Thursday, January 06, 2011

டைரக்டர் ஷங்கர்............என்ன செய்ய போறீங்க சார்?




மனதிலே நிரம்பிக்கிடக்கும் கேள்விகளோடு வெறுமனே பயணிப்பதைக் காட்டிலும் கேள்விகளை இறக்கிவைத்தால் ஒன்று நமக்கு விடை கிடைக்கலாம் அல்லது கேள்வி நம்மை விட்டு நீங்கியதே என்ற நிம்மதியில் இருக்கலாம்.. ! இப்படியான மிகைப்பட்டவர்களின் நீண்ட நெடுங்கேள்வியை ஒரு வித அலசலாய் டைரக்டர் ஷங்கரை நோக்கி வைக்கலாம்....


ஜென்டில்மேனில் அறிமுகம், ஆர்ப்பாட்டமாய் கே.டி. குஞ்சுமோனால் வெளிக்கொண்டுவரப்பட்ட ஷங்கர் ஆரம்ப காலத்தில் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரிடமும் பின் டைரக்டர் பவித்ரனிடம் பாடம் பயின்றவர். முதல் படத்தில் அசத்தலான கிராபிக்ஸையும் ஏ. ஆர். ரகுமானின் அதிரவைக்கும் அட்டகாச பாடல்களையும், கே.டி. குஞ்சு மோனினி பாக்கெட்டின் பலத்தையும் சரியாக பிரோயோகம் செய்த ஷங்கர்... கதையமைப்பிலும் காட்சிமைப்பிலும் கெட்டிக்காரர்தான். சமகால மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மசாலாக்களை நிரந்து இட்டு சினிமா ரசிகனுக்கு வயிறு புடைக்க விருந்து படைக்கும் ஒர் மிகப்பெரிய யுத்தி தெரிந்த வித்தகர்.


குருவில் கமலஹாசன் செய்ததனை வேறுவிதமாக சொன்ன ஷங்கரின் கதை பலம் என்பது முதல் படத்தில் இருந்து தற்போது வெளியான எந்திரன் வரை வலுவனாது அல்ல என்பது அனைவரும் அறிந்தாலும் அவரின் மற்றைய பூச்சுக்களில் சினிமா ரசிகர்கள் வாய்பிளந்து பார்ப்பதும் பொழுது போக்கில் நிறைவதும் வழமையாகிப் போன நிகழ்வுகள்.


தொழில் நுட்பம் தாண்டி ஷங்கர் கொஞ்சம் கதையில் வலுவாக நின்ற படம் என்று பார்த்தால் முதல்வனையும், இந்தியனையும் சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில் இவர் படங்களின் அலைவரிசை என்னவோ ஆழத்தில் உற்று நோக்கினால் சிவாஜி வரை ஒரே வகைதான்.


ஒரு மனிதன், சீரழிந்து கொண்டிருக்கும் சமுதாயம், அதில் நல்லது செய்ய விதிமுறைகள் தாண்டி அவன் செய்யும் வேலைகள், கடைசியில் சமுதாயம் மாற இப்படி செய்தேன் என்று பஞ்ச் டயலாக்குகளோடு கூடிய ஒரு க்ளைமாக்ஸ். இதைத்தான் ஷங்கர், ஜென்டில்மேன், இந்தியன், அன்னியன், என்று சிவாஜி வரையிலும் செய்திருப்பார்.


முதல்வன் படத்தின் கருவில் இருக்கும் வித்தியாசம் மொத்த சினிமாவையும் ஆச்சர்யமாய் வாய் பிளந்து பார்க்க வைத்தது என்பது உண்மையே. அதில் புதுமையிருந்தது. ஆனால் புதுமைகளை விடுத்து ஷ்ங்கர் என்ற பிரமாண்ட டைரக்டராகவே பத்து படங்களையும் (பத்துதானே????) வெளிப்படுத்தி காட்டியிருக்கும் அவர் எதார்த்த சினிமாவை எடுக்கத் தெரியாதவரா? இல்லை எடுத்தால் இப்போது உள்ள காலகட்டத்தில் விலைக்கு போகாது என்று முழுக்க முழுக்க மார்க்கெட்டிங் யுத்தியை போர்த்திக் கொண்டு சிந்திக்கும் கமர்சியல் சார்ந்த ஒரு இயக்குனர் மட்டும்தானா?


தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்பது அந்த அந்த காலக்கட்டத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு என்று எப்போதும் இருந்து கொண்டுதானிருந்தது. பிரமாண்ட பொருட்செலவில் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு சராசரி போட்டிக்குத்தான் விடப்படும் ஆனால் ஷங்கரின் சமீபத்திய எந்திரன்....அவருக்கும் தயாரிப்பாளருக்கும் லாபத்தை மட்டும் அள்ளிக்கொடுக்கவில்லை.....அதையும் மீறி அங்கே நடந்த மனோதத்துவ வலியுறுத்தல்களும், ஏகாதிபத்திய தாக்குதல்களும்ம் கூடத்தான் வரலாறு காணாதது.


அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட ஷங்கரின் எல்லா படங்களையும் நொறுக்கி அள்ளிய எந்திரனுக்காக செலவழிக்கப்பட்ட மனித மூளைகளின் வியாபார யுத்தி....சர்வநிச்சயமாய் இனி எந்த ஒரு திரைப்படத்திலும் பயன் படுத்தப்படக்கூடாது என்று கோர்ட்டில் கேஸே போடலாம்.....


ஊரில் இருக்கும் அத்தனை திரையரங்குகளையும் மொத்தமாய் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தயாரிப்பாளர்களின் வலு.........


அந்த கட்டத்தில் பார்ப்பதற்கு வேறு படமே இல்லை ... நீங்கள் அனைவரும் எந்திரன் பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாய திணிப்பு நடத்தியது. மீண்டும் மீண்டும் மனித மூளைகளின் உடைகள் உருவப்பட்டு.. திரும்ப திரும்ப ஒரு பிம்பத்தை மூளைகளில் விதைத்து அதை உண்மை என்று நம்ப வைக்கும்.....மனோதத்துவ ரீதியான யுத்தி சாமானிய மக்களுக்குத் தெரியாமலேயே நடந்தது........!


ஒரு கட்டத்தில் எந்திரன் நல்ல படம் இல்லை என்று சொன்னால் எங்கே தமக்கு ரசனைகள் இல்லையோ என்று சக மனிதன் நினைத்து விடுவானோ.. என்று எண்ணி ஆமாம் நன்றாக இருந்தது என்று கூறி அதை ஒரு பேசன் போல உருவாக்கிக் காட்டியது என்று அது எல்லாம் யுத்தியாக இருக்கலாம்.........ஆனால் அவை எல்லாம் தவறான சினிமா எதிர்காலத்துக்கான ஒரு சரியான முன்னுதாரணம் இல்லையா?


இதே நிலை தொடர்ந்தால் சினிமா என்றாலே அதிக பொருட்செலவில் தொழில்நுட்பங்கள் நிறைந்து அதி பிரபலமான நட்சத்திரங்கள் நடித்தால்தான் ஓடும் என்ற எண்ணத்தை வரும் காலத்தின் மனதில் மறைமுகமாய் விதைத்திருப்பது வருத்ததுக்குரியது.


கமர்சியல் சினிமாக்கள் எல்லாம் பொருட்செலவு செய்து எடுத்தால் தான் அவற்றின் பிரமாண்டத்தை கணக்கில் கொண்டு ரசிகன் ஏற்றுக் கொள்வான் என்ற மாயையும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மனதில் விதைத்த பெரும் பங்கு டைரக்டர் ஷங்கருக்கு உண்டு.


தேவர்மகன் போன்ற கமர்சியல் படங்களின் ஆழத்தில் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளும், சமூக அவலங்களும் அப்பட்டமாய் வெளிக்கொண்டு வரப்பட்டன. பிரமாண்டமாய் மனித மனதில் சம்மணமிட்டு அமரும் அது போன்ற படங்கள் காலத்தால் அழியாத பிரமாண்டமானவை. இது தான் பிராமாண்டம் என்ற வார்த்தையின் சரியான புரிதல் வடிவம்.


விலையுயர்ந்த இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும், நடிகரும், நடிகையுமின்றி ஒரு வேளை ஷங்கர் படம் இயக்கினால்.....அப்போது தெரியும் எதார்த்தமான ஒரு படைப்பாளியின் வலி. மேலே நாம் கூறிய கூற்றில் ஒன்றான பிரபல நட்சத்திரங்கள் இல்லாத பாய்ஸ் படம் என்ன ஆனது? என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


இந்த கட்டுரையும் கேள்விகளும் ஏன் டைரக்டர் ஷங்கரை மட்டுமே குறி வைத்துப் பாய்கிறது? மாறாக நடிகனையோ, தயாரிப்பளனையோ ஏன் சாடவில்லை....என்றுதானே கேட்கிறீர்கள்......? காரணமிருக்கிறது....


ஒரு படத்தின் கதையை வலுவானதாக கொண்டிருக்கும் டைரக்டர்க்கு எப்போதும் எக்கச்சக்க முதலும், சூப்பர் ஸ்டார் நடிகர்களும் தேவையில்லை. அங்காடித்தெரு திரைப்படத்தில் என்ன செலவு இருந்தது? எந்த சூப்பர் ஸ்டார் நடித்தார்? அங்கே கதையும் களமும் பேசியது. இது ஒரு உதாரணம்தான்.........ஷங்கர் போன்ற திறமையான டைரக்டர்கள் புது வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள் அப்படி உருவாக்குபவை எல்லாம் அவர்களின் வசதிக்காக.....கொஞ்சூண்டு கதை.. நிறைய தொழிநுட்பம், ஆஸ்கார் இசையமைப்பாளர்...+ ஸ்டார் ஹீரோ.....

இதுதானே ஷங்கரின் ஃபார்முலா?


நான் கடவுளிலும், நந்தலாலவும் கூட படைக்கப்பட்டது ஒரு இயக்குனரால்தானே...? ஷங்கர் என்ற ஒரு படைப்பாளிக்கு நிறைய விஷயங்கள் தேவை அப்படி இருந்தால் ஒரு படத்தினை செய்யமுடியும் என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே இதை எப்போது உடைப்பீர்கள் பாஸ்? ஒரு இயக்குனர்தான் ஆணி வேர்.....இயக்குனரின் தீர்மானமின்றி.....தயாரிப்பளர்களும் நடிகர்களும் வந்து விடுவார்களா என்ன? அதனால்தான் இயக்குனரை குறி பார்க்கிறது இந்தக் கட்டுரை.


ஷங்கரின் திரைக்கதையும், மனிதர்களுக்கு கொஞ்சம் கூட வெறுப்பு வராத பாணியில் வைக்கும் காட்சி அமைப்புகளும், தொழில் நுட்ப மூளையும் அபாரமானவை.......அதை வைத்துக் கொண்டு எப்போது ஒரு அவள் ஒரு தொடர்கதை, சிந்து பைரவி, புது புது அர்த்தங்கள் , மண் வாசனை, தண்ணீர் தண்ணீர், தேவர் மகன், அழகி, போன்ற படங்களை கொடுக்க போகிறார் ஷங்கர்?

அம்பேத்கார் என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் மக்களின் முன்னால் போய்ச் சேரவில்லை. காரணம் வியாபர யுத்திகள் செய்து அதற்காக செலவு செய்து விளம்பரம் செய்ய ஆட்கள் இல்லை....! நல்ல விசயத்தை மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் விதைக்க ஆட்கள் இல்லை........மக்களுக்கு அது பற்றிய கவலை இல்லை....!


எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்? சினிமா நமது வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றாகிப் போய்விட்டது. சினிமாவை விடுத்து நமது அன்றாடம் நகரவே நகராது என்பதும் அனைவரும் அறிந்தது. அதை சரியாக தரும் டைரக்டர்கள் பொழுது போக்கோடு சேர்ந்து கருத்துக்களையும் சொன்னால் ஒரு 100 வருடங்கள் கழித்தாவது ஏதோ ஒரு மாற்றம் நிகழுமே நமது சமுதாயத்தில்...


அதுவும் டைரக்டர் ஷங்கர் போன்ற ஜாம்பவான்கள் புதுமுகங்களை வைத்து இயக்கி, செலவுகள் அதிகமில்லாத நல்ல சினிமாக்கள் கொடுத்து....தங்களின் இருப்பையும் படைக்கும் திறனையும் மக்களிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள்.


அப்படியின்று ஷ்ங்கர்கள் ஆயிரம் பிரமாண்டங்கள் எடுக்கலாம்.............ஆனால் அவை வெறும் நிற்காத உயிரற்ற செல்லுலாய்டு............பிம்பங்களாகத்தானிருக்கும்.......


காலம் அவற்றை செரித்துப் போட்டுவிட்டு நகர்ந்து கொண்டுதானிருக்கும்........யாருக்கும் எந்த பயனும் இராது.


(கழுகு இன்னும் உயர பறக்கும்)

32 comments:

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//ஒரு கட்டத்தில் எந்திரன் நல்ல படம் இல்லை என்று சொன்னால் எங்கே தமக்கு ரசனைகள் இல்லையோ என்று சக மனிதன் நினைத்து விடுவானோ.. என்று எண்ணி ஆமாம் நன்றாக இருந்தது என்று கூறி அதை ஒரு பேசன் போல உருவாக்கிக் காட்டியது '//

முற்றிலும் உண்மை... சில நேரங்களில் சில படங்கள் நமக்கு அவ்வளவா பிடிக்கலன்னு சொன்னா, ஒரு ஜந்துவ பாக்கிற மாதிரி பார்ப்பாங்க.. ;-)

ஜீவன்பென்னி said...

Boys padathulayae avaru sarakku theertha directora maarittaaru. Intha padam ellam oru oppethal thaan. Intha maathir padangal vetri perumpothu nalla irunthu odatha padangala eduthavangalukku eppudi irukkum. Intha categoryla K.S Ravikumar iurkkaar.


Tamil font la konjam problem...

ஜீவன்பென்னி said...

Shankar muthalla edukkanumnu ninaicha padatha ithu varaikkum edukkave illanu solluvanga. May athu unarvu poorvamaana kathaiya irukkalam. Aaana avare oru vattathula poi maatikkittaru. veli varuvathu romba kastam.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

/சினிமாவை விடுத்து நமது அன்றாடம் நகரவே நகராதுஎன்பதும் அனைவரும் அறிந்தது. அதை சரியாக தரும் டைரக்டர்கள் பொழுது போக்கோடு சேர்ந்து கருத்துக்களையும் சொன்னால் ஒரு 100 வருடங்கள் கழித்தாவது ஏதோ ஒரு மாற்றம் நிகழுமே நமது சமுதாயத்தில்.//

இந்த மாதிரி திறமை உள்ள டைரக்டர்... ஒரே அடியா... தத்துவம் மட்டும் இல்லாட்டியும்... எதாவது மனதில் நிற்பது போல்.. படங்கள் கொடுத்தால்... நல்லாத் தான் இருக்கும்.. :-)௪

உங்க ஆதங்கம் புரியுதுங்க..

I totally AGREE with you on this topic :-))

வினோ said...

/ அதை சரியாக தரும் டைரக்டர்கள் பொழுது போக்கோடு சேர்ந்து கருத்துக்களையும் சொன்னால் ஒரு 100 வருடங்கள் கழித்தாவது ஏதோ ஒரு மாற்றம் நிகழுமே நமது சமுதாயத்தில்... /

உண்மை தான்... நமது சமுதாயம் மாற்றங்களுக்கு சினிமாவும் ஒரு காரணி..

எஸ்.கே said...

//திரும்ப திரும்ப ஒரு பிம்பத்தை மூளைகளில் விதைத்து அதை உண்மை என்று நம்ப வைக்கும்.....மனோதத்துவ ரீதியான யுத்தி சாமானிய மக்களுக்குத் தெரியாமலேயே நடந்தது........! //

ஆமாம். விளம்பர யுக்தியால் சாதாரண படங்களையும் ஏதோ பெரிதாக தோன்ற வைக்க முடியும்!

சுபத்ரா said...

இயக்குனர் சங்கர் என்று கேள்விபட்ட உடனே நினைவுக்கு வருவது, “பிரம்மாண்டம்” எனும் பெயரில் அவர் இயக்கும் பெரிய பட்ஜட் படங்கள் தான். பணம் இப்படியா போக வேண்டும் என்ற கேள்வியைத் தூண்டுவதாக அமையும் வகையில் அவரின் படங்கள், குறிப்பாக தற்போதைய படங்கள்! ஒரு வயிற்றெரிச்சலைத்தான் தருகின்றன.

நல்ல பதிவு கழுகு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்டங்காக்க கொண்டக்காரி,...

த்ரீ இடியட்ஸ் பாருங்க

அம்பிகா said...

கமர்சியல் சினிமாக்கள் எல்லாம் \\பொருட்செலவு செய்து எடுத்தால் தான் அவற்றின் பிரமாண்டத்தை கணக்கில் கொண்டு ரசிகன் ஏற்றுக் கொள்வான் என்ற மாயையும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மனதில் விதைத்த பெரும் பங்கு டைரக்டர் ஷங்கருக்கு உண்டு.\\


:-)))

Anonymous said...

கழுகுக்கு ,

முதல்ல ஒரு சலாம் !!!!

Anonymous said...

////// ஒரு படத்தின் கதையை வலுவானதாக கொண்டிருக்கும் டைரக்டர்க்கு எப்போதும் எக்கச்சக்க முதலும், சூப்பர் ஸ்டார் நடிகர்களும் தேவையில்லை./////

எக்கச்சக்க முதல் போட்டு ஒரு படத்தினை எடுத்து அது போணியாகாமல் போனால் ,வேங்கடவன் கோவிலில் உண்டக்கட்டி வாங்கித்தான் தின்பான் தயாரிப்பாளர் .நீங்கள் குறிப்பாக சொல்வது எந்திரனை தான் என்றால் ..,என்ன கதை இல்லை என்று சொல்கிறீர்கள் ? மேலும் அது ஒரு பாண்டசி படம் ..,ஜுராசிக் பார்க் ,டர்மினடோர் போன்ற படம் .அவ்வளவே .குழைந்தைகள்முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியாகவே கதை அமைந்துள்ளது

Anonymous said...

//// அங்காடித்தெரு திரைப்படத்தில் என்ன செலவு இருந்தது? எந்த சூப்பர் ஸ்டார் நடித்தார்? அங்கே கதையும் களமும் பேசியது. /////

அங்கே கதையும் களமும் விளம்பர யுக்தியும் ,நாம் அன்றாடும் சென்று துணிகளை வாங்கும் ரங்கநாதன் தெருவின் கடைகளில் அடிமைகளாய் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வாழ்வியல் வலிகளை உரசி சென்றதால் அப்படம் மக்களின் சுயகழிவிறக்கம் மூலமாக வெற்றி பெற்றது

Anonymous said...

///// இது ஒரு உதாரணம்தான்........./////

இதை போல் தோல்வியை தழுவிய பெரும்பாலான தரமான படங்கள் நிறைய உள்ளன ..,சந்தியா ராகம் , ருத்ரைய்யா 'அவள் அப்படித்தான்' என்னும் படம் ,வீடு ,போன்ற திரைப்படங்களுமே வணிக ரீதியாக தோல்வியை தழுவிய படங்களே ...,முதலில் கழுகு நீங்கள் எந்த அளவுகோலில் ஒரு திரைபடத்தை அளக்குகீர்கள் ?..,வணிகரீதியிலா ..,? அல்லது மக்கள் சிந்தையை தூண்டுவதிலா ?

*********

Anonymous said...

///// நான் கடவுளிலும், நந்தலாலவும் கூட படைக்கப்பட்டது ஒரு இயக்குனரால்தானே...? /////

நீங்கள் குறிப்பிடும் நான் கடவுளை வேண்டுமென்றால் கூட ஒத்துகொள்ளமுடியும் ..,ஆனால் நந்தலாலா அப்பட்டமான காபி ..,இதில் கதை மிஷ்கின் என்று வேறு போட்டு கொள்கிறார் (தகேஷி கிட்டானோ பார்த்தால் வயிறு எரிந்து விடுவார் ) ..,ஒரு நல்ல படத்தை திருடி அதை தன பேரில் போட்டு கொண்டு படம் எடுத்தால் அது படைக்க பட்டது ...,யோகியில் அமீர் செய்த அதே திருடல் தான் நந்தலாலா.

கழுகு said...

தில்லு முல்லு @ ஒட்டு மொத்த கட்டுரையின் நோக்கம்.....யாதெனில்........இயக்குனர் ஷங்கர்.....எதார்த்த படங்களை அதிக பொருட்செலவுகளின்றி எடுத்து நிரூபிக்க வேண்டுமெண்டும்....

மக்களுக்குப் படம் பிடிக்கவேண்டுமெனில் அதிக செலவு செய்து விளம்பரங்கள் செய்துதான் ஆகவேண்டும் என்ற கொள்கையோடு கழுகு முரண்பட்டு நிற்கிறது தோழா...!

சில திரைப்படங்கள்....உதாரணத்துக்கு.....கொடுக்கபட்டுள்ளது அது பற்றி விவாதித்து கட்டுரையின் போக்கினை மாற்ற வேண்டாம் என்பதால் அது பற்றி யாம் அதிகம் விளக்கங்கள் கொடுக்க விரும்பவில்லை.....!

மாணவன் said...

தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செஞ்சீருக்கீங்க ஆனால் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் ???????????

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல அலசல் ..கழுகிற்கு நன்றி ....

அருண் பிரசாத் said...

அலசல் நல்லாதான் இருக்கு....

ஆனா, ஒவ்வொருவருக்கு ஒரு ஒரு பார்முலா.... கழுகு நல்ல கட்டுரைகள் எழுதும்... மங்குனி அமைச்சர் நல்ல காமெடியா எழுதுவார்....

இதை மாத்தி போட்டா நல்லா இருக்காதே....

சுரேகா.. said...

//இதுதானே ஷங்கரின் ஃபார்முலா?//

இந்த ஒரு வரி போதும். தாங்கள் ஷங்கரை யதார்த்த சினிமா செய்யவேண்டும் என்று கூப்பிடுவதில் இருக்கும் வலுவின்மை! :)

அது அவர் பார்முலா பாஸு ! மேலும், எந்திரன் வியாபார தந்திரங்கள் அவருடையது இல்லை. சன் குழுமத்தினுடையது.

செல்வா said...

//ஒரு கட்டத்தில் எந்திரன் நல்ல படம் இல்லை என்று சொன்னால் எங்கே தமக்கு ரசனைகள் இல்லையோ என்று சக மனிதன் நினைத்து விடுவானோ..//

உண்மைலேயே எந்திரன் ரொம்ப கொடுமையான படம் ..
அதிலும் ரொம்ப கொடுமையான காட்சி அப்படின்னா அது அந்த கொசு கூட பேசுற காட்சி தான் .. அந்த ஒரே சீன்ல இது ஒரு அறிவியல் , சயன்ஸ் பிக்சன் அப்படிங்கிற எல்லாத்தையும் கீழ தள்ளிடுச்சு .!!

Unknown said...

என்ன பெரிய்ய்ய ப்ரமாண்டம்.இந்திய திரைப்படங்களில் கிராபிக்ஸ் வருவதுற்கு முன்பே காணாத ப்ரமாண்டமா எந்திரனில் வந்தது.
மொகலே ஆஜம், ரஜியா சுலதானா,பாகிஜா,தேவதாஸ் இவைகளுக்கு முன்னால் எந்திரன் சாதாரணம்

Saravanan Trichy said...

நமக்கு என்ன வருமோ அததான் சார் செய்ய முடியும். break dance ஆடுறவன கூப்பிட்டு கர்னாடக சங்கீதம் பாட சொன்னா எப்புடி?

அஞ்சா சிங்கம் said...

ராபின்ஹூட் கதைய எத்தனை முறை திரும்ப திரும்ப எடுத்து சாதனை பண்ணிருக்காரு ..
எந்திரன் மோசமான படம் நானும் உடன் படுகிறேன் .
அந்த மிசின்கண் காட்சி மாசக் படத்தில் வருவது. டேர்மினடர் படம் ...ஐ ரோபாட்ட்ஸ்.அஸ்ட்ரோ பாய் போன்ற படங்களின் மோசமான கலவை ஏந்திரன் ................

Angel said...

I TOTALLY AGREE WITH YOU.

அன்பரசு said...

எந்திரன் படம் பார்த்துவிட்டு நான் என் நண்பனுக்கு அவனுடைய கைபேசியில் அழைத்து சொன்னேன், "ஏன்டா என்மேல் உனக்கு என்ன கோபம், இந்த படத்திற்கு போகவைத்து விட்டாய்" என்று. ரஜினி ரசிகனாக ஒரு பத்து அ இருபது நிமிடங்கள் படத்தை ரசித்தேன்.

Jayadev Das said...

உங்கள் கருத்துக்களோடு நூறு சதம் ஒத்துப் போகிறேன். அருமையான அலசல். நன்றி. [இந்த பின்னூட்டம் போடுறவங்கள நம்பவே முடியலே, எந்திரன் டாப்புன்னு போட்டாலும் "சரி", ஷங்கர் டூப்புன்னு போட்டாலும் "சரி" ன்னு அதே ஆளுங்க கருத்து பதியறாங்க.]

அ.சந்தர் சிங். said...

ஷங்கரின் திரைப் படங்கள் அனைத்தும் காகிதப் பூக்கள்தான்.
அதில் நறுமணத்தை எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்து போவீர்கள்.

அ.சந்தர் சிங்.

டக்கால்டி said...

ஷங்கரின் திரைப் படங்கள் அனைத்தும் காகிதப் பூக்கள்தான்.
அதில் நறுமணத்தை எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்து போவீர்கள்.//

Repeat...ஜென்டில் மென் படம் மட்டும் எனக்கு இன்றும் பிடிக்கும்...

R.Gopi said...

சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்லவில்லை நீங்கள்...

50-60 கோடியில் மொக்கை அம்புகள் விடுகிறார்களே... அதற்கு ஷங்கரின் படம் எவ்வளவோ தேவலை..

இன்றைய உலகின் சூழலில் எந்த பொருளுக்கும் விளம்பரம் அவசியம்... அதை சிலர் குறைவாகவும், சிலர் நிறைவாகவும் செய்கிறார்கள்... சன் டி.வி.யின் கையில் சேனல் இருந்ததால், நிறைவாக செய்தார்கள்...

யாரும் யார் பாக்கெட்டிலும் கைவிட்டு காசு எடுத்து எந்த படத்தையும் பார்க்க சொல்வதில்லை...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

மன்மத அம்புக்கு எந்திரன் எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது. அம்பேத்காரையும் எந்திரனையும் ஒப்பிட்டததால் ஏற்பட்ட பிரட்சனை என்றே தோன்றுகிறது.

களவாணியும், மைனாவும் இங்கே ஜெயித்துக் கொண்டிருக்கின்றன. அதையும் கவணித்திருக்கலாம். முழுக்க முழுக்க அம்பேத்காரையும் கமர்சியலாக மாற்றியிருக்கலாம், அதற்கு சிலவற்றை தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.

Unknown said...

இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

http://rajavani.blogspot.com/ said...

நல்ல பதிவு கழுகு!!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes