
சுற்றி நிகழும் அக்கிரமங்களை பார்த்து மெளனமாய் எத்தனை காலங்கள்தான் பயணிப்பது...! வெகுண்டு எழும் மானுட கூட்டம் ஒன்று சேர்ந்து திரும்பிப் பார்த்தால் எரிந்தே போய் விடாதா தீமைகள். தம்பி ரமேஷின் தீமைக்கு எதிரான் அக்னி அம்பு இதோ...பற்றியெறியட்டும் மனித மனங்கள்....அதில் அழிந்தே போகட்டும் தீமைகள்.....
சென்ற வாரம் அதிர்ச்சியான இரு சம்பவங்கள் படித்தேன் அதுபற்றி இங்கு பார்ப்போம்.....
சம்பவம் 1:
நெடுங்காலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவர் இறந்தாலே நமக்கு மனசு பதறும்...யாரோ ஒருவரின் தவறால்....அங்க அவயங்கள் சீர்குலைந்து ஒருவர் இறந்தால்....நினைக்கவே நடுங்குகிறது மனது.....
சென்னையைச் சேர்ந்த தையல் தொழிலாளியான ராம்நாத்தின் 21 வயது மனைவி குணசுந்தரி இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்...அதற்காக...