Tuesday, March 01, 2011

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....!ஒரு வழிகாட்டும் தொடர்..



இளம் தலைமுறையினருக்கு தொழில் செய்ய ஊக்குவிக்கவும், வழிக்காட்டவும் ஏதேனும் செய்தல் வேண்டும் என்ற கழுகின் பார்வையை குழுமத்தோழர் கொக்கரக்கோவிடம் சமர்ப்பித்த உடனேயே இதை ஒரு தொடராகவே எழுதலாமே என்று ஒரு உத்வேகத்தோடு எழுதிய கட்டுரையின் முதல் பாகம் இதோ... 

பத்தும் பத்தாமல் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளியிலிருந்து, கைக்கும் வாய்க்குமே சம்பளம் சரியாக இருக்கிறது என அங்கலாய்க்கும் குமாஸ்தா முதற்கொண்டு, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் (அல்லது கிம்பளமாக) வாங்கும் கணவான்கள் வரை எல்லோருக்குமே, எந்தவொரு  தொழில்முனைவோரைப் பார்த்தாலும் சிறு சபலம் ஏற்படத்தான் செய்யும்!  

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லோருக்குமே போதை உண்டாக்கக் கூடிய காரணம் என்றால் அது 'முதலாளி' என்ற அந்த ஒற்றைவார்த்தைதான். எத்தனை லட்சங்களை மாத சம்பளமாக வாங்கினாலும் தொழிலாளிதான், ஆனால் மாதம் ரூபாய் பத்தாயிரம் நிகர லாபமாகசம்பாதிக்கக் கூடிய ஒரு தொழில் முனைவர் கூட 'முதலாளி'  தான்! குறைந்தது இரண்டு, மூன்று பேருக்காவது சம்பளம் கொடுப்பார், அவர் லீவ்போட்டால் யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ஒரு மாத சம்பளக்காரர், தொழில் முனைவோர்ஆக ஆசைப்படுவதற்கான காரணங்களை. 

உண்மை தான், ஆனால் வெளியில் பார்ப்பதற்கு முதலாளிப் பட்டம், சமூகத்தில் தொழிலதிபர் அந்தஸ்து, வங்கிகள் முதற்கொண்டு பல பொதுநிறுவனங்களிலும், மற்ற பொதுமக்களுக்கு இல்லாத முன்னுரிமை மற்றும் மரியாதை. அந்தந்த ஊர் பொது காரியங்களில் கௌரவம் மற்றும்தலைமை பொருப்பு... இப்படி பொதுமக்கள் பலரும் பொறாமைப்படக் கூடிய பல காரணிகளை தன்வசம் வைத்திருந்தாலும், சாதாரண சிறுவியாபாரியிலிருந்து, பெரிய குழுமங்களின் தலைவர்கள் வரையிலான பெரும்பான்மையான தொழில் முனைவோர்களுக்கு, ஒவ்வொரு நாளுமே சிவ ராத்திரி தான். 


அன்றைய பொழுதின் கடமைகளை எல்லாம் ஒருவாறாக முடித்து விட்டு, இரவு உறக்கத்திற்காக படுத்தவுடன் தான் அடுத்த நாள் அஜெண்டாவெல்லாம் பட்டியலாக கண்முன்னே நிற்கும். அனேகமாக எல்லா தொழில் முனைவோருக்குமே அப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது, மறுநாள் தேதியில் கொடுக்கப் பட்டிருக்கும் வங்கிக் காசோலைகளாகத் தான் இருக்கும்! அடுத்ததாக இருப்பது ஒரு மாதமாகியும் நிலுவை பாக்கியை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள். இவர்கள் மட்டும் சரியான தேதிக்கு செட்டில் செய்திருந்தால்,  நாளை வரும் காசோலைகளைப் பற்றி என்ன கவலை?... என்று கேள்வி மனதில் எழும்போதே தூக்கம் கண்ணுக்கெட்டா தூரத்திற்கு சென்றிருக்கும். பட்டியலின் முதல் விஷயத்திற்கே இப்படி என்றால், அடுத்தடுத்த காரியங்களுக்கு மனம் செல்லும் பொழுது... அது சிவன் ராத்திரியாகியிருக்கும்! 

ஆனால் மறுநாள் காலையில், அவரிடம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே, இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு நல்ல வேலையாகப் பார்த்துக் கொண்டு மாசா மாசம் ஒன்னாம் தேதி பிறந்தால் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருக்கலாமே? என்று கேட்டுப் பாருங்கள்..! முதலில் கொஞ்சம் கோபமாகப் பார்த்து விட்டு, பிறகு நம்மைப் பாவமாகப் பார்த்து, நக்கல் தொனியில் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் போவார் பாருங்கள்... நம் காலில் கிடப்பதைக் கழட்டி நம் தலையிலேயே அடித்துக் கொள்ளத் தோன்றும்!

அப்படியானால் என்ன அர்த்தம்? சுயதொழில் செய்வதில், தினப்படியாக நிறைய கஷ்டங்கள் இருந்தாலும், ஒரு மனிதனின் அடிமனது சந்தோஷப்படும் காரணிகளான பாராட்டு, அந்தஸ்து, கௌரவம்... இத்தியாதிகள் கிடைப்பதுடன், லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத் தேவைகளையும் தொலைநோக்கில் அந்த சுயதொழில் உருவாக்கிக் கொடுக்கும்..., கொடுத்துக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை ஒரு தொழில் முனைவோருக்கு நூறு சதவிகிதம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


ஆக சுயதொழில் ஒன்றை செய்து, படிப்படியாக வளர்ந்து ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற தீவிர சிந்தனையில் இருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், அல்லது தான் இருக்கும் துறையில் ஓரளவு சாதித்து விட்டு, கொஞ்சம் பணத்தோடு சுயதொழிலில் இறங்கி வெற்றிக் கொடி நாட்ட நினைக்கும் ஒவ்வொருவருக்கும், தங்களது எண்ணங்களைத் தொடர்ந்து செல்ல ஒரு நல்ல நடைபாதையை அமைத்துக் கொடுக்கும் விதத்தில் இத்தொடர் அமையும் என்ற உறுதிமொழியோடு அடுத்த பாகத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.




24 comments:

தனி காட்டு ராஜா said...

Good one :)

மாணவன் said...

நல்லதொரு வழிகாட்டுதல் முயற்சி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான கட்டுரை சவுந்தர். கொக்கரக்கோவிற்கு வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள்..

இத்தொடருக்கு என் வந்தனங்கள்...

Kousalya Raj said...

சிரமங்கள், சிக்கல்கள்,ஏற்ற இறக்கங்கள், வாழ்க்கையை எதிர் கொள்ள தூண்டும் சவால்கள் நிறைந்த சுய தொழில் தான் என்னை இன்று வரை உற்சாகமாக வைத்திருக்கிறது.

நண்பர் இங்கே குறிப்பிட்ட அனைத்து கருத்துகளுடன் அப்படியே உடன்படுகிறேன்.

இன்றைய இளைஞர்கள் சுயதொழில் தொடங்க அதிக ஆர்வம காட்ட வேண்டும்...

இன்றைய நிலையில் எந்த எந்த தொழில்கள் எல்லாம் தொடங்கலாம் என்பதைப் பற்றியும் விரிவாக கூறுங்கள்...பலருக்கு பயன்படும்.

தொடரின் பயணத்தில் நானும் நிச்சயம் பயணிப்பேன்...(எனக்கு மிக பிடித்த விஷயம் இந்த சுயதொழில் )

வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

தொழில்முனைவர்கள் பலரை இந்த தொடர் உருவாக்கட்டும்.வாழ்த்துகள்.

Chitra said...

மிகவும் பயனுள்ள தொடர் ஆரம்பிக்கிறீங்க... பாராட்டுக்கள்!

எஸ்.கே said...

நல்ல பயனுள்ள தொடர்! தொடரட்டும்!

Anonymous said...

வந்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இவை என்னுடைய பொருப்பை இன்னும் கூடுதல்லாக்கியிருப்பதாக உணர்கிறேன்.

செல்வா said...

நல்ல தொடக்கம் அண்ணா..
ஆனால் உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் மாறுபடுகிறேன். தொழிலாளி இருந்தால்தானே முதலாளி.!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தொடர். தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.

Anonymous said...

All the roadas leads to Rome என்பதைப் போல 'எங்கேயும் சுற்றி ரங்கனை சேவிப்போம்' என்பதைப் போல, அனைவரும் அடைய நினைக்கும் ஒரு நிலையை/இடத்தைப் பற்றி தான் எழுதியுள்ளேன். எங்கள் நிறுவனத்தில் நான் தான் முதல் தொழிலாளி. ஆகவே தொழிலாளி இல்லாத தொழிற்துறையை யாராலும் சிந்திக்கக் கூட முடியாது. ஆனால் ஒவ்வொரு தொழிலாளியையும் முதலாளியாக்க சிந்திக்க வைக்கத் தூண்டும் ஒரு கட்டுரையில் எழுதுவதையெல்லாம் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து.

விளக்கம் போதுமா - கோமாளியாரே?!

செல்வா said...

அண்ணா நான் தவறா எடுத்துக்கலை ..

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனால் மறுநாள் காலையில், அவரிடம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே, இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு நல்ல வேலையாகப் பார்த்துக் கொண்டு மாசா மாசம் ஒன்னாம் தேதி பிறந்தால் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருக்கலாமே?//

நிச்சயமாக..என் மன ஓட்டத்தை அப்படியே எழுதி இருக்குறீர்கள் ..டென்ஷன் அதிகம் ..சில நன்மைகளும் இருக்கு ..அடுத்த பதிவில் எதிர்பார்கிறேன்

Harinarayanan said...

வாழ்த்துக்கள் நண்பரே....

மிகவும் முக்கியமான, எல்லா காலகட்டத்துக்கும் தேவையான ஒரு தொடர்! வாழ்த்துக்கள், தொடருங்கள்....

பத்மஹரி,
http://padmahari.wordpress.com

வைகை said...

நல்ல தொடர் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு....

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

காத்திருக்கிறேன்.. முதலாளி ஆவதற்கும், அடுத்த தொடரை படிப்பதற்கும்! என் 18ம் வயதிலேயே வெளிநாடு (துபாய்) வந்து.. 21 வருடம் ஓடிவிட்டது. நாற்பது வயதும், நரைவிழவும் தொடங்கி விட்டது. ஆனாலும்.. கடின உழைப்பில் ஓரளவு பொருளாதாரமும் சேர்ந்துவிட்டது. இன்னும் ஓரிரு வருடத்திற்குள் ஊரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடவும், ஏதாவது ஒரு தொழில் சுயமாய்த் தொடங்கிடவும், அதேநேரம்.. இத்தனைக் காலம் குடும்பங்களையும், சொந்த மண்ணையும் பிரிந்து சிறுகசிறுக சேமித்த பணம்.. அனுபவமின்மையால் நட்டமாகிடகூடாதே.. என்னத்தொழில் தொடங்கலாம் என பலமாய் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில்.. இப்படி ஒரு கட்டுரை! கழுகைப்போல காத்திருக்கிறேன். கட்டுரையின் தொடர்ச்சிக்காக.. நன்றி!!

Anonymous said...

வந்திருந்து கருத்துரையோடு வாழ்த்தும் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

சலீம்பாஷா அவர்களே. தங்கள் எதிர்பார்ப்பு கண்டிப்பாக நூறு சதவீதம் பூர்த்தியாகும் படி இத்தொடர் அமையும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான ஆரம்பம், காத்திருக்கிறோம் கொக்கரக்கோ.....!

உணவு உலகம் said...

அருமையான பதிவு + பகிர்வு. vaazhthukkal

ரோஸ்விக் said...

நல்ல தொடக்கம். நண்பர்களின் வழிகாட்டுதல்களுக்கு நன்றிகள்.
இதுமாதிரியான எழுத்துக்கள்தான்யா பதிவுலகத்திற்கு தேவை.

kural said...

நல்ல பதிவு தொடருஙகள் காத்திருக்கிறோம்
சி

MANO நாஞ்சில் மனோ said...

தொடருங்கள்.....நல்ல பதிவு....

Sairam said...

தொழில் முனைவர்க்கான யோசனைகளை நல்லா சொல்கிறிர்கள்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes