Wednesday, February 09, 2011

இஸ்ரோவின் 4G ஸ்பெக்ட்ரம் முறைகேடு: தொழில்நுட்ப ஊழலின் வளர்ச்சி...?

 சம காலத்தில் நடக்கும் அரசியல் திருவிளையாடல்களும் திருட்டுத்தனங்களும் மிக நுட்பமான முறையில் மக்கள் அறியாவண்ணம் நடந்தேறிக் கொண்டிருக்கும் வேலையில் அது பற்றிய முழு விபரங்களையும் நம் மக்கள் அறியவேண்டும் என்ற எண்ணக் கிடக்கை கழுகிற்கு எப்பொதுமே உண்டு.

சமீபத்தில் வெளியான ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலும் சரி, தற்போது வெளியாகி பிரதமர் அலுவலகத்தில் மறுக்கப்பட்டிருக்கும் ஸ்பெக்டரம் ஊழலும் சரி....சாமனிய மக்களுக்கு தெரிந்ததுதான்....

ஆனால் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? அங்கே எப்படி ஊழல் செய்கிறார்கள், ஸ்பெக்டரம் எனப்படும் அலைக்கற்றையின் பயன்பாடுதான் என்ன......? இதோ நமது குழும தோழர் பன்னிக்குட்டி ராம்சாமி கொடுத்திருக்கும் அற்புத கட்டுரை உங்களின் பார்வைக்காக....


2G விவகாரமே இன்னும் முடியாத நிலையில் மத்திய தணிக்கைத்துறை அடுத்து ஒரு அலைவரிசை முறைகேட்டை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த அலைவரிசை விவகாரம் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாக இருப்பதால், ஏற்கனவே 2G பிரச்சனையின் முழுப்பரிமாணமும் தெரியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி அடித்துவிட்டார்களாமே என்று பலரும் கூறி வரும் நிலையில், இந்தப் பிரசனையிலாவது ஒரு தெளிவான புரிதலை உருவாக்குவதற்கு ஒரு சிறிய முயற்சியாகவே இந்தக் கட்டுரை. கட்டுரையில் சந்தேகங்கள் வந்தால்  பின்னூட்டத்தில் விளக்கங்கள் கேட்கலாம்.

ஸ்பெக்ட்ரம் என்ற ஆங்கில வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. மின்காந்த அலைகளைப் பொறுத்தமட்டில் ஸ்பெக்ட்ரம் என்றால் மிகக்குறைந்த அலைநீளம் முதல் மிக அதிகமான அலைநீளம் வரையிலான அனைத்து கதிர்களையும் உள்ளடக்கிய தொகுப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். மின்காந்த அலைகளின் வெவ்வேறு அலைநீளங்கள் வெவ்வேறு கதிர்களைக் கொடுக்கிறன (இந்த அலைகள் அனைத்தும் குளத்தில் கல்லைப் போட்டால் கிளம்பும் அலையை போன்றே பரவும் தன்மை உடையவை. அப்படி உள்ள ஒரு அலையின் நீளமே அலை நீளம். ஃப்ரீக்வன்சி (Hz) எனப்படுவது ஒரு நொடிக்கு எத்தனை அலைகள் என்ற கணக்கு ஆகும், அதாவது 1 Hzஎன்றால் ஒரு நொடிக்கு ஒரு அலை. மின்காந்தக் கதிர்களின் அலைநீளமும் ஃப்ரீக்வன்சியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான தொடர்பில் இருக்கின்றன. அதாவது ஒன்று கூடினால் இன்னொன்று குறையும். அதிக அலைநீளம் கொண்ட கதிர் குறைந்த ப்ரீக்வன்சியைக் கொண்டிருக்கும்). மின்காந்த அலைகளை காற்றலைகள் என்று அழைப்பது தவறு என்றே நினைக்கிறேன். இந்த அலைகளுக்கும் காற்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை வெற்றிடத்திலும் பரவக்கூடியவை.

அனைத்துவகை மின்காந்த அலைகளின் அடிப்படைத் தன்மையும் ஒன்றே. இவை அலைநீளத்திலும், ஆற்றலிலுமே வேறுபடுகின்றன. ஒவ்வொரு மின்காந்தக் கதிர்களின் அலைநீளமும்/ஃப்ரீக்வன்சியும் ஒரு குறிப்பிட்ட ரேஞ்சிற்குள்ளேயே இருக்கும். இந்த அலைநீளத்தையோ/ஃப்ரீக்வன்சியையோ வைத்துத்தான் கதிர்களை அடையாளப்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு அலைநீளம் 400 நேனோமீட்டரிலிருந்து 700 நேனோமீட்டர் வரை உள்ள மின்காந்த கதிரே நாம் பார்க்கும் ஒளி (ஆம், ஒளியும் ஒரு மின்காந்த அலையே!). எக்ஸ்-ரே, அல்ட்ராவயலெட் (UV), இன்ஃப்ரா ரெட் (IR), ரேடியோ அலைகள் மைக்ரோவேவ் (ஓவனில் பயன்படுவதும் கூட) என அனைத்து கதிர்களுமே வெவ்வேறு அலைநீளம்/ஃப்ரீக்வென்சி ரேஞ்சில் உள்ள மின்காந்த அலைகளே.

இந்த மின்காந்த அலைகளின் பயன்பாடு ஒரு நாட்டிற்குள் அந்தந்த அரசுகளாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. (சர்வதேச அளவில் இண்டர்னேசனல் டெலிகம்யூனிகேசன் யூனியனால் கட்டுப்படுத்தப்படுகிறது) ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை ஒரு கம்பெனிக்கு கொடுத்துவிட்டால், அதை அவர்கள் தங்கள் மொபைல், இண்டெர்னெட் சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அலைவரிசை வேறு யாருக்கும் தரப்படாது. இதனாலேயே அரசு இவற்றை ஏலத்தில் விட்டு நீண்ட கால குத்தகைக்கு விற்கிறது.


சாதாரணமாக நாம் உபயோகிக்கும் ரேடியோ, டிவி (பழைய தூர்தர்சன்) ஒளிபரப்புகளில் பயன்படுத்தப்படுவம் எஃப் எம் (FM) அலையின் ஃப்ரீக்வன்சி ரேஞ்ச் 30-300 MHz ஆகும். இப்போது பிரச்சனையில் இருக்கும் எஸ்-பேண்ட் 2.5 GHz (அதாவது 2500 MHz)  ஃப்ரீக்வன்சியில் உள்ளது. இது 4G மொபைல் சேவை பயன்பாட்டுக்கு உதவுக்கூடியது.சிலநாடுகளில் ஏற்கனவே 4G பயன்பாட்டுக்கு எஸ்-பேண்டை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ப்ராட்பேண்ட் இண்டெர்னெட்டிற்கும் இது மிகவும் உகந்தது. இன்னும் சிலவருடங்களில் அனைத்து மொபைல் பயன்பாடுகளுமே இதில் வரலாம். அப்படி வரும் பட்சத்தில், மொபைல் தொடர்பான சாதனங்கள், தொழிநுட்பங்கள் அனைத்துமே எஸ்-பேண்டிற்கு பொருத்தமானதாகவே தயாரிக்கப்படும். இதனால் இந்த எஸ்-பேண்டின் முக்கியத்துவமும் பலமடங்கு அதிகரிக்கும். அச்சமயம் நம் கையில் எஸ்-பேண்ட் இல்லையென்றால் தொழிநுட்பத்தில் ஒரு தலைமுறை பின்தங்கி விட நேரும்.



இனி இஸ்ரோவின் பிரச்சனைக்குறிய ஒப்பந்தம் பற்றிய விபரங்களைப் பார்ப்போம். இந்த ஒப்பந்தம் இஸ்ரோவின் வணிக அமைப்பான ஆண்ட்ரிக்ஸ்சிற்கும் தேவாஸ் மல்டிமீடியா என்ற இந்திய தனியார் நிறுவனத்திற்கும் இடையே 2005-ல் போடப்பட்டது. மத்திய அரசின் விண்வெளி துறையில் (Department of Space) செயலராக இருந்த M.G. சந்திரசேகர் என்பவர் டேவாஸ் என்ற கம்பெனியின் புரமோட்டர் என்று கூறப்படுகிறது (இப்போது ஓரளவு புரிந்திருக்குமே?).  இந்தக் கம்பெனி இஸ்ரோ அனுப்ப இருக்கும் GSAT-6 மற்றும் GSAT-6A செயற்கைக்கோள்களில்  எஸ்-பேண்ட் வசதி கொண்ட ட்ரான்ஸ்பாண்டர்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டது. (அதற்கான சுட்டி) ட்ரான்ஸ்பாண்டர்களுடன் சேர்த்து 70 MHz எஸ்-பேண்ட் அலைவரிசையும் 20 ஆண்டு குத்தகைக்கு வெறும் 1000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த செயற்கைக்கோள்களை செய்யவே இஸ்ரோவிற்கு 2000 கோடி ஆகின்றதாம். (3G ஸ்பெக்ட்ரத்தில் வெறும் 15 MHzஅலைவரிசையே 67,719 கோடிகளுக்கு விற்கப்பட்டது நினைவிருக்கலாம்). இதுவரை வெறும் ட்ரான்ஸ்பாண்டர்களை மட்டுமே விற்று வந்த இஸ்ரோ இதில் அலைவரிசையையும் சேர்த்தே விற்றிருக்கிறது. ஒருவேளை அது டேவாஸ் கம்பெனிக்காக செய்யப்பட்ட சிறப்பு சலுகையா?

2 G ஊழலில் நடந்தது போலவே, இதிலும் சொற்பவிலையில் அலைவரிசையை வாங்கியவுடன், டேவாஸ் கம்பெனி தனது 17% பங்குகளை 75 மில்லியன் டாலருக்கு ஒரு வெளிநாட்டுக் கம்பெனிக்கு (Deutsche Telekom)  விற்றுவிட்டது. இதில் வேறு இஸ்ரோவின் இணையதளத்தில் GSAT-6 ன் பயன்படும் காலம் 12 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது, ஆனால் ஒப்பந்தம் மட்டும் 20 ஆண்டுகளாம். (இந்த ஆண்டுக் கணக்கீட்டில் வேறு எதுவும் டெக்னிகல் சமாச்சாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை,  இருக்கிறதென்றால் தெரிந்தவர்கள் கூறலாம்).  ஒருவேளை 20 ஆண்டுகள் என்பதுஅதற்கடுத்த செயற்கைக் கோளான  GSAT-6A வுக்கும்சேர்த்தா? (இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியஇணையப் பக்கத்தில் GSAT-6A செயற்கைக்கோளே இல்லை!)

இந்த ஒப்பந்தம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் இருக்கும் போது போடப்பட்டது. இன்னும்அரசிடம் நிலுவையில் இருப்பதாகவும் அது நிராகரிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போதைய இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், இந்த ஒப்பந்த்ததைக் கேன்சல் செய்யுமாறு அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். கடந்த ஆகஸ்டிலேயே சட்ட அமைச்சகமும் இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கருத்து தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகும் இந்தஒப்பந்தம் நிராகரிக்கப்படாமல் தேவை இல்லாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. தவறான ஒப்பந்தம் என்றால் அரசு உடனடியாக நிராகரித்துவிட்டு, ஒப்பந்தத்தைப் பரிந்துரை செய்தவர்கள் மீது துறை ரீதியான விசாரணையை துவங்கி இருக்கலாமே? அரசின் தணிக்கைத்துறை அலைவரிசையின் தற்போதைய விலை நிலவரத்தை வைத்து இந்தப் பிரச்சனையை இப்போது வெளியே கொண்டுவந்துள்ளது.

இதற்கிடையில் டேவாஸ் கம்பெனி, தங்களிடம் வெறும் ட்ரான்ஸ்பாண்டர்கள் மட்டுமே இருப்பதாகவும், எஸ்-பேண்ட் அலைவரிசை இஸ்ரோவிடமே இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2005-ல் இந்த ஒப்பந்தம் ஆண்ட்ரிக்ஸ் போர்டு மெம்பர்களால ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின் விண்வெளி கமிசன், மத்திய அமைச்சரவைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக டேவாஸ் கம்பெனியின் தலைவர் சந்திரசேகர் கடந்த ஆகஸ்ட்டிலேயே கூறியுள்ளார்( அதற்கான சுட்டி) ஆணால் இந்த ஒப்பந்தம் இந்திய அரசிடம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவே பத்திரிக்கைகளில் தகவல்கள் வருகின்றன. அப்படி என்றால் 2005-ல் போடப்பட்ட ஒப்பந்தமும் இப்போது பரிசீலனையில் உள்ள ஒப்பந்தம் வேறு வேறா இல்லை ஒன்றுதானா? டேவாஸ் கம்பெனி சொல்வது போல் அது வெறும் ட்ரான்ஸ்பாண்டர்களுக்கு மட்டுமே என்று வைத்துக் கொண்டாலும், எஸ்-பேன்ட் அலைவரிசை எங்கிருந்து வந்தது? ஒருவேளை ட்ரான்ஸ்பாண்டர்கள் வாங்கியதற்கு சலுகையாக அலைவரிசை இலவசமாக இருக்குமோ? 1000 கோடி விலை அலைவரிசைக்கா இல்லை ட்ரான்ஸ்பாண்டர்களுக்கா, இல்லை இரண்டிற்குமா? எப்படிப் பார்த்தாலும் இந்த விலை மதிப்பு அரசிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. ”இதில் இப்போதைக்கு ஒரே ஆறுதல் இந்த ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படாததுதான். அதுவும் இஸ்ரோவின் தாமதத்தினால் வந்தது. இந்த செயற்கைக் கோள்களை 2005-லேயே அனுப்பி இருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தாமதமாகி, அதுவும் நன்மையாகிவிட்டது இப்போது.”

இஸ்ரோவும் விண்வெளி கமிசனும் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், பிரதமருக்குத் தெரியாமல் இவ்வளவும் நடந்தது என்று சொல்லப்படுவதைநம்புவதற்கில்லை. இதுபோன்ற முக்கியத்துவம் உடைய முடிவுகள் எப்போதும் மந்திரிசபையில் விவாதிக்கப்பட்டுத்தான் முடிவு எடுக்கப்பட வேண்டும் (இந்த விஷயத்திலும் அப்படித்தான் நடந்ததாக டேவாஸ் நிறுவனர் கூறியிருப்பதை அறிவோம், என்ன நடந்தது என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்). அல்லது பாராளுமன்றத்தில் விவாதத்திற்காவது கொண்டுவர வேண்டும். ஆனால் இந்த அரசு திரும்பத் திரும்பத் தவறுகள் நடந்தும் இன்னும் சீரியசான விஷயங்களில் கூட தன்னிச்சையாகவே முடிவெடுக்கின்றது. அந்த முடிவுகளாவது தேசத்தின் நன்மைக்குத்தான் என்றால் பரவாயில்லை. ஆனால் சில தனியார்களின் நன்மைக்கே என்று பின்னர் தெரிய வரும்போது அரசின் மொத்த செயல்பாடுகள் குறித்தும் சந்தேகம் எழுகிறது.

இன்னிலையில் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்றக் கூட்டுக் குழு கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே படுகின்றது. ஆனால் கூட்டுக்குழு விசாரணையின் முடிவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும், கூட்டுக்குழுவுன் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்குமா, அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுமா என்றெல்லாம் தெளிவில்லாத சூழல்தான் உள்ளது. சிபிஐ விசாரணைகளின் நம்பகத்தன்மை வெகுவாக பாதிக்கபட்டுள்ள நிலையில், வேறு என்னதான் செய்வது என்ற குழப்பமே மிஞ்சுகிறது. என்னுடைய ஆலோசனை என்னவென்றால், உடனடியாக உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும். தலையிட்டு அதன் மேற்பார்வையில் ஏதாவது கமிசன் அமைத்து விசாரிக்கச் சொல்லலாம், கமிசன் என்றால் நீதிபதிகளை வைத்து போடப்படும் வழமையான கமிசன் அல்ல. நேர்மையான சிபிஐ மற்றும் காவல்துறை அதிகாரிகளை வைத்து உச்சநீதிமன்றமே ஒரு புலன் விசாரணைக் குழுவை அமைக்கலாம். அதன் முடிவுகளை வைத்தே நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொண்டு நடத்த வேண்டும். சட்டத்தில் இதற்கு வழி உண்டா என்றுதான் தெரியவில்லை.

References:
விக்கிப்பீடியா
டேவாஸ் மல்டிமீடியா இணையதளம்:http://www.devasmedia.com/?page_id=264
இஸ்ரோ இணையதளம்: http://www.isro.gov.in/scripts/futureprogramme.aspx
மற்றும் டிவி செய்திகள், செய்தித்தாள்கள்


கழுகுகுழுமத்தில் இணைய....


கழுகிற்காக
பன்னிக்குட்டி ராம்சாமி  


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



39 comments:

எஸ்.கே said...

ரொம்ப விளக்கமான பதிவு! ஸ்பெக்ட்ரம் பற்றி இன்றுதான் கொஞ்சம் விவரமாக அறிந்து கொண்டேன்! நன்றி!

ஷர்புதீன் said...

thnaks for info

Ramesh said...

விளக்கமான தேவையான பதிவு. நன்றி ராம் சாமி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி
@எஸ்கே
@ஷர்புதீன்
@பிரியமுடன் ரமேஷ்

மாணவன் said...

மிகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ளும்படியும் சிறப்பாக எழுதியிருக்கீங்க....

நன்றி அண்ணே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Detailed info thanks

இம்சைஅரசன் பாபு.. said...

இந்த அளவுக்கு ஊடகங்கள் கூட சொல்லி இருக்காதுன்னு நினைக்கிறேன் பன்னி மக்கா ...........அட்டகாசம் ரொம்ப தெளிவ சொல்லி இருக்கீங்க ......கழுகு இந்த கட்டுரை யை கொண்டு வர எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கும் ...மேலும் நண்பர் பன்னி க்கு ஒரு தலை சிறந்த ராணுவ சல்யூட் அடிக்க கடமை பட்டு உள்ளேன் .......

செல்வா said...

//இப்போது பிரச்சனையில் இருக்கும் எஸ்-பேண்ட் 2.5 GHz (அதாவது 2500 MHz) ஃப்ரீக்வன்சியில் உள்ளது.///

// 70 MHz எஸ்-பேண்ட் அலைவரிசையும் 20 ஆண்டு குத்தகைக்கு வெறும் 1000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.//

அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். இதுல இருக்குறது மாதிரி எஸ்-பேண்ட் 2.5 GHz அலைவரிசைல இருக்குறதுல ஊழல் அப்படின்னா 70 MHz எஸ்-பேண்ட் எப்படி வரும் ? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ? இதுல எனக்கு நிறைய நாளா குழப்பம் இருக்கு .. ஒரு வேளை உலக டெலிகம்யூனிகேசன் நிறுவனம் ஒரு நாடு இதுல இருந்து இது வரைக்குமான அலைகளை பயன்படுத்திக்கலாம் அப்படின்னு எதாச்சும் கட்டுப்பாடு இருக்கா . ? அப்படி இருந்தா தானே இது நம்மளோடத்து அப்படின்னு கண்டுபிடிக்க முடியும் . அல்லது வேற நாடுகளுக்கு விற்க முடியும் . விளக்க mudiyuma

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@செல்வா,

சரியான கேள்விதான், நன்றி!

2.5 என்பது மிடில் பாய்ண்ட், இதோட மொத்த பேண்ட்விட்த் (அதாவது அகலம்) 190MHz சோ, 2405MHz-2595MHz தான் இதோட ரேஞ்ச், இந்த ரேஞ்சுக்குள்ள 70MHz ஐ வித்திருக்காங்க!

உலகநாடுகள் அனைத்தையும் மூன்று பகுதிகளாக பிரிச்சு, அலைவரிசைகளையும் அதே போல பிரிச்சுக் கொடுத்திருக்காங்க உலக டெலிகம்யூனிகேசன் யூனியன். அதற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தெந்த நாட்டுக்கு என்னென்ன அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கு என்ற விபரம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே மாதிரி ஒவ்வொரு நாடும், அரசாங்க, ராணுவ பயன்பாட்டுக்கு கொஞ்சத்தை ஒதுக்கிவிட்டு, மற்ற பயன்பாடுகளுக்கு மீதிய கொடுக்கறாங்க. இதை மத்த நாடுகளுக்கு விற்கமுடியுமான்னு தெரியலை.

செல்வா said...

இப்ப புரிஞ்சிச்சு அண்ணா .. ஒரு வேளை அப்படி விற்கப்பட்டிருந்தால் நாம 4G இக்கு மாறும்போது அந்த அலைகளைப் பயன்படுத்த முடியாமல் போகும். இதுதான் பிரச்சினையே !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா கூறியது...
இப்ப புரிஞ்சிச்சு அண்ணா .. ஒரு வேளை அப்படி விற்கப்பட்டிருந்தால் நாம 4G இக்கு மாறும்போது அந்த அலைகளைப் பயன்படுத்த முடியாமல் போகும். இதுதான் பிரச்சினையே !!//////

ஆமா செல்வா, அதுவுமில்லாம, அப்போ எஸ் பேன்டுக்கு டிமாண்டும் ரொம்ப ரொம்ப அதிகமாயிடும், விலையும் எங்கேயோ போயிடும்!

Anonymous said...

எளிமையாக புரியும்படி புதிய ஊழல் விளக்கப்பட்டூள்ளது....மாதம் ஒரு புரியாத ஊழல் வந்து கொண்டிருப்பதால் ...ஙெ என முழிக்கிறான்...இந்தியன்

Anonymous said...

ராமசாமி அண்னன் இவ்வளவு அறிவாளியா சொல்லவே இல்ல...இந்தாளுக்கும் பங்கு இருக்குமோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ராமசாமி அண்னன் இவ்வளவு அறிவாளியா சொல்லவே இல்ல...இந்தாளுக்கும் பங்கு இருக்குமோ//////

ங்ணா உங்களுக்கும் பங்கு வேணும்னா மேலிடத்துல கேட்டு வாங்கிக்குங்ணா.... இப்பிடியெல்லாம் போட்டு வாங்காதீங்ணா...!

Anonymous said...

இந்த ஒப்பந்தம் ரத்து செய்யயும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தற்போதைய செதி

வைகை said...

இவெங்க பண்ற ஊழலுக்கெல்லாம் விளக்கம் சொல்லவும் ஒரு ஆளு வேணும்போல! இதை ஏதாவது பத்திரிக்கைக்கும் முடிந்தால் மெயில் பண்ணலாமே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
இந்த ஒப்பந்தம் ரத்து செய்யயும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தற்போதைய செதி/////

வேற வழி?

karthikkumar said...

இவ்வளவு விஷயங்கள் நடந்தும் அரசாங்கம் ஒன்னும் பெரிதாக நடவடிக்கை எடுப்பது போல் இல்லையே அண்ணே ....

MANO நாஞ்சில் மனோ said...

பெரிய பொருளாதார புலின்னு பெயரெடுத்த சிங் அண்ணாச்சி கமுக்கமாவே இருக்காரே.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா பன்னிகுட்டி சூப்பர் மக்கா................

Kousalya Raj said...

இதுவரை இதை பற்றி அவ்வளவா ஆர்வம் காட்டியது இல்லை...உங்களின் இந்த விளக்கங்கள் மிக தெளிவாக இருந்தது...புரிந்து கொண்டேன். நன்றி.

டிராகன் said...
This comment has been removed by the author.
டிராகன் said...

////// உதாரணத்திற்கு அலைநீளம் 400 நேனோமீட்டரிலிருந்து 700 நேனோமீட்டர் வரை உள்ள மின்காந்த கதிரே நாம் பார்க்கும் ஒளி ////

it is true .., நம்மளுக்கு தெரிகிற அத்தனை வண்ணங்களும் மிருகங்களுக்கு தெரியாது ..,மனிதர்களுக்கு தெரியாத வண்ணங்கள் மற்ற சில பல உயிர் களுக்கும் தெரியும் ..,மனிதர்களுக்கு தெரியாத வண்ணங்கள் நிறைய இருக்கின்றன

டிராகன் said...

/////// மத்திய அரசின் விண்வெளி துறையில் (Department of Space) செயலராக இருந்த M.G. சந்திரசேகர் என்பவர் டேவாஸ் என்ற கம்பெனியின் புரமோட்டர் என்று கூறப்படுகிறது (இப்போது ஓரளவு புரிந்திருக்குமே?).//////

ஏற்கனவே ..,இவங்க மேல ஒரு ஊழல் இருக்கு ..,liquid propulsion system center valiamala .,,trivandrum ல சி பி ஐ ஆல் விசாரிக்க பட்டிருக்குது ..,தலைமைல இருக்கானுவ தான் இந்த மாதிரி பண்ட்ரானுவா

ஜீவன்சிவம் said...

இறைவா என் செய்ய நினைத்திருக்கிறாய் என் தாய் திருநாட்டை. இந்த திருடர்களிடம் இருந்து எங்கள் மண்ணை காப்பாற்று. தாயின் கற்பை மட்டும் தான்
இவர்கள் இன்னும் பேரம் பேசாமல் இருக்கிறார்கள்

சுபத்ரா said...

Hats off to ur Hardwork Ramsamy anna.. Wonderful Post...

சுபத்ரா said...

FLY HIGH KAZHUHU..

Chitra said...

விளக்கமான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை கவுண்டரே...
தங்களின் காமடி காட்சிகளை நிறுத்திவிட்டு,இது போன்று சேவையை மக்கள் முன் நிறுத்துவது அவசியம்

உமர் | Umar said...

சிறப்பான இடுகை நண்பா. வாழ்த்துகள்.

ரசிகன் said...

லட்சம் கோடிகள்ன்னெல்லாம் செய்தி வந்த போது செய்தியா மட்டும் தெரிந்த விஷயம், உங்கள் விளக்கங்கள் படித்த பின் சுடுகின்ற உண்மையாய் உரைக்கின்றது.. Worth Reading. Keep Going.

மங்குனி அமைச்சர் said...

good one

ராஜகோபால் said...

மிகவும் அவசியமான பதிவு ., இத நம்ம ராசாவுக்கு ஒரு காப்பி அனுப்புங்க ஸ்பெக்ட்ரம்னா என்னன்னு தெரியாமலே 1.75 லட்சம் கோடி சுட்டுடாறு இத பாத்தாவது அத பத்தி தெரிஞ்சுகட்டும்

'பரிவை' சே.குமார் said...

தேவையான பதிவு.

எம் அப்துல் காதர் said...

பன்னி சார் இந்த பதிவை உங்க வலைப்பூவிலும் போடுங்க!! இன்னும் தெரியாத மக்கள்ஸ்க்கு தெரிய வரும். அப்பப்ப..இந்த மாதிரி நாட்டு நடப்புகளையும்
எழுதுங்க தல!!

ஜோதிஜி said...

ஆபிசர் இந்த அளவுக்கு திறமையை வச்சுக்கிட்டு? ஆச்சரியம் தான் போங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிக்க நன்றி நண்பர்களே...!

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. இந்தியா டு டே புக்ல வந்த கட்டுரையை படிச்ச மாதிரி இருக்கு.இதை உங்க பிளாக்ல வேற மேட்டர் போட்டு அதுல லிங்க் குடுத்திருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

பல புள்ளி விபரங்கள் வியக்க வைக்குது. இந்த கட்டுரையை ரெடி பண்ணி டைப் பண்ணவே குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஆகி இருக்கும் என நினைக்கிறேன். சல்யூட் டூ ராம்சாமி

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes