Tuesday, April 05, 2011

என்ன படிக்கலாம்....? +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டும் தொடர்...II




இதுவரை எப்படி cut off mark கணக்கிடுவது என்பது  பற்றிப்பார்த்தோம். அதன்  நீட்சியாக விண்ணப்பித்தல் மற்றும் கவுன்சிலிங் பற்றியும் பார்க்கலாம்

விண்ணப்பித்தல்:
விண்ணப்ப படிவங்கள்  இண்டெர்னெட் மற்றும் பேங்குகளில்கிடைக்கும்.  இண்டெர்னெட் வசதி உள்ளவர்கள் ஆன்லைன்மூலமாகவும் (www.annauniv.edu) விண்ணப்பிக்கலாம். கவனமாகபூர்த்தி  செய்து அக்னாலெட்ஜ்மெண்டுடன், கொடுத்துள்ள சரியானமுகவரிக்கு அனுப்புங்கள்


கலந்தாய்வு (counseling) :


உங்கள் கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில்நீங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வுக்குஅழைக்கப்படுவீர்கள். வழக்கமாக june july மாதத்தில் நடைபெறும்கலந்தாய்வில் வைத்து உங்களுக்கு விருப்பபட்ட பொறியியல்பாடத்தையும், கல்லூரியையும் தேர்ந்த்தெடுக்கலாம். கவுன்சிலிங்கில்  single window system எனப்படும் ஒற்றைச்சாளர முறை தான்பயன்படுத்தப்படுகிறது

அதற்கு முன்னதாக நாம் ஏற்கனவேசொல்லியபடி  இந்த ரேங்க் லிஸ்ட் தயார் செய்யும் பொழுதுஉங்கள் கட் ஆப் மதிப்பெண்ணும் இன்னொரு மாணவரின்மதிப்பெண்ணும் ஒரே அளவாக இருப்பின் ட்டை(tie)  ஏற்பட்டால்என்ன செய்வது என்று உங்களுக்கு  கண்டிப்பாக சந்தேகம்வந்திருக்க வேண்டும் 

இந்த சூழ்நிலையில் (when tie occurred) அவ்விரு மாணவர்களின்individual subjects marks மற்றும் பிறந்த தேதி வைத்து மூத்தவருக்குமுன்னுரிமை வழங்கப்படும்.
ஒருவேளை, எடுத்துக்காட்டாக, பத்து மாணவர்களும் ஒரேமதிப்பெண் உடையவர்களாய் இருப்பின் அவர்களுக்குரேண்டம்(random method) முறையில் ஷீட் வழங்கப்படும். அதாவது A B C D E F G H I J இவர்கள் தான் ஒரே மதிப்பெண் உடையவர்கள்எனில், ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பிய  ஷீட்டைப்பெறுவதற்கு 10% அளவு தான் உள்ளது.




இந்த ரேண்டம் முறைப்படி (random number generation method is used to break the tie ) மூலம் கவுன்சிலிங் கமிட்டி முன்பே பட்டியல் தயாரித்து அந்த பொதுவான ரேங்க் லிஸ்ட் வெளியிடுவதற்கு, ஐந்து நாட்களுக்கு முன்னதாக anna university random number results என்று வெளியிடுவார்கள். இதன்படியே உஙளுக்கான கவுன்சிலிங் அழைப்பும் வரும். இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு online help line உண்டு. இந்த ரேண்டம்  நம்பரில் யாருக்கு குறைவான எண் உள்ளதோ அவருக்கே முன்னுரிமை வழங்கி  அவருடைய விருப்ப பாடத்தை வழங்குவார்கள்.


கவுன்சிலிங் ஹாலுக்குள் உங்களுடன் எத்தனை பேர்வரவேண்டும் என்றும், எந்தெந்த கல்லூரிகளில் தற்பொழுது ஷீட்உள்ளது, என்பதான  இந்த அறிவுப்புகள் எல்லாம் கவுன்சிலிங்ஹாலுக்குள் செல்வதற்கு முன்பாகவே அறிவித்துக்கொண்டிருப்பார்கள்.  


இதையெல்லாம் நீங்கள் கவனமாககவனித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது கவுன்சிலிங்அறையில், ஷீட்டை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு 15 நிமிடங்கள்வழங்கப்படும். உங்கள் கட் ஆப் மதிப்பெண்ணின் அளவைப்பொறுத்தே உங்களுக்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவாய்ப்புண்டு.சிறந்த கல்லூரிகள் என்றால் என்ன?

இவ்விடத்தில் கல்லூரிகளை தகுதி அடிப்படையில் வகைப்படுத்தலாம்.


1    இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT)

2.   தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT)

3.   அண்ணா பல்கலைக்கழகம்

4.   நிகர்நிலைப் பல்கலைக்கழகம்(Deemed university)

5.   சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்(self finance colleges



இந்த வரிசையில்(3 ->4 ->-5 > these colleges for tamilnadu students studied thro state board syllabus) முன்னுரிமை கொடுத்து உங்களுக்குத் தேவையான கல்லூரியை உங்கள் மதிப்பெண்களின் அடிபடையில் தேர்ந்தெடுங்கள். பொறியியல் பாடங்களில் எந்தப் பாட்த்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்களின் விருப்பத்தைப் பொறுத்தது.


இவ்விட்த்தில் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். பெற்றோர்களே.. உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்..உங்களுடைய பணி என்பது அனைத்து பொறியியல் படிப்புகளின்  ஸ்கோப்(scope)  மட்டும் சொல்வதே.. இங்கு நாங்கள் கண்கூடாக காண்கிறோம்.. தங்களுக்கு பிடிக்காத பாடத்தை எடுத்து விட்டு அவர்கள் படும் கஷ்டத்தை.. முதலில் மன அளவில் பாதிக்கப் பட்டு விடுகிறார்கள்



சரி,இது வரை சொன்னதெல்லாம் அண்ணாபல்கலைக்கழகத்திற்கும் அதன் கீழ் வரும் சுய நிதிக்கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும்அதாவதுஒவ்வொரு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியாகஅதற்கென்ற நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும்.


உதாரணமாக
SRM --> SRMEE (
http://entrance.icbse.com/srmeee/application-form/)
VIT --> VITEE 
(http://entrance-exam.net/viteee-2009/)
இது வரை பார்த்தது எல்லாமே தமிழ் நாட்டில் உள்ளகல்லூரிகளுக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுகிடேயேயான போட்டி மட்டுமே.. இது தவிர்த்து அகில இந்திய அளவில் (central govt funded colleges) உள்ள கல்லூரிகளுக்கு வேறு வகையான நுழைவுத்தேர்வுகள் எழுத வேண்டும்.
 
1.   இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) --> JEE

2.   தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) --> AIEEE 

இந்த கோச்சிங் நடத்தும் நிறுவன்ங்கள் JEE எனப்படும் இந்த Joint Entrance Examination நுழைவுத் தேர்விற்கு பேகேஜ்கள் தனி தனியாக இருக்கின்றன. LKG வகுப்பில் இருந்தே இருப்பதாக சென்றவர்கள் கூறுகிறார்கள்.  இந்த கோச்சிங்  நிறுவனத்தில் சேர்வதர்கே பிள்ளைகள் ஒரு நுழைவுத் தேர்வு எழுத வெண்டும்.
கட்டணங்களும் மிக அதிகம். உதாரணமாக +1 மற்றும்  +2  இரண்டு வருடப் படிப்பிற்கு நான்கு லட்சம் என்றால் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த சுட்டியில் இதைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

இது வரை..எப்பொழுது/எப்படி விண்ணப்பிப்பது? எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது? என்பது பற்றி பார்த்தாயிற்று. இனி  ஒவ்வொரு கல்லூரிகளின் நியாயமான கட்டனங்ககள் பற்றியும் படிக்கும் பொழுது கவனம் கொள்ள வேண்டியவை(தேர்வுகள், ப்ராஜெக்ட்) பற்றியும் விரிவாக பார்க்கலாம்.


கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக
 மகேஷ்வரி

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

7 comments:

இராக்கெட் இராஜா said...

எளிய நடையில் மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி

செல்வா said...

தகவல்கள் எல்லாமே நல்லா இருக்கு அக்கா . அதே மாதிரி மாணவர்களுக்கு விருப்பப்பட்ட பாடம் படிச்சாதான் நல்லது :-)

இராக்கெட் இராஜா said...

நமது கிராமப்புற மாணவர்களிடையே இந்திய தொழில் நுட்பகழகம் மற்றும் தேசிய தொழில் நுட்ப கழகம் பற்றிய விழிப்புணர்வு குறைவு என்று நினைக்கிறேன். இதை நீங்கள் நன்றாக புரிந்து இருப்பீர்கள். எனவே அவை தொடர்பான பதிவுகளை தெளிவாக எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அவை சம்மந்தமான தேர்வுகளுக்கு எந்த மாதிரி தயாராக வேண்டும் அங்கு படித்து முடிப்பதினால் கிடைக்ககூடிய பயன்களையும் வெளியிடவும்.

Chitra said...

very useful one.

Asiya Omar said...

மிகத் தேவையான பகிர்வு,மிக்க நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் மகேஸ்வரி - வலைச்சரம் மூலமாக வந்தேன் - பகுதி இரண்டும் அருமை - பயனுள்ள பதிவு - பகிர்வினிற்கு நண்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Asiya Omar said...


வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன்.நன்றி பகிர்வுக்கு.
http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_18.html

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes