
வாழ்க்கையின் ஒட்டம் பொருளீட்டும் திசையில் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அவசரமான வாழ்க்கை முறையில் நாம் உடல் நலனையும் பேண வேண்டியிருக்கிறது என்ற உண்மையினை மறந்து விட்டு...உடலில் வரும் சிறு சிறு வலிகளைக் கூட நாம் அசட்டையாக கவனிக்காமல் விட்டு விடுகிறோம். சாதரணமாய் ஒன்றும் நிகழாது என்ற எண்ணம் எல்லோரிடமு மேலொங்கி இருக்கும்...ஆனால் மிகப்பெரிய விடயங்களின் ஆரம்பம் கவனக் குறைவின்று நாம் கடந்து செல்லும் ஆரம்ப நிலைகள்தான் என்பதனை இக்கட்டுரை வாயிலாக உங்களிடம் பகிர்கிறோம்.
பொதுவாக நமக்கு தலைவலி போன்ற வலிகள் வரும் ஒரு மாத்திரை போடுவோம்...வலி குறைந்ததும் அடுத்து வலி வரும் வரை இதை மறந்துவிடுவோம். ஆனால் எந்த வலி/நோயாக இருந்தாலும் சிறிய அளவில் இருக்கும் போதே கவனிக்க வேண்டும். நோய் முற்றியபின் பெரிய பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்....