
ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் நடக்கும் செய்திகளை சாதாரண பாமரன் வரை தெளிவான ஒரு பார்வையோடு கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான பணியினைச் செய்வதில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது.
சாதாரண வாழ்க்கையின் தகவல் பரிமாற்றத்தில் இன்று நேருக்கு நேராய் நாம் இருந்து வீடியோ சாட் செய்வது வரை வளர்ந்து இருக்கும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஊடகங்கள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதும் படி செல்வாவிடம் கூறினோம்....! ஒரு தொடராக வரப்போகும் இதன் முதல் பாகம் இதோ....
இன்றைய சூழலில் ஊடகம் என்ற ஒன்று இல்லாத வாழ்க்கையை நம்மால் சிந்தித்துப் பார்க்க இயலாது.அச்சு வடிவில் இருந்த ஊடகங்கள் நமக்கு வேண்டிய செய்திகளைத் தந்ததோடு நம்மை மகிழ்விக்கவும் செய்தன,...