Monday, October 18, 2010

ஜாக்கியின் அதிரடி பேட்டி...




கொஞ்ச காலம் பதிவர் பேட்டிகள் வரவில்லை. காரணம் என்ன? வெளுத்ததெல்லாம் பால் என்று ... வெள்ளந்தியாய் பேட்டி கேட்கப் போக.. கழுகும் கழுகு சார் நண்பர்களும் பேட்டிகள் கேட்பதானலேயெ ஏதோ தாங்கள் புகழ் பெற்றுக் கொள்ளப் போவதாக சிலர் எண்ணியதின் விளைவில் எமக்கு சில சறுக்கல்கள் சில வழுக்கல்கள்.. ஆனால் வாழ்வின் பக்கங்கள் எல்லா போதனைகளையும் கொடுக்கும் என்பதை அறியாமலா வாழ்வின் நகர்வுக்குள் பொது வாழ்வின் தெருக்களுக்குள் கழுகு அடியெடுத்து வைத்திருக்கும்....
நெருங்கிய நண்பர்களுக்கு கூட.. ஏதோ எப்போதும் சினிமா, அரட்டை, பொழுது போக்கு என்ற ஈர்ப்பில் இருப்பதனால்.. கழுகிற்குள் வருவது இல்லை. எப்போதும் கொள்வது எப்படி ஓய்வாகும் பொழுது போக்குகள் முழுமையான வாழ்க்கையானால் அது சோம்பேறித்தனம்.
சமீபத்தில் ஜாக்கி சேகரின் வலைப்பக்கங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த கழுகு ...ஜாக்கியிடம் சில கேள்விகள் கேட்க தன் முனைப்பிலேயே அவா கொண்டிருந்தது... சூட்டிங் ஸ்பாட்டில் போய்.... எல்லோருக்கும் தெரிந்த ஜாக்கியிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டு ஜாக்கியின் வரவேற்ப்பை பார்த்து கழுகு ஒரு நிமிடம் மெய்மறந்து நின்றது.. பேட்டிக்காக பேச ஆரம்பித்தோம்.... ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த கேள்விகளுக்கு கிடைத்த பதில்களில் ஜாக்கியின் வாழ்க்கையின் அனுபவங்களும்...மிகுதியான சோகங்களும் கண்டு..... மெளனமானோம்...
யெஸ்.. மீண்டும்.. பதிவர்களின் பேட்டிகள் தொடருந்து வரும் தோழர்களே.. இப்போது ஜாக்கியின் அதிரடி .... உங்களுக்காக....!


1) வலைப்பூக்கள் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆனது?

வலைப்பூ என்ற விடயம் எனது மனைவியின் அலுவலக நணபர் நித்யகுமாரன் மூலம் எனக்கு தெரிந்தது...அவர் பிளாக்கை என் மனைவியிடம் சொல்லி வாசிக்க சொல்ல.. நான் அப்போதுதான் கம்யூட்டரில் தமிழ் அழகாக படிக்க முடியும் என்பதை பார்த்து பரவசமானேன்... இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு வலைப்பூ ஆரம்பித்து கொடுத்தார்... பல கேள்விகள் கேட்ட போது அவர் முகம் சுளித்தார்... ஆனாலும் நான் காரியத்தில் கண்ணாக இருந்தேன்... தொடர்ந்து அவரை தொல்லைபடுத்தி சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்....அவரே நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சி என்பதை அவரே நிறையமுறை சொல்லி இருக்கின்றார்...



2) எழுத்தின் மூலம் எங்கே பயணிகிறீர்கள்?

எழுத்தின் மூலம் நான் உலகம் எங்கும் இருக்கும் தமிழ் வாசிக்க தெரிந்த அத்தனை நெஞ்சங்களிடத்திலும் நான் பயணிக்கின்றன்...ஒரு பத்திரிக்கையில் நான் எழுதி "ரீச்" ஆவதை விட இது பெரிது... என்பது எனது தாழ்மையான கருத்து....ஆனாலும் கம்யூட்டர் வைத்து இருப்பவர்களிடத்தில் மட்டுமே என் "ரீச்" இருப்பது பிளாக்கில் உள்ள சின்ன மைனஸ்....

3) தினமும் பதிவு எழுத உங்களுக்கு உதவுவது வாசிப்பா? இல்லை அனுபவமா?

வாசிப்பை விட அனுபவங்கள்தான் எனக்கு பெரிதும் உதவுகின்றன.... தினமும் வாசிக்க வேண்டும் ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமாக தெரியவில்லை... பதிவு எழுதவும் அதனை போட்டு விட்டு எனது பணியை பார்க்கவும் நேரம் சரியாக இருக்கின்றது... பைசா வருமாணம் இல்லா விட்டாலும், நான் போஸ்ட் போட்டால் வாசிக்க பலர் இருப்பதால் தினமும் பதிவு எழுத நேரத்தை செலவிடுகின்றேன்...


4) சினிமாத்துறையில் என்னவாக இருக்கிறீர்கள்?எதிர்கால திட்டம் என்ன?


சினிமா துறையில் அசிஸ்டேன்ட் கேமராமேனாக இருக்கின்றேன்.. ஒரு பெரிய கேமராமேனாக எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை... அது ஒரு இலக்கு அவ்வளவே.. ஒரு துறையில் சாதிக்க முழுமூச்சாக அது பற்றிய சிந்தனைனயுடன் இருக்க வேண்டும்.,... ஆனால் எனக்கு பல குடும்ப சூழலின் காரணமாக அந்த இலக்குக்கான திசை எப்போதுவேண்டுமானாலும் தடம் மாற வாய்ப்பு உள்ளது..நான் தனி மரம் அல்ல.. இப்போதுதான் புது வீடு வாங்கினேன்.. நிறைய கடன் இருக்கின்றது... அதற்கு சினிமாவெகுவாய் சாத்தியபடாது... அதற்கு அதிஷ்டம் வேண்டும்.... இருப்பினும் என் சூழ்நிலை ஒத்துழைக்கும் வரை நான் விடாது முயற்சிப்பேன்.... ஓடும் முடியும் தூரம் ஓடும் வரை ஓடிக்கொண்டு இருப்பேன்.

5) உங்கள் பார்வையில் சினிமாத்துறை?


அது ஒரு கூட்டு முயற்ச்சி.. ஒரு ஷாட்டை செல்லுலாய்டில் பதிவு செய்ய எல்லோருடைய அர்ப்பணிப்பும். உத்வேகமும் தேவை. மிக முக்கியமாக எல்லோரும் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்யும் இடம். மற்ற எந்த துறையிலும் இது போல ஒரே கணத்தில் எல்லோரும் இயங்க வேண்டிய தேவை எனக்கு தெரிந்து இல்லை...


6) விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?


எனது தவறுகளை நான் அப்படியே ஒத்துக்கொள்வேன்... மிக நியாயமான விமர்சனங்களை அப்படியே ஏற்றுக்கொள்வேன்.. ஆனால் விதன்டாவதாத்துக்கும், என்னை சீண்ட வேண்டும் என்றும் வரும் விமர்சனங்களை நான் அப்படியே ஏற்றுக்கொண்டதில்லை...மறு கண்ணம் கட்டும் அளவுக்கு நாள் பக்குவபடவில்லை.

7) மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு ஏன் நீங்கள் வாக்களிப்பது இல்லை...? நல்ல பதிவுகளை ஊக்குவிக்கலாம் தானே?

இது என்னை பொறுத்தவரை எனக்கு பெரிய குறைதான்.. மனதில் பல நாட்கள் எனக்கு எழுந்த கேள்விதான்.. நானும் புதிய பதிவராக இருந்து உங்கள் பேட்டிக்கு பதில் சொல்லும் இடத்தை அடைத்து இருக்கின்றேன்... எனது பதிவுகளுக்கு தொடர்ந்து எனது வாசகர்கள் நன்றாக இருந்தால் வாக்குஅளித்துக்கொண்டு இருக்கின்றார்கள்... சரி அதில் இருக்கும் பதிவர்களின் வலைப்பூவை கூட நான் வாசித்தது இல்லை... நேரம் கிடைக்கும் போது வாசிப்பதோடு சரி...

இணையம் ஒரு நேரவிழுங்கி ... ஒரு கட்டத்தில் இதில் பயங்கரமாக அடிக்ட் ஆகி இருக்கின்றேன்..காலையில் ஆன் செய்த கம்யூட்டர் இரவு எட்டு மணி வரை ஆனில் இருந்த கட்டங்களை எல்லாம் கடந்து வந்து இருக்கின்றேன்... இப்போது எல்லாம் பதிவை போட்டு விட்டு சிஸ்டத்தை ஆப் செய்து விடுகின்றேன்.. சினிமா நைன்னு டூ பைவ் ஜாப் அல்ல.... அதனால எத்தனைமணிக்கு ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் பதிவு போட மட்டுமே நேரம் சரியாக இருக்கின்றது.... அதனால் பிறர் வாசிப்பு மிக குறைவு.. ஆனால் நேரம் கிடைக்கும் போது படித்து பின்னுட்டம் மற்றும் ஓட்டு போடுகின்றேன்... மற்றபடி தலைகனமோ தடிப்போ அல்ல என்பதை புதிய பதிவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


8) நிறைய சினிமா பற்றிய பதிவுகளை எழுதுகிறீர்கள் ...மக்கள் விரும்புவார்கள் என்றா?


சினிமாவை மட்டும் நான் எழுதி இருந்தால் நான் இந்தளவுக்கு வளர்ந்து இருக்கமாட்டேன்.. என் வளர்ச்சியில் சினிமா விமர்சனம் ஒரு பகுதி.. அவ்வளவே.. எனக்கு வரும் பல வாசகர் கடிதங்கள் மற்றும் பின்னுட்டங்கள் அனைத்தையும் போர்த்தாலே உங்களுக்கே தெரியும்.. சினிமா விமர்சனத்துக்கு மட்டும் வந்த வட்டம் அல்ல என்பது............

சமீபத்தில் இன்டேலி ஓட்டில் சினிமா விமர்சன பதிவுகளுக்கு ஓட்டுக்கள் 20க்கு மேல் தாண்டவில்லை என்பதை கூர்ந்து பார்த்தால் தெரியும்...


9) பதிவுலகம்... பற்றிய உங்கள் பார்வை என்ன?

எனக்கு சென்னையில் நண்பர்களே கிடையாது.. இன்று உலகம் முழுவதும் எனக்கு நண்பர்களை பெற்று கொடுத்தது இந்த பதிவுலகம்தான்.. வீடு வாங்க பண உதவி செய்தது,என் மனைவிக்கு அயர்லாந்து நாட்டில் கிடைத்த உதவிகள்.. என்று பல விஷயங்கள் பதிவுலகத்தால் கிடைத்த நன்மைகள்.... எந்த ஊருக்கு வருகின்றேன் என்று போஸ்ட் போட்டு விட்டு போனாலும் அங்கு சந்தித்து பேச நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள்.... சென்னை பாரிசில் எடுத்து போட்டோவை போட்டதுக்கு பிரான்ஸ் பாரிசில் இருக்கும் நண்பர் லிங்கம், இங்கு வந்து விட்டு ஏன் என் வீட்டுக்கு வரவில்லை என்று கோபித்துக்கொண்டார்.... அது போலான நல்ல உள்ளங்களும், எனக்காக வேலை மெனக்கெட்டு கடிதம் எழுதும் வாசக நண்பர்களை கொடுத்தது இந்த பதிவுலகம்தான்.. எனக்கு இருக்கும் பல சிக்கல் களில் என்னை ரிலாக்ஸ் ஆக்குவது பதிவுலகம்தான்... ஆனால் இங்கு வரிக்கு வரி நீங்கள் கவனிக்கபடுகின்றீர்கள் என்பது பலருக்கு புரியவில்லை... ஒரு வரியை எடுத்து வைத்துக்கொண்டு நடக்கும் சண்டைகள் ஏராளம்.. நிறைய பதில் சொல்ல கூடிய விவாதங்கள் இருந்தாலும்.... சில இடங்களில் செய்யும் விவாதத்துக்கு மதிப்பு இல்லை என்று தெரியும் போது பதில் சொல்ல நான் விரும்புவதில்லை....

கண்ணுக்கு தெரியாத எதிரிகள் இருப்பதும் நன்றாக பழகி கட்டி பிடித்து மார்பில் கத்து சொருகுவதும் இங்குதான்...

10) உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் வாசிப்பாளனுக்கு என்ன லாபம்?

பலர் கேட்டு இருக்கின்றார்கள்... அது எப்படி உங்கள் வேவ் லென்தும் என்னுடையதும் எப்படி மேச் ஆகின்றது என்று??? சிலர் ஜாக்கி நாங்க எழுத நினைச்சதை நீங்க எழுதிட்டிங்க.... என்று சொல்லுவார்கள்...என்ன லாபம் என்பது பார்வைக்கு பார்வை வேறுபடும்... தொடர்ந்து எனது பதிவை வாசிக்காமல் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் படத்தை மட்டும் பார்த்து விட்டு செல்லும் பார்வையாளனும் இருக்கலாம்.. அதனை வாசிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்... இலக்கியதரம் இல்லாமல் லோக்கலாக எழுதுவதை படிக்க நினைப்பவன் சிரமபடாமல் படிக்க இலகுவாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.



11) உங்களின் நிறைய கட்டுரைகள் 18+ ஆக இருக்கிறது. பிரத்தியோக காரணம் ஏதும் உண்டா?

என் தளம் பதினெட்டை கடந்தவர்கள் வாசிக்க வேண்டும் என்று நான் சொல்லகாரணம்... இயக்குனர் சங்கர் பாய்ஸ் படம் எடுத்தார்.. ஒரு பிரபல பத்திரிக்கை அதனை சீ என்று விமர்சித்தது....இந்திய அரசின் அங்கீகரிக்கபட்ட சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அந்த படத்துக்கு வழங்கியது... குழந்தைகளோடு போய் பார்க்கிற மாதிரியா படம் எடுத்து இருக்கான் படம் ச்சே என்று பலர் வசைபாடினார்கள்...ஏ சான்றிதஷ் கொடுத்தாகி விட்டது.. நீதான் அந்த படத்துக்கு போலாமா கூடாதா என்று தீர்மாணிக்க வேண்டும்....நான் ஏ ஜோக் எழுதுகின்றேன்...சில லோக்கல் வார்த்தைகள் பிரயோகிக்கின்றேன்... அதனால் இந்த தளம் இந்த பதிவு இந்த வகையை சார்த்து என்று சொல்லவே அந்த அறிவிப்பு...



12) ஒரு சென்னை வாசியாக சரசரி வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?


நமக்கு இந்திய நாட்டை விட்டு எங்கேயும் போனதில்லை... விமானம் இன்னும் அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்பட்டு போகும் நிலையில்தான் இருக்கின்றேன்.. என் மனைவி அயர்லாந்து போய்விட்டு வந்த போதும்,மற்ற நாட்டை விட ரோடு என்ற போர்வையில் ரொம்ப கேவலமாக இந்தியாவில் வைத்து இருப்பதாக சொன்னபோதும், சராசரியாக வாழ்க்கை நடத்துவது ரொம்பவும் கடினம்தான்..நல்ல ரோடும் சுகாதாரமான தண்ணீரும்தான் வேண்டும்.. ஆனால் அதை எந்த அரசும் செய்து கொடுத்தது இல்லை....எல்ஜசி பக்கத்தில் அதாவது ஜெயப்பிரதா தியேட்டரில் இருந்து தாராபூர் டவர் நோக்கி செல்லும் இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டி ... அதாவது அது எந்த பர்பசுக்காக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்...ஒரு மாதத்துக்கு மேல் ஆகின்றது பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் அந்த இடத்தை கடக்கின்றன.... ஆனால் அது இன்னும் ஆமை வேகத்தில் நடைபெற்றக்கொண்டு இருக்கின்றன...இது சென்னையின் பிரதான சாலையில்.. அப்படி என்றால் எனது கடலூரில் இன்னமும் பாதாள சாக்கடைக்கு தோன்டிய குழியை மூடி விட்டதோடு சரி இன்னமும் ரோடு போடவில்லை.. இரண்டு வருடங்களுக்கு மேல் ஆக போகின்றது.. சகித்துக்கொண்டுடதான் வாழ் வேண்டும்...





13) வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் ஏன்?


எந்த திருடன் ஓரளவுக்கு நியாயமானவேனோ??? அவனுக்கு.....




14) எதிர்காலத்தில் புத்தகம் எழுதும் எண்ணம் இருக்கிறதா?

இப்ப எழுத வந்ததே ஒரு விபத்துதான்/ நான் நெட்கனெக்ஷன் வாங்க நிறைய காரணங்கள்... அதில் ஒன்று, ஜோதியில் 30 ரூபாய் டிக்கெட்டில் கடைசிவரை பிட்டு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தினால், பிட்டுபடம் எந்த பிரச்சனையில்லாமல் பார்க்கலாம் என்ற காரணத்துக்காவும், நன்றாக கவனிக்கவும் அந்த காரணத்துக்காவும் நெட் கனெக்ஷன் வாங்கினேன்.. ஆனால் நம்மையும் நிறைய பேர் கவனிக்கின்றார்கள்...
உதாரணத்துக்கு எனக்கு ஒரு பெண்மணி பின்னுட்டத்தில் ஒரு மடல் போட்டு இருந்தார்....
அது கீழே...


நளினா லாவண்யா said...
உங்கள் ஒவ்வொரு எழுத்தையும் தீவிரமாக வாசிக்கும் ஆள் நான். பாருங்கள் ஞாயிற்றுக்கிழமை சமையல் முடிந்த கையோடு உங்கள் சாண்ட்வெஜ் படிக்க உட்கார்ந்திருக்கிறேன். படிக்கும் யாரையும் உடனடியாக ஈர்த்துவிடும் அளவுக்கு வசீகரமான நடைக்குச் சொந்தக்காரர் நீங்கள். எதை எழுதினாலும் சுருக்கமாக, சுருக்கென்று நீங்கள் எழுதிச் செல்லும் விதம் வசீகரமானது. இவ்வளவு திறமை உள்ள நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை? ஒருவேளை உங்கள் எழுத்தைப் பிரசுரிக்கும் அளவுக்கு பத்திரிகைகளுக்குத் தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான். கூடிய விரைவில் உங்கள் எழுத்துகளைப் புத்தகமாக வாசிக்க ஆசைப்படுகிறேன். எழுத்துப் பிழை பற்றி குறைப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் எழுத்துப் பிழையோடு என்ன எழுத்தே இல்லாமல் எழுதினாலும் வாசிக்க என்னைப் போன்ற பல்லாயிரம் வாசகர்கள் இருக்கிறோம். கவலையே படாமல் எழுதுங்கள். நன்றி.
இது நக்கலா இல்லை பாராட்டா என்று தெரியவில்லை.....பாராட்டாக இருந்தால் சந்தோஷம்... ஆனால் புத்தகம் போட வேண்டும்.. சிறந்த படங்களில் பார்த்தே தீர வேண்டியபடங்களை புத்தகமாக போட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது... பட் லோக்கலாக எழுதும் எனது எழுத்தை புத்தகமாக மாற்ற எந்த பதிப்பகம் வந்தாலும் நான் ரெடி..

15) ஆன்மீகம் பற்றி உங்கள் பார்வை என்ன?


எனக்கு மேல் ஒரு சக்தி இருக்கின்றது... கண்ணுக்கு தெரிந்த கடவுள் எனக்கு சூரியன் மட்டுமே....



16) 600 பதிவுகளுக்கு மேல் எழுதியது எப்படி இருக்கிறது?

வியப்பாக இருக்கின்றது... தமிழ்மணத்திலும் இன்டேலியிலும் ஒரு காலத்தில் பாப்புலர் போஸ்ட்டுகள் நிறைய ஆகி இருக்கின்றன.. ஆனால் நிறைய ஓட்டுக்கள் கிடைப்பது இப்போதுதான்... பல பின்னுட்டங்கள் போடுபவர்கள் புதியவர்கள்...ரொம்பவும் சந்தோஷம் ஆனால் குடும்பவேலைகள்,சினிமா ஷுட்டிங் என நிறைய வேலைகள் செய்து தொடர்ந்து எழுத நேரம் ஓதுக்கி இருந்தாலும், என்னை ஓட்டு போட்டு உற்சாக படுத்தும்
எனது வலையை வாசிக்கும் அன்பர்களுக்கு எனது நன்றிகள்...

அவர்களின் உற்சாக ஓட்டும் பின்னுட்டமும் மட்டுமே 600 போஸ்ட்டுக்கான சாத்தியம்....

17) உங்களுக்கு வரும் எதிர் ஓட்டுக்களை பார்த்து என்ன நினைப்பீர்கள்?

எனக்காய் மெனக்கெடும் அவர்களும் எனது நல விரும்பிகளே.... ஒரு மைனஸ் ஓட்டு ரொம்ப ஈசியா போட முடியும்... ஆனா ஒரு பதிவை எழுதி அதை போஸ்ட் செய்யும் போது ஒரு நிறைவு இருக்கும் அதை கொஞ்சம் இந்த மைனஸ் ஓட்டுக்கள் அசைத்து பார்க்கும்...

நான் யாருக்கும் மைனஸ் ஓட்டும், அனானி பின்னட்டமும் இதுவரை போட்டதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.



18) உங்களுக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் யார்? அவர்களைப் பற்றி கொஞ்சம் பகிர முடியுமா?

அப்படி எல்லாம் டாகில்ட்டியாக சொல்லிவிட் முடியாது....எழுத்தாளர் சுபா.. பாலகிருஷ்ணன் எனது நண்பர்...பல வருடம் பழக்கம் இருப்பினும் எனக்கு சினிமா கதவை எனது 35 வயதில் திறந்துவிட்டவர்.. எனது சினிமா குரு ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு...அவரோடு இரண்டு படங்கள் பணி புரிந்து இருக்கின்றேன்... தற்போது கேமராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்த பதிவுலகத்தால் கிடைத்த நட்பு...


19) பதிவுலகம் தவிர்த்து உங்களை பற்றி?

வெளிப்படையாக இருப்பது எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று....கடலூரில் ஆட்டோ ஓட்டும் போது என்னை காதலித்த ஒரு ஜயங்கார் பெண்ணை பத்துவருடம் காதல் செய்து பின்பு கரம் பிடித்தவன்... இந்த பேட்டி வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியானால் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் பூர்த்தி ஆகின்றது....19ம் தேதிதான் எனது திருமணநாள்... அதே போல் பிப்பரவரி ஒன்னாம் தேதிதான் எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த நாள்... இருவரின் பிறந்த நாளும் ஒரே தேதியில்...4 தங்கைகள்...மூவருக்கு திருமணம் ஆகிவிட்டது ஒருவருக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...அப்பா பேரலிஸ் அட்டாக்கில் படுத்த படுக்கையில்.. அம்மா பல வருடங்களுக்கு முன்பே தேவலோகத்தில்....பலர் பாராட்டும் படி ஒரு நாள் உயர வேண்டும் அதுவே என் கனா....போட்டோகிராபியில் ஆர்வம்...குறும்படங்கள் அதிகம் செய்ய ஆசை...நிறைய எழுத ஆசை.. பல தளங்களில் இயங்க ஆசை.. ஒரு ஐகானாக திகழ ஆசை...எல்லோரும் என்னை கொண்டடாட ஆசை,சத்தியம் தியேட்டரில் யோசிக்காமல் டிக்கெட் எடுத்து படம் பார்க்க ஆசை... எந்த ஓட்டலாக இருந்தாலும், எத்தனை பேர் உடன் வந்தாலும் யோசிக்காமல் உள் நுழைந்து,சாப்பிடும் முன் விலைபட்டியல் பார்க்காமல் சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரத்தில் மேன்மையடைய ஆசை, பிளாட்பாரத்தில் சென்னையில் படுத்து இருந்த போது என்னவாக போகின்றோம் என்று தெரியாமல் விழித்த காலங்கள் உண்டு.. ஆனால் பதினைந்து வருடத்தில் இந்த மாற்றம் நானே எதிர்பார்க்காத ஒன்று.... எதிர்காலத்தில் பார்ப்போம்...

20) குறும்படங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி அடுத்த குறும்படம் என்ன?

இதுவரை நான்கு குறும்படங்கள் எடுத்து இருக்கின்றேன்... நான் எடுத்த துளிர் குறும்படம் மாநில அளவில் மூன்றாம் பரிசினை வென்றது.. சென்னை 3வது உலக குறும்பட போட்டியில் எனது மூன்று படங்கள் நாமினேஷக்கு வந்து மூன்று படங்களும் திரையிடபட்டன...குறும்படத்துக்கு செலவு செய்யும் அளவுக்கு என்னிடத்தில் பணம் இல்லை.. என்னால் தினமும் 5நிமிடத்துக்கான ஒரு குறும்படம் எடுக்க முடியும்... தாராளமாக செலவு செய்ய ஆள் இருந்தால்.....


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

47 comments:

Unknown said...

நீங்கள் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் கண்டிப்பாக இடம் பிடிப்பீர்கள்...

தமிழ் அமுதன் said...

நல்ல கேள்விகள்..! இயல்பான பதில்கள்..!

ஜாக்கியின் எழுத்தினை விரும்பி படிப்பவர்களில்
நானும் ஒருவன்...!

எஸ்.கே said...

கழுகின் கேள்விகளும் அதற்கு ஜாக்கியின் பதில்கள் சிறப்பு. ஜாக்கி மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்! கழுகும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி சார்

நேர்மையான வெளிப்படையான பேட்டி!

பாராட்டுக்கள் கழுகு

ஜில்தண்ணி said...

ஜாக்கி அண்னனின் அனுபவங்களை நமக்கெல்லாம் ஒரு பாடமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்

நம் கழுகுக்கு நன்றி :)

Unknown said...

தெளிவான கேள்விகள் அருமையான பதிகள்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜாக்கி அவர்கள் மேலும் மேலும் உயரங்களையும் இலக்குகளையும் நிச்சயம் அடைவார்! வாழ்த்துக்கள் ஜாக்கி சார்! உங்கள் எழுத்துக்களை வழமையாகப் படிப்பவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன்!

Chitra said...

WOW! அவரது கனவுகள் மெய்ப்பட பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்!

க ரா said...

ஜாக்கியின் கனவு மெய்பட வேண்டும்.. மணநாள் வாழ்த்துகள் ஜாக்கி :)

Kousalya Raj said...

ஜாக்கி சார்.... பல வலி, வேதனைகளை மனதில் வைத்து அது கொஞ்சமும் வெளி தெரியாத விதத்தில் வார்த்தைகளை கோர்த்து இருக்கிறீர்கள்.......மிக எளிமையான மனிதர் போல உங்களை பற்றி சொல்லிய விதத்தில் உண்மையில் நீங்கள் உயர்ந்தே நிற்கிறீர்கள்......!! 600 பதிவுகள் ஆச்சரிய படுகிறேன்....!!

அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்....!

எல் கே said...

நெகிழ வைக்கும் பேட்டி. ஜாக்கி சாருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

சிறந்த ஒளிப்பதிவாளராக ஜாக்கி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீங்கள் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் கண்டிப்பாக இடம் பிடிப்பீர்கள்... //

Vazhthukkal

வினோ said...

அவருக்கு என் வாழ்த்துக்கள்....

மைதீன் said...

ஜாக்கிக்கு மணநாள்,எனக்கு பிறந்த நாள்.வாழ்த்துக்கள் ஜாக்கி

எம் அப்துல் காதர் said...

அருமையான பேட்டி. ஜாக்கி சாருக்கு எங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள் சார்!!

லொடுக்கு said...

என் தங்கத்தலைவன் ஜாக்கிசேகர் பேட்டி வெளியிட்ட கழுகுக்கு நன்றிகள்

எங்காளை லோக்கல்ன்னு சொன்னவள மன்னிச்சு விட்ட தலைவா நீ மென்மேலும் பேட்டி புத்த்கம் சினிமான்னு கலக்கனும்

கருடன் said...

ஒளிவு மறைவு இல்லாத பதில்கள்... உங்கள் லட்சியத்தை அடைய வாழ்த்துகள் சார்.

(கழுகின் பேட்டியில் எனக்கு பிடித்த பேட்டி இது....)

நிலாமதி said...

மேலும் உயர் நிலை அடைய வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக இயல்பான பதில்கள். ஜாக்கி தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்க.

Meshak said...

Best of Luck Jackie!
Happy wedding anniversary day.

Anonymous said...

திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா!

விஷாலி said...

கனவு மெய்ப்படவேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்.
வாழ்த்துக்கள்

சிங்காரம் said...

இந்த பி.சி.ஸ்ரீராம்,ராஜீவ்மேனன் இவங்கள்லாம் ஜாக்கி அன்னண் வீட்டு வாசலில் அசிஸ்டெண்டாய் சேர(கரண்ட் அப்டேசன்காக) வந்து நிற்கும் காலம் வரும்.

நித்யன் said...

மிகச் சிறந்த பேட்டி.

சுட்டுப்போட்டாலும் ஜாக்கிக்கு பாசாங்கு வராது. திரைத்துறையில் இது அபூர்வம். “இப்படியெல்லாம் எழுதாதய்யா..” என்றால், “என்ன பண்றது, எனக்கு இதுதான் வரும்” என உள்ளக்கிடக்கையை சொல்லும் ஜாக்கியிடம் பிடித்தது அந்த உண்மைதான்.

ஜாக்கிக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.

அன்பு நித்யன்.

Jackiesekar said...

வாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Unknown said...

உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் நண்பரே ,ஒருநாள் நீங்கள் நினைக்க முடியாத உயரத்தில் இருப்பீர்கள் நண்பரே

மங்களூர் சிவா said...

திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி.

ராஜகோபால் said...

கழுகு நல்லா இருக்கு. இது மாதிரி இன்னும் பல நல்ல எழுத்தாளர்களின் அனுபவங்களை வாசிக்க ஆவல்.நன்றி!
ஜாகினா குட் வொர்க் கீப் இட் அப்....

Senthilmohan said...

ஜாக்கி அண்ணே... திருமண நாள் வாழ்த்துக்கள்.
//*சுட்டுப்போட்டாலும் ஜாக்கிக்கு பாசாங்கு வராது. **/
Repeat.

Ganesan said...

கண்ணுக்கு தெரிந்த கடவுள் எனக்கு சூரியன் மட்டுமே....


அருமை ஜாக்கி..

KRITTHIKA said...

HAPPY WEDDING ANNIVERSARY DAY JACKIE SIR

N RAMAN

Easakimuthu said...

வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜாக்கி , உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

VJR said...

திருமண வாழ்த்துக்கள் ஜாக்கி.

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறந்த பேட்டி.

sasibanuu said...

கேள்விகளும் அருமை ... பதில்களும் அருமை...

வாழ்வில் இமயம் தொட ..வாழ்த்துக்கள் ...ஜாக்கி!

Ramesh said...

பதில்கள் அனைத்தும் உண்மையானவையாக இருந்தன..நன்றி..

சி.பி.செந்தில்குமார் said...

என்னைக்கவர்ந்த வரிகள்

>> வாழ்வின் பக்கங்கள் எல்லா போதனைகளையும் கொடுக்கும் என்பதை அறியாமலா ...
உண்மை

சி.பி.செந்தில்குமார் said...

ஜாக்கியின் பேட்டியில்>>>

ஒரு துறையில் சாதிக்க முழுமூச்சாக அது பற்றிய சிந்தனைனயுடன் இருக்க வேண்டும்.,....

நம் அனைவருக்கும் அவசியமான ஒரு கருத்து இது

surivasu said...

வாழ்த்துக்கள் கழுகு. இது போன்ற அதிரடி பேட்டிகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி.

jpsekar said...

ஜாக்கி சேகர் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்

Selvaraj said...

// பிப்பரவரி ஒன்னாம் தேதிதான் எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த நாள்... இருவரின் பிறந்த நாளும் ஒரே தேதியில்//

நல்ல ஒரு பதிவு. நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இவரைப்போல எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த நாள் ஒன்றே!

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. said...

Good Answers

Ramesh said...

கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் jackie.. N wedding annvsry wshs jackie. wsh u a hppy hppy life..

Unknown said...

vaztthukkal jaiki

Hameed said...

wishing u a happy movements

Ashraf Ali said...

Well said interview . . .

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes