே மிகைப்பட்டவர்கல் மெளனித்து நிற்கிறார்களோ என்று எண்ணுகிறேன்...!
போதனைகள் இல்லாத வாழ்க்கை எங்கே இருக்கிறது ஜெயதேவ்? வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களிலும் நமக்கு கல்வி (வாழ்க்கை) அவசியமாயிருக்கிறது யாரோ ஒருவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ போதித்துக் கொண்டிருக்கிறது. நாம் கற்றுக் கொண்டுதானிருக்கிறோம்.
போதிப்பதில் தவறில்லை போதிப்பவனில் தவறுகள் வருவதுதான் பிரச்சினை. உங்களின் தொடர் அனுபவங்களும் நித்தியானந்தன் போன்றவர்களின் செயல்களும் ஒரு வேளை இப்படி சிந்திக்க வைத்திருக்கலாம். ஆனால் ஒரு சோறு பதம் என்பது எல்லாம் பழமொழி மட்டும்தான்....நன்மையை காத்திருந்து தேடித்தான் பெறவேண்டும்.
இது கூட போதனை என்று கூறி நீங்கள் கேலிக்குரியவனாய் ஆக்கலாம், நீங்கள் உங்கள் கருத்துரையில் கூறியவை எல்லாம் போதனையா? என்று எதிர்கேள்வி நானும் கேட்கலாம்...
அதுவல்ல நமது கருப்பொருள்.
நன்றிகள் ஜெயதேவ்...! கழுகினை தொடர்ந்து வாசித்து, விமர்சித்து எங்களை வலுப்படுத்துங்கள்!
//எம் மக்களே....! ஆன்மீகம் என்ற பெயரில் பணம் வசூலிப்பவன் முதல் திருடன்.
ஆன்மீகம் கற்றுத் தருகிறேன் என்று கூறுவது போலி வழிமுறை. ஆன்மீகம் உங்களுக்குள் உள்ள ஒரு விசயம், அதை தனித்தமர்ந்து நீவீர் உம்மை உற்று நோக்கி உமது குறை நிறைகளை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது சத்திய புருசர்களாக நீங்கள் மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்தே விடும். ஒரு நல்ல குரு உங்களை உற்று நோக்குகிறார், உங்களிடம் தாம் போதிக்க விரும்புவதை பெரும்பாலும் உங்களைக் கொண்டே செய்ய வைக்கிறார்கள்...
//
சத்தியமான வார்த்தைகள். உண்மையான ஆன்மீகவாதிகள் (அது எந்த மதமாக இருந்தாலும்) தங்கள் புகழுக்காக,பணத்துக்காக எதையும் செய்வதில்லை.
நீதான் கடவுளென்றால் நாங்கள் சாத்தானை வணங்கி விட்டுப் போகிறோம்!-கழுகு
மனிதர்களை தெய்வமாக பார்த்தால் யாருமே நித்யானந்தர்களாகதான் முயர்ச்சிப்பார்கள்-ஷர்புதீன்
நல்ல கருத்துக்கள்.
ஆன்மீக குரு மிக்க அவசியம் நண்பரே. நிலத்தில் விதை என்று ஒன்று விழுந்தால் தான் அது செடியாக முளைத்து மரமாக மாறி கனியைக் கொடுக்கும். அதே போல நம் இதயத்தில் பக்தியின் விதையில் ஊன்ற ஒரு ஆன்மீக குருவால் மட்டுமே முடியும். நீங்கள் சொன்னது போல, \\ஆன்மீகம் உங்களுக்குள் உள்ள ஒரு விசயம், அதை தனித்தமர்ந்து நீவீர் உம்மை உற்று நோக்கி உமது குறை நிறைகளை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது சத்திய புருசர்களாக நீங்கள் மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்தே விடும்.\\ ஒரு போதும் குருவின் தயவில்லாமல் தானாக எதுவும் நடக்காது.
\\எவனொருவன் தன்னுடைய கடமையை தன்னை உணர்ந்து செய்கிறானோ, எவன் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் இயன்றவரையில் துன்பம் தராமல் வாழ்கிறானோ அவனெல்லாம் கடவுளே....! இருப்பது எல்லாம் கடவுளர்தாம்..\\ எந்த ஒரு நிலையிலும் மனிதன் கடவுளாக முடியாது நண்பரே. [மாயையின் பிடியில் இருந்தாலும் சரி, விடுபட்டு வீடு பேரு கிடைத்தாலும் சரி, இதுவே உண்மை.] கடவுளுக்கு நிகரான பவித்ரமான நிலையை அடைய முடியும், ஆனால் அவரு எப்போவும் முதாலாளிதான், நாம் எப்போதும் தொழிலாளிதான், இந்த உண்மை ஒருபோதும் மாற்றவே முடியாது!!
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்... பல அன்பர்களின் உள்ளக் குமுறல்களை நீங்கள்
வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.. அதுவும் அந்த குண்டலினியை மேலெலுப்புகிறேன் என்று கூறி
இந்த கூட்டம் போட்ட ஆட்டத்தை பார்த்து மிகவும் மனம் வெதும்பினேன். இதற்க்கெல்லாம் ஒரு நாள்
அந்த கூட்டம் எல்லாம் வல்ல இறை ஆற்றலுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்தே ஆகும்
என நம்புகிறேன். எங்களைப் போன்றவர்களின் வேதனையை நீங்கள் வெளிப்படுத்தியமைக்கு
மிக்க நன்றி நண்பரே!
வாழ்க வளமுடன்!
inda Nithyananda Nikka vachi Sudanum.Ethu nadanthalum avan pinnal nirkum naigalaukku vetkam illai
நண்பருக்கு வணக்கம்,
எனக்கும், நித்யானந்தரை பிடிக்கவில்லை. பல புகார்கள் இருந்த போதிலும் ஏதேனும் ஒரு வகையில் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் அல்லவா, அப்படி பார்க்கும் போது இவரிடம் வகுப்புகளை கற்பவர்கள் கண்டிப்பாக பணக்காரர்களாக தான் இருக்கிறார்கள்
அப்படியாவது ஏழைகளுக்கு உதவி கிடைக்கிறது. எனவே பொதுப்படையாக பார்க்கும் போது ஒரு சாமியார் செய்வது தவறு என்றாலும்
ஒரளவாவது இவர்களின் மூலம் சமுதாயத்திற்கு உதவி கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை இவர்கள் செய்வது ஆன்மீகத்துக்கான ட்ரென்ட் அவ்வளவு தான்.
//எனக்கும், நித்யானந்தரை பிடிக்கவில்லை. பல புகார்கள் இருந்த போதிலும் ஏதேனும் ஒரு வகையில் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் அல்லவா, அப்படி பார்க்கும் போது இவரிடம் வகுப்புகளை கற்பவர்கள் கண்டிப்பாக பணக்காரர்களாக தான் இருக்கிறார்கள்
அப்படியாவது ஏழைகளுக்கு உதவி கிடைக்கிறது. எனவே பொதுப்படையாக பார்க்கும் போது ஒரு சாமியார் செய்வது தவறு என்றாலும்
ஒரளவாவது இவர்களின் மூலம் சமுதாயத்திற்கு உதவி கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை இவர்கள் செய்வது ஆன்மீகத்துக்கான ட்ரென்ட் அவ்வளவு தான்.//
அன்பான கோகுல் ராசுக்கு!
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் , போதைப் பொருள் விற்ற பணத்திலோ, பெண்களைக் கடத்தி விபாச்சாரத்தில் ஈடுபடுத்தி சேர்த்த பணத்திலோ, கூலிக்குக் கொலை செய்த பணத்திலோ இதற்கெல்லாம் பணம் செலவு செய்வோர் பெரும்பாலும் பணக்காரர் என்பதால் ...ஏழைகளுக்குத் தானம் செய்தால் , அன்னதானம் செய்தால், கோவில் திருத்திக் குடமுழுக்குச் செய்தால், அப்படிச் செய்பவரை
தலையில் வைத்தா? போற்ற வேண்டும்.
உயிருடன் நெருப்பில் இடவேண்டும். இதுவரை நித்தியானந்தாவை விட்டு வைத்ததே தப்பு.
கதவைத்திற காற்று வரட்டும் ,சாளரத்தை திற ரஞ்சிதா வரட்டும் .பரதேசியாய் இருபதே உண்மையான இன்பம் என்று மக்கள் எண்ணுகிறனர் .பணத்தை சம்பாதிக்கவும் ,சுகபோக வாழ்க்கை வாழவும் இது புது தொழில் நுட்பம் ..முற்றும் துறந்தவன் துறவி , ஆசையை அடக்க முடியாதவன் எப்படி துறவி ஆவான் ???.
அமைதி ,இன்பம் எல்லாவற்றயும் தன்னுள் வைத்து கொண்டு வெளியே தேடும் மாந்தர் கூட்டம்
Post a Comment