Wednesday, January 05, 2011

எஸ்.கே யோடு சில மணி நேரங்கள்........ஒரு சுவாரஸ்யமான பேட்டி!







இரவின் நுனியில் காத்துக்கிடக்கும் விடியலைப் போன்று கனன்று கொண்டிருக்கிறதும் எமது வாழ்க்கை. இடிபாடுகளுக்குள்ளும் நெரிசல்களுக்குள்ளும் உழன்று உழன்று நகர வேண்டிய எமது இலக்குகள் இருப்பது திறந்திருக்கும் வானங்கள் தாண்டியது.. அவற்றை நாம் தெரு முனைகளில் தேடுகிறோம் என்று என்ற எண்ணங்கள் சிலருக்கு வருவது அறியாமையின் உச்சம்.


எமது நோக்குகள் சமகாலத்தில் மிகையானவர்களுக்கு பிடிபட போவதில்லை. எமக்கும் பிடிபடாத மனிதர்களைப் பற்றிய கவலையும் எம்மைப் பற்றி கர்வமும் இல்லை ஆனால் சத்தியம் பேசுகின்ற நாக்குகள் அறுபடவேண்டும் என்ற மூளைகளை சிந்திக்கும் முன்பே பொசுக்கிவிடும் வல்லமை கொண்டவர்கள் யாம் என்பதை சப்தமின்றி தெரிவிப்பதும் எமது கடமை.


நீண்ட நெடிய எமது பயணத்தின் வழியே பதிவர்களின் பேட்டிக்காக யாம் தேடிச் சென்றமர்ந்தது சகோதரர் சுரேஷ் அவர்களின் வீட்டு மதில் சுவரில். பிரபலங்கள் என்ற வார்த்தைக்கு லெளகீக உலகம் கொள்ளும் பொருள் வேறு.... ஆழமான எமது பார்வைகள் கொண்ட பொருள் வேறு......


மாற்றுத் திறனாளியான சகோதரர் சுரேஷின் போரட்டங்கள் நமக்கு படிப்பினை மற்றும் மிகப்பெரிய வழிகாட்டல் .இளங்கலை மனோதத்துவ பட்டதாரியான அவர் கணிணி தொழில் நுட்பத்திலும் வல்லுனர். கணக்கிடலங்கா திறமைகளை உள்ளடக்கியிருக்கும் சகோதரர்....தன்னின் வெளிப்பாடுகளை எல்லாம் ஆக்கப்பூர்வமாக நேர்மறையாக வெளிப்படுத்திக் கொண்டு இருப்பவர்....


சமகாலத்தில் சோம்பித் திரியும், எதிர்மறை சிந்தனைகள் கொண்டு விரக்தியில் இருக்கும் அனைவரும் சுரேஷினை படிப்பினையாகக் கொள்ளல் நலம்....! பேட்டி என்று கேட்டதும் வேண்டாம் என்று அவர் மறுத்தும்... நமது அன்பிற்காக பிறகு ஒத்துக் கொண்டார்....



இதோ சுரேஷ் பேசுகிறார்.... கழுகிற்காக....




1) வலையுலகம் என்ற ஒன்றை எப்படி அறிந்தீர்கள்?


முதலில் கழுகுக்கு மிக்க நன்றி! நிச்சயமாக நான் பேட்டி தரும் அளவிற்கு மதிப்புடையவன் அல்ல! இருந்தாலும் என்னிடமும் பேட்டி காண்பதற்கு மிக்க நன்றி!


4 வருடம் முன்தான் எனக்கு கணிப்பொறியே அறிமுகமானது. அப்போதுதான் இணைய இணைப்பின் மூலம் வலைப்பூக்கள் இருப்பதை அறிந்தேன் நானும் விளையாட்டாக ஒரு வலைப்பூ தொடங்கி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அதை அப்படியே விட்டு விட்டேன். பின் தமிழில் வலைப்பூக்கள் இருப்பதை அறிந்தேன். சில ஃபோரம்களையும் அறிந்தேன். சிலவற்றில் இணைந்து சில மாதம் இருந்தேன். பின் வேலை, உடல்நிலை காரணமாக எதையும் தொடரமுடியவில்லை.


மீண்டும் சென்ற வருடம் மே மாதம் என் வேலையில் முழுமூச்சாக இறங்கிய போது ஒரு டைவர்சனுக்காக தமிழ் வலைப்பூக்களை பின் தொடர ஆரம்பித்தேன். பின் நானும் ஏதாவது எழுதலாம் என ஒரு வலைப்பூ ஆரம்பித்தேன்.

2) எது பற்றியெல்லாம் எழுத
ஆசைப்படுகிறீர்கள்?



முக்கியமாக மனோதத்துவம் பற்றி எழுத வலைப்பூ ஆரம்பித்து தொழிற்நுட்ப விசயங்கள் அதிகமாகி விட்டது. தொழிற்நுட்பம், மனோதத்துவம், அறிவியல் இதைத்தான் அதிகமாக எழுத விரும்புகிறேன். ஆனால் சில கல்வி, சுயமுன்னேற்றம் போன்ற சமூக விசயங்களையும் எழுதலாம் என நினைக்கிறேன்.


3) மனோதத்துவத்தை நீங்கள் பயில எதுவும் பிரத்தியோக காரணம் உண்டா?


நான் பிசியோதெரபி படிக்கும் காலத்திலேயே மனோதத்துவம் மீது தனி ஈடுபாடு வந்து விட்டது. பின் அதையே முழுமையாக படித்தேன். உளவியல் மற்றவரை நன்றாக புரிந்து கொள்ள உதவும். அதை விட நம் மனதை/நம்மை நாமே முழுமையாக அறியலாம்.


4) பதிவுலகில் தற்காலிக நிலைமை பற்றி உங்கள் கருத்து?


எல்லோருக்கும் தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதில் தவறில்லை. சிலருக்கு ஒன்றிரண்டு பின்னூட்டம் போதும். சிலருக்கு மேலும் சில வேண்டும். எல்லோரும் வலைப்பூவை ஒரு டைம்பாஸாக, மாறுதலுக்காகவே எழுதுகிறோம். எனவே அவரவர் மனம் விரும்புபடி எழுதலாம். ஒருவரின் போக்கு மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம். எல்லோர் கருத்தும் எல்லோர்க்கும் பிடிக்காதே! ஆக்க பூர்வமாக எழுதுவதும், பொழுதுபோக்காக எழுதுவதும் அவரவர் விருப்பமே, யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு இந்த சண்டைகள் மட்டும்தான் பிடிக்கவில்லை. ஏனெனில் பிரச்சினைகளை மறக்க வலைப்பூவை நாடும்போது அங்கும் பிரச்சினை என்றால் எப்படி? முடிந்த வரை எல்லோருடனும் இனிமையாக பழக முயற்சிப்போம். நம் கருத்தை மென்மையாக சொல்வோம். மற்றவர் கருத்தை அமைதியாக ஏற்போம்.


5) தன்னம்பிக்கை இந்த வார்த்தைகள் உங்களிடம் விளக்கம் பெற துடிக்கின்றன? விளக்குங்கள்?


தன்னம்பிக்கை என்பது ஒன்றுமில்லை உடலில் இருக்கும் உயிர் அவ்வளவுதான். அது இல்லாவிட்டால் வாழ்க்கை பூச்சியம்தான்!
தன்னம்பிக்கை இருந்தால் கோமாவில் இருந்தால் கூட உங்களை நோக்கி உலகை திரும்பி பார்க்க வைக்க முடியும். வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை அடிக்கடி ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கும்போது அதை எப்படி தீர்ப்பது என்றுதான் மனம் யோசிக்கும், அதை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்காது. இந்த தன்னம்பிக்கை உங்களுக்குள்தான் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் இதை பெருமளவு வளர்த்து கொள்ளலாம்.


6) ஏன் நல்ல பதிவுகளை வாசகர்கள் தேடிப்படிப்பதில்லை?


அப்படி சொல்ல முடியாது. ரசனைகள் பலவிதம். ஒரு தொழிற்நுட்ப பதிவு இருக்குன்னா அது படிக்கிறவருக்கு தேவைப்பட்டாலோ அந்த டாபிக் கவர்ந்தாலோதான் அதை அவர் படிப்பார், ரசிப்பார். அது போலத்தான் எல்லாமே. சில சமயம் சிலரை அந்த நல்ல பதிவுகள் கவராமல் போகலாம். அதே சமயம் அந்த நல்ல பதிவின் தேவை அவசியமாகும்போது அதை நாடிச் சென்றும் படிக்கலாம். இங்கே வைக்கப்படும் தலைப்புக்களும் டாபிக்களும் தான் பெரும்பாலும் வாசிப்பவர்களை ஈர்க்க காரணமாகிறது. மேலும் இங்கே அதை விளம்பரப்படுத்தும் யுக்தியும் தேவைப்படுகிறது. நம் வலைப்பூ ஓரளவு பிரபலமாகும் வரை நம் பதிவுகளுக்கு வரவேற்பு இருக்காது.


7) எதை எல்லாம் மன அழுத்தம் என்று சொல்கிறோம்?


இது ஒரு நல்ல கேள்வி. ஒருவர் மற்றவர் கெட வேண்டும் என நினைக்கிறார். அது நடக்கவில்லை என்றால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒருவர் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் அது நடக்கவில்லை என்றாலும் மன அழுத்தம் ஏற்படலாம். நாம் எல்லோருக்கும் அடுத்தவாரம் இந்த இடத்துக்கு போகணும், இந்த புரொமோசன் கிடைக்கணும் இப்படி சிறியதாக, பெரியதாக பல டார்கெட்கள் இருக்கும். அதெல்லாம் நிறைவேறாதப்ப கவலை, கோபம், எரிச்சல் போன்றவை ஏற்படலாம். அதுவே தொடர்ந்து நடந்தா மனசு அதற்கான எதிர்விளைவை செய்ய முடியாம கஷ்டப்படுவதைதான் மன அழுத்தம் என்கிறோம்.




8) ஒருவருக்கு எந்த நிலையில் மன அழுத்தம் வருகிறது ?


முந்தைய கேள்வியிலேயே இதை சொல்லிருக்கிறேன். மனசு நினைக்கும் ஒன்று நிறைவேறாதபோது, அதுவே தொடர்ந்து நடக்கும்போது, மனம் அது நம் கட்டுப்பாட்டில் இல்லையே என நினைத்து கஷ்டப்பட்டும்போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது.


9) எப்போதும் மன அமைதியா இருக்க என்ன செய்யலாம்?


ரொம்ப கஷ்டமான கேள்வி. அப்படி இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்!!!! மனிதனுக்கு ஆசைகள், விருப்பங்கள், இலக்குகள், எதிர்பார்ப்புகள் போன்றவை இல்லாவிட்டால்தான் எப்போதும் மன அமைதியாக இருக்க முடியும். இருந்தாலும் நாம் முடிந்த வரை மன அமைதியோடு இருக்க செயல்கள், எண்ணங்கள் போன்ற எல்லாவற்றிலும் திருப்தி வேண்டும். மற்றபடி தியானம், யோகா போன்றவையெல்லாம் கூடுதலானவைதான்!

10 ) சினிமா பற்றிய உங்கள் ஆர்வம் எப்படி?



சினிமாவில் எனக்கு எந்த நடிகர் மீதும் பற்றும் கிடையாது துவேசமும் கிடையாது. என்னை பொறுத்தவரை காமெடியான படங்கள் எதுவானாலும் பார்ப்பேன். எந்த படமாக இருந்தாலும் நான் முதலில் எதிர்ப்பார்ப்பது நகைச்சுவையைதான்! சில திரில், திகில் வகையான படங்களும் பிடிக்கும். ஆங்கிலப் படங்களை இதற்காகத்தான் பார்க்கிறேன்.




இந்த கேள்விக்கு மன்னிக்கவும்..........சுரேஷ்.. இருந்தாலும் நிறைய பேருக்கு தெரியவேண்டும் என்பதற்காக கேட்கிறோம்...


11) மாற்றுத் திறனாளியான நீங்கள்...கல்வி கற்கும்போது சந்தித்த சங்கடங்கள் அதை நீங்கள் தாண்டி வந்த முறைகள்...கொஞ்சம் கூறுங்களேன்?


வாழ்வில் நான் மறக்க நினைக்கும், ஆனால் மறக்க முடியாக சங்கடங்கள் பல உள்ளன. பள்ளி வாழ்க்கை வரை பெரிதாக எனக்கு சங்கடங்கள் வந்ததில்லை! கல்லூரி நாட்களில் இறுதியாக ஏற்பட்ட சம்பவம்தான் என்னை பாதித்தது. பெரும்பாலும் சிறு வயது முதலே நான் செல்லும்போது என்னை ஒரு வித்தியாசமாக பலர் பார்ப்பதை நான் அனுபவித்துள்ளேன். அவை ஆரம்ப காலங்களில் சங்கடமாக இருந்தபோதும் பின் பழகி விட்டன.

12) தாய் தந்தை........ஒருவரின் வாழ்கையில் எவ்வளவு மதிக்கப்பட வேண்டியவர்கள்?



வாழ்வில் நீங்கள் காணக் கூடிய தெய்வங்கள் அவர்கள். என் வாழ்வில் என் பெற்றோர்கள் இல்லாவிட்டால் நான் இன்று உயிருடனே இருந்திருக்க மாட்டேன். வாழ்வின் தோல்விகள் அனைத்திலும் ஊக்கம் தந்து உறுதுணையாக கைதூக்கி விட்டார்கள். வாழ்வில் இனி வரும் காலங்களில் நான் எதையாவது சாதிக்கலாம், அதன் முழு பலனும் இவர்களுக்கே போய் சேரும். பெற்றோர்கள் நம் ஆறாவது புலன்கள்!




(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)





36 comments:

Chitra said...

நல்ல கருத்துக்களை, பதில்களை தந்துள்ள கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

// ஏன் நல்ல பதிவுகளை வாசகர்கள் தேடிப்படிப்பதில்லை?//

இதற்க்கான பதில் சிறப்பானது .. வாழ்த்துக்கள் ..

எஸ்.கே said...

என்னிடம் பேட்டி கண்டதற்காக மிக்க நன்றி கழுகுக்கு! பேட்டி தருமளவு தகுதியுள்ளவனில்லை நான். மிக்க மகிழ்ச்சியடைகிறேன் இந்த வாய்ப்பிற்காக!

Kousalya Raj said...

இது பேட்டியாக எனக்கு தெரியவில்லை...பாடமாக இருக்கிறது. எனக்கு இவரை பற்றி சௌந்தர் மூலமாக கொஞ்சம் தெரியும் என்றாலும் இந்த பேட்டி இன்னும் தெளிவாக சொல்கிறது.

//நம் கருத்தை மென்மையாக சொல்வோம். மற்றவர் கருத்தை அமைதியாக ஏற்போம்.//

அவரின் இந்த பதிலை நான் மிக மதிக்கிறேன்.

//தன்னம்பிக்கை என்பது ஒன்றுமில்லை உடலில் இருக்கும் உயிர் அவ்வளவுதான். //

ஒவ்வொருத்தரும் தங்களின் உயிரை எதன் மீதில் எல்லாம் வச்சு இருக்கிறோம். ஆனால் தன்னம்பிக்கையை உயிராய் நினைக்கிற மனபக்குவம் இருக்க வேண்டும் என்கிற உங்களின் அருமையான வார்த்தைக்கு தலை வணங்குகிறேன் சுரேஷ்.

//நல்ல பதிவுகளை வாசகர்கள் தேடிப்படிப்பதில்லை//

இதற்கு உங்களின் பதில் மிக சரி.

மன அழுத்தம் பற்றிய விளக்கமும் அதை குறைக்க சொல்லி இருக்கும் வழி முறைகளும் நன்று. எனக்கு தேவைதான் இப்போது...நன்றி

உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களை சுருக்கமாக சொன்னது அவற்றை நீங்கள் மறக்க முயலுகிறீர்கள் என்பதும் நினைக்க விரும்பவில்லை என்பதும் தெரிகிறது.

//பெற்றோர்கள் நம் ஆறாவது புலன்கள்!//

என் மனதில் இன்று நீங்கள் மிக உயர்ந்து விட்டீர்கள்.

அதற்காக கழுகிற்கு என் நன்றிகள் பல.

செல்வா said...

/சினிமாவில் எனக்கு எந்த நடிகர் மீதும் பற்றும் கிடையாது துவேசமும் கிடையாது.என்னை பொறுத்தவரை காமெடியான படங்கள் எதுவானாலும் பார்ப்பேன். எந்த படமாகஇருந்தாலும் நான் முதலில் எதிர்ப்பார்ப்பது நகைச்சுவையைதான்! //

எனக்கும் நகைச்சுவைதான் பிடிக்கும் .. ஹி ஹி .. என்னைய மாதிரியே நீங்களும் ..

செல்வா said...

உண்மைலேயே கலக்கலான கேள்விகள் மற்றும் பதிகள் .!
கழுகு உயரே பறக்கட்டும் .!

Ramesh said...

எல்லா பதில்களுமே திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய கருத்துக்களுடனேயே இருக்கின்றன எஸ்.கே... தேர்ந்த பதில்கள் வாழ்த்துக்கள்...

//பெற்றோர்கள் நம் ஆறாவது புலன்கள்!//

நச் வரிகள்..

அருண் பிரசாத் said...

Hats Off to SK....

அருமையான கேள்விகள்
தெளிவான பதில்கள்...

அருண் பிரசாத் said...

//ஏன் நல்ல பதிவுகளை வாசகர்கள் தேடிப்படிப்பதில்லை?//

நச் பதில்கள்....

சசிகுமார் said...

//நம் வலைப்பூ ஓரளவு பிரபலமாகும் வரை நம் பதிவுகளுக்கு வரவேற்பு இருக்காது.//

உண்மை எஸ்கே சார்

Unknown said...

நண்பர் எஸ்.கேவின் வாழ்க்கை எனக்கு ஒரு பாடம், அவர் மென்மேலும் வளர சாதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், பேட்டி கண்ட கழுகிற்கும் எனது நன்றிகள்.

Karthick Chidambaram said...

//ஏன் நல்ல பதிவுகளை வாசகர்கள் தேடிப்படிப்பதில்லை?//

Nice Answer

'பரிவை' சே.குமார் said...

இது பேட்டியாக எனக்கு தெரியவில்லை...பாடமாக இருக்கிறது.

வைகை said...

நண்பர் எஸ் .கே பற்றி நண்பர்கள் மூலமாகவும் வலைப்பூவின் மூலமாகவும் கொஞ்சம் தெரியும்! இருந்தாலும் இந்த பேட்டி அவருடன் பேசிய உணர்வை தந்தது!

Jaleela Kamal said...

அருமையான கேள்வி பதில்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருமையான கேள்விகள்
தெளிவான பதில்கள்...

Unknown said...

உண்மையிலயே மிகவும் அருமையான பதில்கள்..

இம்சைஅரசன் பாபு.. said...

எத்தனையோ பேர் பதிவு எழுதுகிறார்கள் .....ஆனால் .அடுத்தவர்களுக்கு உபயோகமான பதிவை எழுதுபவர் எஸ்.கே .அவரை பற்றி நன்கு தெரியும் நண்பர்களில் நானும் ஓருவன் .
மத்தபடி பதிகள் எல்லாம் நச்.....கழுகுக்கு நன்றி .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நண்பர் எஸ்கேவின் பேட்டியைப் போட்ட கழுகிற்கு நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள், சிந்திக்க வைக்கும் பதில்கள். வாழ்த்துக்கள் எஸ்கே....!

Balajisaravana said...

மிகச் சிறப்பான புரிதலோடு பதில்கள். வாழ்த்துக்கள் எஸ்.கே!

Balajisaravana said...
This comment has been removed by the author.
TERROR-PANDIYAN(VAS) said...

:)

விஜய் said...

ஒவ்வொரு பதிலும் சுவற்றில் அடித்த ஆணி போல் மனதில், மிக அருமையான கேள்விகள் , அதற்கேற்ப மிக தெளிவான பதில்கள், அருமை...தனது வேலைகளை கவனிக்க நேரமின்றி சுத்தி திரியும் இக்காலத்தில், கண்களை விரித்து, தேடி,தேர்ந்த எழுத்தாளர்களிடமும், வாழ்க்கையில் தேர்ந்த அறிவுமிக்கவர்களிடம் பேட்டி காணும் என் கழுகிற்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் முதலில் ..

இறப்பதற்கு முன் இம்மண்ணின் ஒரு துளி நிறத்தையேனும் மாற்ற வித்திடும் எழுத்துக்களை பட்டை தீட்டி, கேள்விகளாய் வடிவமைத்து விட்டு அமைதியாய் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து இருக்கும் என் தேவாஅண்ணாவிற்கும எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் கழுகின் சார்பாக ,,,

தொடரட்டும் உன் எழுத்துக்கள் தீயவற்றை சுட்டெரிக்க ...

வினோ said...

பதில்கள் எல்லாம் வாழ்க்கை பாடங்கள்... நடைமுறை படுத்த வேண்டியவை...

சுபத்ரா said...

முதலில் எஸ்.கே. அண்ணாவைப் பேட்டி கண்ட கழுகுக்கு நன்றி! இந்தப் பதிவை வெளியிட்டதன் மூலம் கழுகு பறக்கும் உயரம் மேன்மேலும் உயர்ந்துவிட்டது என்பது திண்ணம்.

கேட்கப் பட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தரப்பட்ட பதில்கள் நச்! இருந்தாலும் இன்னும் விரிவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என என் மனதிற்குத் தோன்றியது.

எல்லாம் இருந்தும் குறைபட்டுக் கொண்டும் எதற்கெடுத்தாலும் பிறரைக் குறை கூறிக்கொண்டும் தர்க்கம் செய்து கொண்டும் பிறரது கருத்துக்களை மதிக்கத் தெரியாமல் தான் சொல்வதே சரி என்று சண்டையிட்டுக் கொண்டும் இன்னும் சில இழிவான செயல்களைச் செய்து புகழைத்தேடி அலைந்து கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் எஸ்.கே. அண்ணாவின் வாழ்க்கை ஒரு படிப்பினை என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை வாழ்வில் செய்த சாதனைகள் எல்லம் துச்சம் என்று போகும் வகையிலும் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையுமாறும் மேலும் பல சாதனைகளைச் செய்து அவர் வாழ்வில் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

ANNA, HATS OFF TO YOU!

அன்புத் தங்கை
சுபா.

ரேவா said...

இனி வரும் காலங்களில் நான் எதையாவது சாதிக்கலாம், அதன் முழு பலனும் இவர்களுக்கே போய் சேரும். பெற்றோர்கள் நம் ஆறாவது புலன்கள்!

அழகான கேள்விகள்... மிக நேர்த்தியான பதில்கள்......வாழ்த்துக்கள் எஸ். கே நண்பரே!!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதில்கள்

Angel said...

Fantastic questions and brilliant answers.
andha 7 vadhu question and its answer ...superb.
congrats S.K .

Asiya Omar said...

எஸ்.கேவை பேட்டி கண்டதற்கு கழுகிற்கு நன்றி.அருமையான கேள்வியும் பதிலும் நல்லதொரு பகிர்வு.எல்லாம் சிறந்ததுதான் என்றாலும் அந்த 5 வது கேள்வியும் பதிலும் என் மனதை தொட்டது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சுரேஷ் அவர்களின் பதில்களில்... உள்ள எளிமையும், உண்மையும்.. பிடிச்சிருக்கு...

//பெற்றோர்கள் நம் ஆறாவது புலன்கள்!///

//சினிமாவில் எனக்கு எந்த நடிகர் மீதும் பற்றும் கிடையாது துவேசமும் கிடையாது.///

//மனிதனுக்குஆசைகள், விருப்பங்கள், இலக்குகள், எதிர்பார்ப்புகள் போன்றவை இல்லாவிட்டால்தான்எப்போதும் மன அமைதியாக இருக்க முடியும்//

//தன்னம்பிக்கை என்பது ஒன்றுமில்லை உடலில் இருக்கும் உயிர் அவ்வளவுதான். அதுஇல்லாவிட்டால் வாழ்க்கை பூச்சியம்தான்!///

உங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவிய கழுகிற்கு.. நன்றிகள்..

Wonderful Job.. Dhevaa... :-))
All the very best..

அன்பரசன் said...

மிக அருமையான விளக்கம் ஒவ்வொரு கேள்விக்கும்..

ஜெய்லானி said...

கேள்விக்கேத்த பதில்கள் அருமை :-)

Arun Prasath said...

அருமை அருமை..... வேற என்ன சொல்ல?!

மங்குனி அமைச்சர் said...

தெளிவ்வா இருக்கு .........குட்

MANO நாஞ்சில் மனோ said...

பெற்றோர்கள் இல்லாவிட்டால் நான் இன்று உயிருடனே இருந்திருக்க மாட்டேன்.

Madhavan Srinivasagopalan said...

அருமையான பதில்கள், கருத்துக்கள்..
பேட்டி கண்டவருக்கு நன்றிகள்.
பேட்டி கொடுத்தவருக்கு கோடானு கோடி நன்றிகள்..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes