
அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது. அதன் பயன் பாடுகள் எந்த அளவு ஆக்கப்பூர்வ நிகழ்வுகளுக்கு பயன் தருகிறதோ அதோ சதவிகிதத்தில் அழிவிற்கும், கேலிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இயன்ற வரை தொழில் நுட்ப வளர்ச்சியை மனித வள மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மனிதநேயம் செழித்து அதன் மூலம் தெளிவுகள் பிறந்து, மேலோட்டாமன தற்காலிக மாற்றங்கள் அன்றி வேரிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு அது எப்போதும் அழியாத நேர் நோக்கு கொண்ட மனிதர்களை தரவேண்டும் என்பது எமது உள்ளக்கிடக்கை என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.
பிரதிபலன் எதிர்பார்த்து கட்டுரைகள் வெளியிடுவதும், கருத்துரைகள் இடுவதும் என்று முழுக்க முழுக்க ஒரு அசாதாரண போக்கு பதிவுலகில் ஏற்பட்டு பிரச்சினைகளையும், பொழுது போக்குகளையும் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பதிலாக தனிப்பட்ட மனிதர்களை மையப்படுத்தியும்,...