சமுதாயத்தின் சீர்கேடுகள் பற்றியும் அது பற்றிய தெளிவான பார்வையையும் நாம் கொடுக்க வேண்டிய ஒரு சமுதாயம் மாணவ சமுதாயம். இன்றைய மாணவர்கள் நாளைய நாட்டை நிர்வகிக்கப் போகும் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தேசத்தின் அங்கமாகப் போகும் வாக்காளர்கள். இவர்களின் மூளைகளில் செழுமையையும் தெளிவையும் புகுத்தினால் வரும் காலங்களில் நேர் நோக்கோடு உண்மைகளை அலசிப் பார்த்து உணரும் தெளிவான ஒரு சமுதாயமாக நாம் இருப்போம்.
தற்போதைய சூழலை உற்று நோக்கிய கழுகிற்கு கண்ணில் பட்டது மார்ச் ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்வுகளும் அதே நேரத்தில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளும்தான்...! தேர்வுகளை முன்னிறுத்தி இப்படிப்பட்ட போட்டிகள் மாணவக் கண்மணிகளின் கவனத்தை சிதறடிக்குமே என்ற எண்ணத்தை அரசு கைக்கொள்ளுமா? கைக்கொள்ள வேண்டும் ஆனால் செய்யாது.....
இதோ இது பற்றிய ஒரு பார்வையை கழுகு குழுமத்தோழர் உங்களுக்கு சமர்ப்பிக்கிறார்....
தேர்வுநேர தடைகள் - கிரிக்கெட் விளையாட்டு :
இந்த கிரிக்கெட்டு எதுக்குத்தான் மார்ச் மாசம் வருதோ தெரியலை..!!
இந்தியா முழுவதும், பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் பெரும்பாலும் நடக்கும் மாசம், மார்ச், ஏப்ரல். இந்த நேரத்துல என்னாத்துக்கு கிரிக்கெட் மேட்ச் வெச்சு படிக்கற மாணவர்களோட கவனத்த கெடுக்குறாங்களோ தெரியலை.
கடந்த மூணு வருஷமா, ஐ.பி.எல் டி- 20 கரெக்டா மார்ச் - ஏப்ரல் மாசத்துல நடுத்திட்டு வராங்க... பணம். பணம்.. அது ஒண்ணுதான் குறிக்கோள் நடத்துற கனவான்களுக்கும்.. வெளையாடுற (ஓய்வடைந்த) வீரர்களுக்கும் (!). அதுல தேவையில்லாம "சீர் கேர்ல்ஸ்" வேற.. கெடுக்குறாங்க இளைஞர்களை.... பணம்தான் இந்த போட்டிகளோட முதன்மை நோக்கம் என்பதை நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுலயும் ஊழல் நடத்தி கல்லா கட்டுற ஆளுங்க... என்னாத்த சொல்லுறது.
இது வருஷா வருசம் முழுவாண்டுத் தேர்வு நேரத்துல எதற்கு வருகிறதோ தெரியவில்லை.. அதுதான் என்னோட முக்கியக் கவலை..
இந்த வருசம், பிப்ரவரி லேருந்து மே மாசம் வரைக்கும் தொடர்ந்து கிரிக்கெட் நடக்கப் போகுது. படிக்கும் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவர்கள் முக்கியமா ஒன்னை நினைவுல வெச்சிக்கணும்.. ,
இந்த ஐ.பி.எல் வருஷா வருசம் வருது.. போகுது..
சாதாரண கிரிக்கெட்டு.. எப்பாவேனாலும் வந்து போகுது..
உலகக் கோப்பை நாலு வருஷத்துக்கு வந்துட்டு போகுது..
-- தொடர்ச்சியா சுழற்சி முறையில இது நடக்கும்..
சாதாரண கிரிக்கெட்டு.. எப்பாவேனாலும் வந்து போகுது..
உலகக் கோப்பை நாலு வருஷத்துக்கு வந்துட்டு போகுது..
-- தொடர்ச்சியா சுழற்சி முறையில இது நடக்கும்..
ஆனா.. உங்களோட பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு
இறுதித் தேர்வு ஒரு தடவைதான் முக்கியமானதா இருக்கும்.
இந்த வாய்ப்ப விட்டுட்டுட்டா.. உங்கள் படிப்பின் எதிர்காலம் .. ..
யோசிங்க.. யோசிச்சு யதார்த்தக்கு வாங்க
இறுதித் தேர்வு ஒரு தடவைதான் முக்கியமானதா இருக்கும்.
இந்த வாய்ப்ப விட்டுட்டுட்டா.. உங்கள் படிப்பின் எதிர்காலம் .. ..
யோசிங்க.. யோசிச்சு யதார்த்தக்கு வாங்க
நீங்க கிரிக்கெட்ட ஒரு பொருட்டா மதிக்காம உங்களோட படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்க.. உங்க வீட்டுலையும் யாரையும் டிவி போட்டு கிரிக்கெட் பாக்க வேணாம்னு நீங்களே சொல்லணும்.. அப்பத்தான் உங்களோட கவனம் சிதராம இருக்கும்.
அனைத்து மாணவர்களுக்கும் வரவிருக்கும் தேர்வுகளில், 'சிறந்த மதிப்பெண்' பெற்று தேர்வு பெற எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.
மாணவர்களின் பெற்றோர்களே கிரிக்கெட் பார்க்கவேண்டாமென உங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை.. உங்களை விட உங்கள் பிள்ளைகளிடம் அதிக அக்கறை இருப்போர் வேறு யார் இருக்கிறார்கள் ?
உங்கள் வீட்டில் இப்போது பள்ளி / கல்லூரி படிக்கும் மாணவர்கள் இல்லை என்றாலும், சமுதாய அக்கறையோடு நாம் என்ன செய்யலாம்? நமக்குத் நன்றாகத் தெரியும் சமீபகாலமாக, கிரிக்கெட் வியாபார நோக்கோடுதான் விளையாடப் படுகிறது பெரும்பாலும். நாம் கிரிக்கெட் ரசிகாராக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நாமும் கிரிக்கெட்டால் பாதிக்கப் படுகிறோம். எப்படியா ? வரவிருக்கும் உலகக் கோப்பை விளையாட்டில் வரும் விளம்பரங்களின் கம்பெனிகள் ஸ்பொன்சர் செய்யும் தொகை பல லட்சம் கோடிகள் --- அவற்றை சுமப்பது நுகர்வோராகிய நாம்தான். (முழுவதுமாக நம் தலையில் பாரமில்லை என்றாலும்.. நாமும் சில துளிகளை சுமக்கிறோம்)
காசு கொடுத்து, கஷ்டப் பட்டு, விளையாட்டு மைதானத்தில் நேரடியாக கிரிக்கெட் ஆட்டத்தினை பார்க்கும் பார்வையாளர்கள் குறைந்தால் தான், கிரிக்கெட்டில் மக்களுக்கு அதிகமாக ஆர்வமில்லை என்பதை அவர்களும் (கிரிக்கெட்டினால் பல வழிகளில் பணம் புரட்டும் ஆட்கள்) தெரிந்து, புரிந்து கொள்வார்கள்.. என்ன அப்படி செய்வதற்கு நீங்கள் தயாரா ?
பொழுதுபோக்கு என்றாலும் அதை அனுபவிப்பதில் ஒரு அளவுகோல் வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அளவோடு எதுவும் இருந்தால் மட்டுமே எதுவும் பயனுள்ளதாக இருக்கும்.
கழுகுகுழுமத்தில் இணைய....
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
16 comments:
சரியான நேரத்தில்
சுளீரென சாட்டையடி
நிச்சயம் எந்த மாணவரும் பாதிக்க படகூடாது
வாழ்கையே வரும் தேர்வில் தான் உள்ளது
அதை கவனத்தில் கொண்டு மாணவர்கள் படிக்கவேண்டும் ..
பெற்றோர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும்
கழகு இன்னும் உயர பறக்க வாழ்த்துக்கள்
சீரியசான மேட்டர்..
காமெடியான படத்தோட.. நல்லா இருக்கு.. சபாஷ்..
ரொம்ப நல்லாயிருக்கு! ஆனால் சம்பந்தபட்டவர்களும் இதை உணர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
இது பொழுது போக்குத்தான். அதே சமயம் இது உலகக் கோப்பை உலகம் முழுவதற்குமான பொதுவான ஒண்ணு. இதனை நாம மாத்தானும் அப்படிங்கிரதுவிட நம்ம வீட்டுப் பசங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறது நல்லது.
@ Sevakumar
உலகக் கோப்பையோ.. ஐ.பி.எல்லோ.. என்னாத்துக்கு இந்தியாவுல மார்ச், ஏப்ரல் மாசம் நடக்குது.. அத சம்பந்தப் பட்ட ஆளுங்க மாத்தலாம் இல்லையா ?
சரியான நேரத்தில் சரியான பதிவு.
இது குறித்து எனது நடையில் ஒரு பதிவு போட்டுள்ளேன். நேரம் கிடைத்தால் படித்து தங்களின் கருத்தைப் பதிவு செய்யவும்.
http://amaithiappa.blogspot.com/2011/01/blog-post_26.html
நன்றி.
எனக்கு கிரிக்கெட் தெரியவும் செய்யாது, பிடிக்கவும் செய்யாது. அப்பாடா நான் தப்பிச்சேன்.
//இந்த கிரிக்கெட்டு எதுக்குத்தான் மார்ச் மாசம் வருதோ தெரியலை..!!//
the one and only reason is CLIMATE ( i hope everybody known this)
சரிதான் பருவ நிலைதான் இதற்கு முக்கிய காரணம், இந்த பருவத்தில் தா ன் இந்தியா முழுவதும் போட்டிகளை நடத்த ஏதுவான காலம்
அதோட கிரிக்கெட் பாக்குறவங்க நமக்கு தான் அது பொழுதுபோக்கு விளையாடுறவங்களுக்கு அதுதான் பொழப்பே
அவங்க ஆடிக்கிட்டே தான் இருப்பாங்க, நாமதான் எக்சாம்னா பாக்காம இருக்கனும் முடியலன்னா கேபிள் டீவி'ய கட் பண்ணிகிட்டு பேசாம இருக்கலாம்
Cricket - There is a game side and there is a business side...
It is upto the people (fans) to draw the line...
மன்னிக்கணும் சர்புதின்.... மூணு காரணங்கள் நீங்க சொன்ன பதிலை நா ஒத்துக்க முடியாதது..
1) 1987 உலகக் கோப்பை இந்தியாவுல அக்டோபர், நவம்பர்ல நடந்திச்சு.. -- நல்ல சீசந்தான்.
2 ) 1992 ஆஸ்திரேலியால (பிப்-மார்ச்) மேச்சு மழை நேரத்துல நடந்திச்சு.. அப்ப சீசனை யாரும் எதிர் பாக்கலியா ?
3) இந்தியாவுல பிப், மார்ச், ஏப்ரல் தவிர வேற எந்த மாசத்துலையும் கிரிக்கெட்டே நடக்குறதில்லையா ?
ஜில்தண்ணி சொல்லிய இரண்டாம் மற்றும் மூன்றாம் பாராவையும்,
சித்ரா மேடம் சொன்ன செய்தியும் ஒத்துக்கொள்ளும்படி இருக்கிறது..
bangalore raju
intha
இவ்ளோ சொன்ன நீங்க(AuthoR),
டெ-நயிட் மேட்சுல கண்டபடி மின்சாரத்த வேஸ்டு பண்ணுறாங்களே அத ஒரு வெளு-வெளுக்காம விட்டுட்டீங்களே பாஸ்..
இது வருஷா வருசம் முழுவாண்டுத் தேர்வு நேரத்துல எதற்கு வருகிறதோ தெரியவில்லை.. அதுதான் என்னோட முக்கியக் கவலை..//
many parents also.
Post a Comment