Wednesday, November 23, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (23.11.2011)

என்ன கனகு டீ குடிக்க போகலாமா..?? என்னது "டீ" யா..?? என்கிட்ட அந்த அளவுக்கு வசதி இல்லையே ரெங்கு.. சரி.. சரி..வா. டீ கடை இருக்கா இல்ல.. டாஸ்மாக்கா  மாறி இருக்கான்னு பார்ப்போம்.

கனகு : என்ன அண்ணாச்சி கடை இன்னும் இருக்கா..???

அண்ணாச்சி : என்ன கனகு சார் கிண்டலா..??  என்ன பண்றது எங்க தலையெழுத்து. தண்ணி இருக்கற கிணத்துல விழுந்து இருந்தா நீந்தியாவது பொழச்சு இருக்கலாம். இப்படி மொட்ட கிணத்துல விழுந்துட்டோம்..!!

கனகு : அட.. என்ன அண்ணாச்சி... இதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்க..?? இன்னும் எவ்வளவு இருக்கே..!!

அண்ணாச்சி : ஆமா.. ஆமா.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.. என்ன ரெங்கு சார்... ரொம்ப அமைதியா இருக்கீங்க..??

ரெங்கு : நீங்க "டீ" விலைய எவ்வளவு சொல்லபோறீங்கன்ற பயத்துல இருக்கேன். அதான்... ஒரு "டீ" விலை எவ்வளவுன்னு சொல்லுங்க..

அண்ணாச்சி : ரொம்ப கம்மி தான் ரெங்கு சார். 8 ரூபாய்

ரெங்கு : என்ன அநியாயம்..?? எனக்கு டீ வேணாம். வெறும் தண்ணி மட்டும் தாங்க..!!

கனகு : யோவ்... உனக்கு அந்த அம்மா பண்ணது அநியாயமா தெரியலையா..?? அவ்வளவு பெரிய அரசாங்கம் அவங்களே விலையேத்தும் போது நம்ம அண்ணாச்சி சின்ன கடை வைச்சு இருக்கார். அவர்  விலையேத்த மாட்டாரா..?! ஓட்டு போட்ட இல்ல... ஒழுங்கா டீ வாங்கி கொடு..!!

ரெங்கு : ஆமா.. ஆமா.. மாற்றம் வரணும்ன்னு போட்டேன். நல்லா காட்டுறாங்க மாற்றம்..

கனகு : சரி வா ரெங்கு. டீ வேணாம். அரசு புதுசா எலைட் பார் தொறக்கப்போறாங்களாம். அங்க போகலாம்.. உள்ள போக செலவு 50 ரூபாய் தான். அதை நான் தரேன். மீதி செலவு நீ பாத்துக்கோ..

ரெங்கு : யோவ் கடுப்பேத்தாதே... என்ன மாதிரி நடுத்தர வர்க்கம் எல்லாம் டீ குடிக்க முடியாம இருக்கோம். உனக்கு ஜில்ஜில் ஜிகா ஜிகா கேக்குதா..?? உன்ன மாதிரி கம்பியூட்டர் வேலை செய்றவங்களுக்கு தான் அந்த வேலை.. போ..

கனகு : ஆமா எங்களுக்கு வேலை செய்யவே நேரம் பத்தல.. இதுல அங்க வேற போகணுமா..?? காலேஜ் போற பசங்களை எல்லாம் வாங்க பழகலாம்.. வாங்க பழகலாம்ன்னு சொல்ற மாதிரி வாங்க குடிக்கலாம்..வாங்க குடிக்கலாம்ன்னு அரசு சொல்லுது... 

ரெங்கு : அப்போ இனி யாரும்  காலேஜ் போக மாட்டாங்கன்னு சொல்றீயா..??

கனகு : பின்ன முதல்ல எல்லாம் பசங்க வாங்கிட்டு போய் மறைவா பயந்து பயந்து குடிப்பானுங்க... இப்போ இவிங்களே மறைவா இடம் தராங்க.. இது போதாது..?? 


ரெங்கு : இலவச மின்சாரத்தை அதிகமாக்குது இந்த அரசு. பாருய்யா.. நல்லது செய்ற அரச இப்படி குறை சொல்றியே..?? 

கனகு : என்னய்யா சொல்ற..?! மின்சாரத்துறை மரணப்படுக்கையில் இருக்குறதா பொரட்சி தலைவி சொன்னாங்க... நீ என்ன ஏதாவது கனவு கண்டியா..??

ரெங்கு : ஆமாய்யா... மொதல்ல குடிசைகளுக்கு ஒரே ஒரு பல்புக்கு மட்டும் இலவசமா மின்சாரம் கொடுத்தாங்க.அய்யா டிவி கொடுக்கவும், டிவிக்கும் இலவசமா மின்சாரம் கொடுத்தாங்க, இப்போ அம்மா மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் தரப்போறாங்க இல்லையா... அதுக்கு ஏத்த மாதிரி மின்சாரம் இலவசமா தரப்போறாங்களாம்.

கனகு : அட என்னய்யா... பேசாம நாமளும் ஒரு குடிசை போட்டுட்டு உட்காரணும் போல... அப்பப்ப கரென்ட் கட் பண்ண சொல்லு. அப்பதான் டாஸ்மாக் போக முடியும்.

ரெங்கு : நீ அங்க போறதுலே இருய்யா..
கனகு : எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்றார் இந்த விலையேற்றதுக்கு...??

ரெங்கு : அவர் இப்போ எழுந்துட்டார்ல... நாளைக்கு உண்ணாவிரதம் இருக்க போறார்ல..?? இனி அதிரடி தான் போ..

கனகு : உண்ணாவிரதம்ன்னா என்ன சைட் டிஷ் மட்டும் சாப்பிட மாட்டாரா..?? பார்த்துய்யா... இவரும் கொஞ்ச நேரம் உண்ணாவிரதம் இருந்துட்டு அவர் மட்டும் கொஞ்சம் நேரம்தானே உண்ணாவிரதம் இருந்தார். அதே மாதிரிதான் நானும் இருப்பேன்னு சொல்லப்போறார்.

ரெங்கு : மக்கள் நல பணியாளர்களை உடனே வேலைக்கு சேர்க்கணும்ன்னு கோர்ட் சொல்லிடிச்சே கனகு உனக்கு தெரியுமா..?? ஏன் இந்த அம்மா அவங்கள வேலையிலிருந்து எடுக்குறாங்கன்னு தெரியலப்பா..?

கனகு :  நம்மதான் மக்கள் நலப்பணி எதுவும் செய்யப்போறதே இல்லையே... அப்பறம் ஏன் அதுக்கு இவ்வளவு பேர்ன்னு நினைச்சு எடுத்து இருப்பாங்க.... 


ரெங்கு : அய்யா சாமீ... என்ன அடி வாங்கி வைக்காம விடமாட்ட போல... என்ன விடு.

கனகு : இருய்யா.. டீ வாங்கி கொடுத்துட்டு போ..

ரெங்கு : டீயா..?!  இனி நான் டீ குடிக்குறதா இல்ல. 

கனகு : டீ போச்சே..!!


கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 

6 comments:

NAAI-NAKKS said...

அனைத்தும் வரட்டும்.....
இன்னும் இருக்கு ...
அதிர்ச்சி ...
தாங்குற சக்தி தான் வேண்டும் ...

ஞாஞளஙலாழன் said...

இந்த இலவசங்களை யார் கேட்டது? உருப்படியா நல்ல திட்டங்களுக்காக அந்த காசெல்லாம் செலவழிச்சி இருக்கலாம். ம்..ம்..எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.

Rathnavel said...

அருமை.

பாலா said...

இலவசங்களை விடுத்து, விலையேற்ற வேண்டிய நேரத்தில் நியாயமாக விலையேற்றம் செய்திருந்தால் இப்படி புலம்ப நேர்ந்திருக்காது.

சைதை அஜீஸ் said...

//நம்மதான் மக்கள் நலப்பணி எதுவும் செய்யப்போறதே இல்லையே... அப்பறம் ஏன் அதுக்கு இவ்வளவு பேர்ன்னு நினைச்சு எடுத்து இருப்பாங்க.... //

இதுதான் சூப்பர் சௌந்தர்!
"பொருத்தார் பூமி ஆள்வார்" அப்படின்னு சொன்னது இந்த இரண்டு கழகங்களுக்குத்தான் போல.
நாம எல்லாம் பொருத்தால் "பொறுக்கி" தான் வாழவேண்டும் போல.
யாரோ என் காதில் பொருத்தது போதும் பொங்கி எழு அப்படின்னு சொல்லுவது போல உள்ளது

ஜீவன்பென்னி said...

நம்மதான் மக்கள் நலப்பணி எதுவும் செய்யப்போறதே இல்லையே... அப்பறம் ஏன் அதுக்கு இவ்வளவு பேர்ன்னு நினைச்சு எடுத்து இருப்பாங்க..//

நல்ல பன்ச்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes