Saturday, October 09, 2010

உறவுகள் என்பது...



ஒரு மிகப்பெரிய புரிதல் வேண்டியிருக்கிறது நட்புகளையும் உறவுகளையும் கை கோர்த்து வாழ்க்கையின் வழியே செல்வதற்கு ஏனெனில் பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட ஒரு மனிதன் கூடி வாழவேண்டும் என்ற ஒரு அடைப்பிற்குள் அடைப்பட்டு வாழ்வது அத்தியாவசியமாகிறது

சமுதாயமும் வாழ்வும் செழிக்க, அரசும், இன்ன பிற தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் எத்தனை போராடினாலும் அதற்கான பலன் என்பது மில்லி மீட்டரில்தான் இருக்கிறது. ஏன் இப்படி? எத்தனையோ ஊடகங்கள் உலக பிரச்சினை முதல் உள்ளூர் குப்புசாமி பிரச்சினை வரை எல்லாவற்றையும் படம் போட்டு மக்கள் முன் காட்டுகின்றன. தங்களை நியாயத்தின் காவலர்கள் என்று காட்டிக் கொண்டும் சட்டாம் பிள்ளையாக தவறுகளை அதிரடியாக சுட்டிக்காட்டும் இவர்கள்.....சொல்யூசன் என்று சொல்லக்கூடிய தீர்வுகளை கொடுப்பதில்லை.

பிரச்சினைகளைப் பற்றி பேசுவதிலும் அது பற்றி காரசாரமாய் விவாதிப்பதிலும் தம்மை விளம்பரப்படுத்தி கொள்வதில் தான் முனைப்புகள் இருக்கிறதன்றி....மனிதர்களின் பிரச்சினைகளின் மூலத்தை அறிந்து, அதற்கு பயன் தரும் வகையில் கருத்துக்கள் எப்போதும் பகிரப்படுவதில்லை. இப்படி செய்வது இன்னும் ஆபத்தானது. அது மனித உணர்வுகளை, அக்கிரமங்களுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்யும், உணர்வு பொங்க பேசச் செய்யும். ஆனால் அறிவினை பகிராது...எதிர்காலத்தில் சந்ததியினருக்கு நன்மைகள் தராது.....


மனிதவளம் மேம்பட வேண்டும். மனிதவளம் மேம்பட, உறவுகளில் புரிதல் வேண்டும். உறவுகளில் புரிதல் இருந்தால் அன்பாய் மிளிரும் இந்த உலகம். அடிப்படையில் அன்பு இருந்தால் கருணையில் விட்டுக்கொடுப்பதும், சக மனிதரை மதித்து நடப்பதும் தானாய் நடக்கும். அப்போது சட்டாம்பிள்ளைகள் நமக்கு தேவையில்லை. ஒரு விசயத்தை கருத்தில் தெளிவாய் கொள்ள வேண்டும்....மிகைப்பட்ட பிரச்சினைகள் உருவாக்கப்படுவதில் பெரும்பங்கு தம்மை சட்டாபிள்ளையாக காட்டிக் கொள்ள முனையும் மனிதர்களாலேயே உருவாக்கப்படுகிறது....


வலைப் பூக்களை மேய்ந்து கொண்டிருந்த கழுகு கண்களுக்கு இந்த வலைப்பூ கண்ணில் பட்டது...ஏதோ ஒரு கருத்தினை தொட்டுவிட்டு செல்ல முனைந்திருக்கும் இந்த கட்டுரையை மிகைப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.

அதற்கான சுட்டி இதோ... http://tvrk.blogspot.com/2010/10/blog-post_07.html


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

5 comments:

செல்வா said...

//மனிதர்களின் பிரச்சினைகளின் மூலத்தை அறிந்து, அதற்கு பயன் தரும் வகையில் கருத்துக்கள் எப்போதும் பகிரப்படுவதில்லை. /


இது உண்மைதாங்க .. பிரச்சினைகள் பற்றி சொல்லுவோர் , விவாதிப்போர் , அதற்கான தீர்வுகளையோ அல்லது அவர்களது கருத்துக்களையோ கூட கூறுவதில்லை ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நண்பரே

Kousalya Raj said...

//மிகைப்பட்ட பிரச்சினைகள் உருவாக்கப்படுவதில் பெரும்பங்கு தம்மை சட்டாபிள்ளையாக காட்டிக் கொள்ள முனையும் மனிதர்களாலேயே உருவாக்கப்படுகிறது....//

இந்த வரிகள் எனக்கும் சரி என்று தோன்றுகிறது. கருத்துகள் சொல்லும் போதே மோதல் ஏற்பட்டு விடும்போது அங்கே எதற்காக விவாதம் என்பதின் பொருள் சில சமயங்களில் மறக்கடிக்கப்பட்டு விடுகிறது. நல்ல விவாதமும் திசை மாறி பயணித்து விடுகிறது.....

பின் அதனை தொடர்ந்த பல தேவையற்ற பதிவுகள்....இப்படி நல்ல கருத்துகள் சிலரால் திசைமாறும் போது மற்றவர்கள் அவ்வழி தொடந்து செல்வதை முதலில் தவிர்க்க வேண்டும்....

'பரிவை' சே.குமார் said...

அருமையான கட்டுரை.

Chitra said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes