Sunday, August 08, 2010

வானம்பாடிகள் பாலாவின் EXCLUSIVE பேட்டி...கழுகிற்காக!

வேகமாய் பறந்து கொண்டிருந்த கழுகை தடுத்தி நிறுத்தி...எங்கேய்யா பதிவர் பேட்டி? என்று செல்லமாய் கேட்டவுடன்.....அதானே பார்த்தேன்.. ! என்னட கண்டும் காணாமல் இருக்கீங்களே. நீங்களே கேக்குறீங்களா என்னனு ஒரு சின்ன டெஸ்ட் என்று சிரித்தது.
அது எல்லாம் இருக்கட்டும் இந்தவாரம் யார் பேட்டி? என்று ரொம்ப த்ரில்லாகவே கேட்டதற்கு...
" ஜிகு புகு..ஜிகு..புகு...ரயிலே...." என்று பாட ஆரம்பித்தது...அட யார் பேட்டின்னு சொல்லு என்று கொஞ்சம் ஆர்வத்தில் உச்சத்திற்கே போய் நின்றபடி கேட்டோம்....
மீண்டும் பாடியது கழுகு " ஜிகு புகு..ஜிகு..புகு...ரயிலே....கலக்குது பார் நம்ம வானாம்பாடிகள் ஸ்டைலு.." என்று சொல்லியபடி கொடுத்த பேப்பரில் நம்ம வானம்பாடிகள் பாலா அண்ணனின் பேட்டி இருந்தது....முழு மூச்சாக படித்து விட்டோம்...இதோ....
எழுத்துக்களின் மூலம் வாசிப்பாளனை கட்டிப் போட்டு வைத்திருக்கும் அண்ணன் வானம்பாடிகள் பாலா அண்ணனின் பிரத்தியோகப் பேட்டி உங்களுக்காக....!










1 நகைச்சுவையாய் பகிரப்படும் கருத்துக்கள் மக்களைச் சென்றடையுமா?



நிச்சயமாக. அதற்காக எல்லாவற்றையும் நகைச்சுவையில் பகிர்ந்துவிட முடியாது.



2 உங்கள் கல்லூரி வாழ்கை பற்றி?


குடும்ப சூழல் காரணமாக, வேலைக்குப் போகவேண்டிய நிர்பந்தம் இருந்ததால், பி.யூ.சியோடு நிறுத்திவிட்டு, 18 வயது ஆவதற்காக காத்திருக்க நேர்ந்தது. வைணவக்கல்லூரியில் படித்தேன். படிப்புமட்டுமே இருந்ததால் கல்லூரி வாழ்க்கையெனச் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.


3 உங்கள் பதிவுலக முதல் நண்பர்.இப்போது இருக்கும் நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்?


பதிவுலகை அறிமுகம் செய்ததோடு எனக்கு வழிநடத்தும் ஆசானுமாய் தோழி கலகலப்ரியா. பிறகு பழமைபேசி, கதிர்,அரூரன்,பாலாசி,பிரபாகர்,பலாபட்டறை ஷங்கர், அது சரி, முகிலன், தண்டோரா, நர்சிம், டி.வி.ஆர்.சார், கேபிள், என்று விரியும் நட்பூக்கள்


4 வெள்ளை காரன் இன்னும் நம்ம நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்?


வெள்ளைக்காரன் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரியாத நிலையில் இதற்கு பதில் சொல்வது கடினம். ஆனாலும் மக்களைப் பொறுத்தே ஆட்சி செய்பவர்கள் என்பது என் எண்ணம். அடிப்படை ஒழுக்கத்தை மக்கள் பேணாத வரையில் அதிலிருந்து வரும் ஒருவன் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியும் எனத் தோன்றவில்லை.


5 வானம்பாடிகள்..என்ற கவித்துவமான பெயரை தேர்ந்தெடுத்ததின் பிண்ணனி என்ன?


என் உருவம் போன்றே சிறிய பறவை. பாமரன் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் எழுதிவந்ததால், பாலாவுக்கு மாறி, அதே பெயரில் இன்னும் இருவர் இருந்ததால் வேறு பெயர் தேடிய போது கலகலப்ரியாவோடு சேர்ந்து முடிவு செய்த பெயர்.


6 அரசு துறையில் இருக்கும் உங்களுக்கு அரசுக்கு எதிரான கட்டுரைகளை எழுதும் சூழ் நிலை வந்திருக்கிறதா? இல்லையெனில் இனிமேல் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

வந்தாலும் எழுத முடியாது. ஒழுக்கச் சட்டத்தின் ஷரத்துக்கு எதிரானது. ரிட்டையர் ஆகி நான்கு வருடம் வரை எழுத முடியாது.அப்படி ஒரு சூழல் வரின், எத்தனையோ கசப்புக்களை விழுங்கி ஜீவிக்கிறார்போல் இன்னுமொரு கசப்பும் விழுங்கத்தான் வேண்டும்.


7 இப்போது பதிவுலகம் சரியான பயணிக்கிறதாக எண்ணுகிறீர்களா?


நான் பதிவுலகுக்கு வந்தே ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது. இன்னும் முழுமையாக அறிந்திருப்பதாகக் கருதவில்லை. ஆரோக்கியமான பாதையில் செல்வதாகக் கருதுகிறேன்.


8 பதிவுகளுக்கு கருத்து சொல்பவர்கள் முரண்பட்டு கட்டுரையை விட்டு ஏதோ பஸ்ஸில் இடம் பிடிப்பது போல செயல்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


வருந்தத் தக்கது. கட்டுரையை தடம் மாற்றிவிடுவதோடு, துணிந்து கருத்துச் சொல்பவர்கள் குறைவார்கள். பதிவரின் உழைப்பு வீண் என்பதோடு, கருத்துப் பரிமாற்றம் முற்றாக இழப்பாகும்.


9 அரசு ஊழியன் லஞ்சம வாங்காமல் வேலை செய்யமுடியாதா?


அரசு ஊழியன் என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிடுவது சரியல்ல. பொதுமக்களுடன் தொடர்பற்ற ஊழியர்களுக்கு பெரும்பாலும் லஞ்சம் சாத்தியமல்ல. அதனால் முடியும். ஆனால், நிர்பந்தத்தின் பேரில் வாங்க ஆரம்பித்து அதில் மூழ்கி அழிபவர்கள் அதிகம். அதே போல், இத்தகைய பதவிகளுக்கு போஸ்டிங் வராமலிருக்க லஞ்சம் கொடுக்கவேண்டிய சூழலிலும் அரசு ஊழியர் இருக்கிறார்கள்.



10 நறுக்குன்னு நாலு வார்த்த...மிகைப்பட்டவர்களின் பேவரைட் இதை ஏன் அடிக்கடி எழுதுவதில்லை?


பத்திரிகைகளின் மீது வெறுப்பு. பத்திரிக்கை படிப்பதையே நிறுத்தி விட்டேன். ஏதாவது கண்ணில் படும்போது எழுதுகிறேன். எழுதுவேன்.


11 புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கும் உங்களின் பேவரைட்டான ரைட்டர் யார்?


தமிழில் கி.ரா.,தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி, தேவன், அகிலன், சாண்டில்யன்,கல்கி, சுஜாதா,பாலகுமாரன் என்று பெரிய பட்டியல் அது.

ஆங்கிலத்தில் இர்விங் வாலஸ், காலின் ஃபோர்பஸ், சிட்னி ஷெல்டன், ஃப்ரெட்ரிக் ஃபோர்சித், ஹரால்ட் ராபின்ஸ், ஜெஃப்ரி ஆர்ச்சர் என்று அதுவும் அனுமார் வால்தான்.



12 தொடர்பதிவுக்கு அழைக்கிறார்களே...ஒரே கருத்தை பத்து பேர் பார்வையில் தெரிந்து கொள்வதில் என்ன ஆக்கம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?


எல்லாப் பதிவிலும் ஆக்கம் எதிர்பார்ப்பது சரியல்ல. ஒரே விஷத்தை இருவேறு பதிவர்கள் சொல்லும் விதத்தில் கற்றுக் கொள்ள நிறைய இருக்குமே. அதுவே ஆக்கம்தானே.


13 உங்கள் துறை சார்ந்த கேள்வி... ரயில்வே துறையில் இருக்கும் + மற்றூம் - கள் என்ன?


இந்தியாவின் முன்னேற்றத்துக்கு நரம்பு மண்டலமாயிருப்பது. பெரும்பாலான தொழிலாளர்களின் உண்மையான உழைப்பு. அரசு இயந்திரத்தில் மிகக் குறைவான முறைகேடுகள் உள்ள துறை என்பது பாசிடிவ்கள். அரசு மானியமில்லாதது, சேவை மனப்பான்மைக் குறைவு, இன்னும் சிறப்பாக சேவை செய்ய வாய்ப்பிருந்தும் ஊக்கமின்மை ஆகியன எதிர்மறை.



14 உங்களின் எழுத்துப் பயணம் எது நோக்கிச் செல்கிறது ?

அப்படி எந்த நோக்கும் வைத்துக் கொண்டு பயணப்படவில்லை. எழுதிப் பழகுகிறேன். இப்போதைக்கு நான் ஓர் மாணவன்.


15 ஓட்டுக்களின் மூலம் எழுத்தின் தரத்தை திரட்டிகள் தீர்மானிக்கின்றன? இது பற்றி உங்கள் கருத்து?

நிச்சயம் நான் அப்படி நினைக்கவில்லை. திரட்டிகளின் வேலை தொகுத்துக் கொடுப்பது மட்டுமே. போட்டிகளில் அதை விட்டால் வேறு வழியென்ன இருக்கிறது. வாசகர்கள் விரும்பியதாகத்தான் கொள்ளவேண்டியிருக்கிறது.



(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)


 

17 comments:

Unknown said...

அய்யாவுக்கே உரிய ஸ்டைலில் பதில்கள்... நன்றி ஐயாவுக்கும், கழுகு குழுவினருக்கும்..

cheena (சீனா) said...

அன்பின் பாலா

இயல்பான பதில்கள் - நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதில்கள்..

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

Prathap Kumar S. said...
This comment has been removed by the author.
அமைதி அப்பா said...

ஆறாவது கேள்விக்கு,தங்களின் நேர்மையான பதிலுக்குப் பாராட்டுக்கள்.
நன்றி.

க ரா said...

அய்யாவோட பதில்கள் எல்லாமே நச் :)

Anonymous said...

நல்ல பேட்டி.. அருமையான பதிலகள்.

கேபிள் சங்கர்

Jey said...

பாலாண்ணே, யதார்த்தமா பதில் சொல்லிருகீங்க:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாலா சாரின் பேட்டி ரொம்ப நல்லாருக்கு.. கேள்விகளுக்கு அருமையான சரியான பதில்கள்.

///அய்யாவுக்கே உரிய ஸ்டைலில் பதில்கள்... நன்றி ஐயாவுக்கும், கழுகு குழுவினருக்கும்.. ///

ரிப்பிட்டே...

எல் கே said...

வழக்கமான அவருடைய பாணி

Karthick Chidambaram said...

///அய்யாவுக்கே உரிய ஸ்டைலில் பதில்கள்... நன்றி ஐயாவுக்கும், கழுகு குழுவினருக்கும்.. ///

ரிப்பிட்டே...

'பரிவை' சே.குமார் said...

அய்யாவுக்கே உரிய ஸ்டைலில் பதில்கள்... ஐயாவுக்கும் கழுகு குழுவினருக்கும் நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பேட்டி.. அருமையான பதிலகள்.

Unknown said...

நல்ல பதில்கள். நன்றி கழுகு

சூர்யா ௧ண்ணன் said...

அருமையான பதில்கள் .. நன்றி தலைவா!

செல்வா said...

இயல்பான பதில்கள் ..
நன்றி ஐயா ..!!

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி:)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes