இது தேர்தல் காலம்.....! அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் விழித்துக் கொண்டு இது பற்றியே பேசிக் கொண்டே இருக்க்ப் போகின்றன. இந்த தேர்தலில் கழுகின் பார்வை ஒரு வித்தியாமான கோணத்தில்தான் இருக்கப் போகிறது. அதனால்தான் அரசியல் கட்சிகளே சுறுசுறுப்பு அடையும் முன் நாம் நமது மூளைகளை உலுக்கி விட்டுக் கொண்டு இப்போதே தேர்தல் பற்றிய செய்திகளை கொணர ஆரம்பித்துள்ளோம்.
தேர்தலின் போது மக்கள் எப்படி இருக்கிறார்கள்? எது அவர்களின் முடிவை தீர்மானிக்கிறது? எமது குழுமத் தோழர் வைகையின் வரிப்புலி பாய்ச்சல் இதோ.....
தேர்தலின் போது மக்கள் எப்படி இருக்கிறார்கள்? எது அவர்களின் முடிவை தீர்மானிக்கிறது? எமது குழுமத் தோழர் வைகையின் வரிப்புலி பாய்ச்சல் இதோ.....
தேர்தல் காலம் இது....மக்கள் மவுன புரட்சிக்கு தயாராகும் காலமும் கூட....மேலோட்டமாக பார்த்தால் இதுவரை நடந்த தமிழக தேர்தல்களில் மக்கள் புத்திசாலித்தனமாக ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்ததுபோல தெரியும்...ஆனால் கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால், வோட்டு போடும் முன் ஐந்து வருட ஆட்சியை சீர் தூக்கி பார்க்காமல், கடைசி ஒரு வருட ஆட்சியை மட்டுமே கணக்கில் வைத்து உணர்சிகளுக்கு அடிமையாகி மட்டுமே வாக்களித்து வந்துள்ளனர்....இதனை ஆட்சியாளர்களும் உணர்ந்துள்ள காரணத்தினாலேயே நான்கு வருடம் அவர்தம் மக்களுக்காகவே ஆட்சியை நடத்தி விட்டு கடைசி ஒரு வருடம் மட்டும் நம் மக்களுக்காக ஆட்சி செய்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர்! அதுமட்டுமல்லாமல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இடைதேர்தல்களில் அளவு கடந்த பணம் விளையாடியது! இது இந்த தேர்தலிலும் தொடர ஆட்சியாளர்களும் தொடரவேண்டும் என்று மக்களும் விரும்பும் காலமிது!
வாக்களிக்கும் உரிமை என்பது விலைமதிப்பில்லாதது.... அது நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் துருப்புச்சீட்டு! இன்னும் சொல்லப்போனால் அது உங்களது அந்தரங்கம்! அதை யாருடனும் நீங்கள் பகிரவும் வேண்டாம்.....யாருக்கும் விலைபேசவும் வேண்டாம்! உங்களது அந்தரங்கம் உங்களுக்கு ரகசியமானதாக இருக்கலாம்....ஆனா ல் ஆபத்தானதாக இருக்க கூடாது... உங்களுக்கும்...உங்களை சார்ந் தவர்களுக்கும்! அதுபோலதான் உங்கள் வாக்கும்! உங்கள் ஒருவரது வாக்கு கூட நம் நாட்டின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டது! நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த பொறுப்பை உணர்ந்தாலே போதும்..அரசியல்வாதிகளின் ஆட்டம் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்!
நம் அரசியல் கட்சிகள் நடத்துகின்ற கூத்துகளில் முக்கியமானது கூட்டணி! நம் அகராதியில் இதற்க்கு என்னவோ ஒரே பொருள்தான்..... கூட்டுக்கொள்ளை! ஆனால் அரசியல் கட்சிகள் இதற்க்கு ஒவ்வொரு தேர்தலிலும் தரும் விளக்கம் அவர்களுக்கே புரியாது... உதாரணம்.... பரதேசிகள், பண்டாரங்கள் என்று பி ஜே பியை திட்டிய திமுகதான் பின்பு அவர்களோடு கூட்டணி ஆட்சி நடத்தியது....நான்கரை வருடங்கள் ஆட்சி முடிந்ததும்தான் இவர்களுக்கு திடீர் ஞானோதையம் வந்து மக்கள் விரோத ஆட்சி என்று வெளியில் வந்தார்கள்...காங்கிரசோடு கூட்டணி வைத்தார்கள்! இது என்ன கொள்கை என்று இவர்கள்தான் விளக்க வேண்டும்! அது மட்டுமா? மாநிலத்திலும் அப்படித்தான்..
திமுகவை எதிர்த்தே உதயமான மதிமுகவுடன் கூட்டணி...பின்பு விலகல், வசைகள்..... பின்பு அவர்களோடு கூட்டணி! பின்பு விலகல்! சந்தர்ப்பவாதத்தை மட்டுமே கொள்கையாக கொண்ட பாமக- வுடன் கூட்டணி பின்பு விலகல் விளையாட்டு ஒரு பெரிய காமெடி தர்பார்! இவர்களே தீர்மானம் போட்டு வெளியில் அனுப்பினார்கள்......இதோ இன்று ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்காக தவம் கிடக்கிறார்கள்! மக்களை முட்டாளாக்கும் இவர்களது இந்த கொள்கையைத்தான் பத்திரிக்கைகளும் வரிந்து கட்டி இவர்களது அரசியல் சாணக்கியத்தனம் என்று எழுதுகின்றன!
எதிர்க்கட்சியான அதிமுக-வும் இதற்க்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல...திமுக கூட்டணி வைத்த அனைத்து கட்சிகளுடன் இவர் களும் கூட்டணி வைத்தார்கள்....வைப்பார்கள்.... ..பிறகு என்ன கொள்கை வேறுபாடு இந்த பிரதான கட்சிகளுக்கு? இவர்கள்தா ன் விளக்க வேண்டும்! இதில் புதிதாக இப்பொழுது தேமுதி க-வும் சேர்ந்துள்ளது! ஆண்டவனுடனும் மக்களுடனும் மாறி மாறி கூட்டணி வைத்த இவர்கள் இப்பொழுது அம்மாவுடன் கூட்டணி வைக்க அலைமோதும் காலமிது! நாளை இவரே கலைஞரே எனது கடவுள் என்று அவருடனும் கூட்டணி வைத்தால் ஆச்சரியமில்லை! எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலு ம்...அவர்கள் ஒரு விசயத்தில் தெளிவாக இருக்கிறார் கள்! பதவி....பதவி..பதவி!
தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு இன்னொரு தலைவலி இந்த மீனவர் பிரச்சனை! ஆனால் மீனவர்களுக்கோ தலைபோகிற வலி! ஆயிரம் கடிதம், எண்ணூறு தந்திகள் அனுப்பியபின்னும் ஐநூற்று முப்பது மீனவர்களை பலிகொடுதபின்னும் நம்முடைய முதல்வர் சொல்லுகிறார் நம்முடைய பிரதமருக்கு இதைப்பற்றி சரியாக தெரியவில்லையாம்! பிரதமர் அலுவலக கழிவறையில் தண்ணீர் வசதி இல்லையா? உங்கள் கடிதங்கள்தானா?! தேர்தல் நேரத்தில் இறந்ததால் மட்டுமே கடைசியாக இறந்தவரின் மனைவிக்கு சத்துணவில் வேலை..! அப்ப இதுவரை இறந்தவர்களின் குடும்பங்களின் கதி?!! யாருக்காவது தெரியுமா? எதிர்க்கட்சி தலைவருக்கும் இப்பொழுதுதான் தேர்தல் கண்ணை திறந்து மீனவனின் சாவை காட்டிவிட்டதுபோல! அடித்துபிடித்து ஓடுகிறார்....தேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 531 தமிழக மீனவனுக்கு பிறகு 532- வது மீனவன்தான் இந்திய மீனவன் என்று தெரிந்ததுபோல? தமிழ் குடியையே தாங்கும் மற்றொரு தலைவர் இதில் மவுனம் காப்பது ஏனோ? ஏனென்றால் கூட்டணி எந்தப்பக்கம் வேணா அமையலாம்...பக்கத்துக்கு குடிசை எரியும்போது தண்ணீர் ஊற்றிய அரசியல்வாதிகள் சொந்த குடிசை எரியும்போது சோர்ந்தது ஏனோ? தேர்தல்....கூட்டணி....பதவி.... .பணம்........
மக்களே....மீண்டும் சொல்லுகிறேன்..கடைசி நேர உணர்சிகளுக்கு அடிமையாகாமல் இதுவரை நடந்த ஆட்சியை சீர்தூக்கி பார்த்து உங்களது வாக்கு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள்! உங்களுக்கு உதவுவதற்காக நமது கட்சிகளின் கடந்த ஐந்து வருடத்தின் நிறை குறைகளைப் பற்றிய அலசல் ஒரு நடுநிலை பார்வையோடு நமது கழுகில் தொடர்ந்து வரும்! எதிர்பார்த்திருங்கள்!
கழுகுகுழுமத்தில் இணைய....
14 comments:
சரியான நேரத்தில் இந்த கட்டுரையை வெளியிட்டு விழிப்புணர்வுடன் மக்களை எச்சரித்ததற்கு முதலில் கழுகுக்கு சல்யூட்..
முடிந்தளவு சொல்ல வந்த கருத்துக்களை தெளிவாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கீங்க வைகை அண்ணே வாழ்த்துக்கள்...
இதை நாம் படித்ததோடு விட்டுவிடாமல் நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
மக்களே விழிப்படையுங்கள்.......
ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு உங்கள் பொன்னான வாக்குகளை விற்று போடாதீர்கள்....
நல்லா யோசிச்சு ஓட்டுப்போடணும்.
இங்கே சிலர் ஏற்கனவே ஒரு fixed mindல் இருக்கிறார்கள். இல்லன்னா பணம் சார்ந்து ஓட்டுப் போடுகிறார்கள். ஆராய்ந்து எதையும் செய்ய வேண்டும்!
அவங்க குழப்பத்தில் இருக்கிற மாதிரி காட்டி, மக்களை நல்லா குழப்புறாங்க...நாம தெளிவா இருக்கணும்...
//உங்களது வாக்கு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள்! //
யோசிச்சு முடிவு எடுங்கன்னு சொல்றோம்... சரிதான். ஆனால் யாரை தேர்ந்து எடுக்கணும் என்பதில் என்ன முடிவு எடுக்கணும் என்று தெரியலையே...ஒன்னைவிட ஒண்ணு பெட்டர்னு தான் ஒவ்வொரு தேர்தல்லையும் வாக்களிக்கிறோம். இந்த முறை அப்படி சொல்லகூடிய நிலையில் எந்த கட்சியும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.
வலுவான நல்ல மாற்று கட்சி அல்லது தலைமை எது ? இதற்கு பதில் இருக்கிறதா நம்மிடம் ???
நண்பர் வைகை தனது கருத்தை திடமாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவருக்கு என் நன்றிகள்.
நோ வைகை ..தமிழன் அலர்ட்டா இருக்கான் ஒரு பிரியாணி பொட்டலத்தையோ,திருகாணி,குவார்ட்டர்நு இலவசமா எது கிடைச்சாலும் மிஸ் பண்ணாம வாங்கிட 3 நாள் பொது விடுமுறை கேட்குறான் ஓட்டுக்கு 1000 கிடைக்கும் அப்பதர்ரேன்னு இப்பவே கந்து வட்டி வாங்க ஆரம்பிச்சிட்டான்
நண்பர் வைகை தனது கருத்தை திடமாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவருக்கு என் நன்றிகள்.////
பாராட்டுக்கு நன்றி சகோதரி! ///
யோசிச்சு முடிவு எடுங்கன்னு சொல்றோம்... சரிதான். ஆனால் யாரை தேர்ந்து எடுக்கணும் என்பதில் என்ன முடிவு எடுக்கணும் என்று தெரியலையே...ஒன்னைவிட ஒண்ணு பெட்டர்னு தான் ஒவ்வொரு தேர்தல்லையும் வாக்களிக்கிறோம். இந்த முறை அப்படி சொல்லகூடிய நிலையில் எந்த கட்சியும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.
வலுவான நல்ல மாற்று கட்சி அல்லது தலைமை எது ? இதற்கு பதில் இருக்கிறதா நம்மிடம் ???////
உண்மைதான் சகோதரி...அப்படி ஒரு மாற்று இருந்தாலும் நம்மால் அவற்றை பரிந்துரைக்க இயலாது....ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் மாறுபடும்....நமது கழுகிற்கு எந்த ஒரு ஜாதி மத மற்றும் கட்சியின் சாயம் வந்துவிடக்கூடாது....அதனால்தான் நமது கட்சிகளின் கடந்த ஐந்து வருடதைப்பற்றி ஒரு நடுநிலை பார்வை நமது கழுகால் தொடர்ந்து பார்க்கப்படும்...முடிவெடுக்கவேண்டியது மக்களின் கடமை...எதுவுமே மாற்று இல்லையென்று நினைத்தாலும் 49 O விதியை பயன்படுத்தலாமே
//நம் அரசியல் கட்சிகள் நடத்துகின்ற கூத்துகளில் முக்கியமானது கூட்டணி! நம் அகராதியில் இதற்க்கு என்னவோ ஒரே பொருள்தான்.....//
//இதில் புதிதாக இப்பொழுது தேமுதிக-வும் சேர்ந்துள்ளது! ஆண்டவனுடனும் மக்களுடனும் மாறி மாறி கூட்டணி வைத்த இவர்கள் இப்பொழுது அம்மாவுடன் கூட்டணி வைக்க அலைமோதும் காலமிது! //
// தேர்தல் நேரத்தில் இறந்ததால் மட்டுமே கடைசியாக இறந்தவரின் மனைவிக்கு சத்துணவில் வேலை..! //
கூட்டணி ஆட்சி ரொம்ப கொடுமயாதான் இருக்கு . அத விட கட்சிகளின் கொள்கைகள் , இலவச திட்டங்கள் எல்லாமே .. என்னத்த சொல்லோது ?
அதவிட நானும் ரொம்ப குழப்பத்துலதான் இருக்கேன் . இப்ப இருக்குற மூணுபேருமே இப்படின்னு சொல்லுறோம் ,, இவுங்க மூனுபெருல யாரோ ஒருத்தருக்கு ஒட்டு போடணும் .. அப்படின்னா குப்பைல இருந்து எது நல்ல குப்பைனு பொருக்கி எடுக்கப்போறோம ?
good review. thanks vaigai
நல்ல ஆழமான பகிர்வு. வாழ்த்துக்கள் வைகை. இங்கு (இணையத்தில்) உள்ள பிரச்சினையே, நடுநிலை என்ற பெயரில் ஒரு சாராரையே திட்டிக் கொண்டிருப்பது. அந்த நிலையை தகர்த்தெறிந்து, உண்மையான நடுநிலையுடன் அலசியிருக்கிறீர்கள். நன்றி.
முகத்தில் அறையும் கசப்பான உண்மைகள்....
நல்ல ஆழமான பகிர்வு.
ஆக மொத்தத்தில் அலசி ஆராய்ந்து வாக்கிட வேண்டும்...! A Need of the Hour பதிவு. Welldone வைகை அண்ணா.
பணம் தான் ஜனநாயகம் என்ன செய்ய போகிறோம் நாம் ?
Post a Comment