அன்பர்களே....
இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது.
இதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..
இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.
இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.
முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..
நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.
மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும்.
பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு .... மக்கும் தன்மையே கிடையாது...
ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...
இவை அனைத்தும் பூமிக்கு கேடு...
வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில்
அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக
செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது.
முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி
செய்யப்பட்டவையே...
இவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???
1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.
2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர
பயன் தரும் பொருட்கள் செய்து...பணம் ஈட்டலாம்...
3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...
4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல்...
வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)
5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ,,
அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.
6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..
7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள்
வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும்.
8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
9.நாமே ஒரு புனல் போன்று தகரத்தில் செய்து அதில் கரி கொண்டு நிரப்பி
அதனுள் இதை எரிய விடலாம்...(கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால்)
(பார்க்க படம்.)
10.மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்க்-களுக்கு சென்று பார்க்கவும்...
விடியோக்கள் பார்க்க
அன்பர்களே...பொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் ... பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்...ஆனால் இந்த தெர்மொகோல்
பூமியில் ஒரு போர்வை போல்,,,படர்ந்து நம் இயற்க்கை அன்னையை அழித்துக்கொண்டிருக்கிறது...இதை படிக்கும் அன்பர்கள்...சற்றே சிந்தித்து...இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...
இவற்றை பாதுகாப்பாக அழிக்க வேறு ஏதாவது யோசனைகள் இருந்தால் கமெண்ட்-ல் பகிரவும்...இயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்...
தமிழக பதிவர்களுக்கு ஒரு சின்ன எச்சரிக்கை...
அன்பர்களே..
தற்சமையம் தமிழகத்தில் மின்வெட்டு மிக கடுமையாக....
இருக்கிறது...இந்த சமயத்தில்...தடுப்புஊசி,,,மற்று ம் திரவ மருந்துகள் ...
குளிர் பதனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.....
சரியாக...குளிர் பதனம் கடைபிடிக்காத மருந்துகள்...வீனாகி,,
சரிவர செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது...
எனவே இவ்வகை மருந்துகள் வாங்கும்போது....
மருந்து கடைகள்...ஜெனரேட்டேர்மூலம் இயங்கும்
கடையாக பார்த்து வாங்கவும்....
கழுகிற்காக
J.நக்கீரன்
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)
J.நக்கீரன்
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)
15 comments:
நல்ல விழிப்புணர்வு பதிவு!
அருமையான விழிப்புணர்வு கட்டுரை , தெர்மொகோலின் தீமை குணங்கள் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடைய வேண்டும் .
///
தற்சமையம் தமிழகத்தில் மின்வெட்டு மிக கடுமையாக....
இருக்கிறது...இந்த சமயத்தில்...தடுப்புஊசி,,,மற்றும் திரவ மருந்துகள் ...
குளிர் பதனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.....
சரியாக...குளிர் பதனம் கடைபிடிக்காத மருந்துகள்...வீனாகி,,
சரிவர செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது...
எனவே இவ்வகை மருந்துகள் வாங்கும்போது....
மருந்து கடைகள்...ஜெனரேட்டேர்மூலம் இயங்கும்
கடையாக பார்த்து வாங்கவும்....
கழுகிற்காக
///
கிராமப்புறங்களில் பெருமபாலோனோர் நடமாடும் மருத்துவர்களையே நாடுகின்றனர் , அம்மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களது கைப்பையிலே ஊசி போடும் மருந்துகளை வைத்துள்ளனர் , இவை கவலை அளிக்கும் விதமாக உள்ளது . (அம்மருதுவர்களுக்கென்று என்று தனி குளிர்சாதன வசதியோ , முறையான கிளினிக் கோ கிடையாது)
.இயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்...
விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றி..
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நக்கீரரே...இவ்வளவு சீரியசான பொருளை யூஸ் செய்த பிறகு அரசாங்கம் அழிக்கும் விசயத்தை ஏன் கண்டு கொள்ள வில்லை!
தெர்மாஹோல் மூலம் உருவாக்கும் பொருட்களை சுரைக்காய் மூலமும் தேங்காய் ஓடு மூலம் தயாரிக்கலாம்...இவை கடைகளில் சிறிதளவிலே வருகிறது அரசு அதன் உற்பத்தியாளர்களுக்கு மானியம் கடனுதவி கொடுத்து மேம்படுத்த வேண்டும்....குளிர் நிலையில் வைக்காத ஹெப்படைடிஸ் மற்றும் அம்மை தடுப்பூசிகள் மிகமிக அபாயகரமானவை உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது மருந்து கடைகளில் ஜெனரேட்டர் வசதி கட்டாயம் வேண்டும் என்கிற சட்டம் கட்டாயம் வரவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் குளிர்நிலையில் வைக்ககூடிய மருந்துகளை விற்பனை செய்ய அனுமதியளிக்க கூடாது நல்ல விழிப்புணர்வு பதிவு....
கழுகிற்காக
J.நக்கீரன்////
நெஜமாவா?
தெர்மொகோல் பற்றிய விழிப்புணர்வு பதிவு.....
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்....
பகிர்வுக்கு நன்றி நக்கீரன்...
///அன்பர்களே..
தற்சமையம் தமிழகத்தில் மின்வெட்டு மிக கடுமையாக....
இருக்கிறது...இந்த சமயத்தில்...தடுப்புஊசி,,,மற்றும் திரவ மருந்துகள் ...
குளிர் பதனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.....
சரியாக...குளிர் பதனம் கடைபிடிக்காத மருந்துகள்...வீனாகி,,
சரிவர செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது...
எனவே இவ்வகை மருந்துகள் வாங்கும்போது....
மருந்து கடைகள்...ஜெனரேட்டேர்மூலம் இயங்கும்
கடையாக பார்த்து வாங்கவும்.... ////
நிதர்சன உண்மை நண்பரே.
தெரிந்த தெர்மோகோல் பற்றி தெரியாத தகவல்கள் அறிந்துகொண்டேன்
நல்ல பதிவு..நாங்க இண்டரியர் வொர்க் பண்ண இதை தான் அதிகம் உபயோகம் செய்கிறோம்...இனி குறைத்து விடுவேன்...
தமிழ் மணம் மகுடதிற்கு இந்த கட்டுரை
வந்தது மிக்க மகிழ்ச்சி....
தலைவா எப்படி கூட நீங்க பதிவு போடுவிங்களா ? சொல்லவே இல்ல
மிகவும் பயனுள்ள கட்டுரை நன்றி
//தலைவா எப்படி கூட நீங்க பதிவு போடுவிங்களா ? சொல்லவே இல்ல//
சேருமிடம் சரியாக இருந்தால்...
இதைவிடவும் பயனுள்ள கட்டுரைகளை கொடுக்கலாம், ராஜா!
உன்னுடைய நண்பனை பற்றி கூறு, நான் உன்னை பற்றி கூறுகிறேன்... கேள்விபட்டதில்லையா? அதுதான் இது. ஹாஹஹாஹ்ஹாஹ
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...///
சைதை அஜீஸ் கூறியது...////
:))))))))))))
இதற்கெல்லாம் எளிய வழி ஒன்று இருக்கிறது.தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறதாம்.சுகாதார துறை தவிர.
கருணாநிதி அடுத்த நாள் காலை பதவிக்கு வருவதற்கு முன்னாடி உள்துறை கனவோடவே உறங்கப் போய் விடுவார்.ஜெயலலிதா மாற்றாக வரும்போதும் இந்தாளை அங்க மாத்தனும்,அந்தாளை இங்கே மாத்தனும்ன்னு நினைப்பிலேயே குறட்டை விடுவார்.
முதல்வர் பதவியுடன் சுகாதார துறையையும் தக்க வைத்துக்கொள்ளும் புதிய முதல்வருக்காக இனி கனவு காண்போம்.
அன்புமணி நமக்கு லாட்டரி விழுமோன்னு நினைப்பாரோ:)
என்னை வுட்டிட்டியேப்பான்னு விஜய்காந்த நாக்கை கடிக்கிற மாதிரி தெரிகிறதே!எஸ்கேப்...
தெர்மகோல் சகாப்தத்திற்கு முந்தைய காலத்துக்கு பயணம் செய்வோம்.
பொதுவான உபயோகப்பொருள் மஞ்சள் பை.எதிர்விளைவுகள் யாரும் சொன்னதாக காணோம்.
காய்கறிகளுக்கு அட்டைப்பெட்டி,சாக்கு,வைக்கோல் போன்றவை சிறந்தவை.மாம்பழ சீசனில் இயற்கையாக பழுக்க வைக்க வைக்கோலை தவிர சிறந்த பொருள் கிடையாது.அதற்கும் கூட மாற்று முட்டாள் முறையைக் கண்டு பிடித்த முதல் தமிழக விஞ்ஞானி யார் என தெரியவில்லை.
பின்னூட்டங்களில் மருத்துவ மருந்துகள் குறித்த கவலை நிறைய தெரிகிறது.அலோபதியோடு,ஆயுர்வேதம்,யுனானி,அனானி!மருத்துவம் கூட நம்மிடம் இருக்கிறது.ஆனால் விஞ்ஞானபூர்வமா நிருபணம் செய்யும் முறைகளில் மட்டும் பின் தங்கியுள்ளோம்.
Post a Comment