தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி
கிடைக்கிறதா?
கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய் யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையா ல், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளை கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயானம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயானம் .இந்த ரசாயானம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரிழிவு க்கு காரணியாய் அமைகிறது .இது தவிர Alloxan என்னும் ரசாயானம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமகுகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது , ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரான சீரண சக்தியை குறைத்து விடும் .
இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.
Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்..மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
நன்றி: வலைத்தளங்கள்
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
11 comments:
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
Avaciyamana pathivu....
Kuzhanthai kalidam
padithu kattungal......
//உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின//
//நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயானம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா//
?
அய்யய்யோ ..இவ்ளோ விஷயம் இருக்கா ..?
நம்ம ஊரில நிறைய பரோட்டா கடை இருக்கே..நான் வேற அதிகமா விரும்பி சாப்பிடுவது இதுதானே ..?
சார், இந்த ஒயிட் பிரட் அத என்ன பண்றது..
நல்ல நேரத்துல சொன்னீங்க...
நல்ல தகவல் நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
இப்படி எல்லாமே பிரச்சனையா இருந்தா நாம எதை தான் சாப்பிடுவது?
நல்ல நேரத்தில் முக்கிய விழிப்புணர்வுப் பதிவு. நன்றி.
தொடர்புடையதாக இருந்ததால் உங்கள் பதிவுக்கு 'எங்கள்' பதிவில் சுட்டி கொடுத்துள்ளோம்...(உங்கள் அனுமதி பெறாமலேயே...மன்னிக்கவும்)
வெள்ளைஉணவு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே இப்போது ஒரு உணவு மந்திரமாக இருக்கிறது.
சர்க்கரை,
மைதா,
உப்பு,பாலீஷ் செய்த அரிசி,
கிழங்கு வகைகள்.
நல்லதொரு பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி.
Post a Comment