Sunday, January 02, 2011

'பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும்...!







பஞ்ச் 1: தமிழ்நாட்டின் அடுத்த 5 வருட தலை எழுத்தை தீர்மானிக்கபோகும் தேர்தல் இதோ வரப்போகிறது. மக்கள் தயார் ஆவதற்கு முன்னால் கட்சிகள் அலர்ட் ஆகத்தொடங்கிவிட்டன. கலைஞர் தொலைக்காட்சியில் குறும்படத்தை ஒத்த காட்சிகள் விரிந்து அரசின் சாதனைகளை விளக்கும் நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. அ.தி.மு.கவும் எழுந்து கொள்ளும், கேப்டனும் முழு மூச்சுடன் இயங்க ஆரம்பிப்பார்.....


தீர்மானிக்கும் வலுவற்ற மக்களின் மூளைகளை ஊடங்கள் கண்டிப்பாய் சலவை செய்யத்தான் போகின்றன. தேர்தல்ல யார் ஜெயிப்பான்னு கேக்குறீங்களா....?


' என்ன கேள்வி இது? யார் அதிக பணமும் மக்களின் மூளைகளை வசியம் செய்யும் யுத்தியும் அட்டகாசமாய் செய்கிறார்களோ அவர்கள்....!


பஞ்ச் 2: சமீபமாய் எல்லோரும் பார்த்த ஒரு நிகழ்வுதான் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் நடக்கும் கேவலமான ஒரு சண்டை அதுவும் ஒரு பாலகனை முன்னிறுத்தி நடந்து கொண்டிருப்பதும் சாதாரண குடும்பச் சண்டையை தீர்க்க முடியாமல் ஏதேதோ உந்துதலின் பேரில் சட்டமும் காவல்துறையும் கைகட்டி நிற்பதும் ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.


அதுவும் விஜயகுமாரின் மகளைச் சுற்றி சுற்றி ஊடகங்கள் நடைபோட்டு அவர் அத்து மீறிகாவல் துறையையும் சட்டத்தையும் பேசும் ஆபாச வார்த்தைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டி தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றன.


வெகு ஜன ஊடகங்கள் இப்படி தேவையில்லாத விருந்து வைப்பதை நிறுத்துமா? அரசு ... இது போன்ற அத்துமீறல்களை சட்டப்படி தீர்க்குமா?


பஞ்ச் 3: தமிழ்நாட்டு அரசியலில் காமராஜருக்கு அப்புறம் கால்வைத்து நிற்க முடியாமல் திராவிட கட்சிகளுடம் கூட்டுவைத்து கும்மியடிக்கும் காங்கிரஸின் குறி இப்போது இளைஞர்கள்தான். இளைஞர்களைப் பிடிக்கவைக்கும் பொறி ராகுல் காந்தி. தமிழனுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான சில உள்கொள்கைகளை வைத்துக்கொண்டு காந்தியையும் நேருவையும், இந்திராவையும் காட்டி ஓட்டுக் கேட்கும் இவர்கள்....


ஈழத்தில் நடாத்தி முடித்த கொலைகளும், ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்ட ஸ்பெக்டரமும் மக்களின் நினைவுகளுகுள்ளேயே வராது என்று நினைத்துக் கொண்டு காய்களை நகர்த்துகிறார்கள்....!


உண்மைகள் உரைக்காமால் வேறு யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் கையை பார்த்துக்கொண்டே இருக்கப்போவது நமது தலை எழுத்து.


பஞ்ச் 4: ஏழைககள் தமிழ் நாட்டில் இருக்கு வரை இலவசங்கள் தொடரும் என்ற முதல்வரின் கூற்றுக்கு பின்னால் மிகப்பெரிய கருணை இருப்பது போல மக்கள் நினைத்துக் கொள்வார்கள் ஆனால் ஏன் ஏழைகள் இருக்கிறார்கள் என்ற எதிர் கேள்விக்கு பதில் சொல்ல திரணியிருக்குமா? இலவசங்கள் கொடுத்துக் கொண்டு நாங்கள் பேர் வாங்கிக் கொள்கிறோம்..ஏழைகளே நீங்கள் ஏழைகளாக இருங்கள்...


இது ஆளும் கட்சி மட்டுமல்ல...தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தார்மீக சூத்திரமே இதுதான்...! சரி என்னதான் செய்வது ஏழைகளாகவே இருப்போம் ...நீங்கள் எல்லாம் ராஜவாகவே இருக்கங்கள்...!


பஞ்ச் 5: வலைப்பூக்களில் சினிமா விமர்சனம் எழுதுபவர்களில் இருந்து சாதரண கட்டுரை எழுதுபவர்க்ள் எல்லாம் தேவையில்லாத பெண்களின் கவர்ச்சிப் படத்தை போட்டுவிடுகிறார்கள். கேட்டால் ஆபாசம் எங்கு இல்லை என்ற கேள்வி வேறு வக்கனையாய்... ! இன்னும் கேவலமான தலைப்புகள் வேறு.... ! ஆபாச படங்களை விமர்ச்சிகிறேன் பேர்வழி என்று பொதுவாக மக்களுக்கே தெரியாத அசிங்கங்களை எல்லாம் எடுத்து வந்து ... பொதுவில் கொட்டுகிறார்கள்..!


என்ன செய்வது.. தமிழில் டைப் செய்ய மென்பொருளும், இணைக்க திரட்டிகளும் இருக்கின்றன... ! பாவம் வலைப்பூவிலாவது நேர்மையான போக்கும் இருக்கும் என்று வாசிக்க வருபவன் கதி அதோ கதிதான்....!

இந்த வராத்திலிருந்து 'பஞ்ச்' சாமிர்தம் உங்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் வரும்....உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


18 comments:

பெசொவி said...

super!

Anonymous said...

//ஏழைககள் தமிழ் நாட்டில் இருக்கு வரை இலவசங்கள் தொடரும் - முதல்வர்//

அடங்கொய்யால, மக்களை இலவசங்களுக்கு அலையற பிச்சைக்காரங்களாவே மாத்திட்டு இப்படி பேச வெக்கமா இல்லை?

Prathap Kumar S. said...

//ஏன் ஏழைகள் இருக்கிறார்கள் என்ற எதிர் கேள்விக்கு பதில் சொல்ல திரணியிருக்குமா?//


ஏழ்மையை இல்லாமல் ஆக்குவோம் எனச்சொல்ல வக்கத்த முதல்வர். இலவசங்களைக் கொடுத்து ஏழைகளை என்றென்றும் கையேந்திகளாகவே இருக்கட்டும் ஆசைப்படுகிறார். இவர் குடும்பம் மட்டும் கோடிகளை சேர்த்து உலகப்பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கட்டும். நாட்டு மக்கள் ஏழைகளாவே இருக்கட்டும் என்பதே இவர்கள் எண்ணம். ஒட்டுப்போடும் மக்கள் இனியாவது சுதாரிப்பார்களாக.

Unknown said...

சிந்தையில் இனிக்கும் பஞ்சாமிர்தம்

மாணவன் said...

பஞ்சாமிர்தம் நல்லாருக்கு,

//இந்த வராத்திலிருந்து 'பஞ்ச்' சாமிர்தம் உங்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் வரும்....உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.//

எதிர்பார்ப்புடன்........

மாணவன் said...

//என்ன செய்வது.. தமிழில் டைப் செய்ய மென்பொருளும், இணைக்க திரட்டிகளும் இருக்கின்றன... ! பாவம் வலைப்பூவிலாவது நேர்மையான போக்கும் இருக்கும் என்று வாசிக்க வருபவன் கதி அதோ கதிதான்....!//

இங்க வச்சிங்க பாரு ட்விஸ்ட்டு...

இதுதான் செம்ம பஞ்ச்...

Anonymous said...

ஹ ஹ ஹ
என்ன ஒரு தாக்கல்
பாக்கலாம் தீர்வு கிடைக்குமா என்று ..
நல்ல அமிர்தம் ...

எஸ்.கே said...

ஏழைகளை ஒழிப்பேன் என்று சொல்லாமல் இலவசம் கிடைக்கும் என்று சொல்லும் அரசு! என்ன கொடுமை!

எஸ்.கே said...

கழுகின் பஞ்சாமிர்தம் தொடர்ந்து கிடைக்கட்டும்!

Kousalya Raj said...

அட காலையில் தினசரியில் பார்த்த செய்தி இப்ப கழுகில்...?! கழுகு ஒரு முடிவுலத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். பஞ்சாமிர்தம் 'மருந்து கலந்த இனிப்பு'

தினமும் பதிவா...?! வாழ்த்துகிறேன்...பல தலைகள் உருளும் என்று எதிர்பார்கிறேன் !! :))


இன்னைக்கு பஞ்சாமிர்தம் நல்ல டேஸ்ட் !!

இம்சைஅரசன் பாபு.. said...

கழுகில் மற்றுமொரு அற்புதமான படைப்பு கொஞ்சம் அரசியல் இருப்பதனால் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு .பஞ்சாமிர்தத்தில் சர்க்கரையுடன் இன்னும் கொஞ்சம் தேன் ஊற்றினால் இன்னும் இனிக்கும் என்று நினைக்கிறன் .வரும் காலங்களில் பாப்போம்

இம்சைஅரசன் பாபு.. said...

//
வலைப்பூக்களில் சினிமா விமர்சனம் எழுதுபவர்களில் இருந்து சாதரண கட்டுரை எழுதுபவர்க்ள் எல்லாம் தேவையில்லாத பெண்களின் கவர்ச்சிப் படத்தை போட்டுவிடுகிறார்கள். கேட்டால் ஆபாசம் எங்கு இல்லை என்ற கேள்வி வேறு வக்கனையாய்... ! இன்னும் கேவலமான தலைப்புகள் வேறு.... ! ஆபாச படங்களை விமர்ச்சிகிறேன் பேர்வழி என்று பொதுவாக மக்களுக்கே தெரியாத அசிங்கங்களை எல்லாம் எடுத்து வந்து ... பொதுவில் கொட்டுகிறார்கள்..!//

எல்லாம் எதற்கு ஹிட்ஸ் வாங்கி .....சொந்தமா ஒரு வீடு ரெண்டு கார் .வாங்க தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சூப்பர் பஞ்ச் அமிர்தம். கலக்குங்க

vasan said...

69 ல் இருந்து நாற‌ப‌தாண்டுக‌ள், மாற்றி மாற்றி திர‌விட‌ க‌ழ‌க‌ங்க‌ளின் (ஒரே குட்டையில் ஊறிய‌ ம‌ட்டைக‌ள்)ஆட்சிதான் த‌மிழ‌க‌த்தில். இதில் இந்த விஞ்ஞாண குணாள‌ர் ம‌ட்டுமே ஐந்து முறை முத‌ல்வ‌ராய். இன்னும் ஏழைக‌ளை, ஏழ்மையை அக‌ற்ற‌ முடியாம‌ல் பிச்சை (இல‌வ‌ச‌ம்) போட்டுக் கொண்டேதான் இருப்பேன் என்கிறார். உங்க‌ள் ஆட்சியின் ல‌ட்ச‌ணம் ம‌க்க‌ளுக்கும், உங்க‌ளுக்கும் எப்போதுதான் புரியும்? ம‌க்க‌ளுக்கு புரியும் வ‌ரை உங்க‌ள் காட்(சி)டில் அடை ம‌ழைதான்...

சர்பத் said...

super punch :)

வைகை said...

பஞ்ச் நெறையபேர பஞ்சராக்கும்போல?!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல முயற்சி.. அனைத்து, சூடான செய்திகளும்... உடனே தரேன்னு சொல்றீங்க.. வேண்டாம்னா சொல்ல போறேன்.. உங்க சேவை தொடரட்டும்...!!

பஞ்சாமிர்தம்.... ஹ்ம்ம்...நல்ல செலெக்ஷன்...!! :)

சுபத்ரா said...

Wow.. A Remarkable Effort by Kazhuhu!

நான் சொல்ல நினைத்ததை எல்லாரும் சொல்லிவிட்டார்கள்! அதனால் All the Best மட்டும் :-)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes