Thursday, November 24, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (24.11.2011)
 பஞ்ச் : 1

தேர்தல்ல நின்னு ஒட்டு கேக்குறப்பவே கஜானா காலியா இருக்குமா? இருக்காதா? இருந்தா என்ன பண்ணுவோம், இல்லங்காட்டி என்ன பண்ணுவோம்னு சொல்லி ஓட்டு கேட்க துப்பு இல்லாத அரசியல் கட்சிகளை கட்டிக்கிட்டு இந்த சனங்க படுற பாட்ட என்னனு சொல்ல?


சவுடாலா 'ஆட்ட கொடுப்பேன், மாட்டை கொடுப்பேன், கிரைண்டர் கொடுப்பேன், மிக்சி கொடுப்பேன் லேப் டாப்ப கொடுப்பேன்'னு எதிர்த்து நிக்கிறவங்கள விட ஒரு படி மேல ஏறி வாக்குறுதி கொடுத்த அம்மணி.......திடு திப்புனு சொல்லுது மத்திய அரசு நிதி கொடுக்கல கஜானா காலி...ஏற்கனவே இருந்தவங்க கடன வச்சுட்டு போய்ட்டாங்கன்னு...
ஒண்ணு கடன வச்சுட்டு முறையில்லாம ஆண்டுட்டு போய்ட்டாங்கன்னு சட்ட ரீதியா நடவடிக்கை எடுங்க...இல்ல...உங்க நிர்வாகத் திறமையால வேற எங்கனாச்சும் ஏதாச்சும் செஞ்சு சமாளீங்க....ஓட்டு கேக்கவும் எங்க கிட்டதான் வந்து கையேந்துறீங்க...நீங்க கவர்மெண்ட் நடத்தவும் எங்க கிட்டதான் வந்து கையேந்துறீங்க....

பொழைக்கிறது பிச்சைகார பொழப்பு இதுல உங்களை எல்லாம் பாத்து சனங்க பயப்படணும்...! ஆயிரம்தான் சொன்னாலும் இவ்வளவு தூரம் பேருந்து கட்டணத்தை உயர்த்தினதும்......பால் விலைய உயர்த்தினதும்....எம்புட்டு தூரம் சாதாரண மக்களை பாதிச்சு இருக்கும்னு நினைச்சுப் பார்க்க கூட துப்பில்லாத ஒரு கவர்மெண்ட்க்கு கீழதான் நாம இருக்கோம்னு நினைச்சுப் பாக்கையிலயேஇந்த பொழப்பே எதுக்குன்னு தோணுதுங்க .

பஞ்ச் 2 

உண்ணாவிரதம் இருக்குற தென்னாட்டு அன்னா ஹசாரே விஜயகாந்த்  நினைச்சா கண்ணுல தண்ணி வருதோ இல்லையோ....ஆனா ஊன்னா உண்ணாவிரதம் இருந்து காந்தி தேசத்துக்கு பெருமை சேக்குற இந்திய பெருங்குடி மக்களை நினைச்சா... ரொம்ப பொறாமையா இருக்கு போங்க...

கூட்டணி வச்சு ஓட்டு கேட்டு ஜெயிச்சு சட்டசபையில எதிர்கட்சியா உட்காரவரைக்கும் இவருக்கு அந்தம்மாவ பத்தி ஒண்ணியும் தெரியாது... அந்த அம்மாளுக்கும் இவர பத்தி ஒண்ணியும் தெரியாது. ஏற்கெனவே இருந்த களவாணிக கிட்ட இருந்து தப்பிச்சு கொள்ளைக்காரங்க கிட்டயா போயி தமிழ் நாட்டு சனம் மாட்டணும்...?

விலைவாசி அதிகமாயிருக்குனு சொல்லி கட்சியில இருக்க அம்புட்டு எம்.எல்.ஏக்களையும், தான் உள்பட ராஜினாம செஞ்சுட்டு..... அதிமுக வோட கூட்டணி போட்டு நின்னு ஜெயிச்ச இந்த பதவி வேணாம்னு சொல்லிட்டு தனியா நின்னு போராடுவாரா விஜயகாந்த்  சாரு...?


உண்ணாவிரத ட்ராமா எல்லாம் யாருக்கு வேணும்னு கேளுங்க மக்கள்ஸ்!

பஞ்ச் 3 

முல்லை பெரியாறு அணை விவகாரத்துல உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காம கேரள கவர்மெண்ட் அடிக்கிற லூட்டியவே சகிச்சுக்க முடியலை....இந்த லட்சணத்துல மண்ணின் மைந்தர் சோகன்ராய் சம்பாரிச்ச பணத்தை எல்லாம் வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாம டேம்999னு ஒரு படத்தை ஹாலிவுட் குழுவின் துணையோட எடுத்து இந்தியா முழுசும் வெளியிட இருக்கார்....

ஒரு அணை உடைஞ்சு போற மாதிரியும் அதுனால ஏகப்பட்ட சனங்க செத்து பெரிய இழப்பு ஏற்படுற மாதிரியும் கருவ மையமா வச்சு இவுரு செதுக்கியிருக்க படம் மூலமா முல்லை பெரியாறு அணை ரொம்ப டேமேஜா இருக்கு அதை கட்டி கொள்ள நாளு ஆயிடுச்சு.....அதனால எங்க கேரள கவர்மெண்ட் சொல்ற மாதிரி புது அணைய கட்டுனா நல்லது....இல்லங்காட்டி அணை ஒடைஞ்சு சனம் எல்லாம் செத்து சிவலோகம் போயிடுவாங்கன்னும் சொல்ல வர்றாரு நம்ம சோகன் ராய் அண்ணாச்சி...

அணை பழுதா இருக்கு உடையும் மகா ஆபத்தா இருக்குன்னு எந்த நிபுணர் குழுவும் சொல்லாத போது உச்ச நீதி மன்றம் சொன்ன மாதிரி 142 கன அடி தண்ணீர தேக்கி வச்சு தமிழ்நாட்டுக்கு கொடுக்குற தண்ணீர கொடுக்கறத கொடுக்காம இருக்குற கேரள கவர்மெண்டும் சரி...இப்படி படம் எடுத்து தவறான செய்திய பரப்புற கேவல டைரக்ட்டரும் சரி...வன்மையா  நம்மால் கண்டிக்கப்பட வேண்டியவர்களே...!

பஞ்ச்: 4

ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நலப் பணியாளர்கள் என்ன கால்பந்தான்னு ஆளும் அதிமுக அரசைப் பாத்து உயர் நீதி மன்றம் கேள்வி கேட்டு இருக்கு....! 
அதெல்லாம் தெரியாது சார் நாங்க ஒத்துக்கிட மாட்டோம்...மக்கள் நலப் பணியாளர்களை நாங்க உதைச்சுதான் விளையாடுவோம்....ஏன்னா மக்கள் எல்லாம் எங்களை உதைச்சு உதைச்சு விளையாடுறாங்களே அது ஏன்? போன அஞ்சு வருசம் திமுககிட்ட கொடுத்துட்டாங்க...அப்ப எங்க போச்சு இந்த நீதி மன்றங்கள்...எல்லாம்...? உச்ச நீதிமன்றம் சேத்துக்கிட சொல்லிடுச்சேன்னு எல்லாம் எங்கம்மா பொரட்சித் தலைவி சேத்திக்கிட மாட்டாங்க.....கிளியூர் சோசியர் சொல்லி இருக்காரு மக்கள் நலப் பணியாளர்களை எல்லாம் சேத்துக்கோங்க அம்மா...நீங்க மகராணி மாதிரி இருப்பீங்கன்னு அது கோசாரம்தான் ...சேத்துக்கிடுறோம்....

அதிமுக அரசாகிய நாங்க கோர்ட்டு சொல்லிடுச்சுன்னோ...இல்ல மக்கள் மேல இரக்கப்பட்டு மறுக்கா மக்கள் நலப்பணியாளர்களை சேத்துகிட்டோம்னு கனவுலயும் நெனச்சுடாதீங்க...ஆமா..!

பஞ்ச் : 5

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் அவரோட போர் முரசுகள் எல்லாம் தமிழ் நாட்லதான் இருக்குறாங்களா? இல்லை வேற எங்கிட்டாச்சும் போய்ட்டாங்களா? கலைஞர் ஆட்சியில மட்டும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஆகணும் மண்ணா போக கூட்டாதுன்னு தொண்டை நரம்பு புடைக்க பேசி பேசி .......பேசி...கிட்டே இருந்தவரு...
அம்மா ஆட்சிக்கு வந்த உடனே கப்சிப்னு இருக்கறதா பாத்தா இப்டிதாண்டா தமிழனா இருக்கணும்னு சொல்லாம சொல்றாங்களோ? பரமக்குடியில சுட்டு கொன்னப்போ..., சட்ட சபைய ஆஸ்பத்ரியா மாத்தினப்போ, சமச்சீர் கல்வியே கூடாதுன்னு சொன்னப்போ...நூலகத்தை இழுத்து மூடிட்டு குழந்தைகள் ஆஸ்பத்திரியா மாத்தப் போறேன்னு சொன்னப்போ...இப்ப பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் உயர்ந்து மக்கள் சீரழிஞ்சு கிட்டு இருக்கப்போ

இவுங்களையெல்லாம் பாத்தா தமிழர்களா தெரியலையா சீமான் சார்? ம்ம்ம்ம் ஒரு வேளை ஏதாச்சும் எதித்துப் பேசுனா...அம்மா ஹேண்டில் பண்ற விதம் ஐயா மாதிரி ஸ்மூத்தா இருக்காதுன்ற பயமா சார்? இவுங்க வீரம் இவ்வளவுதானா !

கழுகிற்காக
 தேவா 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

6 comments:

NAAI-NAKKS said...

செம பஞ்ச்.....

atchaya said...

சூப்பர் பன்ச்.

suryajeeva said...

எல்லோரும் ரௌத்திரம் பழகினால் தான் விளங்கும் போலிருக்கு

Rathnavel said...

அருமை.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

பாலா said...

இந்த முறை பஞ்சாமிர்தம் சூடாகவும் காரமாகவும்...

கும்புடுறேன்சாமி said...

///ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நலப் பணியாளர்கள் என்ன கால்பந்தான்னு ஆளும் அதிமுக அரசைப் பாத்து உயர் நீதி மன்றம் கேள்வி கேட்டு இருக்கு....!
அதெல்லாம் தெரியாது சார் நாங்க ஒத்துக்கிட மாட்டோம்...மக்கள் நலப் பணியாளர்களை நாங்க உதைச்சுதான் விளையாடுவோம்....ஏன்னா மக்கள் எல்லாம் எங்களை உதைச்சு உதைச்சு விளையாடுறாங்களே அது ஏன்? போன அஞ்சு வருசம் திமுககிட்ட கொடுத்துட்டாங்க.//

என்னப்பா ஒரே சொம்பு சத்தம்மா இருக்கு அது எல்லாம் சரிண்ணே ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் ஐம்பதாயிரம்ன்னு வாங்கிட்டு ஐயா கலைஞர் நிரந்திர ஊழியர் ஆக்கி இருக்கலாம்ல ஏன் இப்படி வயிற்றில் அடிக்கிறாரு ? அத சொல்லாம விட்டு போட்டிகளே
சரி நானே எப்போ கனி அக்காவுக்கு கன்னத்துல அடிப்பாங்கன்னு பார்த்துகிட்டு இருக்கேன் ,நீங்களும் அதுக்கு பொங்குவீங்களே

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes