Wednesday, August 04, 2010

ஏறும் விலை வாசி மக்களின் வாழ்க்கை கேள்விகுறி?



எப்போதும் நம்மை உலுக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது இந்த விலைவாசி பிரச்சினை...ஏறிக் கொண்டே இருக்கும் விலைவாசிகள் எப்போது மீண்டும் இறங்கும் என்ற கேள்வியே அபத்தமானதாகவே தோன்றுகிறது. ஏறிய விலைவாசிகளைப் போலவே வாங்கும் ஊதியம் அதே விகிதத்தில் ஏறியிருக்கிறதா என்றால் இல்லை....
வரும் காலங்களில் மூட்டைகளின் பணம் கொண்டு போய்த்தான் ஒரு டீ குடித்து விட்டு வரவேண்டும் என்பது போன்ற நிலைமை இருக்கிறது. நமது ஆதங்கத்தை நண்பர்LK யிடம் கொடுத்தோம். சென்னையில் ஒரு பிரபல கால் சென்டரில் பணிபுரியும் நண்பர் LK வை தெரியாதவர்கள் இருக்க முடியாது....எதார்த்த வாழ்க்கையின் பக்கங்களோடு தோழருக்கு மிகவும் தோழமை உண்டு...அதுவும் சென்னையின் விலைவாசி மற்றும் வீட்டு வாடகை நிலவரங்கள் பற்றி தனிப் புத்தகம் எழுதும் அளவிற்கு ஒரு அனுபவம் உள்ளவர்....
இதோ விலை வாசி பற்றிய அவரின் கண்ணோட்டம் உங்களுக்காக...



இன்னிக்கு நாட்ல இருக்கற விலைவாசி எல்லாருக்கும் தெரியும்.. யாரு கவலை படவேண்டுமோ அவங்க இதை பத்தி யோசிக்கறதாவே தெரியல.. ...

யாரு யோசிக்கணும். முதலில், நாட்டை ஆட்சி செய்கின்றவர்கள். அவங்களுக்கு இது நூற்றில் ஒரு பிரச்சனை. அவ்வளவே. இதை விட முக்கியப் பிரச்சனைகள் பல உள்ளனவே. அடுத்த முறை ஆட்சியை பிடிக்கணும்.அதுக்கு கூட்டணி அமைக்கணும். ஏற்கனவே இருக்கற கூட்டணி கட்சிகளை சமாளிக்கணும்., இதுக்கு நடுவுல சொந்தக் கட்சிகாரங்க பண்ற குழப்பங்களை சமாளிக்கணும். பாவம் அவங்க..
இதுக்கப்புறம் இருக்கவே இருக்காங்க எதிர் கட்சி. அவங்களுக்கு ஆட்சியை எப்படியாவது பிடிக்கணும். அதுக்காக எது வேண்டுமானாலும் பண்ணுவாங்க. நீங்க அதை பார்த்துவிட்டு எதோ மக்களுக்காக போரடறதா தப்பா நினைக்காதீங்க.

அடுத்து பார்த்த இந்த பத்திரிக்கை மற்றும் டிவி சேனல் காரங்க. இவங்களுக்கு எப்பவும் பரபரப்பா ஒரு நியூஸ் வேணும். அது எதுவா இருந்தாலும் சரி. அதை பத்தி கவலை படமாட்டாங்க. அவங்களுக்கு தேவை அவங்க சேனலின் TRP ரேடிங் மட்டுமே.


இப்படி விலைவாசி ஏற எண்ணக் காரணம்?


முதலில் தவறான பொருளாதார கொள்கைகள். அடுத்து, நாம குடி இருக்க வீடு கட்டறோம்னு விலை நிலங்களை அழிச்சிக்கிட்டே வரோம். அதனால், பொருட்களின் உற்பத்தி குறைகிறது . என்னிக்கும், கம்மியா கிடைக்கிற பொருள் விலை ஜாஸ்தியாதானே இருக்கும் ??



அடுத்து, நம்ம வரிசையா செய்யற தவறுகளினால் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாற்றங்கள். இதனாலும் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப் படுகிறது.


ஆக நாம செஞ்ச தப்பு, இப்ப நம்மளை திருப்பி தாக்குகிறது. சரி, இதை குறைக்க ஏதாவது வழி இருக்கா ?


முதலில் , இயற்கையோடு இணைந்து வாழ பழகனும். இதனால், தட்ப வெப்ப நிலை பாதிப்புகள் குறையலாம்.


இரண்டாவது, கண்டிப்பா எல்லாரும் பண்ண வேண்டிய ஒன்று. மக்களுக்காக ஆட்சி செய்யக் கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது நம் கையில் உள்ளது. ஆனால், படித்த வேலைக்கு செல்லும் எத்தனை பேர் ஓட்டு போட செல்கிறோம்? அன்றைக்கு ஒரு நாள் விடுப்பு என்று , காதலி/மனைவியுடன் செலவிடுகிறோம். ஏன் நம்மால் அதிகப் பட்சம் மூன்று மணி நேரம் காத்திருந்து ஓட்டு
போடமுடிவதில்லை நம்மால் ?? சரியாக தேர்வு செய்யாமல், பின் புலம்புவது சரியா?


உங்களுக்கு ஓட்டு உரிமை இருந்தால் , தவறாமல் ஓட்டு போடுங்கள். சரியான நபரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தவர், பிடித்த கட்சி என்று தேர்வு செய்யாதீர்கள். மக்களுக்கு நல்லது செய்வாரா என்று மட்டும் பாருங்கள் .


இதெல்லாம் எதோ சராசரி வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இன்று ஐந்து இலக்க சம்பளம் உள்ளவர்களும் சமாளிக்க தடுமாறுகிறார்கள்




கழுகுக்காக

(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

25 comments:

க ரா said...

//
உங்களுக்கு ஓட்டு உரிமை இருந்தால் , தவறாமல் ஓட்டு போடுங்கள். சரியான நபரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தவர், பிடித்த கட்சி என்று தேர்வு செய்யாதீர்கள். மக்களுக்கு நல்லது செய்வாரா என்று மட்டும் பாருங்கள் .
//
இப்படில்லாம் நடந்துச்சுன்னா நல்லாதான் இருக்கும்..

senthil velayuthan said...

இன்று புதிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் சென்னையை சுற்றி உள்ள விளை நிலங்களில் நிறுமானிக்க படுகின்றன ,அதை தவிர்த்து தென் மாவட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை உபயோகித்தால் ,விவசாய உற்பத்தியும் குறையாது தரிசு நிலமும் உபயோகப்படும் ,மற்றும் சென்னையும் மக்கள் நெரிசலில் இருந்து விடுபடும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமையான பதிவு LK . சுயநல அரசியல்வாதிகள் மாறினால் ஒழிய மாற்றம் சாத்தியம் இல்லை...

ஜில்தண்ணி said...

கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம்

இது கட்டுப்பாடடற்று சென்றால் ஒரு நாடு என்னாவது ??

இயற்கையோடு விளையாடினால் இப்படித்தான்

பாப்போம் என்னதான் ஆகுதுன்னு??

jothi said...

// நாட்டை ஆட்சி செய்கின்றவர்கள். அவங்களுக்கு இது நூற்றில் ஒரு பிரச்சனை. அவ்வளவே. இதை விட முக்கியப் பிரச்சனைகள் பல உள்ளனவே. அடுத்த முறை ஆட்சியை பிடிக்கணும்.அதுக்கு கூட்டணி அமைக்கணும். ஏற்கனவே இருக்கற கூட்டணி கட்சிகளை சமாளிக்கணும்., இதுக்கு நடுவுல சொந்தக் கட்சிகாரங்க பண்ற குழப்பங்களை சமாளிக்கணும். பாவம் அவங்க.//

இப்போது நடப்பதை ரெம்ப தெளிவா அதேசமயம் யதார்த்தமாக உணரும்படி சொல்லியிருக்கீங்க LK,...............இப்போது தேவையான பகிர்வு

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதிவு LK .

தெளிவா சொல்லியிருக்கீங்க.

Chitra said...

நல்ல பதிவு....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதிவு..

சாந்தி மாரியப்பன் said...

//தவறான பொருளாதார கொள்கைகள். அடுத்து, நாம குடி இருக்க வீடு கட்டறோம்னு விலை நிலங்களை அழிச்சிக்கிட்டே வரோம். அதனால், பொருட்களின் உற்பத்தி குறைகிறது . என்னிக்கும், கம்மியா கிடைக்கிற பொருள் விலை ஜாஸ்தியாதானே இருக்கும் ??//

நல்லாச்சொன்னீங்கப்பா.. நியூட்டனின் மூன்றாவது விதி அப்பப்ப நிரூபிக்கப்படுது :-(.

இங்கே மாங்குரோவ் காடுகளை அழிச்சு வீடுகட்டுவது மக்களோட போராட்டத்தால் தடைசெய்யப்பட்டிருக்கு.

எல் கே said...

வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள். கழுகு மென்மேலும் பறக்கட்டும்

@செந்தில்

நீங்கள் சொல்வது சரியே

வெங்கட் said...

நல்ல பதிவு. மக்கள் சிந்திக்க வேண்டும். பார்ப்போம்.

செல்வா said...

///முதலில் , இயற்கையோடு இணைந்து வாழ பழகனும். இதனால், தட்ப வெப்ப நிலை பாதிப்புகள் குறையலாம்.
///

இதுதான் இப்பொழுது இருக்கும் அரசியல் வாதிகளை விட பெரும் அச்சுறுத்தல்.
இயற்கையை நாம் பேணாவிட்டால் பிறகு மூட்டையில் பணம் கொண்டுபோனாலும் ஒரு டீ குடிக்க முடியாது ..!!

அருண் பிரசாத் said...

நல்ல பதிவு LK.

ஜெய்லானி said...

அருமையான சிந்தனை

வால்பையன் said...

// இயற்கையோடு இணைந்து வாழ பழகனும்.//


வழிமொழிகிறேன்

Anonymous said...

அருமையான பதிவு கார்த்தி ..

"முதலில் தவறான பொருளாதார கொள்கைகள். அடுத்து, நாம குடி இருக்க வீடு கட்டறோம்னு விலை நிலங்களை அழிச்சிக்கிட்டே வரோம். அதனால், பொருட்களின் உற்பத்தி குறைகிறது . என்னிக்கும், கம்மியா கிடைக்கிற பொருள் விலை ஜாஸ்தியாதானே இருக்கும் ??"

உங்க கருத்தெல்லாம் நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள்

Kousalya Raj said...

//இதெல்லாம் எதோ சராசரி வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இன்று ஐந்து இலக்க சம்பளம் உள்ளவர்களும் சமாளிக்க தடுமாறுகிறார்கள்//

உண்மைதான்.

சமுதாய அக்கறையுடன் கூடிய அருமையான கருத்துகள்...வாழ்த்துக்கள் கார்த்திக்.

வரதராஜலு .பூ said...

// மற்றும் டிவி சேனல் காரங்க//

ஆம். அடுத்து என்ன எழவு விழும், எங்க விழும்னு அப்படின்னு காத்துக்கிட்டு இருக்கிறானுங்க.

கோவை குமரன் said...

நல்ல பதிவு LK

ஹேமா said...

கார்த்திக்....அருமையான சமுதாய அக்கறையோட உங்கள் பதிவு !

vanathy said...

சரியா சொன்னீங்க. சம்பளம் மட்டும் ஏறவே ஏறாது.

Gayathri said...

நிறைய விஷயங்களை தோலுரித்துக் காட்டிவிட்டீர்கள்..அருமை

Karthick Chidambaram said...

வரிகளில் உங்கள் சமூக அக்கறை தெரிகிறது.

இங்கே நடப்பது ஒரு பந்தயம். பணம் பண்ணும் பந்தயம் -அதில் வேளாண்மை கடைசி இடத்தில் இருக்கு.

எல் கே said...

unmiathan kaartick

vinthaimanithan said...

என்னது வெலவாசி கொறையணுமா? என்ன கொடும சார் இது???? ( எல்லாரும் ஆமோதிச்சே சொல்லிட்டு இருந்தா வெலவாசிக்கு சப்போர்ட்டாவும் யாரவது பேசணும்லப்பா??)
1) ராணுவத்துக்கு துப்பாக்கில்லாம் புடுசா வாங்கி காஷ்மீர்லயும் மணிப்பூர்லயும் கொக்கு சுடண்ண்ம்

2)ஒரு தபா எம்மெல்லே ஆவணும்னா கொறஞ்சது 1 கோடி செலவு பண்ணனும்

3)எம்.என்.சி கம்பெனி சம்பாரிச்சிட்டு போவ அடிமாட்டு வெலையில நெலம் நீச்சு ஒதுக்கி, வரிவெலக்கெல்லாம் குடுத்து (பாவம்லா! ரொம்ப காஞ்சி போயி கஷ்டப்பட்டுட்டு இருக்கானுவோ!) தட்டிக் குடுக்கணும்

வெலவாசிய கொறச்சா இதெல்லாம் எப்டிய்யா நடக்கும்?

போங்கய்யா... ங்கொங்காங்கோ!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes