Saturday, January 08, 2011

தமிழேண்டா........ஒரு அலசல்!





இந்தக் கட்டுரையும் ஒரு சர்ச்சையைப் பற்றித்தான் பேசப்போகிறது. சர்ச்சைகள் எல்லாம் விவாதத்துக்கு வரவேண்டியவை என்பதில் தெளிந்தோருக்கும் புத்துலகை படைக்க யாக்கைகள் கொண்டிருப்பவர்களுக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது.

இங்கே சர்ச்சைக்குள் வந்திருக்கும் பதம் சிலருக்கு உடனே எரிச்சலூட்டலாம் சிலரின் கருத்தோடு ஒத்துப் போகலாம் சிலருக்கு கருத்து சொல்ல விருப்பமில்லாமல் சென்றும் விடலாம்..ஆனால் கட்டுரை விவாதப் பொருளை அதன் கண்ணோட்டத்திலே விட்டுத்தான் செல்கிறதே அன்று அதுவே இறுதி உண்மையா என்பது அவரவரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.

'தமிழன்'

இந்த பதத்தினை உபோயோகம் செய்துதான் கோட்டைகளின் நாற்காலிகள் நிரப்பப்பட்டிருக்கின்றன. பத்திரிக்கைகள் தமது விற்பனையை அதிகரித்திருக்கின்றன, சினிமாக்கள் வியாபரம் செய்திருக்கின்றன. நடிகர்கள் தம்மை முன்னிறுத்தி நிலை நிறுத்த கையாண்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகள் ஆரம்பித்த உடன் தமிழகத்தின் முதல் முழக்கம் " தமிழன் " .


சாமானிய மனிதர்களுக்கு கூட ஊட்டி ஊட்டியே வளர்க்கப்பட்டிருக்கிறது ' தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு ' என்று...ஆனால் அந்த கூற்றிலும் தமிழனுக்கு என்று இருந்த தனிச்சிறப்புகளிலும் எந்த ஒரு மருவும் இல்லை. தமிழனின் மொழி வளமானது, அவனது கலைகள் சிறப்பானவை, அவனது வீரம் போற்றுதற்குரியது, அவனது விருந்தோம்பல் அற்புதமானது, வணிகத்தில் அவன் கொடி பறந்தது, அவன் இலக்கியங்கள்அற்புதமானவை, அவனது பார்வையில் ஆன்மீகம் தெளிவானது......இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்........

இவை எல்லாம் பாட்டன் முப்பாட்டான் சொத்து, நமக்கு விட்டுச் சென்றது. அதை வைத்துக் கொண்டு நாமும் மாற்று சமுதாயத்திடம்....அருமை பெருமைகளைப் பேசி, பேசி, பேசி, பேசி வாய்கள் கிழிந்து இரத்தம் வரும் அளவிற்கு நிற்கிறோம். சரி நமது சந்ததியினர் நம்மைப் பற்றி பேச நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்று யோசித்திருக்கிறோமா?

இப்போதுதான் ஆரம்பிக்கிறது கட்டுரை தோழர்களே....

தமிழன் என்றால் பேசுவான்.. கதை அளப்பான்...தனது பரம்பரை பற்றி பேசுவான் செயலின் முடிவை விட அவனுக்கு இடையில் பேசும் கதைகளில் ஆவல் கூடுதல் இப்படி எல்லாம் சில கூற்றுக்கள் நம்மைப் பற்றி இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

தமிழர்கள் எப்போதும் தமது பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் கனவுகளில் மிதப்பவர்கள் அவர்கள் எப்போதும் எதார்த்த நடைமுறை வாழ்க்கைக்கு வரமாட்டார்கள் என்று கேள்விப்படும் கூற்றுகளில் உண்மை இல்லாமல் இல்லை என்றுதான் பெரும் கசப்போடு இந்த கட்டுரையும் அதை ஆமோதிக்கிறது.

எந்த இரு ஒற்றை மொழி பேசுவர்கள் எங்கே சந்தித்தாலும் தத்தம் தாய்மொழியில் உறவாடுவார்கள் ஆனால் தமிழன் தனக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தாலும் அதை வைத்தே தன்னுடைய சக தமிழனிடம் தன்னை மேம்படுத்திக் காட்டும் கர்வ நிகழ்வை வெட்கமே இல்லாமல் நிகழ்த்திக் காட்டுவான். இதில் உண்மை இருக்கிறதா இல்லையா? நம்மையே கேட்க வேண்டிய கேள்வி இது?

என்ன நடந்தது அதற்கான தீர்வுகள் என்ன என்பதை விட....எப்படி நடந்தது மேலும் ஏன் நடந்தது என்று அழுக்குப் புண்ணை சொறிந்து சொறிந்து சுகம் காணும் ஒரு சோம்பேறி மனோபாவம் எப்படி வந்தது நமக்கு? தமிழனின் பேச்சுதான் உணர்வுப் பூர்வமாய் இப்போது எல்லாம் இருப்பதற்கு காரணம் அவன் தன் மூதாதையர் சேர்த்து வைத்த செயல்களில் சுகம் கண்டு அதையே...பேசிப் பேசி போதையில் கிறங்கி தன்னின் இயல்புகள் மறந்து ஒரு சிக்குப் பிடித்த சமுதாயத்தினை நோக்கி சென்று கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும்......ஆனால் நாம் அதை ஒத்துக் கொள்ள மாட்டோம். நமது கைவிரல்கள் இப்பொது சுட்டிக்காட்டும் பணியைத்தான் செய்கிறதே அன்றி தன்னை உற்று நோக்கும் செய்கையை அல்ல...

கார்கிலிலும் மும்பையிலும் நிகழ்ந்த சம்பவங்களைத் தேசப்பற்றோடு எதிர்கொண்டு தேசியம் பேசும் தமிழர்களின் மூளைகளை அனுமதிக்கும் அதே நேரத்தில் ஈழத்தில் நடாத்தப்பட்ட கொடுமைகளின் உச்சங்களையும், நித்தம் மீன் பிடிக்கச்சென்று பணயக்கைதிகளாகவும், சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழன் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்களேன் என்று ஒரு தமிழன் சிந்தித்தால் இறையாண்மை வந்து நமது குரல்வளையை பிடிக்கும் என்று சாதாரண ஓட்டுரிமை உள்ள ஏழை வர்க்கம் கவலைப்படலாம் ஆனால் .. நாம் அதிகாரம் கொடுத்து மேலே ஏற்றி வைத்த அரசியல் முதலாளிகள் ஏன் இது பற்றி அக்கறைகள் கொள்ளவே இல்லை இதுவரை....

தமிழனென்ற பதம் உபோயோகம் கொண்டு வாக்குப் பிச்சைகளுக்காகா வரும் நீங்களும் தமிழர்கள் தானே அல்லது தமிழனைக் கொண்டுதானே உங்கள் வீட்டு சோற்றில் உப்புக்கற்கள் விழுகின்றன? அந்த கட்சிக்கு வாக்குகள் இடும் நாமும் தமிழர்தானே....தமிழனின் குறுதி கொட்டக் கொட்ட.. அதைப் பார்த்துக் கொண்டு பல்லிளித்துக் கொண்டு இருக்கும் நம்மை என்ன செய்வது?

தமிழ்நாட்டின் கல்வி அறிவில் 70%க்கும் மேல் இருக்கும் தமிழனின் மூளைகள் பெரும்பாலும் சிந்திகாமல் இருப்பதற்கு காரணம் பெருகிப் போய் விட்ட சுயநலம்தானே காரணமாக இருக்க முடியும். சென்னை போன்ற கற்றவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் போக்குவரத்தினை ஒற்றை போக்குவரத்து காவலாளி கொளுத்தும் வெயிலில் நின்று சரிப்படுத்தட்டுமே என்ற எண்ணம்தானே மஞ்சள் கோட்டை தாண்டி நடு ரோடு வரையும் நம்மை வாகனங்களை நிறுத்தச் செய்கிறது? குப்பைகள் போடக்கூடாது என்று அரசாங்கம் தண்டிக்கட்டுமே... என் தெருவில் இருக்கும் குப்பைகளுக்கு காரணம் நானில்லை அரசாங்கம். இப்படி குற்றம் சாட்டி, சாட்டி ஒருவரை ஒருவர் கைகாட்டிக் கொண்டு.....கேவலமாய் நகரும் வாழ்க்கையின் தீர்வுகளை நாம் தமிழர்கள் என்று பெருமைகள் பேசிக் கொண்டே நகர்வதால் தீர்ந்து விடுமா?

வாக்குகள் அளிக்க கைகளை ஏந்தும் நீர்த்துப் போன நிலைமையை விதைத்தது யார்? எம்மின் வயிறுகளை எப்போதும் பசித்தே இருக்கும்படி சபித்துப் போட்ட அதிகார வர்க்கத்தின் வேர்களை அறுப்பது எப்படி? தொல்லிய இனத்தின் வாரிசுகள் தமது பாரம்பரியம் மறந்து தம்மை வேங்கைக் கூட்டம் என்ற உணர்ர்சிகள் இழந்து பழம் கதைகளைப் பேசும் ஒரு செத்துப் போன பொற்காலங்களை வெறும் ஞாபகங்களாய் தமது மூளைகளில் தேக்கித்தான் நகரப்போகிறதா?

சமூக நல அமைப்புகளே, நேர்மையான அரசியல்வாதிகளே (கடும் எதிர்மறை பதம் தான் இது) நேர் நோக்கு கொண்ட புரவலர்களே தெருக்குத் தெரு விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளை எம்மக்களுக்கு நிகழ்த்தி ஒரு கண்ணாடி கொடுத்து தமிழனின் ஆதி சுய ரூபத்தை கொணர்வீர்களா? இல்லை மாதாந்திரக் கூட்டங்களில் தேநீரும், சில பிஸ்கெட்டுகளும் உண்டு விட்டு கருத்துக்கள வெறுமனே காற்றிலே பரவவிட்டுச் செல்வீர்களா?


அரசியல்வாதிகளின் போக்கைச் சொல்லி அவர்களை மாறவேண்டும் என்று எதிர்பார்க்கும் என் தமிழ் சிங்கமே............நாம் மாறவேண்டாமா? நம்மின் வலு கொண்டு எரியும் கற்கள் சர்வ நிச்சயமாய் இலக்குகளை தாக்கி அழிக்கத்தான் முடியாதா?

பேசிப் பேசி நமது பெருமைகளை கூவி கூவி சொன்னது எல்லாம் போதும் தோழா... ! இன்றே... நீ.. உன் வீடு......உனது நண்பர்கள், உறவுகள், பக்கத்துவீட்டு உறவுகள்...பேச்சை தொடங்கு...! நெருப்பை மனதில் விதை...பற்றிப்பரவட்டும் அக்னி எல்லா இடங்களிலும்...! வாக்குகளுக்கு காசுகளை கொடுக்காதே என்றால் கேட்க மாட்டார்கள் வீணர்கள்.... வாங்கமாட்டேன் என்று சொல்ல நம் வறுமை இடம் கொடுக்காது...

எதார்த்தமா நட... எல்லா நேரங்களிலும் நேரே சென்று சென்று தமிழன் தூக்கில் தொங்கியிருக்கிறான், வெள்ளைகொடி காட்டிய பொழுதும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான், நாம் சமயோசிதமாய் இருக்க கற்றுக் கொள்வோம்.......வாங்கு....இருப்பவன் கொடுக்கிறான்.........ஆனால் வாக்களிக்கும் போது தீர்மானி யாரை தீர்க்கலாம்........யாரை ஏற்றலாம் என்று.......

ஒப்பற்ற சமுதாயம் யார் சமைக்கப்போகிறார் நம்மை விடுத்து..........இன்றே தீர்மானிப்போம்.........புதியதொரு ஜகத்தின் வேர்களாகி நாளைய நம் சந்ததியினருக்கு நல்ல ஒரு சூழலை விட்டுச் செல்வோம்.



(கழுகு இன்னும் உயர பறக்கும்)



16 comments:

Vimal said...

நண்பரே தங்கள் அலசல் ஒரு நிதர்சனமான உண்மை... செருப்பால் அடித்த மாதிரி இருந்தாலும், எதையும் தாங்கும் தமிழன் இதையும் பொருட்படுத்தாது... சொரணையற்ற நம் மனப்போக்கு இது போன்ற சட்டையடிகளால் சிறிதேனும் மாறவேண்டும் என்று ஆசைபடுபவர்களில் நானும் ஒருவன். நம்பிக்கை தானே வாழ்க்கை.... சமீபத்தில் ஒரு சாலை சிக்னலில் நின்ற போது ஒரு வாகனத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.... "எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்"...

எஸ்.கே said...

உண்மைதான். நவீன நாகரிகம் என்ற பெயரில் நாம் நம் பாரம்பரி விசயங்கள் பலவற்றை சிதைத்திருக்கின்றோம்!

எஸ்.கே said...

தம் தாய்மொழியில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாக கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்!

செல்வா said...

//எந்த இரு ஒற்றை மொழி பேசுவர்கள் எங்கே சந்தித்தாலும் தத்தம் தாய்மொழியில் உறவாடுவார்கள் ஆனால் தமிழன் தனக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தாலும் அதை வைத்தே தன்னுடைய சக தமிழனிடம் தன்னை மேம்படுத்திக் காட்டும் கர்வ நிகழ்வை வெட்கமே இல்லாமல் நிகழ்த்திக் காட்டுவான். இதில் உண்மை இருக்கிறதா இல்லையா? நம்மையே கேட்க வேண்டிய கேள்வி இது?
/

முற்றிலும் உண்மை , ஆங்கிலத்தில் பேசினால் தான் மரியாதை என்றும் , தான் படித்த மேதை என்றும் அறிவர் என்ற எண்ணத்தில் தற்பொழுது பெரு நகரங்களில் நான் பார்த்தா அளவில் பெரும்பாலும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர்! மேலும் தமிழில் பேசுபவர் சற்று தரம் குறைந்தவராக கவனிக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im tamilan.

செல்வா said...

//அரசியல்வாதிகளின் போக்கைச் சொல்லி அவர்களை மாறவேண்டும் என்று எதிர்பார்க்கும் என் தமிழ் சிங்கமே............நாம் மாறவேண்டாமா? நம்மின் வலு கொண்டு எரியும் கற்கள் சர்வ நிச்சயமாய் இலக்குகளை தாக்கி அழிக்கத்தான் முடியாதா?
/

நானும் அதையே சொல்கிறேன் , மாற்றங்களை முதலில் நம்மில் இருந்து தொடங்கட்டும் , பிறரிடம் இருந்து எப்பொழுதும் தொடங்காது!

கழுகு said...

செல்வா...@ பழகத்தின் அடிப்படையில் வந்து விழும் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் பகட்டிற்காக வந்து விழும் வார்த்தைகளை பிறப்பிக்கும் புத்திகளில் இருக்கிறது அகந்தை.

கிராமப்புற மாணவர்களும், புது வேலை தேடுபர்களும் நகரங்களில் படும் அவமானம் வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாதாது........

கழுகு இது பற்றி தீர்க்கமான ஒரு கட்டுரையை விரைவில் சமைக்கும்.....!

நன்றிகள் தோழா!

கழுகு said...

நாம் என்ற ஒற்றை இடத்திலிருந்து தொடங்கும் எல்லாம்தான் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது. எப்படி முடியும் என்ற கேள்விகள் விடுத்தும் எம்மில் தொடங்கும் செயல்கள் என்பதை திண்ணமாக்கினால்...........விளைவுகள் வீரியமாயிருக்கும்.......!

பல கிலோமீட்டர்கள் பயணத்தின் ஆரம்பம் முதல் அடியிலிருந்துதானே தோழர்காள்.....!

சேலம் தேவா said...

குற்றம் சொல்வைத விடுத்து மாற்றம் நம்மிலிருந்து மலரட்டும்..!!

இம்சைஅரசன் பாபு.. said...

கலாசாரம் ,பாரம்பரியம் எல்லாம் பாழ்பட்டு கிடக்கிறது .......மாற்றம் நம்மில் இருந்து வரவேண்டும் என்பது சரியே

Kousalya Raj said...

தமிழன் என்று சொல்வதை பெருமையாக சொன்ன காலம் போய்விட்டது...தங்களை அடுத்த மாநிலங்களில் தம் மொழி பேசி வெளிகாட்டி கொள்ள தயங்குகிறார்கள் என்றே இப்போது கேள்விபடுகிறேன்.

தமிழை வளர்ப்போம் என்று மேடையில் மார் தட்டும் அரசியல் வாதிகள்...மேடைவிட்டு இறங்கியதும் மறந்துவிடுவது தான் கொடுமை.

தமிழன் தான் பிற மாநில மக்களை விட தெளிவாக ஆங்கிலத்தை உச்சரிக்கிறான் என்று ஒரு தினசரியில் படித்தேன்.

மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் நெத்தி அடி போல் இருக்கிறது. உணர்வடைய வேண்டும் மக்களே...

நமக்கென்ன என்ற மனப்பான்மை மாறவேண்டும் என்பதை அழுத்தமாக இந்த பதிவு சொல்லி இருக்கிறது.

//வாங்கு....இருப்பவன் கொடுக்கிறான்.........ஆனால் வாக்களிக்கும் போது தீர்மானி யாரை தீர்க்கலாம்........யாரை ஏற்றலாம் என்று.......//

இது தான் புத்திசாலித்தனம்...இதை உரத்து சொன்ன கழுகின் கம்பீரத்துக்கு என் வணக்கங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கட்டுரையோடு ஒத்துப்போகிறேன். சரியான மாற்றங்கள் வர, நம் இளையதலைமுறையைத் தயார்படுத்த வேண்டும். பள்ளிமாணவர்களுக்கு சரியான விஷயங்களைச் சொல்லித்தரவேண்டும். சமூகக்கடமைகள், ஒழுக்கம், பொறுப்பு, மனித உரிமை, சுற்றுச்சூழல், இயற்கை என்று அனைத்தும் நம் சிறுவர்களுக்கு இளம்வயதிலேயே மனதில் பதிய வைக்கப்பட வேண்டும்!

ரஹீம் கஸ்ஸாலி said...

அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 10-வது இடம். வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

மாற்றம் நம்மில் இருந்து வரவேண்டும் என்பது சரியே.

பனித்துளி சங்கர் said...

///////'தமிழன்'


இந்த பதத்தினை உபோயோகம் செய்துதான் கோட்டைகளின் நாற்காலிகள் நிரப்பப்பட்டிருக்கின்றன./////////


இரண்டு வரிகளில் வெகு நேரமாக சிந்தித்த முதல் தருணம் இந்த பதிவின் வாசிப்பில்தான் நிகழ்ந்தது . பதிவு முழுவதும் வாசித்து முடித்தபின் நானும் தமிழன் என்று பல முறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன் . பகிர்வுக்கு நன்றி

சுபத்ரா said...
This comment has been removed by the author.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes