Monday, January 10, 2011

'பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும்...(10.01.2010)







பஞ்ச் 1: விஜயகாந்த சார் தே.மு.தி.கவை அடகு வைக்க மாட்டேன்னு சூளுரைச்சுருக்காரு. சார் வைக்க மாட்டாரு ஆன எவனுக்கோ போற எதிர் ஓட்டுக்கள நடுவுல நின்னு வாங்கிக்கிட்டு... தானும் படுக்காம தள்ளியும் படுக்காம கேப்டன் கொடுக்குற அலும்பு.. முடியலடா சாமி...! என்னதான் சார் உங்க ஸ்டேரேட்டஜி...? இல்ல தெரியாமத்தான் கேக்குறோம்.... தமிழ் நாட்டுல தி.மு.க கூட்டணி பாரளுமன்ற தேர்தல்ல ஜெயிச்சு அதனால இலங்கைல ஒரு மாற்றம் ஏற்பட்டுச்சுன்னு யாராச்சும் சொல்றீங்கன்னா.. கூச்சப்படமா இந்த விசியகாந்த திட்டுங்க எசமான்... ?

முதல்ல உங்க கட்சியோட நோக்கத்த முதல்ல தெளிவா சொல்லுங்க அப்புறம் கேக்கலாம் ஓட்டு...!



பஞ்ச் 2: இலவசங்களை மக்கள் வாங்காமா இருக்கணும் அப்போதான் தேர்தல் நேர்மையா இருக்கும்னு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ரொம்ப நேர்மையா சொல்லியிருக்காரு. ஆமா...சார் வாங்காம இருக்கணும்னா கொடுக்காம இருக்கணும். இந்திய ஜனநாயகத்துல ஏன்டா இலவசம் கொடுத்து இன்னும் பிச்சைக்காரங்களா மக்களை வச்சி இருக்கீங்கனு கேக்க துப்பு கெட்ட நாக்கு ஒண்ணுமே இல்லை. இதுல மக்களை வாங்க கூடாதுன்னு சொல்றதுல ரொம்ப நியாயம் இருக்கு சார். தமிழ் நாட்லனு இல்ல இந்தியாவுல இலவசம் அதிகமா கொடுத்த மாநில அரசுகள் மக்களை முன்னேற்ற முடியாத, தெரியாத வக்கற்ற அரசுகள்னு அறிவிக்க ஏதும் வழி இருக்கா குப்தா சார்?




பஞ்ச் 3: ஒவ்வொரு கட்சிக்காரனும் பத்து டி.வி வச்சிக்கிடுவாங்க.. அதுல முழு நீள திரைப்படம் மாதிரி கட்சியோட சாதனைகளைப்போட்டு போட்டு ஏதோ ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்த மாதிரி காமிச்சுருவாய்ங்க.... ! மக்களும் கண்ணால் கண்டுட்டு அட...கொடுமையே..இம்புட்டு நல்லதா செஞ்சு இருக்காகன்னு கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சென்டிமென்ட்டா அழுதுகிட்டு ஓட்டப் போய் போட போறாக? அரசு டி.விகளுக்கு சட்டம் போடுற டெல்லி ஆளுக.. தனியார் டி.விக்கு போட மாட்டீகளாப்பா..? எந்த டி.விலயும் கட்சியோ இல்ல கட்சி சார்ந்த விளம்பரமோ போட்டு வோட்டு கேட்க கூடதுன்னு உடனே ஒரு சட்டம் போடுங்கப்பா.....




என் சனம் எல்லாம் பாவம்.. டொட்ட்டடொய்ங்னு ஒரு நெஞ்ச உருக்குற மீசிக்கும்.. ஒரு அழுத்தமான பாட்டும் போட்டா பாத்துப்புட்டு ஓட்டப்போட்டுட்டு வந்துருதுக...




பஞ்ச் 4: எந்திரன் படம் வந்து 100வது நாளு ஆயிடுச்சு எல்லோருக்கும் சந்தோசம்தானே? சன் குழுமத்துக்கு மறைமுகமா மார்க்கெட்டிங் பண்ணின புண்ணியவான்கள் தமிழ் நாட்ல நிறைய பேரு.. அட நம்மளத்தான் சொல்றேன்..! 400 கோடியோ எம்புட்டோ சம்பாரிச்சிட்டாங்களாம்.. 100 வது நாள் ஆயிடுச்சு...அதை எப்படி அடைஞ்சோம்னு ஒரு நிகழ்ச்சிய ஒரு மாதிரி எடுத்து மறுபடியும் போட்டுக்காட்டி பாத்தவய்ங்கள எல்லாம் மறுக்கா பாக்க வைக்க ஏதாச்சும் சூனியம் வச்சுடப் போறாக...சூதானமா இருங்க மக்கா!




பஞ்ச் 5: அய்யா ஆட்சி அஞ்சு வருசம் முடியபோகுது....கேப்டன நம்பி பிரோயசனம் இல்ல.. ஏன்னா அவரு நைட்லனு இல்ல பகல்லயும் தெளிவா இருக்கிறது இல்ல.. ! மாற்ற இருக்குறது இந்த அம்மா...மட்டும்தான் ஆனா... எப்ப பாத்தாலும் ஓய்வுலயே இருந்துகிட்டு அறிக்கைல மக்களைச் சந்திச்சுகிட்டு...கோவில் கும்பாபிக்ஷேகம், பாலபிஷேகம் பண்ணிகிட்டு.. மக்கள் எதிர்பார்க்கிற ஒரு கட்சிய இப்படி துஷ்பிரோயோகம் பண்ணாம.. ஏறகனவே இருக்குற எம்.ஜி.ஆர். கிரேச மறுபடியும் தட்டிவிட்டு.. தெருத்தெருவா போய்.. மக்களை சந்திச்சு.. இப்போ இருக்குற ஒரு தூரத்தை இந்தம்மா கொறச்சு.. ஏதாச்சும் உருப்படியா செஞ்சா..




தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு மாற்று கிடைக்கும்.. இல்லேன்னா... அடுத்த 5 வருசமும் கொடநாட்லயே ரெஸ்ட் எடுக்க வேண்டியாதுதான்....!


இந்த வார பஞ்ச் படம் (நன்றி தினமலர்)








பொம்பள புள்ளைக எல்லாம் கஷ்டப்பாடு படுது நாட்ல.. பாழப்போன அரசியலும், தலைவர்களும் ஏன்தான் இதை எல்லாம் யோசிக்கிறதே இல்லையோ???????


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


16 comments:

எஸ்.கே said...

//கேப்டன நம்பி பிரோயசனம் இல்ல.. ஏன்னா அவரு நைட்லனு இல்ல பகல்லயும் தெளிவா இருக்கிறது இல்ல.. ! //

ha... haa..!

எஸ்.கே said...

//பொம்பள புள்ளைக எல்லாம் கஷ்டப்பாடு படுது நாட்ல.. பாழப்போன அரசியலும், தலைவர்களும் ஏன்தான் இதை எல்லாம் யோசிக்கிறதே இல்லையோ???????//

பொம்பளை புள்ளையாவது, ஆம்பளை புள்ளையாவது! அவங்க புள்ளைங்க நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறாங்க போல!

Kousalya Raj said...

மக்களுடன் தான் கூட்டணி என்று இத்தனை வருஷம் சொல்லிட்டே இருந்தார்...நேற்று சேலம் மீடிங்க்ல 'கூட்டணி பத்தி நான் பார்த்துகிறேன் மக்களே, நீங்க யாரும் கவலை படாதிங்க'னு சொல்றாரு.....?!

இதையும் மக்கள் கேட்டுபாங்க என்கிற அரசியல்வாதிகளின் நம்பிக்கையை நாம கண்டிப்பா பாராட்டணும்...?!!

R.Gopi said...

இந்த மாதிரி ஃபீல் பண்ணி, பண்ணி நமக்கு வயசாயிடும்...

சில குடும்பங்களின் சொத்து மதிப்பு நிமிடத்திற்கு நிமிடம் பெருகிக்கொண்டே இருக்கும்...

இந்த கூட்டணிங்கறதே பெரிய டகால்டி தானே... நிறைய சீட், பெரிய பொட்டி தந்தா, கூட்டணி ஓகே...

Kousalya Raj said...

//ஓய்வுலயே இருந்துகிட்டு அறிக்கைல மக்களைச் சந்திச்சுகிட்டு...கோவில் கும்பாபிக்ஷேகம், பாலபிஷேகம் பண்ணிகிட்டு..//

அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தானே பண்ண முடியும்...!!

ஆனா சீக்கிரமா ஒரு நல்லது நடக்க போகிறதுன்னு மனசுக்கு தோணுது..... ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் எனக்கு இப்படித்தான் தோணுது.....அதுதான் ஏன்னு தெரியல.....?!! :))

பஞ்சாமிர்தம் சுவை !!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all super punch

செல்வா said...

// ஆமா...சார் வாங்காம இருக்கணும்னா கொடுக்காம இருக்கணும். இந்திய ஜனநாயகத்துல ஏன்டா இலவசம் கொடுத்து இன்னும் பிச்சைக்காரங்களா மக்களை வச்சி இருக்கீங்கனு கேக்க துப்பு கெட்ட நாக்கு ஒண்ணுமே இல்லை. ///

இதுல இரண்டு சைடுலையுமே மாற்றம் வரணும் , அப்பத்தான் இலவசங்கள் குறையும். முதல்ல அவுங்க கொடுக்க கூடாது , அது ரொம்ப சுலபமான மாற்றம் .. அடுத்து மக்கள் வாங்க கூடாது .. இது கொஞ்சம் சிரமம் .ஏன்னா ஒரு குடும்பத்துல இரண்டு பேர் வாங்கலாம்னு சொல்லுறாங்க , இரண்டுபேர் வேண்டாம்னு சொல்லுறாங்க .. அப்படின்னா இலவசம் கொடுக்காம இருந்தாலே இத மாற்ற முடியும் .. அத விட்டுட்டு அவுங்க வாங்குறாங்க அதான் கொடுக்கிறோம் அப்படின்ன்கிறது சப்பைக்கட்டு!

சுபத்ரா said...

பஞ்சாமிர்தம்னு இனிப்பா பேர் வெச்சுகிட்டு ரொம்ப காரமா கேள்விகள் கேட்டிருக்கீங்க, தேவா சார்?!

@ பஞ்ச்#1
//முதல்ல உங்க கட்சியோட நோக்கத்த முதல்ல தெளிவா சொல்லுங்க அப்புறம் கேக்கலாம் ஓட்டு...!//

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைப்பது தான் எந்த ஒரு கட்சியின் நோக்கமாகவும் இருக்க முடியும். (ஆட்சியை அமைத்த பின் என்ன நடக்கும் என்பது கண்கூடு)

@ பஞ்ச்#2
//தமிழ் நாட்லனு இல்ல இந்தியாவுல இலவசம் அதிகமா கொடுத்த மாநில அரசுகள் மக்களை முன்னேற்ற முடியாத, தெரியாத வக்கற்ற அரசுகள்னு அறிவிக்க ஏதும் வழி இருக்கா குப்தா சார்?//

அறிவிப்பை வைத்து என்ன செய்வது தேவா சார்? வாங்குறதுக்கு மக்கள் ரெடியாக இருக்கும்போது கொடுப்பவர்கள்(?) கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

@ பஞ்ச்#3
//எந்த டி.விலயும் கட்சியோ இல்ல கட்சி சார்ந்த விளம்பரமோ போட்டு வோட்டு கேட்க கூடதுன்னு உடனே ஒரு சட்டம் போடுங்கப்பா//

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் “Right to Freedom of Speech and Expression”-ன் படி ஊடகத்துறைக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளதே! ஆனால், Freedom Means Responsibility என்னும் விசயத்தை மீடியாத் துறையினர் மறந்து விடுகிறார்கள்!!

@ பஞ்ச்#4
//மறுபடியும் போட்டுக்காட்டி பாத்தவய்ங்கள எல்லாம் மறுக்கா பாக்க வைக்க ஏதாச்சும் சூனியம் வச்சுடப் போறாக...சூதானமா இருங்க மக்கா!//

சரி, எத்தனை பேர் திரையரங்கிற்குச் சென்று பார்த்தோம்? :-)

@ பஞ்ச்#5
//இந்தம்மா கொறச்சு.. ஏதாச்சும் உருப்படியா செஞ்சா..தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு மாற்று கிடைக்கும்//

இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியை மட்டுமே மாற்றி மாற்றி நாம் கண்டு கொண்டிருக்கிறோமே? இவற்றிலிருந்து முற்றிலுமான மாற்றம் வருவது எப்போது, தேவா சார்?

[பஞ்ச் படம் மனதை மிகவும் பாதித்தது சார்]

இம்சைஅரசன் பாபு.. said...

.பஞ்சாமிர்தம் .நல்ல சுவை ........

Arun Prasath said...

எல்லாம் அரசியல் பஞ்ச் போலவே இருக்கே

அருண் பிரசாத் said...

1. இந்த ஆளு ரெண்டும் கேட்டான்... சீக்கிரம் பா மா கா ரேஞ்சிக்கு வந்துடும் (வந்துடுச்சோ!)

2. காமெடி பண்ணாதீங்க... நரேஷ் குப்தா வீட்டுல எத்தனை டீ வி யோ!

3. கட்ட்சிக்கு ஒரு டீவி இருந்தகாலம் போய் டீவி வெச்சிருந்தாதான் கட்சி நடத்தமுடியும்னு ஆயிடுச்சு...அப்புறம் எப்படி நீங்க கேக்கறது நடக்கும்...

4. 100 நாள் ஆகிடுச்சா... சரி தலைவர் படத்தை மறுபடியும் பார்கனும் # நான் அப்பாவி தமிழன்

5. தன் குடுமபத்தை வளர்கிற ஐயாவா, உடன் பிறவா சமோதரி குடும்பத்தை வளர்கற அம்மாவா? இப்போ இதுதான் போட்டி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஷார்ப் பஞ்ச்சஸ்..........

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//என் சனம் எல்லாம் பாவம்.. டொட்ட்டடொய்ங்னு ஒரு நெஞ்ச உருக்குற மீசிக்கும்.. ஒரு அழுத்தமான பாட்டும் போட்டா பாத்துப்புட்டு ஓட்டப்போட்டுட்டு வந்துருதுக//

........ பப்பப்பேன்...ன்னு.. ஒரு சோக மூஜிக்... குடுக்குறேன்... :(

//100 வது நாள் ஆயிடுச்சு...அதை எப்படி அடைஞ்சோம்னு ஒரு நிகழ்ச்சிய ஒரு மாதிரி எடுத்து மறுபடியும் போட்டுக்காட்டி பாத்தவய்ங்கள எல்லாம் மறுக்கா பாக்க வைக்க ஏதாச்சும் சூனியம் வச்சுடப் போறாக...சூதானமா இருங்க மக்கா///

......ஹா ஹா :-)
உங்களுக்கு எம்புட்டு நல்ல மனசு.. ரொம்ப நன்றிங்க.. பாத்து சூதானமா இருக்கோங்க.. :-)

//தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு மாற்று கிடைக்கும்.. இல்லேன்னா... அடுத்த 5 வருசமும் கொடநாட்லயே ரெஸ்ட் எடுக்க வேண்டியாதுதான்....!//

.............ஹிஹிஹி... :D :D :D
பஞ்ச்"நியூஸ்" நல்லா இருக்குங்க..

டக்கால்டி said...

கேப்டன் மேல உங்களுக்கு அப்படி என்னங்க கோபம்?

கிழி கிழின்னு கிழிக்கறீங்க... சமீபத்துல விருத்தகிரி படத்தை தியேட்டர்ல போயி பார்த்திருப்பீங்க போல...

arasan said...

அசத்தல் வசனங்கள் நண்பரே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அவரோட கொள்கையைதான் தெளிவா(?) சொல்லீட்டாரே..

மக்களுக்கு வீடுவிடா போய் ரேஷன் பொருடக்ளை சப்ளை செய்வதாய்...

ஹி..ஹி

நானும் அந்தாளை நம்பி, மினிவேன் வாங்கலாமானு யோசனை பன்ணிக்கிட்டு இருக்கேன்.. ஹி..ஹி

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes