ரெங்கு வேட்பாளர் கொடுத்த நோட்டீசை பார்த்து படித்து கொண்டு இருந்தார்...குப்பையை அகற்றுவோம்,கொசுக்களை ஒழிப்போம்..என உறுதிமொழிகளை படிக்க ரெங்குவை ஒரு கொசு கடிக்க .கனகு சிரிக்க
ரெங்கு : ஏன்ய்யா சிரிக்குற..??
கனகு : இல்லை... எல்லாம் கொசுவை ஒழிக்கிறேன்.. ஒழிக்கிறேன் சொல்றாங்க... ஆனா கொசு தான் நம்மளை ஒழிக்கும் போல... இதுல கரண்ட் வேற இருக்குறதில்லை. இவிங்க வேற காமெடி பண்ணிட்டு திரியுறாங்க...
ரெங்கு : யோவ்... நீ என்னய்யா சொல்ல வர்ற...??
கனகு : ரெங்கு... உன்னை ஏன் இப்போ கொசு கடிச்சது சொல்லு..??? அங்க திரும்பி பாரு.
ரெங்கு : அட பாவிங்களா... குப்பையை எடுப்பேன் சொல்லி ஓட்டு கேக்குறாங்க... ஆனா இந்த பக்கம் இவ்வளவு குப்பை இருக்கே...?!
கனகு : அட ரெங்கு... குப்பையை எடுப்பேன் சொல்லி ஓட்டு கேக்குற ஆளுங்கட்சிக்காராங்க குப்பைய எடுத்துப்போட்டு ஓட்டு கேட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.நமக்கும் அவங்க மேல நம்பிக்கை வரும்.இதுல கொசுவை வேற ஒழிப்பாங்களாம்.. ஒழுங்கா குப்பைய எடுத்தாவே பாதி கொசு அழிஞ்சு போய்டும்..!!
ரெங்கு : என்னது குப்பைய எடுத்திட்டே ஓட்டு கேக்கணுமா..?? அப்படியெல்லாம் நடந்தா இந்த நாடு எப்பவோ சிங்கப்பூரா ஆகியிருக்கும்.. போய்யா போ... நீ முதல்ல குப்பை போடாம போ...
கனகு : சரி.. சரி.. டென்ஷன் ஆகாம டீ சொல்லு..
ரெங்கு : டீய்யா முக்கியம் அத விடுய்யா... அவிங்க இனி பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை தனியா நிக்க போறாங்களாம்..
கனகு : அட அது யாருய்யா..?? யாரா இருந்தாலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு நிக்க சொல்லு.கால் வலிக்க போகுது...
ரெங்கு : அவர் தான் அரசியல் சூப்பர் ஸ்டார் "கோல்டுமில்க்"
கனகு : ஓஓஓஓ...அவரா...?? பாவம்ய்யா அவங்க கட்சிக்காரங்க... ஒரே அழுகை...
ரெங்கு : என்னய்யா சொல்ற..?! அழுவுறாங்களா..?? இவங்களை பார்த்து மக்கள்தானய்யா அழுவணும்.
கனகு : ஆமாம் ரெங்கு... வேட்பாளர் செலவுக்கு கட்சி பணமே தரலையாம்...ஜெயிக்க போறதும் இல்லை. நம்ம கை காசும் போகுதேன்னு ஒரே அழுவாச்சி..
ரெங்கு : பாவம் கையாவது இருக்கேன்னு சந்தோஷப்படவேண்டியதுதான்..
கனகு : ஹா.. ஹா.. ஹா..என்னய்யா டபுள் மீனிங்ல பேசுறே..!!
ரெங்கு : சீக்கிரம் விஜயகாந்த் நடிக்கப் போய்டுவார் கனகு.
கனகு : என்னய்யா... இப்படி குண்ட தூக்கி போடுற..?! நான் வேணா அவருக்கே ஓட்டு போடுறேன்ய்யா..
ரெங்கு : ஆமா ஆந்திராவில் சிரஞ்சீவி காங்கிரஸ்ல சேர்ந்துட்டதாலே நடிக்கப் போறதா சொல்லிட்டு இருக்கார்..இங்க நம்ம கேப்டனையும் காங்கிரஸ்ல சேர அழைப்பேன் நாசூக்கா சொல்லி இருக்கார் நம்ம ஈ.வி.கே.எஸ்..
கனகு : என்னது காங்கிரஸா.. அதுக்கு அவர் நடிக்கவே போயிடலாம்.. யாராவது நம்ம கேப்டனை காப்பாத்துங்கப்பா...
ரெங்கு : அவர காப்பாத்தினா நம்மள யார் காப்பாத்துவா..?? ரெண்டு கட்சிகளும் தமிழகத்தை கொள்ளை அடிச்சாங்களாம்.... அதனால அவருக்கும் ஒரு வாய்ப்பு தரணுமாம்...!!
கனகு : எனக்கும் கொள்ளையடிக்க வாய்ப்பு தரனும் கேகுறாரா..?? ரொம்ப வெளிப்படையா தான் பேசுறார் நம்ம கேப்டன்
ரெங்கு : யோவ் அவர் எப்போய்யா அவர் அப்படி சொன்னார்.. ஆனா ஒன்னு மட்டும் புரியல கொள்ளை அடிச்சாங்க... கொள்ளை அடிச்சாங்கன்னு சொல்றார். ஆனா அவங்க கூட கூட்டணி வைச்சார்... அது ஏன் கனகு..??
கனகு : கொள்ளை அடிச்துலே பங்கு கொடுதிருப்பாங்களோ..என்னவோ.. அதான் அப்போ மறந்துட்டார்..இப்போ தெளிஞ்சு இருக்கும் நான் கூட்டணிய சொன்னேன் சரி.. சரி.. ரெங்கு அவர்கிட்ட போய் சொல்லு. தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் இல்லைன்னு.. அப்படியே டீயும் சொல்லிடு..
ரெங்கு : என்னது டீயா..?! வேட்பாளர் ஒருத்தரு எல்லாருக்கும் சரக்கு கொடுத்திட்டு இருக்கார். நீ என்னனா அசிங்கமா டீ கேக்குறே..?!
கனகு : இது எங்கய்யா நடக்குது..?!
ரெங்கு : புதுகும்மிடிப்பூண்டிலதான். அங்க போட்டியிடுற வேட்பாளர்கள் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு சரக்கு சப்ளை பண்றாங்களாம்...
கனகு : யோவ் ரெங்கு.. நீ எல்லாம் வேஸ்டுய்யா... ஒரு டீ சொல்ல மாட்ற.. பணம் வாங்குறது எல்லாம் பழைய ஸ்டைல். இப்போ சரக்கு வாங்குறதுதான் புது ஸ்டைல் போல..
ரெங்கு : பார்த்துய்யா... பால் பாக்கெட் போடுற மாதிரி போடுறாங்களாம்.... நீ வேற குழந்தை பையன் எடுத்து குடிச்சுறப்போற.. தாங்காது...
கனகு : யாரு நான் குழந்தையா..?? நான் உடனே புதுகும்மிடிப்பூண்டி போறேன். வாழ்க ஜனநாயகம். வளர்க இந்தியா.
ரெங்கு : யோவ் கனகு.. டீய குடிச்சிட்டு போய்யா.
5 comments:
கலக்கல்
ARUMAI.
poor people always suffer.human right voilasion by responceble officer are intolerable.every where corruption.one officer ruined a poor lorry driver for bribe
நாட்டுநடப்பை சாதாரண பாமரனும் புரிந்துகொள்கிறமாதிரி எழுதிவருகிறீர்கள் வாழ்த்துக்கள்
FANTASTIC WORDS.
Post a Comment