Thursday, March 15, 2012

இன்னமும் தொடர்கிறதா..? ஆணாதிக்கம்.....! ஒரு அலசல்....!


பெண்களா...?? சதைப்பிண்டங்களா..??



என் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார். நடுத்தர வயதுடைய, மதிக்கத்தக்க தோற்றத்துடையவராய் தெரிந்தார். அன்று அலுவலகம் முழுவதுமே காலையிலிருந்தே பரபரப்பாய் இருந்தது. எல்லா ஃபைல்களையும் பரிசோதித்து ஒவ்வொன்றாக சரிபார்த்தனர். அதிலிருந்த சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்தனர். அந்தப் பெண்மணி கொஞ்சம் கோபப்படுபவர் போல.. தாள்களில் இருந்த தவறுகளை எடுத்துக்காட்டி திட்டிக்கொண்டிருந்தார். பின் ஒருவழியாக ஆடிட் முடிந்து ரிப்போர்ட் கொடுத்தாயிற்று.

இதெல்லாம் எல்லா அலுவலகத்துலயும் நடக்குறது தானே“னு நெனைக்கலாம். நான் சொல்ல வந்தது அன்று நடந்தது பற்றியல்ல.. அவர்கள் சென்றபின் வந்த அடுத்தநாள் பற்றியது. ஆடிட் முடிந்த மறுநாள் மதியம் எல்லா பணியாளர்களும் அவரவர் கேபின்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பணியாளர் மெதுவாக ஆடிட் பற்றி பேச்செடுக்க, பின் அதுபற்றி உரையாடல் தொடர்ந்தது. நானும் இன்னொரு மேடமும் பக்கத்து கேபினில் அமர்ந்திருந்த்தை அவர்கள் கவனிக்கவில்லையா அல்லது சட்டை செய்யவில்லையா என்பது தெரியாது. அவர்கள் பேசியதிலிருந்த முக்கியமான பேச்சுகள் இது தான்...

”நேத்து ஆடிட்ல பயங்கர தீணி போல.. அந்த நீலாம்பரி செம கட்டையா இருக்காளே..”

”ஆம்பளைங்க நாம இருக்கும்போது அவ என்னமா கத்துறா பார்த்தியா? திமிரு ஜாஸ்தி..”

“திமிர விடுடா.. அவ ஸ்ட்ரக்ச்சர் சூப்பர்ல.. இந்த வயசுலயும் சிக்கு“னு இருக்கால்ல.. இத்தனை நாள்ல எத்தன பேரு மடங்குனாய்ங்களோ.. ம்ம்ம்..”

”அடப்போடா.. இவ இப்டி கோவமா கத்திகிட்டே இருந்தா புருஷன் கூட பயப்புடுவான்”

“அட நீ வேற.. இந்த மாதிரி பொம்பளைங்க தான்டா சீக்கிரம் மசிஞ்சிடுவாளுக.. நீ வேணும்னா பாரு.. ரெண்டு தடவை பேசினா போதும்.. ஈசியா முடிச்சிடலாம். எழுதி வச்சுக்க..”

இன்னும் சிரிப்பொலியும் கேவலமான பேச்சுக்களும் நீண்டுகொண்டே போனது. எல்லாமே அந்தப் பெண்ணைப் பற்றியது தான். நான் பொறுக்க முடியாமல் அவர்களைத் திட்டுவதற்கு எழுந்தேன். உடனே என் பக்கத்தல் அமர்ந்திருந்த ஒரு மேடம், என் கையைப் பிடித்து “இப்ப நீ திட்டிடலாம், அவங்களும் அமைதியாயிடுவாங்க. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு உன்னைப் பத்தி இதே மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க.. நா நிறைய அனுபவப்பட்ருக்கேன். பேசாம இரு. அது தான் நல்லது“னு குரல் தாழ்த்தி சொன்னாங்க. இதைக் கேட்டதும் நான் என்ன செய்ய முடியும்? எழுந்து வெளிய போய் விட்டேன்.

பெரும்பாலும் பெண்கள் பற்றி, வெளியுலகத்தில் ஆண்கள் பேசுவது இப்படித்தான். ஒரு சிலர் வேண்டுமானால் “நான் ரொம்ப ஜென்டில் மேன்“னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம். ஆனா நாலைந்து ஆண்கள் சேர்ந்துட்டா அவங்களோட பொழுதுபோக்கு பேச்சுக்கள் இப்படித்தான் இருக்கு. பொழுதுபோக்காக, விளையாட்டாக, சும்மா, சகஜம்.. என்று ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாலும் இது போன்ற பேச்சுக்கள் ஆண்களோட வக்கிரத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் காட்டுவதோட மட்டுமில்லாம குறிப்பிட்ட பெண் மீது அவர்களுக்கு இருக்கிற பொறாமை குணத்தையும் அப்பட்டமா காட்டுது.

பொதுவாகவே பெண்கள் என்றாலே வெறும் சதைப்பிண்டங்களா தான் பார்க்கப்பட்றாங்க. ஒரு பெண்ணைப் பார்க்கிற ஆணோட பார்வையே இதை சொல்லிடும். “ஏற இறங்கப்“ பார்க்கும் கீழ்த்தரமான பார்வைக்கும் முகத்தை மட்டும் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இவர்கள் “ஸ்ட்ரக்ச்சர்“ என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தமே கொண்டுவந்துவிட்டனர். பொதுவாய் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் என்னதான் இழுத்துப்போர்த்திக்கொண்டு வந்தாலும் ஆண்களின் பார்வைகள் தவறான இடங்களைத் துலாவுவதை தவிர்க்க முடிவதில்லை.

நண்பர் ஒருத்தரோட வலைப்பூவில் பெண்களுக்கு இணையத்தில் கொடுக்கப்படும் மதிப்பைப் பற்றிய விவாதம் நடந்தது. அதிலும் கூட, நிறைய ஆண்கள் தங்களோட அதிகார குணத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். இணையத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக இருப்பதில்லை என்ற பேச்சில் தொடங்கி, எங்கெங்கோ வாதம் சென்றுவிட்டது. அதிலும் ஒரு சிலரோ “பொண்ணுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, கத்துக்குட்டிங்க.. உடல்லயே ஆணுக்கு சம்மா இருக்குறது கிடையாது. இதுல எங்க சமுதாயத்துல சம்மா இருக்கப்போகுதுங்க..” என்று சம்மந்தமில்லாமல் என்னென்னவோ பினாத்தினார்கள். சமூகத்தில் சமநிலை என்பதும் உடலில் சமநிலை என்பதும் ஒன்றில்லையே.. மட்டப்படுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பதால் எதுவேண்டுமானாலும் பேசலாம் போல.

 

என்னதான் நட்பாகப் பேசினாலும், குறிப்பிட்ட பெண்ணின் போன் நம்பர் கிடைத்துவிட்டதைப் பெருமையாக தம்பட்டம் அடிக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைவிட, அந்த நம்பரை தனக்கும் தரும்படி கெஞ்சும் ஆண்களும் இருக்கிறார்கள். தினமும் அந்தப் பெண்ணிடம் என்ன பேசப்பட்டது என்று பகிரப்படுவதும் பெரும்பாலான ஆண்களின் நட்பு வட்டாரத்தில் வழக்கமாக இருப்பதுண்டு.

ஆண்களின் நோக்கங்களுக்கேற்ப நடக்கும் பெண்களை மட்டும் இவர்கள் குறிவைப்பதில்லை. கண்ணியமான, சாதாரண நட்புடன் பழகும் பெண்களையும் கூட இந்த நோக்கத்தில் தான் பெரும்பாலும் பார்க்கின்றனர்.

அது போன்ற ஆட்களிடம் “உன் தாயும் பெண்தானே“ என்று பழைய்ய்ய்ய வசனமெல்லாம் பேசமுடியாது. தண்ணி தெளித்து, தவிர்த்து தான் விடமுடியும்.

பெண்பால் மீதான ஆணின் இனக்க்வர்ச்சி இயற்கையின் ஏற்பாடாயினும் அது அவ்விதமாக இல்லாமல் தனக்குக் கிடைக்கவில்லை என்பதன் ஆற்றாமையின் வெளிப்பாடாக வக்கிரமாக விரசமான வார்த்தைகளாக வந்து விழுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது

பெண்கள் என்பவர்கள் வெறும் சதைகள் மட்டுமல்ல. ஆண்களைக் கவரும் வஸ்த்திரமும் அல்ல. தங்களுடைய வக்கிரங்களையும் அதிகாரங்களையும் திணிக்க ஏதுவாக இருக்கும் பிராணிகளும் அல்ல. அவர்களும் உணர்வுகள் இருக்கும் சாதாரண மனிதர்கள் என்ற பார்வை நம் சமூகத்தில் இருப்பதேயில்லை. இந்த நிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை.


       கழுகிற்காக
இந்திராவின் கிறுக்கல்கள்


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


88 comments:

இந்திரா said...

எனது எழுத்துக்களை இங்கே பதிவிட்டமைக்கு மிக்க நன்றி..

நான் பதிவில் குறிப்பிட்டது போல பெண்கள் பற்றிய ஆண்களின் பெரும்பாலான பொதுவான கண்ணோட்டம் கட்டாயம் மாற வேண்டும்.. அந்நிலைமையை எதிர்நோக்கி.. நம்பிக்கையுடன்..

-------- இந்திரா..

இந்திரா said...

//(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)//


நிச்சயமாக..
வாழ்த்துக்கள்..

வெங்கட் said...

// பெண்கள் பற்றிய ஆண்களின் பெரும்பாலான
பொதுவான கண்ணோட்டம் கட்டாயம் மாற வேண்டும்..
அந்நிலைமையை எதிர்நோக்கி.. நம்பிக்கையுடன்.. //

ஆண்களை பற்றிய ஒரு சில பெண்களின்
கண்ணோட்டமும் கட்டாயம் மாற வேண்டும்..

எப்படியும் ஊருக்கு நாலு பொறுக்கி பய இருப்பான்..
அவனை ஆண்களின் பிரதிநியா வெச்சிக்க கூடாது.

TERROR-PANDIYAN(VAS) said...

@கழுகு ஓனர்ஸ்

உங்கள் தளத்தில் கமெண்ட் சப்ஸ்கிரிப்ஷன் செய்ய முடியவில்லை. அதனால உங்கள் தளத்தில் Comment Form Placementஐ Embedded below post என்று மாற்ற முடியுமா?

இந்திரா said...

//வெங்கட் கூறியது...

ஆண்களை பற்றிய ஒரு சில பெண்களின்
கண்ணோட்டமும் கட்டாயம் மாற வேண்டும்..

எப்படியும் ஊருக்கு நாலு பொறுக்கி பய இருப்பான்..
அவனை ஆண்களின் பிரதிநியா வெச்சிக்க கூடாது.//


பதிவில் “பெரும்பாலான“ என்ற சொல் அடிக்கடி வருவதை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் வெங்கட்..
அதே போல //ஒரு சிலர் வேண்டுமானால் “நான் ரொம்ப ஜென்டில் மேன்“னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம்// என்றும் சொல்லியிருக்கிறேன்..
தற்போதைய காலகட்டத்தில் நல்லவர்களை விட நடிப்பவர்களே அதிகம்..

TERROR-PANDIYAN(VAS) said...

@கழுகு ஓனர்

நீங்கள் ஒரு பெண்ணாதிக்கவாதியா? ஒரு ஆண் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டிர்களா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

// இது போன்ற பேச்சுக்கள் ஆண்களோட வக்கிரத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் காட்டுவதோட மட்டுமில்லாம குறிப்பிட்ட பெண் மீது அவர்களுக்கு இருக்கிற பொறாமை குணத்தையும் அப்பட்டமா காட்டுது.//

டேய் ஆம்பளை பசங்களா. இப்படி கருத்த பேச கத்துகோங்கடா ராஸ்கல்ஸ்!! அதை விட்டு பொண்ணுங்க கமெண்ட் அடிச்சா மச்சான் அந்த பொண்ணுங்க எல்லாம் என்னை பத்தி என்னமோ பேசி சிரிச்சாங்கடான்னு மூஞ்சி பூரா பல்லா வந்து நிப்பிங்க. அடுத்த முறை ச்சீ ஆம்பளை பொறுக்கி நீ எல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்கவில்லை இப்படி கேக்கனும். ஓ.கே?? :)))

மாலுமி said...

விடு மச்சி....
நீ வா நம்ம போகலாம்...
யாரும் வரமாட்டாங்க...
நாம தனியா நின்னு டீ ஆத்திட்டு இருப்போம். அப்புறம் ரெண்டு மணி நேரம் கழிச்சு, தூங்கி எந்திருச்சு பல்லு விளக்கிட்டு வருவாங்க(ஆம்பளைங்க)...

Anonymous said...

பெண்ணைப்பற்றிய ஆணின் புரிதல்கள் மாற வேண்டும் என்ற ஏக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையாய் புரிந்து இதற்கு ஒரு வந்தனம் செய்கிறேன்...

ஹாட்ஸ் ஆஃப் யூ இந்திரா!!

இப்படிக்கு
*** மைத்ரேயி***

Anonymous said...

பெண்ணாதிக்கமோ இல்லை ஆணாதிக்கமோ... நம் சமுதாயத்தின் இன்றைய ஒரு முக்கியத் தேவை ஒரு பாலினத்தைப் பற்றிய மற்றொரு பாலினத்தின் புரிதல்கள் மாற வேண்டும்...
அங்க மட்டும் என்ன யோக்யமா? அங்கேயும்தான் களைகள் உண்டு என பேசப் பேச இது ஒரு முடிவுறா வாதமாக மாற வாய்ப்புள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. வேற்றுமைகள் களைந்து,ஆக்கபூர்வத்திற்காய் செயல்பட வேண்டும்... அப்பொழுது தான் இது ஒரு சிறந்த சமுதாயாமாய் மலரும் வாய்ப்பு உள்ளது.

இப்படிக்கு
***மைத்ரேயி***

Anonymous said...

பெண்ணாதிக்கமோ இல்லை ஆணாதிக்கமோ... நம் சமுதாயத்தின் இன்றைய ஒரு முக்கியத் தேவை ஒரு பாலினத்தைப் பற்றிய மற்றொரு பாலினத்தின் புரிதல்கள் மாற வேண்டும்...
அங்க மட்டும் என்ன யோக்யமா? அங்கேயும்தான் களைகள் உண்டு என பேசப் பேச இது ஒரு முடிவுறா வாதமாக மாற வாய்ப்புள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. வேற்றுமைகள் களைந்து,ஆக்கபூர்வத்திற்காய் செயல்பட வேண்டும்... அப்பொழுது தான் இது ஒரு சிறந்த சமுதாயாமாய் மலரும் வாய்ப்பு உள்ளது.

இப்படிக்கு
***மைத்ரேயி***

ஆமினா said...

இந்திரா அருமையா சொல்லியிருக்கீங்க!

என்னத்தான் வெளியில் தன்னை நல்லவர்களாகவும், பெண்ணினத்தை மதிப்பதாகவும் சொல்லிக்கொண்டு திரிபவர்கள் கூட்டாக நான்குபேராக சேரும் போது அல்லது பிரன்டுடன் உரையாடும் போது வெளிப்படும் வக்கிர குணத்தை காண முடிகிறது.

ஒரு பெண் காதலை சொன்னால் போதும். உடனே தன் சக நண்பர்களிடம் "அவள மடக்கிட்டேன் டா மச்சான்" என சொல்லி அப்பெண்ணையே கேவலப்படுத்தும் இளைஞர்கள் அதிகம் :'(

பொதுவெளியில் ஒரு பெண் தைரியமாக பேசினால் அவளை ஆஹா ஓஹோன்னு பொதுவில் பாராட்டிவிட்டு தனியாக தன் சக நண்பர்களிடம் கேவலத்திலும் கேவலமான வார்த்தைகளை கொண்டு கமென்ட்டடிக்கும் சில ஆண்களை நினைத்தால் எரிச்சல் தான் மிஞ்சுகிறது!

சத்தியமா சொல்றேன்! பெண்ணுரிமை என்ற பேச்செல்லாம் சுத்த வேஸ்ட்! இன்னும் பலரிடத்தில் "பெண்கள் வாய் மூடிட்டு தான் இருக்கணும்" என்ற மனபோக்கு நிலவுவதை பார்க்கத்தான் செய்கிறோம். இது படித்தவர்களிடத்தில் அதிகமாக இருப்பது தான் வேதனை!

:'(
:'(

அருமையான பதிவு இந்திரா

வாழ்த்துக்கள்

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

follow up

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

இப்படிதான் பெண்ணியம் பேசுவதா???
சற்றே சிந்தித்து பாருங்கள்.உங்கவீட்டு
பெண்களாகிய நாங்கள் இப்படி
கேலி செய்யப்படும் பொது நீங்கள்


ரசிப்பீர்களா??

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

உங்கள் வீட்டு பெண்கள் இரவில்
தூங்கும்போதுகூட எசகு பிசகா
ரசிப்பீன்களா?

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

ஏகப்பட்ட மெயில் அனுப்பி எல்லாரையும் கூப்பிடனும்.
எல்லாத்தையும் முடிச்சிட்டு காக்கா கூட்டம் ஒன்னு சேர்ந்து வரும்.

அவங்க வீட்டு பெண்களை கேலி செய்ய.

நல்ல மரியாதை இருக்கு.
பேர் கெட்டுபோய்டுமே.

வாங்க போலி ஐ.டில

உங்கள் அம்மாவைப் போல பாசமானவள் said...

ஏன் தம்பிங்களா இந்திரா சரியா தானே சொல்லி இருக்காங்க... பெண் பிள்ளைகளை பெற்று விட்டு நாங்கள் படுற பாடு எங்களுக்கு தான் தெரியும் தம்பிங்களா...!!!

சில ஆண்கள் வேண்டும் என்றால் நல்லவர்களாக இருக்கலாம் ஆனால் நண்பர்களுடன் சேர்ந்தால் அவர்களிடம் இருக்கும் நல்ல எண்ணங்கள் பறந்து விடுகிறது...

உங்கள் அக்கா தங்கைகளை இப்படி வர்ணனை சும்மா இருப்பீர்களா...??

@வெங்கட் உங்களை நான் என்னமோ நினைத்தேன் நீங்களா இப்படி...??

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

உன் அக்கா,தங்கை,அம்மாவை நான் கிண்டல் பண்ணுவனாம்.
அதே போல
எந்தங்கை,அக்கா,அம்மாவை நீ
கிண்டல் பண்ணுவியாம்.

(இது தானே உங்க குரூப் தாரக மந்திரம்)

கழுகு said...

@கழுகு ஓனர்

நீங்கள் ஒரு பெண்ணாதிக்கவாதியா? ஒரு ஆண் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டிர்களா? :)///

தோழர டெரர் நாங்கள் உங்களை தவிர மற்றவர்களுக்கு மட்டும் பதில் அளித்து விட்டு உங்களுக்கு பதில் கூறாமல் சென்றது போல நீங்கள் கருத்துகள் வெளியிடுகிறீர்களே...???

கருத்துகள் ஆண் பெண் என்று பார்த்து போடுவதில்லை...!! கழுகிற்கு அனைவரும் ஒன்று தான்...

நீங்கள் கூறிய மாற்றங்கள் சரி செய்யப்பட்டுதுள்ளது....

நாங்கள் இணையத்தில் இருக்கும் பொழுது தான் வாசகர்கள் சொல்லும் மாற்றங்களை சரி செய்ய முடியும் தாமதத்திற்கு மன்னிக்கவும்....

நன்றி தோழரே... நல்ல கருத்துகளை என்றும் வரவேற்கிறோம்...

வெங்கட் said...

@ இந்திரா.,

// பதிவில் “பெரும்பாலான“ என்ற சொல் அடிக்கடி
வருவதை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
வெங்கட்.. //

என் கமெண்டில் " சில பெண்களின் " என்ற
சொல் வருவதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள்
என்று நினைக்கிறேன் இந்திரா..

// ஒரு சிலர் வேண்டுமானால் “நான் ரொம்ப
ஜென்டில் மேன்“னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம் //

இதை தான் நானும் கேக்கிறேன்..

பெரும்பால ஆண்கள் பொறுக்கிகள்..
நான் ஜென்டில் மேன்னு சொல்றவரும்
நடிக்கிறவர்.. அப்ப ஆண்களில் நல்லவர்களே
இல்லை.. அப்படித்தானே..?!

எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும்.,
அவரையும் நீங்கள் சந்தேகம் கொண்டு தான்
பார்ப்பீர்கள் என்பது என்ன நியாயமோ..?!

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

பெரும்பால ஆண்கள் பொறுக்கிகள்..
நான் ஜென்டில் மேன்னு சொல்றவரும்
நடிக்கிறவர்.. அப்ப ஆண்களில் நல்லவர்களே
இல்லை.. அப்படித்தானே..?!

எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும்.,
அவரையும் நீங்கள் சந்தேகம் கொண்டு தான்
பார்ப்பீர்கள் என்பது என்ன நியாயமோ..?!/////

உங்களில் யார் உத்தமரோ அவர் முதலில் கல் எரியட்டும்.

வெங்கட் said...

@ இந்திரா.,

// @வெங்கட் உங்களை நான் என்னமோ
நினைத்தேன் நீங்களா இப்படி...?? //

அப்படி என்னங்க நான் தப்பா கேட்டுட்டேன்..?!

ஒரு சிலரை வெச்சி எல்லோரையும் எடை
போடாதீங்கன்னு தானே சொன்னேன்..?1

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

பிளாகர் வெங்கட் கூறியது...

@ இந்திரா.,

// @வெங்கட் உங்களை நான் என்னமோ
நினைத்தேன் நீங்களா இப்படி...?? //

அப்படி என்னங்க நான் தப்பா கேட்டுட்டேன்..?!

ஒரு சிலரை வெச்சி எல்லோரையும் எடை
போடாதீங்கன்னு தானே சொன்னேன்..?1/////


நல்லவர்கள் வெளியில் தெரியமாட்டார்கள்.
பொ---கி கள்தான் உடனே வெளியில்
தெரிவார்கள்.

உங்கள் அம்மாவைப் போல பாசமானவள் said...

@ வெங்கட்

நல்லவனா கெட்டவனா சொல்லல தம்பி உங்க பதிவுகள் நல்ல நகைச்சுவையா இருக்கும் நீங்க இப்படி கூட சீரியஸா கருத்து போடுவீங்களா தான்

நீங்கள் பெண் பிள்ளை பெற்று இருந்தா அந்த வலி புரியும் தம்பி
அக்கா தம்பி ஒண்ணா வெளியே போனால் கூட தப்பா பேசுற உலகம் தம்பி... 95 சதவிகிதம் பேர் இப்படி பெண்ங்களை கிண்டல் செய்து பேசியிருப்பார்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும்...

வெங்கட் said...

// உங்களில் யார் உத்தமரோ அவர்
முதலில் கல் எரியட்டும். //

அதான் நான் முதல் கமெண்ட் போட்டு
இருக்கேன்ல..

வெங்கட் said...

// நீங்கள் பெண் பிள்ளை பெற்று இருந்தா
அந்த வலி புரியும் தம்பி அக்கா தம்பி
ஒண்ணா வெளியே போனால் கூட தப்பா
பேசுற உலகம் தம்பி... //

நன்றி அக்கா...

அப்ப உங்க கருத்துப்படி அந்த தம்பியும்
யாரோ ஒரு அக்கா தம்பி ஒண்ணா போறப்ப
தப்பா பேசுறவரு.. ரைட்..?

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

// உங்களில் யார் உத்தமரோ அவர்
முதலில் கல் எரியட்டும். //

அதான் நான் முதல் கமெண்ட் போட்டு
இருக்கேன்ல..////

ஒரு ஏசு மட்டும் போதுமா?
உங்களுக்கு சரியான புரிதல் இல்லை.
தம்பி போயிட்டு எல்லாருக்கும் ஞானஸ்நாணம் பண்ணுங்க.

உங்கள் அம்மாவைப் போல பாசமானவள் said...

அப்ப உங்க கருத்துப்படி அந்த தம்பியும்
யாரோ ஒரு அக்கா தம்பி ஒண்ணா போறப்ப
தப்பா பேசுறவரு.. ரைட்..?//

தவறான புரிதல் தம்பி... ஒரு அக்கா கூட பிறந்தும் ஒரு தம்பி அப்படி மற்ற பெண்களை கிண்டல் செய்தான் என்றால் அவனை திருத்துவது தான் என் முதல் கடமையாக இருக்கும்....


என் தம்பி அப்படி கிண்டல் செய்தான் என்றால் உங்களை போல் அவனுக்கு நல்லவன் வேஷம் போட்டு விட மாட்டேன்... அவனும் உங்களை போல் ஒருவனே என்பேன்...

வெங்கட் said...

// உங்களை போல் அவனுக்கு நல்லவன் வேஷம்
போட்டு விட மாட்டேன்... அவனும் உங்களை
போல் ஒருவனே என்பேன்... //

ரைட்டு இதையே கண்டினியூ பண்ணுங்க..

கும்புடுறேன்சாமி said...

//
பதிவில் “பெரும்பாலான“ என்ற சொல் அடிக்கடி வருவதை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் வெங்கட்..
அதே போல //ஒரு சிலர் வேண்டுமானால் “நான் ரொம்ப ஜென்டில் மேன்“னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம்// என்றும் சொல்லியிருக்கிறேன்..
தற்போதைய காலகட்டத்தில் நல்லவர்களை விட நடிப்பவர்களே அதிகம்..//

வீட்டில் தந்தையும் ..கூட பிறந்த சகோதரனையும் .... ஏன் உங்களுக்கு கல்யாணம் முடிந்து இருந்தா உங்க கணவனையும் சேர்த்து தான் சொல்லி இருக்கீங்க போல அதான் பெரும்பாலான என்ற வார்த்தையை அடிகடி சொல்லி இருக்கீங்கன்னு எடுத்துக்கொள்ளலாமா ?

நிகழ்காலத்தில்... said...

உலகில் நல்லவன் என்று எவரும் இல்லை. திருடும் வாய்ப்பும் சூழ்நிலையும் சேர்ந்தபோது ஒருவன் திருடி தப்பிக்கிறான் அல்லது மாட்டுகிறான். அவனை திருடன் என்கிறோம்.

ஆனால் மற்றவர்கள் அனைவருக்கும் அந்த வாய்ப்பும், சூழ்நிலையும் இதுவரை அமையவில்லை. அல்லது அமைந்தும் பிடிபடவில்லை. அதனால் அவனை நல்லவன் என்கிறோம். இது என்றோ படித்தது :)


//பெண்பால் மீதான ஆணின் இனக்க்வர்ச்சி இயற்கையின் ஏற்பாடாயினும் அது அவ்விதமாக இல்லாமல் தனக்குக் கிடைக்கவில்லை என்பதன் ஆற்றாமையின் வெளிப்பாடாக வக்கிரமாக விரசமான வார்த்தைகளாக வந்து விழுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது//

கட்டுரையின் சாராம்சமே இந்த பத்தியில் தொகுக்கப்பட்டு இருக்கிறது. கட்டுரையின் கருப்பொருளோடு நான் உடன்படுகிறென்.

நிகழ்காலத்தில்... said...

//விடு மச்சி....
நீ வா நம்ம போகலாம்...
யாரும் வரமாட்டாங்க...
நாம தனியா நின்னு டீ ஆத்திட்டு இருப்போம். அப்புறம் ரெண்டு மணி நேரம் கழிச்சு, தூங்கி எந்திருச்சு பல்லு விளக்கிட்டு வருவாங்க(ஆம்பளைங்க)...//

மாலுமி என்கிற டெர்ரர் கும்மி நண்பர்கள் கமெண்ட்..இது விவாதத்திற்கு அழைப்பது போல் தெரியல :)) எனக்கு உடம்பு தாங்காது நான் எஸ்கேப் :)))

கும்புடுறேன்சாமி said...

மேலே உள்ள கம்மேண்ட்ஸ் டெலீட் ஆகுமா ..?
இந்த குழுமத்தில் நிறைய ஆண் நபர்கள் இருக்கிறார்கள் ..அவர்களையும் சேர்த்து தான் பெரும்பாலான என்ற வார்த்தையை நீங்கள் கூறி இருக்கிறீர்களா ... இந்த குழுமத்தில் உங்கள் தந்தை வயது உடையவரையும் சேர்த்து தான் நீங்கள் கூறி இருக்கிறீர்கள் என்று எடுத்து கொள்ளலாமா ?

இந்த கமெண்ட்ஸ் டெலீட் ஆகுமா ? ...நீங்கள் போலி முகம் அறியாமல் கமெண்ட்ஸ் போடுங்க நானும் போடுறேன் தில் இருக்கா ?

நிகழ்காலத்தில்... said...

கட்டுரையாளர் பெண் என்பதால் அவரது குடும்ப ஆண்களுக்கும் இதே விதி பொருந்துமா என்கிற எதிர்கேள்வி வருகிறது. அதற்கு என் பதில் பொருந்தும்.,

உலகம் ஒன்றும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்களோடு படைக்கப்பட வில்லை.

ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டார்களோ அல்லது பரிணாமத்தில் வழியே இருபால் உயிர்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய் பரிணாமம் வந்ததோ ஆனால் அதன்பின் எப்படி இத்தனை ஆணும், பெண்ணும் ?

மனதுக்கு வலித்தாலும் உண்மை உண்மைதானே., அக்கா, தம்பி, அண்ணன் தங்கை என்பதெல்லாம் மனம் கற்பித்துக்கொண்டதுதான்.
வெளியே இருந்து பாருங்கள்....

இயற்கையின் படைப்பு ஆணும், பெண்ணும் தான். அது இணைந்து இனம் பல்கிப் பெருகுவதுதான் இயற்கைவிதி., அந்தவிதமாக இல்லாமல் வக்கிரம் கூடாது என்பதுதான் இக்கட்டுரை.,

இருபால் ஈர்ப்பு என்பது காதலாகி, காமத்தில் முடிந்தால் அது பொருத்தம். ஆனால் எடுத்தவுடன் பொருந்தா காமமாக, அதன் வெளிப்பாடாக வக்கிரமான வார்த்தைகள் வெளிப்படும்போது
ஒரு பெண் மனம் பாதிக்கப்படும்போதுதான் அதைக் கவனித்து காரணமானவற்றை பேசுகிரோம்.

விலைமகளிர் பல ஆண்களோடு கூடுகின்றனர். இதற்கு உடல் ஒத்துழைக்கும். மனமும் ஒத்துழைக்கிறது. அங்கே விபச்சாரம் தவறல்ல:)

இதற்காக நமக்கு சம்பந்தமில்லாத குடும்ப பெண்ணிடம் என்னிடம் படுக்க வா என்றால் அங்கே உடல் ஒத்துழைக்க தடையேதும் இல்லை என்பதே இயற்கை. ஆனால் மனம் தடை., ஆக இங்கே அது தவறு., இந்த தவறுகள் வரக்கூடாது என்றே இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

நிகழ்காலத்தில்... said...

குடும்ப உறவுகளுக்குள் காமம் ஏன் வருவதில்லை? ஒருவீட்டில் அண்ணன் தங்கை அக்கா தம்பி அப்பா மகள் என்ற உறவுகள் எல்லாம் பிறந்ததில் இருந்து அனுதினமும் உடலளவிலும், மனதளவிலும் பார்த்து பழக்கப்பட்டு வருகிறது.

அங்கே இயல்பாகவே காம உணர்வு தோன்றுவதே இல்லை. இங்கே பிரச்சினையே அறிமுகம் இல்லாத அல்லது குறைந்த அறிமுகமே உள்ள பெண்ணுடன் ஆண்கள் எப்படி இயல்புக்கு மாறாய் வக்கிரமாக பேசுகிறார்கள் என்பதே.,

இந்த கட்டுரையின் வாசிப்பாளர்களில் இந்த குணம் தனக்குத்தானே இருக்கிறதா என அலசிப்பார்த்து தன்னைத்தானே திருத்திக்கொள்ள விரும்புவர்களுக்கான வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டுரையின் கருத்துகளில் பிழை இருப்பின் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்கலாம். நான் விளக்கம் சொல்ல தயாராக இருக்கிறேன் கழுகுவின் சார்பாக.,

நிகழ்காலத்தில்... said...

//மேலே உள்ள கம்மேண்ட்ஸ் டெலீட் ஆகுமா ..?
இந்த குழுமத்தில் நிறைய ஆண் நபர்கள் இருக்கிறார்கள் ..அவர்களையும் சேர்த்து தான் பெரும்பாலான என்ற வார்த்தையை நீங்கள் கூறி இருக்கிறீர்களா ... இந்த குழுமத்தில் உங்கள் தந்தை வயது உடையவரையும் சேர்த்து தான் நீங்கள் கூறி இருக்கிறீர்கள் என்று எடுத்து கொள்ளலாமா ?

இந்த கமெண்ட்ஸ் டெலீட் ஆகுமா ? ...நீங்கள் போலி முகம் அறியாமல் கமெண்ட்ஸ் போடுங்க நானும் போடுறேன் தில் இருக்கா ?//

குழுமத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் சாமி :)
இந்திரா என்னைச் சொன்னாதாக நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வலியும் இல்லை. கழுகு குழுமத்தில் இருக்கும் உறுப்பினர்களிடையே இந்த புரிதலும் ஒற்றுமையும் இருக்கிறது.

தில் இருக்கான்னு கேக்கறீங்க எதுக்குன்னு தெரியல., கேள்வி கேளுங்க., பதில் சொல்றேன்.:))

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

well said siva

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

இந்த கமெண்ட் கும்மி குரூப் மக்களுக்கு கோபத்தை உண்டு பண்ணலாம்.

இன்றைய தேதியில் உலகமே கண்ணீர் விட்டு கதறிக்கொண்டு இருக்கிறது.இலங்கை போர் குற்றத்தை நினைத்து.இதற்க்காக நீங்கள் உங்கள் குழுமத்தில் என்ன வாதம் புரீன்தீர்கள் ?
அல்லது ஏதாவது போஸ்ட் தான் போட்டீர்களா?
ஒரு பெண் போஸ்ட் போட்டா உடனே வந்துடுவீன்களே.உங்க ஆணாதிக்கத்தை காட்ட,இதே போஸ்ட்ஐ உங்க வீட்டு பெண் போட்டிருந்தால்-ஆக,அருமை,இப்படி சொல்லி தட்டி கொடுத்திருப்பீர்கள்.

இப்ப என்ன பிரச்னை?
நீங்க ரொம்பபபபபபபபபப நல்லவங்க.
உத்தமர்கள்.காந்தி ச்சே.இல்லை அவரைவிடவும் மேலானவர்கள்.
போங்க போய் டீ குடிச்சிட்டு அடுத்த போஸ்ட்க்கு வெயிட் பண்ணுங்க.

இங்க தமிழக மக்கள்,இந்திய மக்கள்,உலக மக்கள் கண்ணீர் விடட்டும்.அதை பத்திய கவலை உங்களுக்கு தேவை இல்லை.

நீங்கள் be happy.

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லவும்.

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

வாதம புரியலாம்.பிடிவாதம் பிடிக்கலாமா?
ஒரு கட்டுரை வந்தா அதில் இது இது
தவறு,இது இப்படி என்று சரி செய்யணுமா?அதைவிட்டுவிட்டு
கச்சை கட்டி ஆடனுமா?
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
உங்கள் மதிப்பின் மேல் நீங்களே கரைத்து ஊற்றிகொள்ளாதீர்கள்.

உங்கள் அனைத்து செயல்பாடுகளையும் இந்த உலகம் கவனிக்கிறது.

என்னதான் போட்டி,அது இது என்று வைத்தாலும்,ஒரு சிறு துளி விஷம்
உங்கள் பேரை கெடுக்கும்.

புரிந்துகொண்டால் சரி

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

என்ன சாதிக்க போறீங்க?இங்க வந்து கத்தி கூப்பாடு போட்டு?

இதனால் இலங்கை பிரச்னை தீர்ந்து விடுமா?

இல்லை இன்று உலகம் அழும் கண்ணீர் துடைத்து விடுமா?

உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

உங்களால் உணவு உண்ண முடிகிறதா?

வைகை said...

உங்கவீட்டு கற்ப்புக்கரசி சொன்னது…
இந்த கமெண்ட் கும்மி குரூப் மக்களுக்கு கோபத்தை உண்டு பண்ணலாம்.

இன்றைய தேதியில் உலகமே கண்ணீர் விட்டு கதறிக்கொண்டு இருக்கிறது.இலங்கை போர் குற்றத்தை நினைத்து.இதற்க்காக நீங்கள் உங்கள் குழுமத்தில் என்ன வாதம் புரீன்தீர்கள் ?
அல்லது ஏதாவது போஸ்ட் தான் போட்டீர்களா?
ஒரு பெண் போஸ்ட் போட்டா உடனே வந்துடுவீன்களே.உங்க ஆணாதிக்கத்தை காட்ட,இதே போஸ்ட்ஐ உங்க வீட்டு பெண் போட்டிருந்தால்-ஆக,அருமை,இப்படி சொல்லி தட்டி கொடுத்திருப்பீர்கள்.

இப்ப என்ன பிரச்னை?
நீங்க ரொம்பபபபபபபபபப நல்லவங்க.
உத்தமர்கள்.காந்தி ச்சே.இல்லை அவரைவிடவும் மேலானவர்கள்.
போங்க போய் டீ குடிச்சிட்டு அடுத்த போஸ்ட்க்கு வெயிட் பண்ணுங்க.

இங்க தமிழக மக்கள்,இந்திய மக்கள்,உலக மக்கள் கண்ணீர் விடட்டும்.அதை பத்திய கவலை உங்களுக்கு தேவை இல்லை.

நீங்கள் be happy.///////////////////////


ஹலோ பாஸ்.... சாரி... மேடம்.... இதுல ஏன் டெரர் கும்மிய இழுக்குறீங்க? பதினாறு பேர்ல நாலு பேரு வந்து கமெண்ட் போட்டா உடனே கும்மி க்ரூப்பா? முடிஞ்சா பதில் சொல்லுங்க.. இல்லையா அமைதியா இருங்க... என்ன பண்றது? எங்களுக்கு ஒரே ஐடில நாலு பேரு எப்பிடி கமெண்ட் போடறதுன்னு தெரியல :-) நாங்க டெரர் கும்மில எங்கயாவது எப்பவாது சொல்லியிருக்கோமா? நாங்கதான் இந்த நாட்ட திருத்த வந்துருக்கோம்... எல்லோருக்கும் விழிப்புனர்வ அப்பிடியே ஊட்டி ஊட்டி வளர்க்க போறோம்னு? அங்க நாங்க தெளிவா சொல்லிட்டுதான் போஸ்ட் போடறோம்... என்ன பண்றது... நாங்க கஷ்டப்பட்டு நகைச்சுவைக்காக எழுதும் பதிவ விட சில சமயம் விழிப்புணர்வு என்ற பேர்ல நீங்க அசால்ட்டா மிஞ்சிட்டு போய்டறீங்க..அந்த பொறாமை கூட எங்களுக்கு உண்டு!

டெரர் கும்மிய இழுத்ததாலத்தான் நான் இங்க வந்து கமெண்ட் போடறேன்... மற்றபடி இந்த பதிவ பத்தி சொல்லனும்னா... எனது நீண்ட நாள் ஆசையான கழுகில் முழுநீள காமெடி பதிவு இல்லையென்ற குறையை இந்த பதிவு நீக்கியது. அந்த வகையில் இதை பரிந்துரை செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி :-))

நிகழ்காலத்தில்... said...

உங்க வீட்டு கற்ப்புக்கரசி :))))

உங்களது கட்டுரைக்கு சம்பந்தமில்லாத, டெர்ரர்கும்மியினரை வம்புக்கு இழுக்கும் வார்த்தைகளை இங்கே வெளிப்படுத்த வேண்டாம். கழுகு வலைதளம் சமாதானத்திற்கான களம்.சண்டைக்கான களம் அல்ல...

இனிமேல் இதுபோன்ற பின்னுட்டங்கள் இட வேண்டாம்..நன்றி

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

எங்கே தவறு என்று புரிகிறதா மக்களே?
இந்த கட்டுரைக்கு நீங்கள் எப்படி வாதம் புரிந்திருக்க வேண்டும்?

இங்க இங்க தப்பு.இங்க இங்க சரி.
இங்க இந்த கருத்தை சேர்க்கணும்.
இப்படி ஆரோக்கியமாக போக வேண்டிய கமெண்ட்ஸ்ஐ எப்படி ஆரம்பதுலேயே
மாற்றி விட்டீர்கள்?

ஏதோ நீங்கள் மட்டுமே உலகத்தில் உள்ள ஆண்களுக்கு தலிவர் மாதிரியும்,நீங்க சொல்லுவதே வேத வாக்காகவும்,என்னது இது ?

இந்த கட்டுரையை அப்படியே உங்கள் வீட்டு பெண்களிடம் படித்து காட்டிவிட்டு பிறகு வந்து கருத்து கூறவும்.

அவர்கள் என்ன கருத்து கூறுகிறார்கள் என்று கவனிக்கவும்.அவர்கள் நல்ல
குடும்பத்து பெண்கள்.கண்டிப்பாக தவறாக சொல்லமாட்டார்கள்.

நிகழ்காலத்தில்... said...

வைகையை மகிழ்வித்ததில் எனக்கும் பங்கு உண்டு :)))

உங்களின் வெளிப்படையான கருத்தை மதிக்கிறேன் :)

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

இங்க நான் தனிப்பட்ட பெண்.
எனக்கும் கழுகுக்கும் எந்த சம்பந்தம் இல்லை.
ஒரு பெண்ணாக நான் இங்க கமெண்ட்ஸ் போடுகிறேன்.

நாளை யார் நல்ல நகைசுவை பதிவி போட்டாலும் நான் ரசிப்பேன்.

சௌந்தர் said...

இந்த கட்டுரையை அப்படியே உங்கள் வீட்டு பெண்களிடம் படித்து காட்டிவிட்டு பிறகு வந்து கருத்து கூறவும்.///

இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்.... இங்கு கருத்து இடும் நண்பர்களே... உங்கள் வீட்டு பெண்களிடம் இதை செய்து காட்டுங்கள்...

உங்கவீட்டு கற்ப்புக்கரசி said...

இப்போதைக்கு வரேன்.
மீண்டும் சிந்திப்போம்.சந்திப்போம்.

Unknown said...

ஆணாதிக்கத்தில் உச்சத்தில் இருந்த பாரதியார் திருந்தி தன் மனைவியை சக மனுசியாக ஏற்றுக்கொள்ளவில்லையா? இளம் வயதில் இருக்கும் இந்த குணங்கள் வயது ஆக..ஆக..பக்குவப்படும்...

பேருந்தில் வயதான பெண்மணிகளுக்கும், கர்பிணிகளுக்கும் அதிகம் இடம் தருவது ஆண்கள்தான் பெண்கள் எங்கோ வெளியே வேடிக்கை பார்ப்பார்கள் இது நடப்பதேயில்லை பொய் என்று கட்டுரை ஆசிரியர் சொல்ல முடியுமா? இவர்கள் வன்மம் நிறைந்தவர்களா?

கியூவில் பல காரணங்களுக்காக நிற்க்கும் போது லேடீஸ முதல்ல அனுப்புங்கய்யா அவிங்களை நிக்க வைச்சிட்டு என்று கூறுகிறாரே ஒரு ஆண் இவர்கள் வன்மம் நிறைந்தவர்கள் என்று சகோதரி இந்திரா கூற முடியுமா?

சில ஆண்கள் இவ்வாறு அல்ல இதைவிட கேவலமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள்...என்பது உண்மைதான் அதை என்னால் மட்டுமல்ல யாராலும் மறுக்க முடியாது...பெண்ணிக்கு பெண்ணே எதிரியாக பல இடங்களில் உள்ளார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன்....மற்றபடி விவாதிக்க விருப்பமில்லை என் கருத்தை பதிந்தேன் அவ்வளவே!

வைகை said...

nigalkalathil siva சொன்னது…
வைகையை மகிழ்வித்ததில் எனக்கும் பங்கு உண்டு :)))

உங்களின் வெளிப்படையான கருத்தை மதிக்கிறேன் ///

@ சிவா

புரிதலுக்கு நன்றிங்க...நான் அந்த கற்புகரசிகிட்ட விவாதம் பண்ண வரல....இங்க வந்து கமெண்ட் போட்டவங்க டெரர் கும்மிக்ரூப்ப சேர்ந்தவங்க... அதுனாலே குழுமத்தின் பேரை இங்கு இழுப்பது நியாயம் இல்லை..அதை சொல்லவே வந்தேன் ... பை த வே...அந்த கற்புகரசிய பார்த்தா கொண்டைய நல்லா முடிஞ்சிகிட்டு சண்டை போட சொல்லவும் :-)))) பாவம் மறைக்க தெரியல :-)

நிகழ்காலத்தில்... said...

@வைகை
உண்மைதான். :))))
கொண்டை தெரிகிறது. விசாரிக்கிறேன் :)))

அப்ரண்டீசு போல இருக்குது :)))

Aashiq Ahamed said...

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

அன்பு சகோதரி அவர்களுக்கு,

தாங்கள் ஆணாதிக்கத்தையும், சமூக சீர்கேடுகளையும் போட்டு குழப்பிக்கொண்டீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது. ஏன் என்பதற்கு காரணங்களை சொல்கின்றேன். இந்த பதிவில் தாங்கள் பேசியிருப்பது சமூக சீர்கேடு. பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் ஆண்கள் குறித்து இப்படியாகத் தான் பேசுவார்கள் என்றும் கூட படித்திருக்கின்றேன் (அப்படியென்றால் அதனை பெண்ணாதிக்கம் என்று சொல்லலாமா?). ஆக, இது ஒரு பாலினம் இன்னொரு பாலினம் மீது கொண்டுள்ள அக்கிரமம், முட்டாள்தனம்.

இன்னும் தெளிவாக சொல்கின்றேன். மேற்கத்திய நாடுகளை ஆணாதிக்க சமுதாயம் என்று பலரும் கூறுவதில்லை. ஆனால் அங்கேயும் நீங்கள் கூறுவது போல நிச்சயம் நடக்கும். உலகில் பாலியல் பிரச்சனைகள் அதிகம் நடக்கும் நாடுகளை கணக்கிட்டால் மேற்கத்திய நாடுகளே அதில் பெரும்பாலும் இருக்கின்றன (நீங்களே கூகிள் சர்ச் பண்ணி பாருங்கள் சிஸ்டர்). அதே நேரம், இவர்களின் நடவடிக்கைகளை வைத்து யாரும் ஆணாதிக்கம் என்று சொல்வதில்லை. இம்மாதிரியான சமூக சீர்கேடுகளை வைத்து ஆணாதிக்கம் என்று சொல்வோமேயானால், மேற்கத்திய நாடுகளும் ஆணாதிக்க சமுதாயமே. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று புரிந்திருக்கும் என்று எண்ணுகின்றேன்.

நீங்கள் பதிவில் சொல்வது சமூக சீர்கேடு மட்டுமே. "நான் சொல்கின்றப்படி தான் கேட்கவேண்டும்" என்று பெண்ணை நோக்கி சொல்லும் ஆணாதிக்கவாதி மனதளவில் இம்மாதிரியான சீர்கேடுகளை செய்யாதவனாக கூட இருக்கலாம் (அதனால் அவனை ஆணாதிக்கவாதி இல்லை என்று சொல்லிட முடியுமா?). நானே பல பேரை பார்த்திருக்கின்றேன். இதோ இதனை எழுதிக்கொண்டிருக்கும் நான் கூட, சில நேரங்களில் ஆணாதிக்கவாதியாக (இறைவன் பாதுக்காக்கவேண்டும். அறிந்தே அல்ல) நடந்திருக்கலாம். ஆனால் இறைவன் மீது ஆணையாக, இங்கே நீங்கள் சொல்லிருக்கின்றப்படி நடந்துக்கொண்டதில்லை. என்னுடைய இறைநம்பிக்கையாள நண்பர்களும் அப்படியே.

ஆணாதிக்கம் என்பதை விட சமூக சீர்கேடுகளே இங்கே முன்னுரிமை கொடுத்து களையப்பட வேண்டியவை. பிரச்சனையை பேசும் பலரும் அது குறித்த தீர்வுகளை பேச மறுக்கின்றனர். இங்கே சமூக சீர்கேடுகளை பற்றி பேசிய நீங்கள் இவற்றை களைய தீர்வுகளை பேசவில்லை. ஒருவனை மனதளவில் தூயவனாக மாற்றுவது மட்டுமே இம்மாதிரியான சமூக சீர்கேடுகளை நிரந்தரமாக தடுக்கும். இந்த பிரச்சனைகளை போக்கும் தீர்வாக நீங்கள் எதனை முன்வைக்கின்றீர்கள்? சொல்லுங்கள், அது தீர்க்கமான ஒன்றாக இருந்தால் ஒன்றாக முன்னெடுத்து செல்வோம்.

இந்த பிரச்சனைகளுக்கு என்னுடைய தீர்வு மிக எளிமையானது. இறையச்சம். ஆம் அது மட்டுமே இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது போல நான் முன்பு இருந்திருக்கவில்லை என்றாலும் இதனை ஒட்டிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்ரேன். இறைவன் நேர்வழியை காட்டினான். என் போலவே என்னுடன் இருக்கும் பலருக்கும். இறைவன் மீது இருக்கும் அச்சத்தால் நாங்கள் முன்பு போல நடந்துக்கொள்வதில்லை. அப்படி நடந்தால் கொடுமையான நரகம் காத்திருக்கின்றது என்பதை நன்கு அறிந்தே உள்ளோம். என்னுடைய தீர்வு உங்களுக்கு வேறு மாதிரியான எண்ணங்களை தரலாம். ஆனால் இந்த பதிவை பார்த்துவிட்டு சும்மா செல்ல முடியவில்லை. அதனாலேயே இங்கே பகிர்கின்றேன்.

இங்கே உங்களுடன் வாதிப்பது என்னுடைய நோக்கம் அல்ல. தவறாக ஏதும் இருந்தால் இறைவனுக்காக மன்னியுங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக என்று பிரார்த்தித்தவனாக,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
http://www.ethirkkural.com

நிகழ்காலத்தில்... said...

திரு. ஆஷிக்

கட்டுரையாளர் மனதில் வைத்துப் பேசி இருப்பது இதுபோல் நடந்து கொள்ளும் ஆண்களை மனதில் வைத்துதான்.:) இதற்குப்பெயர் ஆணாதிக்கம் அல்ல., ஆண்களில் பலர் இப்படி இருக்கிறார்கள் என்பதே.,

சமூகச் சீர்கேடுகளுக்கான தீர்வாக இறையச்சத்தை வைத்திருக்கிறீர்கள். ஓரிறை தத்துவத்தை நான் மிகவும் மதிக்கிறேன். நீங்களும் அவ்வண்ணமே என்று நினைகிறேன்.

இறை அச்சம் என்பதெல்லாம் மிகவிரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விசயம்.,கட்டுரை ஆணாதிக்கம் பற்றி பேசமுனைந்து குழம்பி விட்டதாக சொன்ன தாங்கள் ஓரிறையை இறைவன் என்று சொல்லி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தி விட்டீர்களே...:)))))))

மார்க்கம் என்ன சொல்கிறது என்பது எனக்கு தெரியாது. அது அவ்வண்ணமே சொல்லுமாயின் அப்படியே பயன்படுத்துங்கள் சகோ.

Aashiq Ahamed said...

சகோதரர் சிவா ,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக..

தலைப்பையும், பதிவையும் நன்கு உள்வாங்கியே கருத்திட்டேன் சகோதரர். நான் தீர்வாக கருவதை கூறியிருக்கின்றேன். அவ்வளவே.

இல்லை சகோ. இஸ்லாம், கடவுளை ஆண் பெண் என்னும் பாலினத்தில் அடைக்கவில்லை. இறைவன் என்பது ஆனாதிக்கமாக தெரிந்தால் கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்கள் சகோதரர். இது குறித்து உரையாடும் தளம் இதுவல்ல சகோதரர். என் தளம் பக்கம் வந்தால் இன்ஷா அல்லாஹ் உரையாடலாம்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

TERROR-PANDIYAN(VAS) said...

@Ashiq Ahmed

//தாங்கள் ஆணாதிக்கத்தையும், சமூக சீர்கேடுகளையும் போட்டு குழப்பிக்கொண்டீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது. ஏன் என்பதற்கு காரணங்களை சொல்கின்றேன். இந்த பதிவில் தாங்கள் பேசியிருப்பது சமூக சீர்கேடு. பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் ஆண்கள் குறித்து இப்படியாகத் தான் பேசுவார்கள் என்றும் கூட படித்திருக்கின்றேன் (அப்படியென்றால் அதனை பெண்ணாதிக்கம் என்று சொல்லலாமா?). ஆக, இது ஒரு பாலினம் இன்னொரு பாலினம் மீது கொண்டுள்ள அக்கிரமம், முட்டாள்தனம்.

இன்னும் தெளிவாக சொல்கின்றேன். மேற்கத்திய நாடுகளை ஆணாதிக்க சமுதாயம் என்று பலரும் கூறுவதில்லை. ஆனால் அங்கேயும் நீங்கள் கூறுவது போல நிச்சயம் நடக்கும். உலகில் பாலியல் பிரச்சனைகள் அதிகம் நடக்கும் நாடுகளை கணக்கிட்டால் மேற்கத்திய நாடுகளே அதில் பெரும்பாலும் இருக்கின்றன (நீங்களே கூகிள் சர்ச் பண்ணி பாருங்கள் சிஸ்டர்). அதே நேரம், இவர்களின் நடவடிக்கைகளை வைத்து யாரும் ஆணாதிக்கம் என்று சொல்வதில்லை. இம்மாதிரியான சமூக சீர்கேடுகளை வைத்து ஆணாதிக்கம் என்று சொல்வோமேயானால், மேற்கத்திய நாடுகளும் ஆணாதிக்க சமுதாயமே. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று புரிந்திருக்கும் என்று எண்ணுகின்றேன்.

நீங்கள் பதிவில் சொல்வது சமூக சீர்கேடு மட்டுமே. "நான் சொல்கின்றப்படி தான் கேட்கவேண்டும்" என்று பெண்ணை நோக்கி சொல்லும் ஆணாதிக்கவாதி மனதளவில் இம்மாதிரியான சீர்கேடுகளை செய்யாதவனாக கூட இருக்கலாம் (அதனால் அவனை ஆணாதிக்கவாதி இல்லை என்று சொல்லிட முடியுமா?). நானே பல பேரை பார்த்திருக்கின்றேன். இதோ இதனை எழுதிக்கொண்டிருக்கும் நான் கூட, சில நேரங்களில் ஆணாதிக்கவாதியாக (இறைவன் பாதுக்காக்கவேண்டும். அறிந்தே அல்ல) நடந்திருக்கலாம். ஆனால் இறைவன் மீது ஆணையாக, இங்கே நீங்கள் சொல்லிருக்கின்றப்படி நடந்துக்கொண்டதில்லை. என்னுடைய இறைநம்பிக்கையாள நண்பர்களும் அப்படியே.

ஆணாதிக்கம் என்பதை விட சமூக சீர்கேடுகளே இங்கே முன்னுரிமை கொடுத்து களையப்பட வேண்டியவை. பிரச்சனையை பேசும் பலரும் அது குறித்த தீர்வுகளை பேச மறுக்கின்றனர். இங்கே சமூக சீர்கேடுகளை பற்றி பேசிய நீங்கள் இவற்றை களைய தீர்வுகளை பேசவில்லை. ஒருவனை மனதளவில் தூயவனாக மாற்றுவது மட்டுமே இம்மாதிரியான சமூக சீர்கேடுகளை நிரந்தரமாக தடுக்கும். இந்த பிரச்சனைகளை போக்கும் தீர்வாக நீங்கள் எதனை முன்வைக்கின்றீர்கள்? சொல்லுங்கள், அது தீர்க்கமான ஒன்றாக இருந்தால் ஒன்றாக முன்னெடுத்து செல்வோம்.//

WELL SAID BROTHER. கொட்டி கிடக்கும் குப்பைக்கு இடையில் உங்கள் கருத்து கோமேதகமாக கவர்கிறாது. ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று புலம்பி திறிவது எல்லாம் ஒரு மனநோய். வக்கிரம் யார் மனதில் தான் இல்லை. என்னமோ பெண்கள் மனம் பசும் பொன் மாதிரியும் ஆண்கள் எல்லாம் பிறப்பிலே பொறுக்கிங்க மாதிரியும். இங்க வந்து பாக்க சொல்லுங்க பொம்பளைங்க பண்ர அளும்பல. பில்டிங் வாசல்படியில் நின்று கொண்டு பச்சை பச்சையா.. சரி விடுங்க அப்புறம் கழுகில் இதை ஒரு காரணமா காட்டி கமெண்ட தூக்கிடுவாங்க. அழகான கருத்து நண்பரே உங்கள் தெளிந்த சிந்தனைக்கு வந்தனம்.

NaSo said...

For Follow-up..

நிகழ்காலத்தில்... said...

\\ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று புலம்பி திறிவது எல்லாம் ஒரு மனநோய்.\\

ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்கிறேன் டெர்ரர் பாண்டியன்:)

//வக்கிரம் யார் மனதில் தான் இல்லை.//

இதையேதான் பெண்ணின் பார்வையாக கட்டுரை பேசுகிறது

\\என்னமோ பெண்கள் மனம் பசும் பொன் மாதிரியும் ஆண்கள் எல்லாம் பிறப்பிலே பொறுக்கிங்க மாதிரியும். இங்க வந்து பாக்க சொல்லுங்க பொம்பளைங்க பண்ர அளும்பல. பில்டிங் வாசல்படியில் நின்று கொண்டு பச்சை பச்சையா.. சரி விடுங்க\\

இஷ்டமிருந்தா அதை கட்டுரையா எழுதிக்கொடுங்க., இதே தளத்தில் வெளியிடுகிறோம். மேற்கண்ட கட்டுரையும் இதேபோல் குழும உறுப்பினர் அல்லாதவரால் எழுதப்பட்டதே., பாண்டியன்...

//அப்புறம் கழுகில் இதை ஒரு காரணமா காட்டி கமெண்ட தூக்கிடுவாங்க. //

தனிநபர் தாக்குதல், அல்லது தரம் குறைந்த வார்த்தைகள், சண்டைய தூண்டுவதான கருத்துகள் வந்தால் ஆட்சேபணை இருக்கும். அவ்வளவு எளிதில் நீக்க மாட்டோம். உங்களிடம் இது போன்ற எதுவும் இல்லை. பிறகு ஏன் இந்த எண்ணம் பாண்டியன்...

//அழகான கருத்து நண்பரே உங்கள் தெளிந்த சிந்தனைக்கு வந்தனம். //

ஆஷிக்-ன் கருத்துக்கும் அழைப்பிற்கும் நன்றி., குர் ஆன் தமிழ் பதிப்பு வாங்கி வைத்திருக்கிறேன். படிக்க நேரம் கூடும்போது படித்துவிட்டு விவாதம் செய்வதே பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் தளத்தில்....

வெங்கட் said...

@ நிகழ்காலத்தில் சிவா.,

// ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்கிறேன்
டெர்ரர் பாண்டியன்:) //

கழுகு உறுப்பினராக உங்க பொறுப்பான
பதில்களுக்கு முதலில் பாராட்டுக்கள்..

ஒரிஜினல் ஐ.டில கமெண்ட் போடுவதற்காக
இன்னுமொரு ஸ்பெஷல் பாராட்டு..

நிகழ்காலத்தில்... said...

@ வெங்கட்

உங்களின் பாராட்டினை ஏற்றுக்கொள்கிறேன். இது என் பொறுப்பினை இன்னும் அதிகப்படுத்துகிறது என்பதாக உணர்கிறேன்.

நன்றி :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா

//உங்களின் பாராட்டினை ஏற்றுக்கொள்கிறேன். இது என் பொறுப்பினை இன்னும் அதிகப்படுத்துகிறது என்பதாக உணர்கிறேன்.//

வெங்கட் கருத்தை நானும் வழிமொழிகிறேன். முன்னாடி எல்லாம் தேவா மட்டும் மாங்கு மாங்குனு பதில் சொல்லுவாரு. இல்லைனா ஆளேயில்லாமல் அமைதியா இருக்கும். இப்போ நீங்க ஒருத்தர் பதில் சொல்றிங்க. இதில் முக்கியமான விஷயம் இங்கு நடப்பது கருத்து விவாதம். நாளைக்கு நிஜ உலகத்தில் பார்த்தா நட்போடு கை குலுக்கும் மனமுதிர்ச்சி தேவா போல் உங்களுக்கு இருக்கும் நம்பரேன். நன்றி!

நிகழ்காலத்தில்... said...

நன்றி டெர்ரர் பாண்டியன். உங்களின் நம்பிக்கை வீண்போகாது.


தேவாவும் நானும் மன அளவில் ஒருமித்த சிந்தனை உடையவர்களே..
அதனாலேயே தேவாவிற்காக நான் இங்கே பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆர்வத்தோடு உரையாடியமைக்கு நன்றிகள் பல.,

விடைபெறுகிறேன் :) தூக்கம் வருது :)))

TERROR-PANDIYAN(VAS) said...

இப்பொழுதுதான் தங்கள் தளத்தின் அனைத்து கமெண்டும் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. திடீர் என்று போடபட்ட மாட்ரேஷன் படீரென்று எடுக்கபாட்டு ஒரு கருவேலங் காட்டு காஞ்சனா காலில் சாணி மிதித்து கொண்டது போல் தன் அப்ரண்டீஸ்களுடன் ஆடி இருக்கும் ஆட்டம் மிக அருமை. அவர்களின் (அந்த க்ரூப் பாஸ் க்ரூப்) கவின் மிகு கமெண்டுகளில் பெண்மையின் மேன்மை கலங்கபட்ட கவலை தெரியவில்லை. மாறாக (என்றோ) காயபட்டேன் டெரர் கும்மியால் காப்பாற்றுங்கள் என்ற மரண ஓலம் மட்டுமே என் காதுகளில் ஓங்கி ஒலிக்கிறது. அஹம் ப்ரம்மாஸ்மி... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@உ.க.சொ

//இப்படிதான் பெண்ணியம் பேசுவதா???
சற்றே சிந்தித்து பாருங்கள்.உங்கவீட்டு
பெண்களாகிய நாங்கள் இப்படி
கேலி செய்யப்படும் பொது நீங்கள் ரசிப்பீர்களா?? //

கண்டிப்பாக இல்லை என்ற பதில் உங்கள் கேள்வியில் கொக்கி போட்டு தொக்கி நிற்க்கிரது. இங்கே கட்டுரையின் ஆசிரியர் கூறி இருக்கும் நீலாம்பரியின் (அதான் பேரா?) வீட்டு ஆண் இதை கேட்டால் வீன் வாதம் பேசியவனை விளக்குமாத்தால் அடிப்பான். கவனிக்க வேண்டும் தோழமையே அங்கு தட்டி கேட்பதும் ஒரு ஆண். அல்லது அந்த நேரத்தில் அவர் ஒரு பெண்ணாக உங்கள் கண்ணுக்கு தெரிவாரா என்று எனக்கு தெரியாது.

ஒரு ஆண் மட்டுமே பெண்ணை வக்கிரமாக வர்ணிக்கிரான் என்பது மிகைபடுத்தபட்ட குற்றசாட்டு. (ஸ்ஸ்ஸ்பா.. இந்த ஸ்டைல் போரடிக்கிதுபா). எங்க மனசுல கைவச்சி சொல்லுங்க எந்த ஒரு பொண்ணும் இன்னும் ஒரு பெண்னை பார்த்து மேனேஜர் கிட்ட வழிஞ்சி வழிஞ்சி பேசுவா அதான் அதிகமா இன்கிரிமெண்ட். ஆபீஸ்க்கு வர மாதிரியா வரா ச்சை அவ ட்ரெஸ்ச பாரேன் இப்படி எல்லாம் பேசுவது இல்லைனு. இல்லைனு அவசரபட்டு பொய் சொல்லிடாதிங்க.

அந்த பெண்ணை கேட்ட அவங்க சொல்லுவாங்க இவளுங்க பட்டிகாடு மாதிரி இழுத்து போத்திகிட்டு நின்னா எல்லாரும் அப்படி நிக்கனுமா என்று. அப்போ அங்க பேசியவர்களை உங்க வசதிக்காக பெண் என்பதை மறந்துவிட்டிர்களா இல்லை மறைத்து விட்டிர்களா? இப்படி ஆண்களை குறி வைத்து தாக்குவதால் நீங்கள் ஆண்களால சின்ன வயசில் ஏதோ பாதிக்கபட்டு இருக்கிங்க அதனால உங்க மனதில் எல்லா ஆண்கள் மேலையும் ஒரு வக்கிரம் என்று சொன்னால் ஒத்துபிங்களா?

மைத்ரேயி & ஆஷிக் அஹமது அழகா கருத்து சொல்லி இருக்காங்க. மாற வேண்டியது மொத்த சமூகமும். இதில் ஆணாதிக்கம் பெண்னாதிக்கம் அப்படினு காமடி பண்ண கூடாது.

(கமெண்ட் யாரு போட்டா பாக்காதிங்க. அதில் ஏதாவது கருத்து இருக்கா பாருங்க)

TERROR-PANDIYAN(VAS) said...

@உங்கள் அம்மாவைப் போல பாசமானவள்

நீங்க எந்த இடத்தில் பாதிக்கபட்டிங்கன்னு உங்க பேரே சொல்லுது.. :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@உ.வீ.க.சொ

//ஒரு பெண் போஸ்ட் போட்டா உடனே வந்துடுவீன்களே.உங்க ஆணாதிக்கத்தை காட்ட//

ஓ! பதிவுலகின் முதல் பெண்மணி எழுதிய பதிவா இது? இல்லை கழுகில் வந்த முதல் பெண் பதிவர் பதிவா? இல்லை இதுக்கு முன்னாடி ஏதாவது பதிவில் தப்பு இருக்குன்னு நான் இங்க வந்ததே இல்லையா?... :))

// இதே போஸ்ட்ஐ உங்க வீட்டு பெண் போட்டிருந்தால்-ஆக,அருமை,இப்படி சொல்லி தட்டி கொடுத்திருப்பீர்கள்.//

அட ஆணாதிக்கம்னா நம்ம வீட்டு பெண்களை தட்டி கொடுத்து அடுத்த வீட்டு பெண்களை மட்டம் தட்டுவதா. இது தெரியாம இவ்வளவு நாள் இருந்து இருக்கோமே.. :)

// இப்ப என்ன பிரச்னை?
நீங்க ரொம்பபபபபபபபபப நல்லவங்க.
உத்தமர்கள்.காந்தி ச்சே.இல்லை அவரைவிடவும் மேலானவர்கள்.//

தம்பி மூச்சி வாங்குது பாருங்க. இந்த தண்னியை குடிங்க.

// இங்க தமிழக மக்கள்,இந்திய மக்கள்,உலக மக்கள் கண்ணீர் விடட்டும்.அதை பத்திய கவலை உங்களுக்கு தேவை இல்லை.//

எந்த இடத்தில் எதை எப்படி காட்டனும் நாங்க பார்த்துகிறோம். நீங்க ஆசைபடறிங்கன்னு எல்லா இடத்திலும் நாங்க காட்ட முடியாது. பதிவுக்கு சப்போர்ட் பண்ண வந்த மாதிரி நடிச்சி டெரர் கும்மியை கடிக்க ரெம்ப முயற்சி செய்கிறிர்கள்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா

//உங்க வீட்டு கற்ப்புக்கரசி :))))

உங்களது கட்டுரைக்கு சம்பந்தமில்லாத, டெர்ரர்கும்மியினரை வம்புக்கு இழுக்கும் வார்த்தைகளை இங்கே வெளிப்படுத்த வேண்டாம். கழுகு வலைதளம் சமாதானத்திற்கான களம்.சண்டைக்கான களம் அல்ல...//

நண்பர் சிவா முதல் வரியில் போட்டு இருக்கு :))) இல்லாம இதை சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இப்போ ஏதோ உலுலாய்க்கு கண்டித்த மாதிரி இருக்கு.. :)

(கட்டுரைக்கு சம்பந்தமில்லாத கருத்துகள் சில அவர்கள் இட்டதால் நானும் எழுதி விட்டேன். மன்னிக்க. அவர்கள் தொடராதவரை நான் தொடர மாட்டேன். தூங்க போரேன். டாடா...)

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

ச்சே .. ச்சே ..நான் கலந்துக்க முடியாம ஆகிட்டே ....
ஆனாலும் கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சா நண்பர் சிவா அருமையா பதில் சொல்லி இருக்கீங்க ..
இருந்தாலும் பதிவுக்கும் கமெண்ட்ஸ் க்கும் சம்பந்தம் இல்லையே நண்பரே ..
நீங்க அந்த கமெண்ட்ஸ் புல் ஆக பதிவா போட்ட கூட நல்லா இருக்கும் ...
அதுவும் இல்லமால் கற்ப்புக்கரசி அண்ட் அம்மா போல் பாசமானவள் ...போலி ஐ டி ல வந்து ..கழுகு தளத்தை காமெடி ஆகிட்டு போய்ட்டீங்கா ..அதுவும் குழமத்தை சார்தவர்களே ..கொண்டையை மறைக்க தெரியாமால் இப்படியா ...தன தலையில் மண் அள்ளி போடுவது ...

இருந்தாலும் நான் வந்தேன் என்பதற்கு அடையாளாமாக ஒரு மைனஸ் ஒட்டு பதிவுக்கு ..
நண்பர் சிவாவுக்கு அருமையாக பதில் சொன்னார் அதற்காக இன்ட்லி ஒரு ஒட்டு சரியா ?(ஆமா இந்த ஒட்டு வச்சு நான் வீட கட்ட போறேன்னு சில பேர் எண்ண தோன்றும் ..அப்போ அந்த பட்டையை எடுத்து விடவும் ..)

நிகழ்காலத்தில்... said...

//:))) இல்லாம இதை சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இப்போ ஏதோ உலுலாய்க்கு கண்டித்த மாதிரி இருக்கு.. :)//

ஸ்மைலி போட்டது சூழ்நிலையின் சூட்டைக்குறைக்கத்தான். கண்டித்ததும் எச்சரிக்கைத்தொனி சற்று குறைவாக இருந்ததை ஒத்துக்கொள்கிறேன். அடுத்த கமெண்ட் தாக்கி வந்திருந்தால் திரும்ப கடுமையாக எச்சரிப்பதுடன் தேவாவிடம் அந்த கமெண்டகளை அழிக்கக் கேட்டிருப்பேன்.

உல்லுலாய்க்கு கண்டித்ததாக நினைக்க வேண்டியதில்லை பாண்டியன்., அந்த எனக்குத் தோன்றியதை செய்தேன். அதில் விமர்சனத்திற்கு இடமுண்டு என்பதையும் அறிவேன்:)

கழுகு வலைதளத்திற்கு வரும் ஒவ்வொரு வாசகரும் விருந்தினரே., அவர்களுக்கான மரியாதையை கொடுத்து விவாதம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். உங்களுக்கான மரியாதை என்றும் குறையாது :)

நட்புகளுக்குள் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லை :)

நன்றி., பை.. பை

நிகழ்காலத்தில்... said...

//அதுவும் இல்லமால் கற்ப்புக்கரசி அண்ட் அம்மா போல் பாசமானவள் ...போலி ஐ டி ல வந்து ..கழுகு தளத்தை காமெடி ஆகிட்டு போய்ட்டீங்கா ..அதுவும் குழமத்தை சார்தவர்களே ..கொண்டையை மறைக்க தெரியாமால் இப்படியா ...தன தலையில் மண் அள்ளி போடுவது ...//

இம்சை அரசன் பாபு., நான் முதல்லயே சொல்லிட்டேன். அப்ரண்டீசா இருக்குமோ அப்படின்னு...:) இந்த விவகாரம் தேவா கையாளவேண்டிய விசயம்., நான் தேவாவிடம் வலியுறுத்துகிறேன்.

ஒருவேளை குழுமத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் செய்திருப்பின் இனி அம்மாதிரி வேண்டாம்., நேருக்கு நேர் எதிர்கொள்வோம் என நேற்றே குழுமத்தில் செய்தியாக சொல்லி இருக்கிறேன்., வரும் காலங்களில் அது நடக்காது என நம்புகிறேன்....

அக்கறையுடன் கவனித்து சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.,

கழுகு said...

@ All

அன்பின் நண்பர்கள்.....

இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய சூழலுக்கு வருகிறேன்.

இந்தக்கட்டுரை இப்படியாய் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்றூ கூறுகிறது. இப்படியான வாழ்க்கை இருக்கிறது என்பதால் இப்படியான வாழ்க்கை மட்டுமே இருக்கிறது என்று பொருள் அல்ல.. இப்படியும் இருக்கிறது. விகிதாச்சாரத்தில் கூடுதல் குறைதல் இருக்கலாம்.

எப்படிப்பார்த்தாலும் எல்லோரின் விருப்பமும் சுமூகமான ஆண் பெண் உறவே.....!

ஆண்களால் பெண்கள் பாதிக்கப்படும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. இப்படி சொல்வதாலேயே பெண்கள் அனைவருமே ஆண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்று கூறவும் இயலாது. இது பற்றிய ஒரு பரிமாணத்தையும் விரைவில் பகிருவோம்.

மற்றபடி சிவா கூறிய படி இந்தக்கட்டுரைக்கு கருத்துரை வழங்குவதாலேயே நாங்கள் நட்புறவோடு இருக்கும் ஒரு குழுமத்தை மொத்தமாக இழுப்பது கட்டுரையையும், கட்டுரையைன் போக்கையும் ஆக்கப்போர்வமான பார்வைகளையும் பாதிக்கும்... என்பதையும் நான் பகிர விரும்புகிறேன்.

கட்டுரையப் பகிர்ந்தாயிற்று....கட்டுரைக்கு மாற்றுக் கருத்துக்கள் வந்தாயிற்று.....கட்டுரையும், கட்டுரைக்கு வந்த மாற்றுக் கருத்துக்களும் சேர்ந்து ஒரு முழுமையான புரிதலை பார்வையாளனுக்கு கொடுக்கும்.

Anonymous said...

ஒரு பார்வையாளினியாய், கழுகின் வாசகியாய் மீண்டும் இங்கே வந்து கட்டுரையையும் அதையொட்டிய பின்னூட்டங்களையும் பார்த்தால், எனக்கு ஒன்றே ஒன்று தோன்றுகிறது. மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட பின்னூட்டங்களின் வாயிலாய் புதியதாய் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. மாற்றுக்கருத்துக்களைத் தெரிவித்த சகோதரர்களின் பின்னூட்டங்கள், மேலும் ஆண்பாலின் மீது ஒரு வித பயத்தையே ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறது. கருத்துக்களில் தெரித்த கேலியும், மிரட்டல் போன்ற தொனியும், கட்டுரையை நகைச்சுவை என தெரிவித்த அவர்களின் மாண்பும், பெண்ணைக்குறித்தான அவர்களின் அபிப்ராய பேதங்களும் தான் தெரிகிறது. மேலும் பெண்ணாக, பெண்ணின் பார்வையாய், தங்கள் கருத்தை இனி கட்டுரையாய் பொது வெளியில் பகிர, ஒரு வித பயத்தைத் தான் உண்டு பண்ணியிருக்கிறீர்கள் என்பதே உண்மை.. இதன் நோக்கமாய் தான் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் ஜெயித்தீர்கள் என எடுத்துக் கொள்ளுங்கள்.இது தான் நான் அறிந்து கொண்டது இங்கே. கட்டுரைக்கு மாற்றுக்கருத்தாய் சகோதரர்களிடம் இருந்து வந்த பின்னூட்டங்களின் வழியாய், நான் அறிந்து கொண்டது இது தான். ஒரு மூன்றாம் நபரான பெண், உங்கள் கருத்துக்களின் வாயிலாக ஆண் சமூகத்தை இப்படித்தான் புரிந்து கொள்கிறாள் என்பதை அறிக!. ஏன் மாற்றுக்கருத்தைக் கூட நயமாக பகிரவில்லை என்ற ஏக்கத்தையும் வருத்தத்தையும் உண்டு பண்ணியிருக்கின்றது.

அதோடு சிவா அவர்களின் பின்னூட்டங்களின் வாயிலாக, அவரது நிதானமான பதில்களின் மூலம் கழுகு குழுமத்தாரின் மேல் மரியாதை கூடியிருக்கின்றது.
நன்றிகள் சிவா.

இக்கட்டுரையின் மறுபக்கமாய், ஒரு ஆணைப்பற்றியான புரிதலகள் பெண்ணுக்கு இப்படியாய் இருந்தால் நலம் எனும் தொனியில் கழுகு கட்டுரை தரும் என்பதை எதிர்நோக்கியிருக்கிறேன். இருவரும் இணைந்தது தானே சமுதாயம். இதுவரை நகைப்புக்கேதுவாய் இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான சீரிய கட்டுரைகளையே படைத்துக் கொண்டிருக்கும் கழுகு இன்னும் மென்மேலும் உயரப்பறக்க வாழ்த்துக்கள்!!

இப்படிக்கு
***மைத்ரேயி***

வெங்கட் said...

@ மைத்ரேயி.,

// மேலும் ஆண்பாலின் மீது ஒரு வித பயத்தையே
ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறது. //

இந்த பதிவு அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி
விடக்கூடாதே என்ற நோக்கத்தில் தான் நான்
என் எதிர்ப்பை பதிவு செய்தேன்..

பெண்கள் ஆண்களை பற்றி பேசும் போது
அது தவறாக இருக்கும் பட்சத்தில் அதை
மறுக்கும் உரிமை கூடவா எங்களுக்கு
இல்லை..

ஆண்களில் கெட்டவர்கள் இருக்கிறார்கள்..
அதில் மாற்றுக்கருத்து இல்லை.. - ஆனால்
ஆண்கள் கெட்டவர்களாக மட்டுமே
இருக்கிறார்கள் என்று தொடர்ந்து ஒரு
சகோதரி / சகோதரன் இட்ட பின்னூட்டங்கள்
உங்கள் பார்வைக்கு சரியானதாக படுகிறதா..?

// ஏன் மாற்றுக்கருத்தைக் கூட நயமாக பகிரவில்லை
என்ற ஏக்கத்தையும் வருத்தத்தையும் உண்டு
பண்ணியிருக்கின்றது. //

ம்ம்.. தவறுதான்.. ஆனால் இந்த மாற்றுக்கருத்துக்கள்
எல்லாம் நயமாக இருப்பதாக உணர்கிறீர்களா..?

// உங்கவீட்டு கற்ப்புக்கரசி சொன்னது…

உங்கள் வீட்டு பெண்கள் இரவில்
தூங்கும்போதுகூட எசகு பிசகா
ரசிப்பீன்களா? //

// உங்கவீட்டு கற்ப்புக்கரசி சொன்னது…
உன் அக்கா,தங்கை,அம்மாவை நான்
கிண்டல் பண்ணுவனாம். அதே போல
எந்தங்கை,அக்கா,அம்மாவை நீ
கிண்டல் பண்ணுவியாம்.
(இது தானே உங்க குரூப் தாரக மந்திரம்) //

// உங்கள் அம்மாவைப் போல பாசமானவள் சொன்னது…

அக்கா தம்பி ஒண்ணா வெளியே போனால் கூட தப்பா
பேசுற உலகம் தம்பி... 95 சதவிகிதம் பேர் இப்படி பெண்ங்களை
கிண்டல் செய்து பேசியிருப்பார்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும்... //

// என் தம்பி அப்படி கிண்டல் செய்தான் என்றால் உங்களை
போல் அவனுக்கு நல்லவன் வேஷம் போட்டு விட மாட்டேன்...
அவனும் உங்களை போல் ஒருவனே என்பேன்... //

இந்த கருத்துக்களின் வாயிலாக பெண் சமூகத்தை
நாங்கள் எப்படி புரிந்து கொள்வது என்பதை தெளியப்படுத்தவும்.

Anonymous said...

இந்த பதிவு அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி
விடக்கூடாதே என்ற நோக்கத்தில் தான் நான்
என் எதிர்ப்பை பதிவு செய்தேன்..

பெண்கள் ஆண்களை பற்றி பேசும் போது
அது தவறாக இருக்கும் பட்சத்தில் அதை
மறுக்கும் உரிமை கூடவா எங்களுக்கு
இல்லை..

ஆண்களில் கெட்டவர்கள் இருக்கிறார்கள்..
அதில் மாற்றுக்கருத்து இல்லை..//

அவ்ளோ தான்.... கட்டுரை தன் நோக்கத்தை நிறைவு செய்கிறது.

மறுக்க உரிமை கூடவா இல்லை என்று கேட்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல் ஆண்கள் அனைவரும் மோசமில்லை என மறுக்க என்ன என்ன காரணங்களை அன்பாக முன் வைத்தீர்கள்.இந்திரா அவர்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடும் ஒரு சில ஆண்கள் பற்றிய உங்களின் அபிப்ராயமும் தெரிவித்தாகிவிட்டது. நீங்கள் நிச்சயமாக அத்தகைய ஆண்கள் நல்லவர்கள் தான்..., உங்கள் புரிதல் தவறு என விளக்க முற்படமாட்டீர்கள் என நம்புகிறேன். முதலில் இவை தேவையே இல்லை. ஏனென்றால் சகோதரி இந்திரா அவர்கள் தங்கள் கட்டுரையில் எங்கேனும் ஆண்கள் அனைவரும் மோசமானவர்கள்/ பெண்பித்தர்கள் என்றோ நிறுவ முயற்சிக்கவில்லை. அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து, ஒரு குறிப்பிட்ட ஆண்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்றே அல்லவா சொல்ல முனைந்தார்கள். பின் எதனை நிறுவுவதற்காக நீங்கள் பின்னூட்டங்களை இட்டீர்கள் எனத் தெரியவில்லை. நிச்சயம் வேறு ஏதேனும் நோக்கம் என்றால், நான் இங்கிருந்து இத்துடன் வெளியேறுகிறேன். ஆரோக்யமான உரையாடல்களையே விரும்புகிறேன்.

உங்கள் கமெண்ட்டின் இரண்டாம் பாகத்திற்கான விளக்கத்தை கழுகு மெயிலுக்கு அனுப்பி கேளுங்கள்.
நிச்சயம் பதில் தருவார்கள்.

இப்படிக்கு
***மைத்ரேயி***

Anonymous said...

இந்திரா அவர்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடும் அந்த ஒரு சில ஆண்கள் கூட இந்த பிளாக்கரில் இல்லை ஏன் இந்த இணையத்திலோ இல்லவே இல்லை ... என்று சொல்லியிருக்க வேண்டும் போல் தெரிகிறது.

கட்டுரையை முடிக்கும் போது கடைசியாக இதை எழுதியிருக்க வேண்டும் போலும்...

மை காட்...பயமாய்த்தான் இருக்கிறது. பெண்ணாக பொதுவெளியில் உலவுவதற்கும்... பெரும்பாலான பெண்கள் ஒதுங்கி நடந்து போவதும் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும் என அஞ்சித்தான் எனத் தெரிகிறது. கழுகு போன்ற பெண்களை மதிக்கும் தளங்களிலாவது வந்து போகலாம் என்ற மிகக்குறைந்த அளவு ஆசையும் போய்விடும் அபாயத்தைத் தான் கடைசியாக உணர்கிறேன் ...

இப்படிக்கு
***மைத்ரேயி***

வெங்கட் said...

@ மைத்ரேயி.,

// ஒரு குறிப்பிட்ட ஆண்கள் இப்படியும் இருக்கிறார்கள்
என்றே அல்லவா சொல்ல முனைந்தார்கள். பின் எதனை
நிறுவுவதற்காக நீங்கள் பின்னூட்டங்களை இட்டீர்கள்
எனத் தெரியவில்லை. //

அப்படியா சொல்லி இருக்கார்..?!!! அபப்டி சொல்லி
இருந்தா இங்கே நான் கமெண்ட் போட வேண்டிய
அவசியமே வந்து இருக்காதே.. பதிவை நல்லா
ஒரு தடவை படிச்சி பாருங்க..

// பெரும்பாலும் பெண்கள் பற்றி, வெளியுலகத்தில்
ஆண்கள் பேசுவது இப்படித்தான். ஒரு சிலர் வேண்டுமானால்
“நான் ரொம்ப ஜென்டில் மேன்“னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.
ஆனா நாலைந்து ஆண்கள் சேர்ந்துட்டா அவங்களோட
பொழுதுபோக்கு பேச்சுக்கள் இப்படித்தான் இருக்கு. //

" பெரும்பாலும்"-னு சொன்னா உங்க டிக்ஷ்னரில
ஒரு சிலர்னு அர்த்தம் போல...

// பொதுவாய் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்
என்னதான் இழுத்துப்போர்த்திக்கொண்டு வந்தாலும்
ஆண்களின் பார்வைகள் தவறான இடங்களைத்
துலாவுவதை தவிர்க்க முடிவதில்லை. //

இங்கே எங்கேங்க ஒரு சில ஆண்கள்னு இருக்கு..??!!

// ஆரோக்யமான உரையாடல்களையே விரும்புகிறேன். //

நல்லது..! நானும் அதையே விரும்புகிறேன்.

வெங்கட் said...

@ மைத்ரேயி.,

// உங்கள் கமெண்ட்டின் இரண்டாம் பாகத்திற்கான
விளக்கத்தை கழுகு மெயிலுக்கு அனுப்பி கேளுங்கள்.
நிச்சயம் பதில் தருவார்கள். //

ஆஹா., அருமை..!! இதை ஒரு சார்பு நிலைன்னு
எடுத்துக்கலாமா..?

Anonymous said...

கட்டுரையை இப்பொழுது விட்டு விட்டீர்கள். கட்டுரையாளரின் கருத்தை ஏற்றுக் கொண்டீர்கள். இப்பொழுது உங்கள் பிரச்சனையாக பார்க்கப்படுவது, வேறு இருவரின் கமெண்ட்களை அப்படித்தானே?

இது நீங்கள் இருவரும் தனியாக தீர்த்துக் கொள்ளவேண்டிய பிரச்சனையாகவே கருதுகிறேன். முறைப்படி தீர்த்துக் கொள்ளுங்கள். கழுகு தளம் அதற்கானதாக தெரியவில்லை. என் போன்ற மூன்றாம் நபர்கள் உங்கள் பின்னூட்டஙகளை, கட்டுரையோடு தொடர்புபடுத்தி குழம்பிக் கொள்கிறோம். உங்கள் பின்னூட்டங்களினால், கட்டுரையில் என்ன தவறு இருக்கிறது என இவ்வளவு நேரமும் யோசித்து யோசித்து என் போன்றோர்,நேரத்தை வீணடித்ததாகவே எனக்குப் படுகிறது.

இந்த கருத்துக்களின் வாயிலாக பெண் சமூகத்தை
நாங்கள் எப்படி புரிந்து கொள்வது என்பதை தெளியப்படுத்தவும்.//

தவிர்த்து, என் பெயர் குறிப்பிட்டு நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். அங்கே நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டங்களை வரிசைப் படுத்தி பதில் சொல்ல வேண்டுமாயின்,
1. முதல் பின்னூட்டத்திற்கு என் ஆழந்த வருத்தங்களும் அனுதாபங்களும்.
2.இரண்டாவதற்கு,இது உங்கள் இருவருக்குமிடையேயான தனிப்பட்ட கருத்து மோதல்களாய் பார்க்கிறேன். இருப்பினும் பொதுவெளியில் நீங்களும் அவர்கள் கணவன் சகோதரர்களை இழுத்துப் பேசியதன் விளைவாக, அவர்களும் மறுமொழி இட்டிருக்கிறார்கள்.இருப்பினும் யாராக இருந்தாலும் குடும்பத்தை இழுத்துப்பேசுவதைத் தவிர்த்தல் நலம்.
3.கடைசியானதில்,விகிதாச்சார கணக்கு தவிர்த்து அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கடைசியாக என் வேண்டுகோளாய் முன் வைப்பது என்னவென்றால், அன்பின் சகோதர்களே! பெண்ணை அறிவுப்பூர்வமாய் நோக்குங்கள்.

“பெண் ஆணை விட மேலானவளும் அல்ல; கீழானவளும் அல்ல; அவள் வேறானவள்”

ஆண் பெண் என்ற வேறுபாட்டைக் களைந்து, இரு பெரும் சக்திகளும் இணைந்து செயல்பட்டால் மகத்தான சமுதாயம் நிச்சயம் மலரும்.

நன்றிகள்!

இப்படிக்கு
***மைத்ரேயி***

முகுந்த்; Amma said...

இந்த கட்டுரையையும் அதனை சார்ந்து வெளிவந்துள்ள கருத்துகளையும் பார்த்தபிறகு மனோதத்துவ ரீதியாக எனக்கு தோன்றும் கருத்துக்கள் சில.

முதலில் அந்த ஆடிட் நடத்தியவர்கள் அனைவருமே ஆண்கள் என்றிருந்தால் அந்த ஆண் தன்னை கேள்வி கேட்டதை பற்றியோ, அல்லது திட்டியதை பற்றியோ அதனை பற்றி அடுத்த நாளில் பேசிய அனைவரும் பெரிது படுத்தி இருக்க மாட்டார்கள் .


ஆனால், ஆனால் ஒரு பெண் அந்த ஆடிட் நடந்தியவாரக இருக்கின்ற இந்த இடத்தில், தன்னை விட உயர் பதவியில் இருந்து தன்னை ஒரு பெண் கேள்வி கேட்கிறாரே, என்று அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதனை முறியடித்து தான் தான் பெரியாள் என்று காட்ட முயற்சிக்கும் போது ஏற்படுவது தான் இப்படி பட்ட சீப் கமெண்டுகள்.

இது ஒரு வித பொறாமையின் வெளிப்பாடு.

உயர் பதவியில் தன்னை விட தாழ்ந்ததாக நினைப்பவர் வரும்போது ஏற்படும் ஒரு ஆற்றாமை.இப்படி பேசுபவர்களில் பெண்களும் விதி விலக்கில்லை என்பது என் கருத்து.

இவர்களை பொறுத்தவரை எப்படியாவது "அந்த மனிதரை" தரக்குறைவாக பேசிவிட வேண்டும் அதில் ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவே.

இது போன்ற எதிர் விளைவை எதிர் கொள்வது என்பது சற்று கடினமானது. ஆனால் மிகவும் பவர்புல் "ஜஸ்ட் இக்னோர்".

இப்படி பேசுபவர்களுக்கு தேவை அப்படி பேசப்பட்ட மனிதரின் எதிர் வினையே.

அப்படி எந்த எதிர்வினையும் கொடுக்காமல் அமைதியாக இருந்து விடுங்கள், அதுவே உங்களுக்கு கிடக்கும் வெற்றி.



"Remember, no one kicks a dead dog"

வெங்கட் said...

@ மைத்ரேயி.,

// கட்டுரையை இப்பொழுது விட்டு விட்டீர்கள்.
கட்டுரையாளரின் கருத்தை ஏற்றுக் கொண்டீர்கள். //

உஸ்ஸப்பா.. மறுபடியும் முதல்ல இருந்தா..?!!
என் முதல் கமெண்ட் பாருங்க மேடம்..

// எப்படியும் ஊருக்கு நாலு பொறுக்கி பய இருப்பான்..
அவனை ஆண்களின் பிரதிநியா வெச்சிக்க கூடாது. //

இந்த மாதிரி ஆண்களை வெச்சி
ஆண்கள்னாளே இப்படித்தான்னு
ஒரு முடிவுக்கு வரக்கூடாது...
This is My only Point..!

// கடைசியானதில்,விகிதாச்சார கணக்கு
தவிர்த்து அதில் எந்த தவறும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை. //

சூப்பர் மேடம்.. உங்கள் புரிதலுக்கு நன்றி..!

கடைசியாக என் வேண்டுகோளாய் முன் வைப்பது
என்னவென்றால், அன்பின் சகோதரிகளே!
எல்லா ஆண்களையும் சந்தேகம் கொண்டு
பார்க்காதீர்கள்..!

“ எல்லா ஆண்களும் வக்கிரமான எண்ணம்
கொண்டவர்கள் அல்ல.. பாவம் அவர்களிலும்
நல்லவர்கள் இருக்கிறார்கள்..! "

Aashiq Ahamed said...

அன்பு சகோதரி மைத்ரேயி அவர்களுக்கு,

உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

//“பெண் ஆணை விட மேலானவளும் அல்ல; கீழானவளும் அல்ல; அவள் வேறானவள்”//

சூப்பர் பெர்பெக்ட். ஹாட்ஸ் ஆப் சிஸ்டர். எவ்வளவு அருமையா சொன்னீங்க...இதை விட தெளிவா பக்கம் பக்கமா எழுதுனா கூட விளக்க முடியாது.

//ஆண் பெண் என்ற வேறுபாட்டைக் களைந்து, இரு பெரும் சக்திகளும் இணைந்து செயல்பட்டால் மகத்தான சமுதாயம் நிச்சயம் மலரும்.//

ரொம்ப சரி.

இறைவன் உங்கள் கல்வி அறிவை மென்மேலும் அதிகப்படுத்தட்டும்.

தாங்களும் உங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

நிகழ்காலத்தில்... said...

கழுகு ஒரு விவாதக்களமாக இருக்க வேண்டும் என்பதுதான் குழுமத்தின் நோக்கம்.

அனைத்து நட்புகளும் எந்தவித அச்சமும் இன்றி வந்து செல்லலாம் மைத்ரேயி...:)

அனைத்தையும் கவனத்தில் கொண்டே செயல்படுகிறோம். @வெங்கட் உங்களின் விவாதங்களுக்கு என் நன்றிகள்...

Anonymous said...

@வெங்கட்,

ரொம்ப ஜென்யூனா பதில் சொல்லனும்னா, கொஞ்சம் நடையை மாத்தியே ஆகவேண்டிய சூழல். இப்படி எல்லாம் பேச வேண்டிய நிர்பந்தம் எனவே நினைக்கிறேன்.நிச்சயம் நீங்க வாதிடுறதுல எனக்கு முழு உடன்பாடு இல்லை. எந்தவொரு கருத்துக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்கவே செய்யும் என்பதன் பேரில் வேண்டுமானால் உங்களது வாதத்தை மதித்து வைத்துக் கொள்கிறேன். நான் அப்படி இல்லை என வேண்டுமானால் சொல்லலாம். ஏனென்றால் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதல்லவா? இவ்வளவு நேரம் பெண்களை மதிப்பவரிடம் உரையாடினேன் என்ற பெருமையோடு முடித்துக் கொள்ளலாம்.ஒரு பெண்ணாக எமது அபிப்ராயம் கட்டுரையோடு இயைந்ததே!

அநேக உதாரனங்களை இங்கே கொண்டு வந்து கொட்ட முடியும். ஏன் இங்கே இணையத்தில் உலவுபவர்களில் அநேகரின் உரையாடல்களை கவனித்து இருக்கிறோம். இப்படி இங்கே பொது வெளியிலேயே பேசுமளவிற்கு ஆன்பிள்ளைகளுக்கு அத்துனை உரிமைகள்(?!!) உள்ளது.

மச்சி! இங்க ரொம்ப குளிரு மச்சி! எல்லா ஃபிகருங்களும் இழுத்துப் போர்த்திக்கிட்டுதான் வெளில வருது. ஷைட் அடிக்கவே முடியல. கடுப்பா இருக்கு. அப்டினு ஒருத்தர் இங்கே பொதுவெளியில் சொல்ல அதைத் தொடர்ந்து அவர்கள் நண்பர்கள்(ஏன் இங்கே கமெண்ட்டியவர்களில் கூட சிலராய் இருக்கலாம்) வந்து பேசிய வாக்கியங்களும் கொஞ்சம் அப்படியே இருந்தது. ஃப்ளைட்ல பக்கத்து ஷீட்ல இருந்த ஃபிகர் கொஞ்சம் மொக்கை மச்சி. தூக்கலாவே இல்ல.... ஆஃபிஸ்ல என் பக்கத்து இருக்குற பிலிப்பைன் ஃபிகர் கூட வத்தல் தொத்தலா இருக்குறா மச்சி! இது போன்ற உரையாடல்களை எல்லாம் பொதுவெளியில் கேட்டு கேட்டு காது புளித்தாகி விட்டது. இது ஒரு மேலோட்டமான உதாரணம்.

ஏன் ஒரு சவாலுக்காக கூட... இங்கே தமிழ் கூறும் நல்லுலகமாம் பதிவுலகில் ஒருசில ஆண்கள்(ஏன் பெரும்பாலானனு கூட சொல்ல வேண்டியது இருக்குமோ என.. டவுட்)பேசிய பேச்சுக்களை இங்கே பகிருங்கள் ஒரு சர்வேக்கு என சொன்னால், அல்லது சேகரித்தால் தெரியும். உணமை என்ன என.... உங்களுக்கும் தெரியாததில்லை என நினைக்கிறேன்.

கொஞ்சம் தன்னையே அனைவரும் உற்று நோக்கினால் தான் உண்டு. இப்படியாக குற்றம் சொல்லி அவர்களைக் குற்றவாளிகளாக்க விரும்பவில்லை. ஆண் பெண் கவர்ச்சி இயல்பு. இயற்கையை குற்றம் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வரம்பு மீறாமல் ஒரு பாலினத்தார் மற்றவரை வேதனைக்குள்ளாமல் இருந்தால் நலம் என வேண்டுகோளாய்த்தான் கேட்கப்பட்டுள்ளது.
பெண்களைப்பற்றியான உங்கள் பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என நீங்கள் சொன்ன வாக்கியத்தை முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன் வெங்கட். இதை அறிந்து தானே கழுகு போன்ற நல்ல தளங்களில் பெண்களும் உலவுகிறார்கள். வேறு எந்த குழுமத்திலும் இல்லாத அளவிற்கு, அங்கே அவர்கள் குழுமத்திலும் பெண்பிள்ளைகள் பேசுவதற்கு முழு உரிமையும், நற்சுதந்திரமும் இருப்பதாகக் கேள்வி.ஸோ எங்களுக்கும் தெரியும் வெங்கட். நல்லவர்களும் இருக்கிறார்கள் என.



இப்போ உங்களின் கோபமாக பார்க்கப்படுவது.. எப்படி எல்லா பெரும்பாலான ஆண்களும் பெண்ணை இப்படித்தான் நோக்குகிறார்கள் என சொல்லலாம் என? அப்படித்தானே! வேண்டுமெனில் ஷைக்ரியாட்டிஸ்ட் ஷாலினி அவர்களின் ப்ளாக் சென்று பாருங்கள். இல்லை அவர் ஒரு பெண் என ஈகோ இடித்தால் ஒரு ஆண் ஷைக்ரியாட்டிஸ்ட் ஒருவரின் அபிப்ராயத்தைக் கேட்டுப் பார்த்தால் தெரியும். என்ன சொல்வார் என... தேட்ஸ் ஆல் வெங்கட்.

///// கடைசியானதில்,விகிதாச்சார கணக்கு
தவிர்த்து அதில் எந்த தவறும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை. //

சூப்பர் மேடம்.. உங்கள் புரிதலுக்கு நன்றி..!// ஷைக்ரியாட்டிஸ்ட் சொல்லும் பதில் இதற்கான விடையாகக் கூட இருக்கலாம். :-)

இப்படிக்கு
***மைத்ரேயி***

காஞ்சி முரளி said...

இந்திரா இப்பதிவில் குறிப்பிட்டதை முற்றிலும் ஏற்றுகொள்கிறேன் என்று

பொய்யைச் சொல்ல விரும்பவில்லை...!

மனிதன் பிறந்தபோதே "ஆதிக்க"மும் பிறந்தது என்பது மறுக்கமுடியாதது...!

அதோடு...
எப்போதும் நேரில் ஒரு மாதிரியும்...
பின்னால் ஒரு மாதிரியும் பேசுவது..
சிலருக்கு...

சாரி...! பலருக்கு....

அதிலும் பெரும்பாலோருக்கு இயல்பான ஒன்றுதான்...!

எப்போதும் நான் சொல்வது...!

"மிருகத்தின் பரிணாம வளர்ச்சி மனிதன்" என்ற பிராய்டின் கூற்றை நாம்

ஒப்புக்கொள்கிறோம் என்றால்...
ஏற்றுக் கொள்கிறோம் என்றால்...

மனிதர்களின் (அது ஆணாய், பெண்ணாய் இருந்தாலும்) ஆழ்மனதில்

இன்னும் "மிருகம்" ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது...!

அது அவ்வப்போது
சிந்தனையாய்...
வார்த்தைகளாய்...
செயலாய்...
வெளிப்பட்டு... வெளிபடுத்திவிட்டு...
மீண்டும் ஆழ்மனதில் உறங்கச் சென்றுவிடும்...!

இந்த ஆழ்மிருகத்திற்கு ஆண்... பெண் என்ற பாகுபாடு கிடையாது....!

இதிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்று
இவ்வுலகில் உள்ள யாரேனும் சொல்கிறார்கள் என்றால்...
அவன்....,

முனிவனானாலும்.......,
அமைச்சனானாலும்......,
கூலியானானாலும்.....,
பிச்சைக்காரனனாலும்....,

அவர்கள் சொல்வது
"பொய்"...!

எனவே...!
நீங்கள் கேட்ட இந்த வசனங்களை பேசியவர்களைப் போல பெரும்பான்மையோர் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை...!

வெங்கட் said...

@ மைத்ரேயி.,

// வேண்டுமெனில் ஷைக்ரியாட்டிஸ்ட் ஷாலினி
அவர்களின் ப்ளாக் சென்று பாருங்கள். //

உங்க புண்ணியத்துல Dr. ஷாலினி ப்ளாக்
போயி பார்த்தேன்.. நன்றி..!

" ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?-னு "
மாங்கு மாங்குன்னு கிட்டதட்ட 35 அத்தியாயங்கள்
ஒன்றை வருஷத்துல எழுதி இருக்காங்க..
உண்மையா சொன்னா.. நடுநிலையா பேசியிருக்காங்க..

அவர் எழுதியதில் இருந்து...

// மனித ஆண்ணினத்தை நேரடியாக பார்த்து,
observe செய்து அவர்களை பற்றி புரிந்துக்கொள்ள
உதவும் இந்த சமாசாரத்தை தான் Man Watching என்கிறோம்.

ஆண்-வாட்சிங் மாதிரியான மிக உயர்நிலையான இந்த பாடங்களை
கற்றுக்கொள்ள உங்களுக்கு பல அடிப்படை தகுதிகள் இருந்தாக வேண்டும்.

அதில் முதல் தகுதி: உணர்ச்சிவசப்படக்கூடாது.
அடுத்து, விமர்சனமற்ற மனநிலை
மூன்றாவது முக்கியமான தகுதி, குற்றம் கண்டுபிடிக்கும்
போக்கை தவர்க்க வேண்டும்,
அடுத்த தகுதி: பாலியல் மறதி! நீங்கள் ஒரு பெண் என்பதை
நீங்கள் மறந்தாக வேண்டும்.

அதனால் ஆண்-வாட்சிங் என்கிற அரிய விஷயத்தை
கற்றுக்கொள்ள போகும் அதிர்ஷடசாலிகளே, இறுக்கம் தளருங்கள்.
ஈஸியாக இருங்கள். விளையாட்டு தனமாய் இருங்கள்.
ஆண்களோடு உறவு, வேலை, வியாபாரம், கல்வி,
கூட்டு முயற்சி என்று எல்லா துறைகளிலும் பங்கு பெறுங்கள்.
அப்படியே ஸைட் பை ஸைட் அவர்கள் எப்படி இயங்குகிறார்கள்
என்பதை உணர்ச்சிவசப்படாமல், விமர்சிக்காமல், குற்றங்கண்டுபிடிக்காமல்,
பெண்பாலின கண்ணோட்டமில்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டே இருங்கள்.
The eyes cannot see what the mind does not know, என்பார்களே, உங்கள் மனதிற்கு
ஏற்கனவே தெரியாதவற்றை உங்கள் கண்கள் பார்ப்பதே இல்லை.
இத்தனை நாட்களாக, உங்கள் மனதுக்கு புரியாததால் நீங்கள் கவனிக்கத்தவறிய
பல விஷயங்கள் இனி உங்கள் ஞான திரிஷ்டியில் தெரிய வரும். இப்போது பாருங்களேன்,
மனித ஆணின் உலகம் மாயகண்ணாடி மாதிரி அப்படியே உங்கள் கண் முன் தெரியும்.
இத்தனை நாட்களாக கூடவே இருந்தும் இது வரை நீங்கள் கவனியாத எத்தனையோ
புதிய புதிய விஷயங்கள் இப்போது உங்கள் கண்ணில் படும். //

தொடரும்.. 1

வெங்கட் said...

@ மைத்ரேயி.,

ஷாலினி அவர்களின் எழுத்தில்..

// பிறரின் நன்மதிப்பு- குறிப்பாக பெண்களின் நன்மதிப்பு தான் ஆண்கள் தங்கள் முக்கியத்துவத்தை அளவிடும் மீட்டர் என்பதினால், தரமான ஆண்களை கண்டால் தாராளமாக முக்கியத்துவம் தந்து ஊக்குவியுங்கள். தரங்கெட்ட ஆண் என்றால், ஜெஸ்ட் இக்நோர் ஹிம். பிரயோகித்துப் பாருங்களேன், இந்த முக்கியத்துவமீட்டரின் மகிமை அப்போது தான் உங்களுக்கு புரியும்! //

// ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க்…உங்களை சுற்றி உள்ள ஆண்களை வாட்ச் செய்யுங்கள். அவர்களில் எத்தனை பேர் நாகரீகம் அடைந்திருக்கிறார்கள், எத்தனை பேர் இன்னும் காட்டுமிராண்டியாக இருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். நாகரீகம் அடைந்துவிட்ட ஆணாய் இருந்தால் அவனுக்கு ஒரு சபாஷ் போட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், ஆனால் அதற்காக நாகரிகம் இல்லாத ஆண்களை கண்டு வருத்தமோ, கோபமோ, பட்டுவிடாதீர்கள். அவனுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று ஒரம் கட்டிக்கொள்ளுங்கள். அவனுக்கு நாகரீகம் இல்லாததற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? //

// நல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை. //

// எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா?

ஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.

ஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி. //

அதனால் ஆண்களை அலசி, தரம் பிரித்து பாகுபடுத்தும் இந்த ஆய்வின் முக்கிய
அளவுகோள், அவன் பெண்களிடம் காட்டும் கண்ணியம்.

அதற்காக பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவன் எல்லாமே மகா உத்தமன் என்று உடனே முடிவு கட்டி விடாதீர்கள். ஆண்களில் சில கில்லாடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களோடு நிறைய பரிச்சயம் இருப்பதினால், இப்படி நிறைய பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதையே தங்கள் முழு நேர பணியாக அவர்கள் மேற்கொள்வதினால், எப்படி எல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்குப் பிடிக்கும் என்கிற ஆளை அசத்தும் அத்தனை கலைகளும் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். அதனால் இந்த வகை சல்லாப கேசுகள், பெண்கள் எதிரில் பரம உத்தமன் மாதிரி வளைய வருவார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களுக்கெல்லாம் கரிசனம் காட்டி, ``உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா?'' என்று வலிய போய் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

ஆனால் வீட்டில் அல்லல் படும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் ஆகிய பெண்களுக்கு மறந்தும் உதவ முன்வர மாட்டார்கள். காரணம், இவர்களுக்கு உண்மையிலேயே பெண்களிடம் கண்ணியமாக இருப்பதில் கவனமே இல்லை. கண்ணியமாக இருப்பதுபோல நடித்து பெண்களைக் கவிழ்க்க பார்ப்பார்கள், ஒருத்தி கவிழ்ந்துவிட்டால், உடனே அவளை ஓரம் கட்டிவிட்டு, அடுத்தவளுக்கு வலை விரிக்க போய் விடுவார்கள். இந்த வகை ஆண்கள், றிக்ஷீணீநீ‡வீƒமீபீ நீலீணீக்ஷீனீமீக்ஷீƒ ஆக மிகவும் பழக்கப்பட்ட லீலை மன்னர்களாக இருப்பார்கள். நீங்கள் சொல்லாமலேயே உங்களுக்காக நிறைய செய்வார்கள். உருகி உருகி உபசரிப்பார்கள். கவனமாகப் பார்த்தால், அதில் கொஞ்சம் பந்தாவும் பகட்டும் தெரியும். தட் மீன்ஸ் வாட்? தலைவர் இதை உபசாரத்திற்காக செய்யவில்லை. அலட்டலுக்காகவே செய்கிறார். தட் மீன்ஸ் அவன் கை தேர்ந்த ஜாலக்காரன். அவனிடம் உஷாராக இல்லை என்றால், தலைவர் உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார் என்று அர்த்தம். //

தொடரும் 2..

வெங்கட் said...

@ மைத்ரேயி.,

ஷாலினி அவர்களின் எழுத்தில்..

// இதற்கு நேர் எதிராய் வேறு சில ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களோடு அதிகம் பழகும் அனுபவமில்லாததால், அவள் எதிரில் எப்படி நடந்துகொள்வது என்பதே அவர்களுக்குத் தெரியாது. நீங்கள்லேசாய் கொஞ்சம் ஹிண்ட் கொடுத்தால், உடனே பிடித்துக்கொண்டு, தக்கப்படி உங்களை கண்ணியமாக நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இந்த வகை அறியாத பிள்ளைகளை தகுந்தவாறு பழக்கி வைத்தீர்கள் என்றால், மிகவும் அக்கறையாய் பெண்களைக் கவனித்து பராமரிக்க பழகிக்கொள்வார்கள்.

இந்த இரண்டு வகை ஆண்களைத் தாண்டி, மூன்றாவது ஒரு ரகம் உண்டு. சுட்டு போட்டாலும் கண்ணியமாய் நடக்கவே தெரியாது. ``நான் ஆம்பிளை,'' என்கிற ஓவர் கர்வத்தில் பெண்களைத் துச்சமாய் மதிப்பிட்டு, வெறும் போகப் பொருளாகவோ அல்லது ஏவலாள் மாதிரியோ மட்டுமே பார்க்கத்தெரிந்த இந்த ஆண்கள், போகப் போக, நிறைய அடி பட்டு, இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது என்று ரொம்ப நாள் கழித்து வயது போன பிறகே புத்திபெறுவார்கள்.

இந்த மூன்று ரகமானவர்களையும் தாண்டி, நான்காவது ரக ஆண்களும் இருக்கிறார்கள். பெண் என்றாலே கூசி, அஞ்சி, ஒதுங்கி ஓடும் இந்த அதீத சங்கோஜ பேர்வழிகளுக்கு பெண் எதிரில் நிற்கவே நடுங்கும். அப்புறம் எப்படி அவன் வந்து அவளை உபசரித்து, சிறப்பு செய்வதெல்லாம்!

ஆக, கைதேர்ந்த லீலைக்காரன், கற்றுக்கொண்டு கலக்குபவன், கர்வத்திலேயே மிதப்பவன், கூச்சத்தினால் ஒதுங்குபவன் என்று இந்த முக்கியமான நான்கு வகை ஆண்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாம் ரக ஆணாகப் பார்த்து தேர்வு செய்வதுதான் புத்திசாலிப் பெண்ணுக்கு அழகு. //

இது இவ்ளோ பெரிய விஷயம்... ஆனா எப்படி அவ்ளோ
ஈஸியா 3 பொறுக்கி பசங்க பேசினதை வெச்சி ஒட்டுமொத்த
ஆண்களையும் ஒரே மாதிரின்னு முடிவுக்கு வந்தீங்க..???

Anonymous said...

@வெங்கட்...

இது இவ்ளோ பெரிய விஷயம்... ஆனா எப்படி அவ்ளோ
ஈஸியா 3 பொறுக்கி பசங்க பேசினதை வெச்சி ஒட்டுமொத்த
ஆண்களையும் ஒரே மாதிரின்னு முடிவுக்கு வந்தீங்க..???//

இன்னும் எண்ணிக்கையிலே தான் நிக்கனுமா? :-))

சரிங்க ரொம்ப சந்தோசம் ஷாலினி அவர்கள் ப்ளாக்லாம் சென்று படித்ததற்கு.... கண்ணியமான ஆண்களை கண்டால் கடவுளுக்கு இணையாக வணங்கத்தோன்றும். இது சத்தியம்..

இப்போ என்ன சொல்ல வறீங்கனா, மோசமான ஆண்களை இக்னோர் செய்துட்டு, கண்ணியமான ஆண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என அப்படித்தானே... நன்று! இது ஏற்கனவே எனக்கு ஏற்புடைத்த ஒன்றே!!

உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி வெங்கட்.. கண்ணியமான உங்கள் அத்துணை எதிர்வாதங்களும் அருமையாக இருந்தது.அதற்கு வாய்ப்பாய் இருந்த கழுகு தளத்திற்கும் நன்றிகள்!

இப்படிக்கு
***மைத்ரேயி***

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes