Wednesday, August 11, 2010

என் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் !


நவீன உலகத்தை நோக்கி நகரும் மனிதர் கூட்டத்தில் நாங்களுமிருக்கிறோம் என்று நம்பி நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்காள்.....சற்றே நில்லுங்கள்.....!


கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றரியா பிறப்பில் தவறு இருக்கும் கூட்டங்கள் அனானியாய் வந்து பதிவுகளின் கருத்துகளில் அத்துமீறுகிறதே இவர்களையும் சேர்த்துதான் பயணித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரியுமா? மூடனே....கோழையே..முட்டாளே..இன்னும் என் தாய்த்தமிழ் தாண்டியும் அத்தனை மொழிதோறும் நீசனை வசைபாட இருக்கும் வார்த்தைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அந்த முதுகெலும்பில்லாத கோழைகளின் முகத்திலே காறி உமிழ்ந்து பறைகிறோம்.....!


வலைப்பூவினில் எமது பெயரிட்டு எமது மூதாதையரின் பெயரிட்டு, எமது முகம் காட்டி கருத்தினை தெள்ளத்தெளிவாய் எடுத்தியம்பும் பிறவிகள் நாங்கள்..! ஈனாமானவனே யாராடா உனக்கு தைரியம் கொடுத்தது தோழர்களின் வலைப்பூக்களிலே வந்து குடும்ப உறவுகளை சொல்லி தவறான வார்தை பிரயோகம் செய்ய? உமது பிறப்பின் புனிதம் எங்கணம் போற்றுகிறாயோ அங்கணம்தான் மற்ற உயிரும் என்றறியா மடையனே......மூர்க்கணே....


பெயரிடாமல் வந்து அவச்சொல் சொல்லிவிட்டு நீ எங்கணம் நிம்மதியாய் உறங்குகிறாய் என்று நானும் பார்க்கிறேன்.....! இன்னும் இருக்கிறது இந்த பிரபஞ்சமும் அதைச் சுற்றிய அதிர்வலைகளும்...எமது உக்கிரத்தின் வேர்கள் நீண்டு உமது கழுத்தினை நெரிக்கும்.....! கடவுளைப் பற்றி பேசவும் வாழ்க்கையைப் பற்றி பேசவுமுனக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதை விட ஒரு படி அதிகமாக முகம் காட்டி உலகத்தை திமிராய் நோக்கும் எமக்கு உண்டு....அறிவாயா? ஏதோ வலைப்பூவில் எழுதிகிறோம் என்று கோழைகள் என்று எண்ணிவிடாதே... அனானி உன் முகவரி கொடு....உன் வீட்டு வாசலில் வந்து நேருக்கு நேராய் சந்திக்கிறோம்...

ரெளத்ரம் பழகியவர்கள் நாங்கள்......! ஆக்கவும் அழிக்கவும் தெரிந்த பிரபஞ்ச சக்தி எமக்குள் கனலாய் எரிவதை உற்று நோக்கி அமைதியான் நடப்பவர் நாங்கள்!

ஏதோ ஒன்று உனக்கு நடக்கும் உன் வாழ்வில் தவறாக....அப்போது நினைத்துக்கொள்...எமது எண்ணத்தின் விளைவு அது என்று.....!




- கழுகு கூட்டம்
(கழுகு சற்று தாழ்வாக பறந்து தேடுகின்றது அவனை....)



26 comments:

Kousalya Raj said...

என்ன இப்படி ஒரு கோபம்...?!

எல் கே said...

இதற்க்கு சுலபமான வலி , பெயரில்லாமல் பின்னூட்டம் இடும் வசதியை நீக்குங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதற்க்கு சுலபமான வலி , பெயரில்லாமல் பின்னூட்டம் இடும் வசதியை நீக்குங்கள்//

கண்டிப்பா பண்ணலாம். அப்டி பண்ணினா கொசுவுக்கு பயந்து வீட்டை கொழுத்தின கதை ஆயிடும்

ஜில்தண்ணி said...

////ரெளத்ரம் பழகியவர்கள் நாங்கள்......! ஆக்கவும் அழிக்கவும் தெரிந்த பிரபஞ்ச சக்தி எமக்குள் கனலாய் எரிவதை உற்று நோக்கி அமைதியான் நடப்பவர் நாங்கள்! ////

ஆம் நாம் அப்படித்தானே :)

தேவைப்பட்டால் எதுவும் செய்வோம்

எல் கே said...

இல்லை. நாம் நல்லவர்கள். ஆனால் எல்லோரும் அப்படிதான் என்று நினைக்க முடியாது. எனவே அனைவரும் மாறும் வரை இப்படித்தான் செய்ய வேண்டும்

dheva said...

போலி அடையாளத்தோடு வருபவர்களும் அனானிகளே....

அனானியா வருவது தவறல்ல...தனி மனித சாடலை செய்ய முகமூடி இட்டு வருகிறார்களே அதுதான் தவறு....

செல்வா said...

அருமையா சொன்னிங்க ..!!
முகம் தெரியாமல் வந்து பின்னூட்டமிடுபவர் இதனை படித்தால் சரி ..!!

அருண் பிரசாத் said...

நம்மை எதிர் கொள்ள தைரியம் இன்றி தான் முக்காடு போட்டு வருகிறார்கள். அவன் மனிதனாய் இருந்தால் நேருக்கு நேர் மோதுவான், அது மிருகம் அல்லவா அப்படித்தான் மறந்து இருந்து தாக்க முயற்சிக்கும். கல்லால் அடித்தால் ஓடிடும் நாய்கள்.

ஜீவன்பென்னி said...

அனானிகளே நல்லாயிருங்கள்..........

ஜெயந்த் கிருஷ்ணா said...

இவ்வளவு நல்ல படியா புத்தி மதி சொன்னதுக்கு பின்னாடியும் வந்தானுங்கன்னா ... அவனுங்க உப்பு போட்டு சாப்பிடுற கூட்டமா இருக்காது...

க ரா said...

ஏன் இந்த கோபம்.. இவனுன்க்களுக்கு ஒரு மதிப்பே குடுக்க கூடாது.. இவனுங்கல்லாம் உயிரினங்களே கிடையாது

vinthaimanithan said...

என்னப்பா இது.... ரத்தபூமியாவுல்ல இருக்கு! அநாதப்பயபுள்ளக்கி இவ்ளோ வெயிட்டு குடுத்தா பூமி தாங்காதுய்யா!

Vijay said...

வெட்ட வேண்டும் என்று ஒரு முறை நாங்கள் நினைத்தால் போதும் , உங்களை போன்ற நாய்களை கொல்வதும் , தண்டிப்பதும் எங்களுக்கு மிக கஷ்டமான காரியம் என்று நீ நினைத்தால்,ஒரு முறை உன் விலசாத்தை கொடுத்து பார். மறுமுறை உனக்கு கொடுப்பதற்கு விளசாமும் இருக்காது, விளசாம் இது தான் என்று பதில் கூற ஆளும் இருக்க மாட்டாய். மென்மையை எழுதும் எங்களுக்கும் ரௌத்திரம் தெரியும், சண்டை தெரியும், உடம்பை இரும்பாய் உருக்கி கொண்டு தான் இருக்கிறோம்.

Vijay said...

வெட்ட வேண்டும் என்று ஒரு முறை நாங்கள் நினைத்தால் போதும் , உங்களை போன்ற நாய்களை கொல்வதும் , தண்டிப்பதும் எங்களுக்கு மிக கஷ்டமான காரியம் என்று நீ நினைத்தால்,ஒரு முறை உன் விலசாத்தை கொடுத்து பார். மறுமுறை உனக்கு கொடுப்பதற்கு விளசாமும் இருக்காது, விளசாம் இது தான் என்று பதில் கூற ஆளும் இருக்க மாட்டாய். மென்மையை எழுதும் எங்களுக்கும் ரௌத்திரம் தெரியும், சண்டை தெரியும், உடம்பை இரும்பாய் உருக்கி கொண்டு தான் இருக்கிறோம்.

விஜய் said...

வெட்ட வேண்டும் என்று ஒரு முறை நாங்கள் நினைத்தால் போதும் , உங்களை போன்ற நாய்களை கொல்வதும் , தண்டிப்பதும் எங்களுக்கு மிக கஷ்டமான காரியம் என்று நீ நினைத்தால்,ஒரு முறை உன் விலசாத்தை கொடுத்து பார். மறுமுறை உனக்கு கொடுப்பதற்கு விளசாமும் இருக்காது, விளசாம் இது தான் என்று பதில் கூற ஆளும் இருக்க மாட்டாய். மென்மையை எழுதும் எங்களுக்கும் ரௌத்திரம் தெரியும், சண்டை தெரியும், உடம்பை இரும்பாய் உருக்கி கொண்டு தான் இருக்கிறோம்.

விஜய் said...

நீ மிரட்டியதும், திட்டியதும், வாயை பொத்திக்கொண்டும், கையை கட்டிக்கொண்டும், அடங்கிவிடுவார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறாய் என நினைக்கிறேன்.கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற சாதியை சார்ந்தவர்கள் நாங்கள், மண்ணில் சாயும் முன் சில அயோக்கிய மிருகங்களையாவது கொன்றிருப்போம் ..இவைகள் வெறும் வார்த்தைகள் தான் என்று நினைக்கும் அந்த நிமிடமே நீ முதல் தவறை செய்கிறாய் என நினைத்துக்கொள் ..

jothi said...

என்ன பயங்கரமான சண்டைபடமாக இருக்கு...

Unknown said...

ரௌத்ரம் பழகியவர்கள் நாங்கள்.....

பனித்துளி சங்கர் said...

//////LK சொன்னது…
இதற்க்கு சுலபமான வலி , பெயரில்லாமல் பின்னூட்டம் இடும் வசதியை நீக்குங்கள் ////


////////// இல்லை. நாம் நல்லவர்கள். ஆனால் எல்லோரும் அப்படிதான் என்று நினைக்க முடியாது. எனவே அனைவரும் மாறும் வரை இப்படித்தான் செய்ய வேண்டும் //////

நானும் இதையே சொல்ல நினைக்கிறேன் .

நண்பரே யாரோ ஒருவன் பெயரில்லாமல் விட்டு செல்லும் கருத்திற்காக நாம் இதுபோன்று கோபத்துடன் பதிவிடுவது நமது வளர்ச்சியைத்தான் பாதிக்கும் . இதற்கு மாறாக பெயரில்லாமல் மறுமொழி இடும் வழியை அடைத்துவிடுங்கள் . புரிதலுக்கு நன்றி !

உமர் | Umar said...

// பெயரில்லாமல் பின்னூட்டம் இடும் வசதியை நீக்குங்கள்//

எங்கள் பதிவில் வந்து பாருங்கள், அனானி ஒரு பெயரை வைத்துக் கொண்டு வந்து வாந்தி எடுத்துள்ளதை.

http://allinall2010.blogspot.com/2010/08/blog-post_10.html

அனானி ஆப்ஷனை நீக்கினாலும், இது போன்ற கேடு கேட்ட ஜென்மங்கள் வேறு ஏதேனும் வடிவில் வந்து தொலைக்கும். கமென்ட் மாடரேஷன் போட்டால் கட்டுப்படுத்தலாம்.

vadivel said...

அன்பு கழுகு அவர்களே
நான் தமிளிஷ் தினமும் படிப்பவன்.
எனக்கு தனிய ப்ளாக் போடுவதற்கு நேரமும் இல்லை கம்ப்யூட்டர் வசதியும் இல்லை
எனக்கு எழுதவதற்கு வரவும வரத்து.
அனால் நன்றாக படித்து ரசிப்பேன். அணைத்து ப்ளாக்உம ரசிப்பேன்
எதாவது நன்றாக இருந்தால் மிகவும் சிரமப்பட்டு சிந்தித்து ஒரு கமெண்ட்ஸ் போடுவேன்.
என்னெல்லாம் திட்டதிர்கள்.
என்ன போல நெறய பேர் படிக்கும் ரசிகர்கள் இருகிறார்கள்.
அவர்ககளுக்கு உன்கள் பதிவு கஷ்டமாக இருக்கும்

எதாவது கோவம் இருந்தால் _________________.

நன்றி
வடிவேல்

கழுகு said...

பனித்துளி சங்கர் @


அனானி என்றால் பொய்யான பெயர் கொண்டு வருபவன் என்று அர்த்தம் கொள்க; அனானி என்ற ஒரு வசதியை நீக்கினாலும் பொய்யான பெயர் சுமந்து வந்து தனிமனித தாக்குதல் நடத்துபவனுக்கு என்ன செய்ய முடியும்.

இந்த கட்டுரை வெளியிட்டு இருப்பதால் பொதுவான் எங்களின் எண்ணத்தை பகிர்கிறோம். இதில் தரம் தாழ்ந்து எப்படி போவோம்.....? கோபம் மனித இயல்பு... நாங்கள் சகாப்த புருஷர்கள் இல்லை. சாதாரண மனிதர்கள் மற்றும் இது எங்கெல்லாம் அனானியால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறதோ அதற்கான ஒரு பதிலடி.

நாம் தனியில்லை தோழர்....கூட்டம்...! புரிதலுக்கு நன்றி!

கழுகு said...

வடிவேல் @

அனானி என்றால் ஒளிந்து கொண்டு கருத்து விவாதம் செய்யாமல் தனிமனித தாக்குதல் செய்பவன் என்று கொள்க தோழர்...!

கழுகு said...

உணர்வுக்கு தோள் கொடுத்திருக்கும் அத்தனை தோழர்கள் அனைவருக்கும் நமஸ்காரங்கள்!

'பரிவை' சே.குமார் said...

// இல்லை. நாம் நல்லவர்கள். ஆனால் எல்லோரும் அப்படிதான் என்று நினைக்க முடியாது. எனவே அனைவரும் மாறும் வரை இப்படித்தான் செய்ய வேண்டும் //

நானும் இதையே சொல்ல நினைக்கிறேன்.

School of Energy Sciences, MKU said...

அனானிமஸ் கமெண்ட் இடும்போதே அவர்களின் வீரம் வெளிப்பட்டு போகிறது. செத்த பாம்புக்கு எதுக்கு பாஸு கழுகு எல்லாம்? பாம்பை தூக்கி குப்பையில் எறிய வேண்டியதுதானே?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes