
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் தன்னை ஒரு அரசியல் சக்தியாக வெளிப்படுத்தி காட்டிக் கொண்ட காலத்திலிருந்து தனக்கென மிகப்பெரிய அடையாளமாக செல்வி ஜெயலலிதா அன்று முதல் இன்று வரை கொண்டிருப்பது பிடிவாத குணம். 1989ல் திமுக வென்று கிட்ட தட்ட 13 வருட கால இடைவெளிக்குப் பிறகு அரியாசனத்தில் ஏறிய போது 27 இடங்களை அதிமுக ஜெ அணி பிடித்த போதுதான் அதிமுக தொண்டர் பலம் ஜானகி எம்.ஜி.ஆரின் பக்கம் இல்லை. அது மீண்டும் ஒரு திரை வசீகரமான ஜெயலலிதாவையே சுற்றியுள்ளது என்று அப்போதைய அரசியல்வாதிகளுக்கே தெரியவந்தது. எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆரால் பெரிதும் மதிக்கப்பட்ட முக்கிய தலைவர்களை எல்லாம் எட்டி உதைக்கும் போக்குடனே செயல்பட்டு வந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசியல் அனுபவத்தையும், திராவிட பராம்பரியத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. சாதுர்ய...