பஞ்ச்: 1
உடன் பிறப்புக்களோட எந்த விழாக்களிலும் இனிமே தங்கள் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்கள் இருக்க கூடாதுனு அண்ணன் அழகிரி ஸ்டிரிக்டா சொல்லியிருக்கார். சரி ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கார்னு சந்தோசப்பட்டுடாதீங்க அடுத்து அண்ணாத்த என்ன சொல்றாருன்னு கேளுங்க.....
அறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் போட்டோஸ் மட்டும் வைச்சுக்கோங்க, மேலும் என் மேல ரொம்ப பிரியமா இருக்கவங்க என்னோட போட்டவ வச்சுக்கலாம்னு கூடுதலாவே காமெடி பண்ணியிருக்கார்.
எல்லா போட்டவையும் எடுக்கச் சொல்லிப்புட்டு அப்புறம் உங்க போட்டா எதுக்காம்? போங்கண்ணே தெளிவா குழப்பி காமெடி பண்ணிகிட்டு....
பஞ்ச் 2:
வரப்போற உள்ளாட்சித் தேர்த்தல்ல காங்கிரஸ் தனிச்சு போட்டியிடணும்னு தமிழக இளைஞர் காங்கிரஸ் (அப்டீன்னு ஒண்ணு இருக்கு அதுல இன்னமும் இளைஞர்கள் இருக்காங்கன்றது வெக்கக் கேடுன்றது செகண்ட்டரி பாஸ்!!!!) தலைவர் யுவராஜ் (யாருங்க இவரு???!!!!) சொல்லியிருகாரு...
ராஜா சார்....ரொம்ப தெகிரியமாத்தான் பேசிறீங்க...சீக்கிரமே தமிழக காங்கிரசு தலிவரு ஆகிடலாம் ஒண்ணியும் கவலைப்படாதீங்க...!!!!! ராகுல்ஜியே நின்னாலும் தமிழ் நாடு தவறாம பதில் சொல்லுமுங்கோ!
பஞ்ச் 3:
டக்குனு வாங்க உலக அரசியல் ஒரு பார்வை பாத்துடுவோம்....
அமெரிக்க அதிபர் ஒபாமா ட்விட்டர்ல மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்றதா அறிவிப்பு வெளியிட்டு இருந்தாங்க..! தகவல் தொடர்புகள எம்புட்டு அழகா யூஸ் பண்றாங்களேன்னு ஆச்சர்ய்மா சந்தோசப்பட்டுகிட்டு இருந்தேன். ஆமாங்க...மக்களை சந்திக்க ஆயிரம் வழிகள் இப்போ நவீன அறிவியல் காலத்துல இருக்கும் போது இன்னும் கருணாநிதி, ஜெயலலிதா மாதிரி ஆளுங்க... பழைய மெத்தடாலஜியவே வச்சிகிட்டு மாறடிக்கிறது பெரிய கடுப்பா இருக்குல்ல....
இன்னொரு கொசுறு செய்தி...இதே ட்விட்டர்ல ஒபாமா கொல்லப்பட்டாருனு யாரோ ஒரு நாதாரி வதந்திய கிளப்பி விட்டு இருக்கான். தகவல் தொழில் நுட்பம் எவ்ளோ அழகா பயன்படுத்தப் படுதோ அதே வேகத்துல கேவலமா இதைப் பயன்படுத்துற ஜந்துகளுக்கு நல்ல சாவு வரும்ன்றீங்க....?????
பஞ்ச் 4:
அரசு கேபிள் டிவி வேலையில அம்மா ஜரூரா இருக்காக...!! அம்மா தாயி கேபிள் எல்லாம் அறுந்த பழசு அந்த தொழில்நுட்பத்த தாண்டி மக்கள் வந்துட்டாங்க.... ! நீங்க என்னம்மோ அரசு கேபிள் டி.வி நடத்தலேன்னா தமிழ்நாட்டு குடி குன்னக் குடியா போயிடுற மாதிரி நினைச்சுகிட்டு இதை ஜம்பமா அறிவிச்சு செயல்படுத்தவும் போறீங்க.
இந்த வேலைக்கும் இன்னமும் ஷாட்டா எல்லா வூட்டுக்கும் அய்யா டி.வி கொடுத்த மாதிரி நீங்க டிஸ் ஆண்டனாவும் ரிசீவரும் கொடுத்துப் புட்டீங்கன்னா..பிரச்சனை ஒழிஞ்சுது...வேணும்னா அந்த ரிசீவர எங்குட்டு திருப்பினாலும் ஜெயா டி.வி நிகழ்ச்சிகள் மட்டும் காட்ற மாதிரு ஒரு உள் செட்டப் வச்சிகிடலாம்...!!!!!
அரசு கேபிள் தலை போற அவசரமா என்ன தமிழகத்துக்கு.....? யோசிங்க மக்காள்...யோசிங்க!!!!
பஞ்ச் 5:
நீ என்னடா எழுதி நாட்ட திருத்தப் போறேன்னு முகம் செவக்க நெறைய பேரு கழுகு ஆபீச நோக்கி படையெடுத்துக்கிட்டு இருக்காங்க. ச்ச்சும்மா இருக்கறத விட ஏதாச்சும் பெஸ்ட்டா எழுதி வச்சுட்டு, நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு நாலு நல்ல விசயத்த சொல்லிட்டு சாகணும்னு நாம நினைக்கிறது என்ன அவுங்க அவுங்க வூட்டு சொத்த எடுக்கறதுக்கு சமமாங்க....? இல்ல தெரியாம கேக்குறேன்...
கோவப்படக்கூடாது, ஆத்திரப்படக்கூடாது, பிரசர் கூடினா உடலுக்கு ரொம்ப கேடு, ஊரை நீங்க திருத்தாதீங்கன்னு சொல்லிட்டு நம்மள திருத்த யாருக்கும் தெரியாம போயி ட்யூசன் கத்துக்கிறது எல்லாம் விட்டுட்டு உடம்ப பாத்துக்கலாம். ஹேல்த் ரொம்ப முக்கியம் இல்லையா....????!! ஒவர் வோல்ட்டேஜ் போனா ப்யூஸ் போற பல்பு மாதிரி பட்டுனு போய் சேந்துடப்பிடாது பாருங்க....!!! அம்புட்டுதேன்.....
நம்ம சட்டைகளை முதல்ல தொவச்சு சுத்தமா போட்டுக்குவோம்....!!!!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
3 comments:
அழகிரி என்ன சொல்ல வர்றார்.. அப்ப இனிமேல் கலைஞர், ஸ்டாலின் படங்களை தன்னோட படத்துடன் இணைச்சு போடவேண்டாங்கிறாரா?
:)))
நல்ல பதிவு.
ஜெயா டிவி - முதல் இடத்துக்கு கொண்டுவருவது எப்படி,
1 . ரபி பெர்னாடுக்கு MP பதவி கொடுத்து டெல்லி மற்றும் மேல்மட்ட வேலைகளை கவனிப்பது
2 . அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அதிமுக பிரமுகர் உடுமலை ராதாகிருஷ்ணன்னை நியமித்து உள்ளூர் வேலைகளை கவனிப்பது
3. போட்டி சேனல் உயர் அதிகாரிகளை கைது செய்து மிரட்டுவது - Saxsena கைது போன்று
Post a Comment