Tuesday, August 10, 2010

மனிதம் செழிக்கட்டும்....! கழுகின் உடல்தானம் பற்றிய பார்வை...!




விடிந்தது இருண்டு, இருண்டு விடிந்து சுற்றிக் கொண்டிருக்கிறதே பூமி? யாருக்காக......
சீரான தூரத்தில் நின்று ஒளி கொடுக்கிறதே சூரியன் யாருக்காக? காற்றில் ஆக்ஸிஜன் நிரம்பி தம்பி...பிராணனாய் வழிகிறதே யாருக்காக? ஓசோன் குடை பிடித்து கதிரியக்கத்திற்கு அரணாய் இருக்கிறதே யாருக்காக? மேகமாய் திரண்டு மழை பொழிவதும் மழைனால் விளைச்சல் பெருகுவதும்...காய் கனிகளை பூமித்தாய் தருவதும் உயிர்கள் செழிப்பதும்.....என்று ஒரு ஓட்டத்தில்..இருக்கும் போது...

மனிதானால் என்னவெல்லாம் செய்யமுடியும் மனிதனுக்கு, பணம் வேண்டாம் தோழர்களே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.....அதை கேட்பதிலும் கொடுப்பதிலும் கூட கொஞ்சம் தயக்கம் வரலாம்...! ஜக்கி வாசுதேவ் சொன்னது போல இரண்டு மரம் வையுங்கள் சந்ததிகள் வாழ அது சுற்றுப்புற சூழலை மிருதுவாக்கும்.....ஆனால் எல்லாம் தாண்டி.. மரணித்த பின்பு.....மண்ணுக்கா போகவேண்டும் நம் உடலின் அவயங்கள்.....!

உயிரோடு வாழும் மனிதருக்கு தேவைப்படாமல் நெருப்புக்குள் தீய்ந்து கருக வேண்டுமா கண்களும், சிறு நீரகஙக்ளும் இன்ன பிற திசுக்களும்.....தானம் செய்யக்கூடாதா நாம்...! ஆண்டு அனுபவித்து கூடுவிட்டு போன பின்பும் தொடரவேண்டுமா சுய நலம்....?

கேள்வியை வாங்கிக்கொண்டான் தம்பி விஜய்....விளைவு......மேலே படிங்கள் தோழர்களே...


விளக்கம் :

நிஜமாய் பெருமைப்படுகிற அளவுக்கு இல்லை என்றாலும் ,பெருமைப்படுகிறேன், நான் யார்?, எதற்காக பெருமைப்படுகிறேன்?, யாருக்காக பெருமைப்படுகிறேன்?. என் எழுத்தோடு பயணிக்கும் நிமிடப்பொழுதுகளில், இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்துகொள்வீர்கள்..

என் தேசத்து மக்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்ற வெறி இவனில் எரிவதை பார்த்திருக்கிறேன்,அப்பொழுதெல்லாம் இவனை அலட்சியம் செய்து இருக்கிறேன், மூன்று நாட்கள் முனகிவிட்டு, நான்காம் நாட்களில் குறட்டைவிட்டு தூங்கும் சாதாரண மனிதன் தான் இவனும் என்று எட்டிப்பார்த்துவிட்டு இவனது பைக்குள் பதுங்கி விடுவேன். வலைத்தளம் ஆரம்பிக்கும் முன்பு வரை இவனது எண்ணங்கள் யாவும், நாட்குறிபேட்டின் கோடுகளுக்குள் முடங்கிக்கிடந்தன, முடங்கிக்கிடந்த அந்த நேரங்களில் நான் சிரித்த ஏளன சிரிப்பு இவன் காதுகளை எட்டிவிடுமோ என்று எண்ணியதில்லை.

வலைதளம் ஆரம்பித்த பொழுதுகளில் இருந்து இவனுள் எண்ணற்ற மாற்றம்,என் ஏளன சிரிப்பை கடிவாளமிட்டு அடக்குவதை போல். புதிதாய் நிறைய வலைதளத்து நண்பர்களுக்கு மத்தியில்,ஒருவரின் விரலை மட்டும் இவனது கரங்கள் இறுக்கமாய் பற்றிக்கொண்டுவிட்டதை நான் உற்று நோக்கினேன். இவன் எண்ணத்தை சொல்ல முயலுவான்,தான் இறுக்கமாய் பற்றிக்கொண்ட கரத்திடம்,செய்தே முடித்து இருக்கும் அந்த கரம்.


அன்றைய சனிக்கிழமையும் அப்படி தான் நகர்ந்தது, இன்று என்ன செய்ய போகிறான் என்று ,எனது கூர்மையான விழிகளிலிருந்து .நெருங்கிய கரத்திடம் இருந்து ஏதோ ஒரு அழைப்பு GMail லிருந்து , ஏதேதோ பேசினார்கள். பேச்சின் முடிவில் இவனது கரம் பிரபல மருத்துவமனை வலைதளத்தில் ஏதோ தேடுகிறது. என்ன தேடினான் என்ற கேள்விக்கு பதிலாய் இவன் விரல்கள் தொலைபேசியில் எண்களை சுழற்றிக்கொண்டு இருந்தது, புரிந்தது இவன் தொலைபேசி எண்ணை தேடினானென்று.

முதல் முறை முயற்சி செய்தான், எதோ விசாரிக்க முயற்சித்தான்.இவன்
காத்திருப்பிலிருந்து புரிந்தது எனக்கு இவனை காத்திருக்க சொல்லி இருக்கிறார்கள் என்று. மீண்டும் முயற்சிக்கிறான், மீண்டும் ,மீண்டும் ... முயற்சித்தல் முற்றுப்பெற 30நிமிடங்கள் பிடித்தது, தனக்கான தகவலை பெற்றுவிட்டான் என்பதை, இவன் அவசரமாய் குறித்துவைத்த தொலைபேசி எண்கள் காட்டியது,

குறித்து வைத்த எண்ணை மீண்டும் அழைக்கிறான் புன்னகையுடன், இம்முறை காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு கவனித்த எனக்கு இவன் பேசிய வார்த்தைகள்,கன்னத்தில் அறைந்தது போன்று தான் இருந்தது,

"ஹலோ, நான் உடல் தானம் செய்ய விரும்புகிறேன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், "- இவன்

"இரண்டு வகையான தானங்கள் உண்டு, ஒன்று இறக்கும் முன் தானம் கொடுப்பது, மற்றொன்று இறந்த பின் தானம் கொடுப்பது. இறக்கும் முன் என்றால் உயிரோடு இருக்கும் பொழுது என்று பயப்பட வேண்டாம், அதாவது உயிர் மட்டும் இருக்கும் (இறந்ததற்கு சமம்), மற்றவை எதுவும் வேலைசெய்யா, கிட்டத்தட்ட இறந்த நிலை ,அந்த நிலையில் உங்களது இதயம், சிறுநீரகம், கண்கள், தோல், எலும்புகள் பயன்படும். இறந்த பிறகு தானம் செய்யும்பொழுது கண்கள், தோல், எலும்புகள் பயன்படும், " - மறுமுனை குரல் இது.


"ரொம்ப நன்றிங்க விவரங்களை சொல்லியதற்கு , இப்பொழுது நான் இறக்கும் முன் தானம் கொடுக்க விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்"- இவன்

"முதலில் உங்கள் பெற்றோர்கள், அல்லது உங்கள் மனைவி, அல்லது உடன்பிறந்தோர்க்கு, உங்கள் தானத்தை பற்றி சொல்லிவிட வேண்டும், அவை உங்கள் உறுப்புகள் தானம் செய்யும் பொழுது வசதியாய் இருக்கும். உங்கள் பெற்றோர்கள் , மனைவி, உடன்பிறந்தோர் இவர்கள் ஏற்றுகொண்டால் மட்டுமே உங்களிடமிருந்து தானமாய் எங்களால் பெறமுடியும். மீண்டும் ஒருமுறை நாங்கள் விளக்க தேவை இருக்காது, http://www.mohanfoundation.org/downloaddata.asp".
வலைதளத்திற்கு சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யவும், பதிவு செய்து முடித்ததும் "பதிவு அட்டை(Donar Card)" காண்பிக்கப்படும்,அவற்றை அச்சு எடுத்து, உங்களது பணப்பையில் எப்பொழுதும் வைத்து கொள்ளவும். -மறுமுனை குரல் இது

தொலைபேசியை வைத்ததும், சந்தோசத்தில் குதிக்கிறான், இவனது அலுவலக அறைக்குள் அங்கும், இங்கும் ஓடுகிறான். இவ்வளவு எளிதானதை, செய்ய இத்தனை நாட்களா என்கிறான்?,இதை கேட்ட அந்த நொடி நிஜமாய் மரணித்து ஜனித்தேன், இவனை இறுக பற்றிக்கொண்டு, வாழ்த்துக்கள் கூற வேண்டும் என்ற ஆசை, எனக்கு தெரியும் இவன் பெரிதாய் ஒன்றும் சாதித்துவிட வில்லை என , இருப்பினும் விழிப்புணர்வுக்காக எழுதி விட்டு போகிறான் என்ற எண்ணத்தை தரைமட்டமாக்கிய அந்த நொடியில் இவன் மீது காதல் பூத்தது.

இவன் என்னுள் ஆயிரமாயிரம் பணத்தை திணித்து இருக்கிறான், முகம் தெரியா எத்தனையோ பேரின் முகவரி அட்டையை என்னுள் திணித்து இருக்கிறான், உடற்பயிற்சி நிலையத்தில் தானும் ஒரு உறுப்பினன் என்ற உறுப்பினர் அட்டையை என்னுள் திணித்து இருக்கிறான், அக்காவின் புகைப்படத்தை அன்போடு என்னுள் திணித்து இருக்கிறான். அப்பொழுதெல்லாம் பூக்காத காதல் இப்பொழுது இவன் "உடல்தான அட்டையை(Donar Card)" என்னுள் திணித்த பொழுது பூத்தது....

இனி ஒவ்வொரு தருணத்திலும் இவனோடு இருப்பேன்,நன்றி தெரிவிப்பேன் இவனை இறுக பற்றிய தேவாவின் கரத்திற்கும்


கழுகிற்காக,
(விஜய்யின்) பணப்பை.


.

22 comments:

Ramesh said...

எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை விஜய்..உங்களது செயலுக்கு...பாராட்டுக்கள் என்ற ஒத்தை வார்த்தை போதாது...

vinthaimanithan said...

உடல்தானம் நல்ல விஷயம்... எதையும் இழக்காமலே இன்னோர் உயிரை வாழவைக்கும் விஷயம். வாழ்த்துக்கள் விஜய்

ஜீவன்பென்னி said...

தகவல்களுக்கும் மற்றும் சொல்வதை மற்றவர் செய்யும் முன்னே தானே முன்மாதிரியாகி படிப்பவர்க்கு முனைப்பினை ஊட்டும் உங்களுக்கு நன்றிகள் விஜய்.

அருண் பிரசாத் said...

நல்ல கருத்துள்ள பதிவு, வாழ்த்துக்கள் விஜய்

எல் கே said...

nalla vishayam vijay vaalthukkal

dheva said...

DISCLAIMER: THE ABOVE ARTICLE IS NOT FOR ENTERTAINMENT BUT LEGALLY GIVING LIFE TO THE PEOPLE WHO ARE IN THE NEED OF HUMAN ORGANS.

=================================================

விஜய்...........


லட்சம் பேரு தானம் கொடுத்துட்டாங்க அப்படின்னு காட்டவேண்டாம்.....


" ஒரே ஒருத்தர் "

பர்ஸ்ல இந்தா Donor கார்டு ஏறிச்சுனாலே... நாம ஜெயிச்சுட்டதா அர்த்தம் தம்பி!

விஜய் said...

மிக்க நன்றி அனைவருக்கும்...

ஆம் அண்ணா, ஒருத்தராவது பண்ணினாலே நாம் சாதனை செய்ய ஆரம்பித்து விட்டோம் என்று தான் அர்த்தம்...

dheva said...

இந்த கட்டுரையில் ரோசம் கொண்டு விவாதிக்க படித்த அனானிகள் வரமாட்டர்கள்; ஆக்ரோசமாய் கண் முன் காணாத விசயத்துக்காக போராட உடம்பில் திரணியிருப்பவர்கள் நானும் ரெடி என்னுடைய உடலின் பாகத்தை தானமாக்க என்று கூச்சலிட்டு சொல்ல மாட்டார்கள்.

சாதி தேவையில்லை என்றால் - அனானியாய் வந்து மிரட்டுபவர்கள்

கடவுளை விளங்கிக் கொள் என்றால் - ஆத்திரமடையும் மேல் தட்டு வர்க்கங்கள்

மனிதனின் தேவைக்காக மனிதன் செய்யவேண்டியதை செய்திருப்பார்களா? இந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுகிறதே ஆச்சர்யமாய்....27 வயது இளைஞனுக்குள் பரவியிருக்கும் இந்த ஒளி எரிமலையாய் சீறிப் பாய்ந்து எல்லோருக்குள்ளும் ஒரு மாற்றத்தை உண்ணு பண்ணாதா?

மாற்றத்தின் வேருக்கு என்னதான் வேண்டும் எங்களின் இரத்தமா? உயிரா? இல்லை எது....?

விஜய் said...

நிச்சயம் வர மாட்டார் "பெயர் தெரியாதவர்"..சுயநலத்தில் எரிந்து போக என் தேகத்தை விட மாட்டேன், எங்கோ ஒரு மூலையில்,ஒளி தெரியாமல், சுவாசிக்க முடியாமல், இன்னும் வேறு பல வழிகளில் வாழ்க்கையை எண்ணிக்கொண்டு இருக்கும் முகம் தெரியா என் தோழனுக்கும், தோழிக்கும் ,நான் செய்ய வேண்டிய கடமை இது. என்னை சரியான பாதையில் கொண்டு செல்ல தேவா அண்ணாவை போன்றோர் இருக்கும் வரையில், என்னுள் கடைசி நிமிடம் வரை என் தேசத்துக்காக என்னால் முடிந்தவற்றை செய்யும் மனது எரிந்து கொண்டே தான் இருக்கும்

க ரா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் பல

111 said...

விஜய் நல்லவிசயம் வாழ்த்துக்கள்.

ஜீவன்பென்னி said...

பதிவு செயதாகிவிட்டது. என்னிடம் கார்டு உண்டு இப்பொழுது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேவவையான பதிவு நன்றி...

பனித்துளி சங்கர் said...

நல்ல முயற்சி !.

ஜில்தண்ணி said...

நாம் வாழும் போது யாருக்கும் உதவியாக இல்லையென்றாலும் பரவாயில்லை,இறந்த பின்பாவது பயன்படுவோம்

ரொம்ப அவசியமான பதிவு இது

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி

Unknown said...

வாழ்த்துக்கள் விஜய்,,,

Unknown said...

ரொம்ப நல்லவிசயம் பண்ணியிருக்கீங்க விஜய்.. வாழ்த்துக்கள்..

க‌ரிச‌ல்கார‌ன் said...

வாழ்த்துக்கள் விஜய்

Kousalya Raj said...

இப்படி பட்ட பதிவுகளால் கழுகு இன்னும் உயரமாக பறக்கிறது....வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல கருத்துள்ள பதிவு, வாழ்த்துக்கள் விஜய்.

Thomas Ruban said...

உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் விஜய். நல்ல விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes