
சம காலச் சூழல்களை பற்றிய எமது பார்வையை எமது குழும தோழமைகள் (மகளிர்), தங்களின் பார்வையில் அலசும் புதியதொரு பகுதியை எமது மரியாதைக்குரிய வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆழமான, தேவையான விடயங்களை இயல்பாய் பகிரப் போகும்.....இந்த உரையாடலுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்...!
மகேஷ்: வாங்க கௌசல்யா எப்டி இருக்கீங்க? முகத்தை பார்த்தா ஏதோ கவலை ரேகை ஓடுற மாதிரி இருக்கே! ஏதும் பிரச்சனையா?
கௌசல்யா: ஆமா மகேஷ்... இந்த ஸ்கூல்ல படிக்குற பிள்ளைங்கள நெனச்சுத்தான்.., நெல்லையில் என் பையன் கூட படிக்கும் பதினைந்து வயதே பையன் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்து விட்டான்பா.
மஹா: அச்சோ! கவலையான விசயம் தான்...சாலை விபத்து எப்படி நடந்தது...? அதைப் பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..
கௌசல்யா: அந்த பையன் பைக் ஓட்டிட்டு போனபோது விபத்து...