அன்பர்களே !
நீங்கள் இந்த கட்டுரைக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி ....நம்மால் விபத்து இல்லா உலகம் படைக்க எது எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதை மீண்டும் செய்வதில் சொல்லுவதில் தவறு இல்லை ....
இப்போது நடக்கும் விபத்துகளை எதிர்காலத்தில் அதாவது அடுத்த தலைமுறையில் இல்லாமல் பண்ணலாம் ....அது எப்படி?
பொதுவா நாம் நமது சந்ததியினரிடம் விபத்து பற்றி சொல்லித்தருவதில்லை ...அதிக பட்சம் நாம் நமது பசங்களிடம் அவர்களுடைய SAFETY-ய தான் சொல்லுவோம் ..."தம்பி பார்த்து போ"
"ஜாக்கிரதையா போ" ...இதைத்தான் சொல்லுவோம் ....
அதிகவேகம்,கவன குறைபாடு, விதிமுறை மீறல், ஓவர்டேக், ஓய்வின்றி ஓட்டுதல், திமிர்த்தனத்தால் ஏற்படும் விபத்துகள் மற்றும் அடுத்தவர்களால் ஏற்படும் விபத்துக்கள்....
இதை எல்லாம் அவர்களுக்கு நாம் சொல்லித்தருவதில்லை ....
நாம் ஒவ்வொருவரும் நமது சந்ததியினருக்கு அதாவது அவர்கள் சற்று விவரம் தெரிந்தவர்களாக மாறும்போது இதை பத்தி நாம் விளக்கமாக கூறி ..அவர்களை பண் படுத்த வேண்டும்.
சாதாரணமாக நாம் நம் குழந்தைகளை வெளியில் அழைத்துக்கொண்டு செல்லும்போது மற்றவர்கள் இரு சக்கர வாகனத்தையோ அல்லது மூன்று,நான்கு சக்கர வாகனத்தையோ மிக மோசமாக ஓட்டி வர நேர்தால் அதை குறிப்பிட்டு எப்படி தவறுதலாக வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதை எடுத்து கூறுங்கள்...
எப்படி எப்படி வாகனம் ஓட்ட கூடாது என்பதை சந்தர்ப்பம் வாய்க்கும்போது நேரடியாக கூற தயங்காதீர்கள் ....இதெல்லாம் இந்த வயதில் அவர்கள் மனதில் ஆழமாக பதியும். விதிமுறைகளை மதித்தல் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதோடு நாம் வாகனத்தை இயக்குபவர்களாக இருந்தால் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து சரியாக வாகனத்தை இயக்கிக் காட்ட வேண்டும்.
நீங்க சொல்லித்தரும் ஒவ்வொரு விபத்து மற்றும் முன்னெச்சரிக்கை பற்றிய விஷயமும் உங்க குழந்தைகள் பள்ளியில் தன் நண்பர்களிடம் பேசவும் விவாதிக்கவும்.வாய்ப்புகள் உண்டு . இந்த விஷயங்கள் மற்ற குழந்தைகளிடம் மிக எளிதாக ....சென்றடையும் ....
இது மட்டும் வரும் தலை முறையினரிடம் பதிந்து விட்டால் நிச்சயம் விபத்தின் எண்ணிக்கை வரும் காலங்களில் குறையும் ...
இங்கு தேவை நம்மிடம் உளவியல் ரீதியான மாற்றங்கள் மட்டுமே ...
ஆனால் அன்பர்களே ...ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் ...OVERDOSE---அந்த குழந்தைகளின் மனதை ரொம்ப பாதித்து விடும் ...இதை கருத்தில் கொண்டு விபத்தின் தாக்கம் அவர்களுக்கு புரியும் படி,,புரியும் வயதில் சொல்லித்தாருங்கள் .....
விபத்துகள் எண்ணிக்கை நம்மால் உயராமல் பார்த்துக்கொள்வதில் உறுதியாய் இருப்போம்.
டிரைவிங் டிப்ஸ் :- இது சில பேருக்கு தெரிந்திருக்கும்....தெரியாதவர் களுக்காக அன்பர்களே... நாம் கார்-ல் செல்லும்போது மழை,,,,கடும் பனி காலத்தில் கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு செல்வோம் ...அப்படி செல்லும்போது காரின் உள்பக்கம் முன் கண்ணாடி பனியினால் பூத்திருக்கும் .....அதை நாம் துணி வைத்து துடைத்துக்கொண்டே செல்வோம் ...மிகவும் சிரமத்துக்கு உரிய செயல் இது.....
இவ்வாறு செல்ல நேரிட்டால்...தாங்கள் காரில் A/C வசதி இருந்தால் A/C -யை ON செய்துவிட்டு (குறைந்த CHILLNESS-ல் ) சென்றால் கண்ணாடியின் உள்பக்கம் பனி பூக்காது.....
7 comments:
பயனுள்ள பதிவு.. இலையே சமூகத்தால் புதிய, விபத்திலா சமுதாயம் படைக்க முடியும்.
Thanks for the post
பெரும்பாலும் விபத்துகள் நொடிபொழுதில் ஏற்படும் கவனக்குறைவுகளால் ஏற்படுகின்றன , விபத்து நடக்க போகிறது என்பதை ஒருநொடி முன்பே நம்மால் அறிய இயலுவதால் அடுத்து எவ்வாறு அதை தவிர்க்கலாம் என நாம் சிந்தித்தாலே பெரும்பாலும் தப்பித்துவிடலாம் அல்லது மற்றவருக்கு எந்த ஆபத்துகளையும் விளைவிக்காமல் இருக்கலாம் .விபத்துகளை சந்தித்து அடிபட்டவர்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன் , ஆல் வி ஆர் வான்ட் இஸ் ப்ரெசென்ஸ் ஆப் மைன்ட்
அன்பின் நக்கீரன் - நல்லதொரு கட்டுரை. பயனுள்ள தகவல்கள். மறுமொழியில் சூர்யபிரகாஷ் கூறிய படி நம்க்கு அந்த க்ஷணத்தில் முடிவெடுக்கும் திறன் வேண்டும். இருப்பின் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
பயனுள்ள பகிர்வு...
:-)
பயனுள்ள பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
பயனுள்ள பதிவு....
இந்த வகையில் எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் அனைவருமே எனக்கு சாலை விதிகளை பற்றி வலியுறுத்தி அது ஒரு சுபாவமாகவே மாற்றி விட்டார்கள்.
"அன்பு நண்பரே உங்கள் விழிப்புணர்வு பதிவை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி
Post a Comment