தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், மிகைப்பட்ட மனிதர்களின் மனதில் அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டும் உற்று நோக்கி அவர்களின் குறை நிறைகளை பற்றிய சிந்தனைகளை விவாதிக்கும் மனோபாவம் மிகுந்திருக்கிறது ஆனால் வாக்களர்களாகிய நாம் எந்த நிலையில் இருக்கிறோம் நமது பார்வை எவ்வளவு விசாலப்பட்டது? அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு கட்சியை ஆட்சிப்பொறுப்பில் ஏற்றும் தகுதி படைத்த திருவாளர் பொதுஜனமாகிய நமது குறை மற்றும் நிறைகள் என்ன?
கழுகின் கேள்விகளை சமூக அக்கறை கொண்ட பதிவுலக நண்பர்கள் சிலரிடம் முன் வைத்து அவர்களின் பதிலையும் பெற்றோம்.....! இடைவிடாத மற்ற வேலைகளுக்கு நடுவேயும் எமது கேள்விகளுக்கு பதிலளித்த அன்பின் நண்பர்களுக்கு கழுகு தனது அன்பான நன்றிகளை உரித்தாக்கும் அதே நேரத்தில் வேலைப்பளுவின் காரணமாக பதில்கள் பகிர முடியா ப்ரிய நண்பர்களுக்கும் தனது அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதோ நாம் முன் வைத்த கேள்வியும் பதில்களும்.....
கேள்வி: தமிழக வாக்காளர்களின் நிறை மற்றும் குறைகள் என்ன?
குறை என்றால் கட்சி சார்பாகவும், பணம் வாங்கிக்கொண்டும் ஓட்டு போடுவது. அல்லது ஓட்டு போடாமலே இருப்பது.
நிறை என்றால் நடுநிலை வாக்களர்கள்தான் யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பவர்கள் ஆக இன்னும் இருக்கிறார்கள் என்பது.
நிறை- எது நடந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது!
JAY
நிறை - வாய்ப்புகளை மாறி மாறி தருவது..
குறை - தவறுகளை மறந்து விடுகிறார்கள். சாதனைகளையும் கூட...
குறை - தவறுகளை மறந்து விடுகிறார்கள். சாதனைகளையும் கூட...
தமிழக வாக்காளர்கள் பெரிம்பாலோனர் அரசியலில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. காரணம் அரசியல் வாதிகள் நடந்து கொள்ளும் விதம் - பதவியில் இருக்கும் போது பதவியைப் பயன் படுத்தும் விதம் - கொள்கைகள் மாறுபட்டதாக இருப்பினும் கூட்டணி அமைக்கும் விதம் - இவை எல்லாம் சிந்தித்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என வெறுப்புற்று ஒதுங்கி - ஓட்டளிக்காமலேயே இருப்பது வாக்காளனின் மிகப் பெரிய குறை.
அடுத்து, வாக்காளன் எக்கட்சியையும் சாராமல் இருப்பவனாகவும் மற்றும் மேலே கூறிய காரணத்தால் வாக்களிக்க விருப்பமில்லாமல் இருப்பவனாகவும் இருப்பவன் , கட்டாயத்தின் அடிப்படையில் வாக்களிக்க வந்து - வாக்குச்சாவடியில் - இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற எண்ணத்தில், கண்ணை மூடிக் கொண்டு முத்திரை குத்தும் செயலைச் செய்கிறான். இதுவும் குறை தான்.
அடுத்து, பெறுகின்ற பணத்திற்கும், இலவசப் பொருட்களுக்கும் மயங்கி வாக்களிக்கின்றான். இதுவும் குறை.
பல வித காரணங்களினால் - வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பதில்லை - ஓட்டுப் போடப் போகும் போது - பட்டியலில் இல்லையே எனப் புலம்புவது - இது மற்றுமொரு குறை.
நிறைகள் :
பல வாக்காளர்கள் - நிலையினை அலசி ஆராய்ந்து - தீர்க்கமாக முடிவெடுத்து - வாக்களிக்கின்றனர். இது நிறை.
இலவசப் பொருட்கள் கிடைத்தாலும் சரி - கட்டாயமானாலும் சரி - கவலைப் படாமல் சுதந்திரமாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இது ஒரு நிறையே.
சார்ந்திருக்கும் கட்சியினைப் பார்க்காமல் - வேட்பாளரின் குண நலன்களை ஆராய்ந்து, வாக்களிப்பதும் ஒரு நிறையே.
குறைகள் உள்ளவர்கள் அதிகமா - நிறைகள் உள்ளவர்கள் அதிகமா ? சொல்ல இயலாது.
சக பதிவர்களே, வாக்களார்களே நீங்களும் உங்கள் குறை நிறைகளை பின்னூட்டத்தில் கூறுங்கள்!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
5 comments:
நிறை குறைகள் பற்றி எனக்கு எழுத தெரியவில்லை.... எல்லோரும் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். வாக்குரிமை இல்லாதவர்கள் அதை பெற முயல வேண்டும். வோட்டு போடுகிறவர்கள் கையில்தான் வோட்டு இல்லாதவர்களின் தலைஎழுத்தும் உள்ளது... வோட்டு போடுகிறவர்கள் நடுநிலையில் இருந்தாலே நல்லாட்சி அமைய வாய்ப்பு வரும். என்னோட தலைஎழுத்தும் வோட்டு உள்ளவர்களின் கையில்தான் உள்ளது. விடாமல் நானும் எழுதி கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு வோட்டு மட்டும் தரமாற்றாங்க.... இன்னும் சிலர் வோட்டு இருந்தும் அதை பயன்படுத்தமாற்றாங்க... என்ன சொல்ல....
நல்ல பதிவு. ஆனால் எலெக்சன் அன்னிக்கு லீவ என்ஜாய் பன்னனும்ன்னுதான் நிறைய பேர் நினைக்கிறாங்க. டிவி ல விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் வேறு..
குறை : அதாவது சென்னையில் சாதாரணமாக 3000 ருபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் .தன சொந்த ஊரில் அதாவது எடுத்து காட்டாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து ஓட்டு போட வேண்டும் என்றால் குறைந்தது 1000 ரூபாய் செலவழித்து ஓட்டு போட வேண்டிய நிலை ..
ஓட்டு போடுவது கண்டிப்பு கட்டாயம் என்று கூறுவது எல்லாம் ஏற்று கொள்ள முடியாது .அதுக்கு வேற லெகுவான வழிகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும் .....
நிறை :இத்தனையும் கடந்து வந்து அவன் தன் ஜனநாயக கடமையை செய்கிறான் ....அவனுக்கு நம் அரசியல் வாதிகள் சாற்றும் பட்டை நாமம் (ரொம்ப நிறைவாக இருக்கு கழுகு அவர்களே .....ஹி..... ஹி.....)
நல்லா இருக்கு உங்க படைப்புபுதிய முயற்ச்சி
www.kavikilavan.blogspot.com
எதற்காக ஓட்டு போடுகிறோம் என்று தெரியாமல் போடுவது மிகப் பெரிய குறை (அணைத்து குறைகளும் இதனுள் அடங்கும்)
சென்ற ஆட்சியின் செயல்பாடு அறிந்து (ஒப்பிட்டு) மாற்றிப் போடுவது நிறையே..
Post a Comment