Tuesday, November 15, 2011

ஹலோ யார் பேசுறீங்க..?தொலை பேசி பயன்பாடு பற்றிய ஒரு பார்வை...!


ரொம்ப நாளாகவே.... எனக்கு இந்த தொலை பேசிகளை குறிப்பாக கைபேசிகளை அதிலும் குறிப்பாக கார்பரேட் உலகம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதை பயன் படுத்தும் விதம் பற்றி..ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் நமக்கு இருந்ததன் விளைவுதான் இந்தக் கட்டுரை.....

கை பேசியில் ஒருவரை நாம் அழைக்கும் போது...முழுமையாக ஒரு ரிங் போனவுடன் தொடர்ந்து மீண்டும் கூப்பிடாமல் உடனே நாம் நமது இணைப்பை துண்டிப்பது நல்லது ஏனென்றால் நாம் கூப்பிடுவது அவரது கைபேசியில் கண்டிப்பாய் அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, எனவே அவர் நம்மை கண்டிப்பாய் திருப்பி அழைப்பார் அல்லவா? (உங்களிடம் இருந்து ஒளிந்து திரிபவர்களுக்கு இது செல்லாது). இதை விட்டு விட்டு எதிர் முனையில் இருப்பவர் என்ன அவசர வேலையில் இருந்தாலும் சரி எனது அழைப்பை எடுத்தே ஆக வேண்டும் என்று நினைப்பதும் அவர் எடுக்காததிற்கு நாம் கோபம் கொள்வதும் சரிதானா?

அதுவும் ஒருவர் அலுவலகத்தில் இருந்தால்...அழைப்பை எடுக்க முடியாத சூழ் நிலைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவர் திரும்ப அழைக்கும் வரை காத்திருங்கள். குறைந்த பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடம் ....சரி இது தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு.....

தொலை பேசியில் அழைக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்....தமது கைபேசியில் வந்து எடுக்க தவறிப்போன அழைப்புகளுக்கு திரும்ப அழைத்து விபரம் கேட்டு அறியும் போது ....எடுக்க முடியாததற்கான காரணத்தையும் நண்பருக்கு விளக்கிச் சொல்லலாம்.

உங்களின் அவசரமான பணிக்கிடையில் யாராவது தொடர்ந்து உங்களை அடைய முயற்சி செய்கிறார் என்றால்.... வெளியில் உள்ள உங்கள் நண்பருக்கு ஏதோ அவசரம் என்று புரிந்து கொண்டு அவரை உடனே அவரை தொடர்பு கொள்ளுங்கள் உங்களின் உதவி உங்கள் நண்பருக்கோ இல்லை உறவினர்க்கோ அவசரமாக தேவை என்று உணருங்கள். மேலும் சிறிது நேரத்தில் நானே அழைக்கிறேன் என உங்களின் சிரமத்தைத் தெரிவியுங்கள். அது அவரை அமைதியடையச் செய்யும்

ஆக மொத்ததில் இது பொதுவாக எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டிய விசயம் ஏதாவது ஒரு அவசரமின்றி உங்கள் நண்பரை தொடர்ந்து அழைக்காதீர்கள். மேலும் சாதாரணமாக அரட்டை அடிக்க செய்த அழைப்பு என்றால் ஒன்று அல்லது இரண்டு ரிங்கோடு நிறுத்திக்கொள்ளுங்களேன். அலுவலகத்தில் இருக்கும் நேரம் மட்டுமல்ல....காலை நேரம் மற்றும் குடும்பத்தினரோடு இருக்கும் நேரம் என்றால் அத்யாவசியம் மற்றும் அவசர செய்திகள் பறிமாறிக்கொள்ளும் விதமாக அழைக்கலாம்.

காலை 8:30 மணிக்கு பணிக்கு செல்லும் நேரத்தில்.... நண்பரை அவசர கதியில் தொலை பேசியில் அழைத்து " சும்மாதான் கால் பண்ணினேன்.....அப்புறம் வேற என்ன செய்தி" என்று கேட்பது 10 கொலைகள் செய்வதற்கு சமம். மேலும் நீங்க போன் செய்து விட்டு....... மறுமுனையில் உள்ள நண்பரை.... " அப்புறம் ... நீங்கதான் சொல்லணும்” என்று சொல்வது.. உங்கள் நண்பரின் தலையில் வெந்நீரை கொட்டுவதற்கு சமம் என்றும் அறிக.

உங்கள் நண்பரும் அந்த விதம் தான் என்றால்..... நீங்கள் இருவரும் சேர்ந்து...நேரத்தை வீணாக்குவதோடு, வாழ்க்கையின் வெற்றிப்பாதையில் இருந்து விலகிச் சென்றுகொண்டு இருக்கறீர்கள் என்று பொருள். . சில நண்பர்களுக்கு தொலைபேசியில் இன்று கூப்பிட்டால்....இரண்டு நாட்கள் கழித்து திரும்ப கூப்பிட்டு என்னடா....கால் பண்ணியிருந்தாயா... என்று கேட்பார்கள்...( நானும் இந்த ரகம்தான்.. .ரொம்ப கேவலமாக என்னையே திட்டிக் கொண்டு இப்போது தான் மாற ஆரம்பித்துள்ளேன்)

இது ஒரு மிக அவசர கதியில் மாற்ற வேண்டிய ஒரு பழக்கம். நல்ல நேரத்தில் உங்களின் நண்பர் நலமாயிருந்தால் நல்லது...ஏதாவது ஒரு அவசர செய்தி அல்லது உங்களிடம் பேசினால் ஆறுதலாய் இருக்கும் என்று அவர் கூப்பிட்டு நீங்கள் திரும்ப அழைக்காமல் போன நேரத்தில்.. நண்பருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்.....(கடவுளே...கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை...)

தொலை பேசி....அறிவியலின் தலை சிறந்த தொழில் நுட்பம்.....அதை சரியாக பயன்படுத்தி தொழிலைமட்டுமல்ல உறவையும் மேம்படுத்தலாம்.....உன்னத மனிதர்களாய்....வாழலாம்......! ஏங்க உஙக தொலை பேசி இடை விடாமல் அடிக்கிறது......டிரிங்க்.....டிரிங்க்......ட்ரிங்க்.....ட்ரிங்க்.....ட்ரி,ங்க்....ஐயோ எந்த நண்பரோ என்ன அவசரமோ.......வேகமா போனை எடுங்க...!....நாம அப்புறமா பேசலாம்...

கழுகிற்காக
 தேவா 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

11 comments:

குடந்தை அன்புமணி said...

இங்கு பகிர்ந்து கொண்ட கருத்து மிகவும் அவசியமானது.பகிர்வுக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

தங்களை அழைக்க... மெயில், அலைபேசி எண்... thambaramanbu@gmail.com 9840992769

rathnavel natarajan said...

அருமையான பதிவு.

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

இரவு 11 மணிக்கு போன் பண்ணி அப்புறம் மச்சி என்ன பண்ணுறன்னு சொல்லுறவங்கள என்ன பண்ண???

cheena (சீனா) said...

அன்பின் தேவா - கட்டுரை அருமை. அலை பேசி பயன் படுத்தும் முறைகளை விளக்கியமை நன்று.

நாம் அழைக்கும் போது ஒரு ரிங் போனவுடன் துண்டிக்கச் சொல்வது நியாயமா ? அழைக்கப்பட்டவர் அலை பேசியினை என்னேரமும் காதிலேயே வைத்திருப்பாரா ? என்னை எடுத்துக் கொண்டால் அலை பேசி எனது கணினி மேசையில் இருக்கும். நான் மற்ற அறைகளில் இருப்பேன். சத்தம் கேட்டு - இங்கு வந்து எடுப்பதற்குள் அணைத்து விடுவர். கோபம் கோபமாக வரும். பொறுமையற்ற ஜென்மங்கள் என - திரும்ப அழைக்கட்டும் என விட்டு விடுவேன். மூன்றில் இருந்து ஐந்து ரிங் வரை பொறுத்திருக்கலாம். அவர் பயங்கர பிஸியாய் இருந்தால் கூட எடுக்காமல் துண்டிக்கலாம். அதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நல்லதொரு பதிவு . பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா

மதுரை சரவணன் said...

nalla visayam... cheena ayyaavin karuththai valiyuruththukiren... vaalththukkal

சுபத்ரா said...

இதை ஏற்கனவே வாரியர்லயோ பஸ்லயோ படிச்ச மாதிரி ஞாபகம் இருக்கே :-)

But, this is a very good article. Helped me in self-evaluation.. Thank U..

சௌந்தர் said...

குடந்தை அன்புமணி கூறியது...

இங்கு பகிர்ந்து கொண்ட கருத்து மிகவும் அவசியமானது.பகிர்வுக்கு நன்றி.

குடந்தை அன்புமணி கூறியது...

தங்களை அழைக்க... மெயில், அலைபேசி எண்... thambaramanbu@gmail.com 9840992769/////

முதல் வருகைக்கு நன்றி குடந்தை அன்புமணி :))

உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி :))

rathnavel natarajan கூறியது...

அருமையான பதிவு.///

மிக்க நன்றி அய்யா..

மாங்கனி நகர செல்லக் குழந்தை கூறியது...

இரவு 11 மணிக்கு போன் பண்ணி அப்புறம் மச்சி என்ன பண்ணுறன்னு சொல்லுறவங்கள என்ன பண்ண???///

நண்பர்கள் அப்படி தான் ஒன்றும் செய்ய முடியாதே :))

அன்பின் சீனா அய்யா உங்கள் கருதும் சரி தான் ஒரு கால் முழுமையாக ரிங் அடித்து முடிந்தும் அவர் எடுக்க வில்லையென்றால்... மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் தான்.. எப்போதும் பிஸியாக இருப்பவரிடம் ஒரு முறையோடு நிறுத்தி கொள்ளலாம் தவறில்லை.


@NAAI-NAKKS thanks :))


@மதுரை சரவணன் வருகைக்கு மிக்க நன்றி


@சுபத்ரா அதே தான் சுபத்ரா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :))

பாலா said...

உங்கள் பதிவோடு முற்றிலும் ஒத்து போகிறேன். செல்பேசி என்பது அதன் அடிப்படை பயன்பாட்டில் இருந்து விலகி வெகு வேகமாக சீரழிந்து வருகிறது.

saidaiazeez.blogspot.in said...

communication என்பதே ஒரு கலை. இதை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் பலர். அதேபோல, பயன்படுத்த தெரியாமல் தவறிழைத்து உறவுகளை கத்திரித்துக்கொண்டவர்களும் பலர்.
இப்போது mobile-ல் missed call கொடுப்பவர்களே மிகவும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். சரி missed call வந்திருக்கே என்ன அவசரமோன்னு நாம் அழைத்தால், "ஒண்ணுமில்லை. சும்மா உன் ஞாபகம் வந்தது. இருக்கியான்னு பார்க்கலாம்னு call பண்ணேன்" என்பது. அடப்பாவிகளா!
எங்க காலத்திலே கையிலே camera இருந்தால் அவன் மிகப்பெரிய hero. பிறகு, telegram கொடுப்பதற்கு post office-ல் வரிசையில் நின்றதுண்டு.
அனால் இந்த mobile phone வந்த பிறகு life நிறைய மாறிவிட்டது என்பது என்னவோ உண்மை

School of Energy Sciences, MKU said...

செல்-லில் ஒருவர் அழைக்கும் நேரத்தில் ஒருவர் பிசியாக இருந்தால் அந்த அழைப்பை துண்டித்தால் நண்பர் 'பிஸியாக இருக்கிறார்' என்று அவர் புரிந்து கொள்வார். ஆனால் அட்டெண்ட் செய்யாமல் சைலெண்ட்டில் போட்டால் கண்டிப்பாக நானாக இருந்தால் எடுக்கும் வரை திரும்ப திரும்ப அழைப்பேன். அழைக்கும் நபருக்கு நாம் பிசியாக இருந்தால் உடனே சொல்லி 'கட்' செய்து விடலாமே? எந்த ஒரு அழைப்பும் வீணானதா அல்லது இல்லையா எனப் பேசினால் தானே தெரியும். (இப்பொழுதெல்லாம் பிசியாக இருப்பதாகக் காட்டிக் கொள்வது ஒரு புது டிரெண்ட்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes