Monday, October 17, 2011

இந்தியர்களுக்கான 12 இலக்க அடையாளம்...! ஆதார் எண் பற்றிய ஒரு பார்வை!


ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்.அது இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும். 


இந்த எண் உங்களுடைய முகவரிக்கான அடையாளமாக இந்தியா முழுவதும் செல்லுபடியாகக்கூடியது.ஆதார் பெயர்க்காரணம்: 


அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால் 


உருவானதுதான் இந்த ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் என்று அர்த்தம்.   ஆதாரில் அடங்கியுள்ளவை:

இதில்  16kb மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் உங்களது ரத்த வகை, விழி அமைப்பு, இடது கை மற்றும் வலது  கை விரல்களின் ரேகை,  போன்ற உங்களின் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து
வைக்கப்படும்.தனித்துவம்:

இந்த 12 இலக்க எண் உங்களுக்கே உரித்தானது. ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது உங்களுடையதே வேறு எவருக்கும் இந்த எண் வழங்கபட மாட்டா.

இது ஒரு ரேண்டம் எண், இந்த எண் நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தரப்படும் .எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்:

இந்த ஆதாரை பயன்படுத்தி வங்கியில் கணக்கு துவங்கலாம்.புதிய தொலைப்பேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளைப் பெறுவதற்காகவும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். 


எப்படி வாங்குவது:

கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் முகாம் உள்ளது. எனவே தத்தம் மாவட்ட முகாம்களுக்கு ஆதார் அட்டை தேவைப்படுவோர் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.புகைப்பட அடையாள சான்று ( பான் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)

2.முகவரிக்கான சான்று (மின்  கட்டண ரசீது ,தொலைபேசி ரசீது, குடும்ப
அட்டை,வீட்டு வரி ரசீது போன்றவை )

 

அங்கு சென்றவுடன் உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதியப்படும். பின்பு உங்களின் விழி அமைப்பு, கைரேகை,புகைப்படம் போன்றவை பதியப்படும் அவ்வளவுதான். உங்களுக்கான தற்காலிக எண் வழங்கப்படும் (ஒரு அத்தாட்சி சான்று).

நமது வங்கி கணக்கு தொடர்பான அடிப்படை விடயங்களும் தரவேண்டும் (அவரவர் விருப்பத்தை பொருத்து).தற்காலிக எண் :

அதாவது நீங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 60 -90 நாட்களுக்குள் ஆதார் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

இல்லையெனில் இந்த தற்காலிக எண்ணை வைத்து உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த எண் 28 இலக்கங்களை கொண்டது . முதல் 14 இலக்கம் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் நீங்கள் பதிந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பதாகும்.      

வயது வரம்பு உண்டா:

இந்த திட்டதிற்கு வயது வரம்பே கிடயாது . பிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பெறலாம் .

இன்னாப்பா காமெடி பண்ற ? பொறந்த குழந்தைக்கு எதுயா டிரைவிங் லைசென்ஸ் ?

பொறுங்கள்... குடும்பத்தில் ஒருவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால் போதும். அனைவரும் அதை வைத்து பதியலாம். (கைரேகை,விழியமைப்பு,புகைப்படம் போன்றவை போலிகளை அண்டவிடாது என்பதால் தான் இந்த வசதி)

குழந்தைகளுக்கு கைரேகை வளர சில ஆண்டுகள் ஆகுமே? அதற்க்குதான் விழித்திரையும் பதியப்படுகிறது.செலவு :

இந்த திட்டதிற்கு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே இது ஒரு இலவச திட்டம்.ஆதார் சந்தேகங்களுக்கு :

அழையுங்கள் =             1800-180-1947      
ஃபேக்ஸ் = 080-2353 1947
கடிதங்களுக்கு = தபால் பெட்டி எண் 1947, GPO பெங்களூர்-560001
மின்னஞ்சல் = help@uidai.gov.inநிறுவனங்கள்:

ஆதார் எண் வழங்கும் பணியில் இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான நத்தன்நீலேகனி தலைமையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,பாங்க் ஆஃப் பரோடா,இந்தியன் பாங்க்,இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,டீம் லைஃப் கேர் இண்டியா பிரைவேட் லிமிடட்,ஸ்ரீஷிகாஜ் போன்ற நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கார்வி என்ற நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. நம்முடைய விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலதில் பெறப்படுகின்றன.ஆதார் பற்றிய பொதுவான சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:

*ஆதார் என்பது குடும்ப அட்டையை போல்,வாக்காளர் அடையாள அட்டையை போல் மற்றுமொரு அட்டையா? .

கிடையவே கிடையாது ஆதார் என்பது 12 இலக்க எண்.மற்றவற்றில் எளிதாக போலி என்று ஒன்று உருவாக்கலாம் இதில் முடியாது.

* குடும்பத்திற்கு ஒன்று இருந்தால் போதுமா? இது ஒவ்வொரு தனி     மனிதருக்கும் வாங்க வேண்டும்.

* இது இந்திய குடிமகன்/மகள் என்பதற்கா சான்றா? கிடையவே கிடையாது இது உங்களுக்கான அடையாளம். பிறநாட்டவரும் பெறலாம்(நிபந்தனைகளுக்கு உட்பட்டு )

* கண்டிப்பாக வாங்கவேண்டுமா?. இல்லை, விருப்பப்படுபவர்களுக்கு மட்டும்.

* ஒருவர் பல ஆதார் வாங்கலாமா? ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே .

* எனக்கு ஃபேன்சி நம்பர் வேணும். இது செல்போன் இணைப்பு எண் கிடயாது.

* பாஸ்போர்ட்,குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அவற்றை வாங்க வேண்டுமானால் பயன்படுத்தலாம். மாற்றாக பயன்படுத்த இயலாது.
       
       
சர்ச்சைகள்:

1. இந்த திட்டதிற்கான செலவு 3ஆயிரம் கோடி என்றார்கள் ! ஆனால் உண்மை என்னவென்றால் இது வெறும் 10 கோடி பேருக்கு மட்டுமே!  இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த 15 ஆயிரம் கோடி தேவைப்படும் 2017-ல் தான் முடியும்( ஒரு வேல அடுத்த 2g யோ?)

2. நம்முடைய அனைத்து தகவல்களும் அரசாங்க டேட்டா பேஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நம்மை பாதுகாப்பு என்ற பேரில் கண்காணிக்க வாய்ப்பு உண்டு!

3. இந்த திட்டத்தின் மூலம் போலிகளை முழுமையாக ஒழிக்க முடியாது என மான்டெக் சிங் அலுவாலியா கருத்து தெரிவிதுள்ளாரே.

4. இதற்கான மென்பொருள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் நம்முடைய தகவல்களை அவர்கள் எளிதில் பயன்படுத்தலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.          
ஆதார் பற்றிய மேலும் சில விவரங்களுக்கு http://naalroad.blogspot.com/
 
 

கழுகிற்காக
  சூர்யா

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 23 comments:

ஜீவன்பென்னி said...

பயனுள்ள தகவல்களுடன் அருமையான கட்ட்ரை சூர்யா வாழ்த்துக்கள்.

Kousalya said...

நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் சூர்யா.

கழுகுக்கு நன்றிகள்.

Prabu Krishna said...

மிக அருமை சூர்யா.

Madhavan Srinivasagopalan said...

//அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால் //

ஆதாரம், அர்த்தம், காரணம், பாக்கியம், சீக்ரம், சுபம்,

இவைஎல்லாம சமஸ்க்ரித்த வார்த்தைகள். இந்திய மொழி பெரும்பானவற்றில் சமஸ்க்ரித்த வார்த்தை பரவி இருக்கிறது. அந்தந்த வார்த்தைகளுக்கு உச்சரிப்பு கொஞ்சம் மாறி இருக்கலாம், பொருள் ஒன்றுதான்.

'ஆதார், அர்த், காரன், பாக்ய, ஷீக்ற, சுப்' இப்படி ஹிந்தியில் சொல்லுவார்கள். அதனால் இதற்து ஆதார் எனப் பெயர் வந்தது. இந்த அடையாள அட்டை ஒருவருக்கு 'ஆதாரமாகும்'

சைதை அஜீஸ் said...

மிகவும் எளிமையான வார்த்தைகளைக் கொண்ட அத்தியாவசியமான ஒரு கட்டுரை. அதிலும் அந்த CONTACT DETAILS மிகவும் உபயோகமான தகவல்கள்.
கலக்கிட்டீங்க சூர்யா

Abdul Kareem said...

Thanks for your kind information Mr.Surya. When it Starts in our Tamil Nadu. Our Political leaders allow this to implement in our Tamil Nadu.

Anonymous said...

மிக‌ அருமை.

இந்த‌ ஆதார் திட்ட‌ம் என‌க்கு தெரிந்து ம‌லேசியாவில் உள்ள‌து. அவ‌ங்க‌ இதை ஸார்ட்டா ஐசினு சொல்லுவாங்க‌.

இந்த‌ ஆதார் கார்டுல‌ ந‌ம்ப‌ செல்போன் சிம் கார்டு மாத்ரியே ஒரு சிப் பொருத்தி இருப்பாங்க‌. பார்க்க‌ கிரெடிட் கார்டு மாதிரி இருக்கும். அந்த‌ ஊர் ச‌ட்ட‌ப்ப‌டி இந்த‌ ஐசி 12 வ‌ய‌தில் ஒருமுறையும் 21 வ‌ய‌தில் ஒரு முறையும் க‌ட்டாய‌ம் புதுப்பிக்க‌ வேண்டும்.

இதை க‌ணினியில் போட்டு த‌ட்டுனா அந்த‌ ந‌ப‌ரோட‌ வ‌ர‌லாரே வ‌ந்திடும். எங்க‌ போனாலும் இந்த‌ ஐசி இருந்தா தான் அர‌சு அலுவ‌ல‌க‌ வேலை ந‌ட‌க்கும். நாம‌ பேங்க் அக்க‌வுண் ஓப்ப‌ன் ப‌ண்ற‌து லோன் எடுக்க‌ற‌து, கார் வாங்க‌ற‌து, கார் லைசென்ஸ், வீடு வாங்குன‌து, ந‌ம் சொத்து விவ‌ர‌ம், ஏன் ந‌ம்ப‌ எதாவ‌து த‌ப்பு செஞ்சு போலிஸ் கேஸாகி இருக்காங்க‌ற‌ விவ‌ர‌ம் முதற்கொண்டு அனைத்தும் இருக்கும். எங்க‌ போனாலும் இதை கையிலேயே வைத்திருக்க‌ வேண்டும் என‌ப‌து அவ‌ர்க‌ள் ச‌ட்ட‌ம். எதாச்சும் கார் ஆக்சிட‌ண்ட்டோ விப‌த்தோ ஆனால் இந்த‌ கார்டை வ‌ச்சு அவ‌ர்க‌ளுக்கு உதவ‌ எளிதாக‌ இருக்கும்.

துபாயில‌யும் இந்த‌ சிஸ்ட‌ம் கொண்டு வ‌ர‌ப் போற‌தா கேள்விப‌ட்டு இருக்கிறேன்.

Anonymous said...

ந‌ம் நாட்டில் இது விருப்ப‌ம் இருந்தால் வாங்க‌லாம். ஆனால் அங்கு க‌ட்டாய‌ம். இது தான் அந்த‌ நாட்டு குடிம‌க்க‌ளுக்கான‌ அடையாள‌ம்.

Madhavan Srinivasagopalan said...

சென்ற வெள்ளிக் கிழமைதான் நான் எனது குடும்ப உறுப்பினருடன் இதற்காக பதிய வைத்தேன்.
இது பற்றி விரிவாக பதிவிடலாமென நினைத்திருந்தேன். நீங்கள் இங்கு பகிர்ந்த தகவலுக்கு நன்றி..

மேலும் சில தகவல்கள்.
// ரத்த வகை //
ரத்த வகை கேட்கப் படவில்லை


// நம்முடைய அனைத்து தகவல்களும் அரசாங்க டேட்டா பேஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நம்மை பாதுகாப்பு என்ற பேரில் கண்காணிக்க வாய்ப்பு உண்டு! //

நல்லதுதான.. மடியில கனமில்லாத நல்லவனுக்கு பயமெதற்கு..

// இந்த எண் உங்களின் சாதி,மதம்,இருப்பிடம் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். //
இடமென்பது நீங்கள் முதன் முதலில் பதிவு செய்யுமிடத்தை பொறுத்து இருக்கலாம்.
ஏனென்றால், நாள் வேறு இடத்திற்கு மாறினாலும், எண் மாறாது..

//குழந்தைகளுக்கு கைரேகை வளர சில ஆண்டுகள் ஆகுமே? அதற்க்குதான் விழித்திரையும் பதியப்படுகிறது.//
ஐந்து வயது நிரம்பாத குழந்தைகளுக்கு முகமோடு படம் மட்டுமே எடுத்தனர். கை-ரேகை, விழித்திரை பின்னர் எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.


Thanks for the post.

அம்பலத்தார் said...

ஏற்கெனவே பலநாடுகளில் இதுபோன்ற விடயங்கள் செயல்முறையில் உள்ளன. இந்தியாவிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆதார் பற்றி விரிவான விவரமான பதிவிட்டது வரவேற்கப்படவேண்டியது பதிவிற்கு நன்றிகள் நண்பரே.

நிகழ்காலத்தில்... said...

ஆதார் பற்றி கேள்விப்பட்டு இருக்கேன்., ஆனால் முழுவிபரம் நண்பர் சூர்யாவின் மூலமேஅறிந்தேன்.

அனைவருக்கும் பயன்படும் ஒரு ஆக்கபூர்வமான கட்டுரை தந்தமைக்காக சூர்யாவை பாராட்டுகிறேன்:))

நிகழ்காலத்தில் சிவா

..செந்தில் said...

இதையும் தாண்டி.. பயோ-சிப் (RFID) என்ற நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோம்... இந்த ஆதார் அட்டை தொலைந்தாலும், அது உடலின் உள்ளே பொருத்தப்படுவதால் தொலைய வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அனேக நாடுகள் இதை ஆதரிக்கின்றன, அதில் இந்தியாவும் ஒன்று. விரைவில் நம்மிலும் அந்த முத்திரைப் பாதிக்கப்படலாம்...!!!

Madhavan Srinivasagopalan said...

//இதையும் தாண்டி.. பயோ-சிப் (RFID) என்ற நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். //

What will be the side-effect..?

NAAI-NAKKS said...

செமை...... உபயோகமான தகவல்...

நன்றி !!!!

இருதயம் said...

பொதுவாக வளர்ந்த நாடுகளில் இது போன்ற அடையாள அட்டைகள் உள்ளன. eg . அமெரிக்காவில் Sociel security Number . வரவேற்க பட வேண்டிய மாறுதல் தான்

நல்ல பதிவு

Surya Prakash said...

@Abdul Kareem ...... It Already in Progress Friend

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

தெரியாத புதிய தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.. இந்த மாதிரி.. பொதுவான அடையாள அட்டை... ரொம்ப நல்ல விஷயம்.

பெயர் காரணத்துடன் தொடக்கி.. எங்கே எப்படி பெறுவது.. வரை... அழகாய் விளக்கியமைக்கு நன்றி!

அதிலும் இது ஒரு இலவச சேவை என்ற கூடுதல் தகவல்.. பகிர்வுக்கு நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.

விதை... said...

omfg lol mh http://x21.megaphotoshare.com/bn.php?s5a1r5t-Picture88.JPG

Cpede News said...

தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

Anonymous said...

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு பதிவு. மிக்க நன்றி சூர்யா!

suryajeeva said...

புரியும்படி சொல்லியிருப்பது அருமை

கோவி.கண்ணன் said...

உங்க பெயர் ராசி சரி இல்லை பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்பது போல் அடையாள எண்ணை காலத்திற்கும் மாற்ற முடியாதே, 'சார் உங்க சிட்டிசன் சிப் நம்பர் தான் உங்க எல்லா கஷ்டத்திற்கும் காரணம், அந்த எண்களை எழுதும் போது இடது கையால் எழுதுங்க கஷ்டம் தூர ஓடிவிடும்'

:)

Karthick Chidambaram said...

நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் சூர்யா.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes