Wednesday, October 12, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (12.10.2011)


கனகுவும் ரெங்குவும் ஒரே நேரத்தில் வெளியே வர...போட்டி போட்டு கொண்டு கட்சிகள் இருபுறமும் பிரச்சாரத்துக்கு வரவே இருவரும் டீ கடைக்கு செல்லவே பத்து நிமிடம் ஆனது..



ரெங்கு வேட்பாளர் கொடுத்த நோட்டீசை பார்த்து படித்து கொண்டு இருந்தார்...குப்பையை அகற்றுவோம்,கொசுக்களை ஒழிப்போம்..என உறுதிமொழிகளை படிக்க  ரெங்குவை ஒரு கொசு கடிக்க .கனகு சிரிக்க 


ரெங்கு : ஏன்ய்யா சிரிக்குற..??

கனகு : இல்லை... எல்லாம் கொசுவை ஒழிக்கிறேன்.. ஒழிக்கிறேன் சொல்றாங்க... ஆனா கொசு தான் நம்மளை ஒழிக்கும் போல... இதுல கரண்ட் வேற இருக்குறதில்லை. இவிங்க வேற காமெடி பண்ணிட்டு திரியுறாங்க... 

ரெங்கு : யோவ்... நீ என்னய்யா சொல்ல வர்ற...??

கனகு : ரெங்கு... உன்னை ஏன் இப்போ கொசு கடிச்சது சொல்லு..??? அங்க திரும்பி பாரு.

ரெங்கு : அட பாவிங்களா... குப்பையை எடுப்பேன் சொல்லி ஓட்டு கேக்குறாங்க... ஆனா இந்த பக்கம் இவ்வளவு குப்பை இருக்கே...?!


கனகு : அட ரெங்கு... குப்பையை எடுப்பேன் சொல்லி ஓட்டு கேக்குற ஆளுங்கட்சிக்காராங்க குப்பைய எடுத்துப்போட்டு ஓட்டு கேட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.நமக்கும் அவங்க மேல நம்பிக்கை வரும்.இதுல கொசுவை வேற ஒழிப்பாங்களாம்.. ஒழுங்கா குப்பைய எடுத்தாவே பாதி கொசு அழிஞ்சு போய்டும்..!!



ரெங்கு : என்னது குப்பைய எடுத்திட்டே ஓட்டு கேக்கணுமா..?? அப்படியெல்லாம் நடந்தா இந்த நாடு எப்பவோ சிங்கப்பூரா ஆகியிருக்கும்.. போய்யா போ... நீ முதல்ல குப்பை போடாம போ...

கனகு : சரி.. சரி.. டென்ஷன் ஆகாம டீ சொல்லு..

ரெங்கு : டீய்யா முக்கியம் அத விடுய்யா... அவிங்க இனி பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை தனியா நிக்க போறாங்களாம்..

கனகு : அட அது யாருய்யா..?? யாரா இருந்தாலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு நிக்க சொல்லு.கால் வலிக்க போகுது... 

ரெங்கு : அவர் தான் அரசியல் சூப்பர் ஸ்டார் "கோல்டுமில்க்"

கனகு : ஓஓஓஓ...அவரா...?? பாவம்ய்யா அவங்க கட்சிக்காரங்க... ஒரே அழுகை...

ரெங்கு : என்னய்யா சொல்ற..?! அழுவுறாங்களா..?? இவங்களை பார்த்து மக்கள்தானய்யா அழுவணும்.

கனகு : ஆமாம் ரெங்கு... வேட்பாளர் செலவுக்கு கட்சி பணமே தரலையாம்...ஜெயிக்க போறதும் இல்லை. நம்ம கை காசும் போகுதேன்னு ஒரே அழுவாச்சி..

ரெங்கு : பாவம் கையாவது இருக்கேன்னு சந்தோஷப்படவேண்டியதுதான்..

 கனகு : ஹா.. ஹா.. ஹா..என்னய்யா டபுள் மீனிங்ல பேசுறே..!!

ரெங்கு : சீக்கிரம் விஜயகாந்த் நடிக்கப் போய்டுவார் கனகு.

கனகு : என்னய்யா... இப்படி குண்ட தூக்கி போடுற..?! நான் வேணா அவருக்கே ஓட்டு போடுறேன்ய்யா..

ரெங்கு : ஆமா ஆந்திராவில் சிரஞ்சீவி காங்கிரஸ்ல சேர்ந்துட்டதாலே நடிக்கப் போறதா சொல்லிட்டு இருக்கார்..இங்க நம்ம கேப்டனையும் காங்கிரஸ்ல சேர அழைப்பேன் நாசூக்கா சொல்லி இருக்கார் நம்ம ஈ.வி.கே.எஸ்..

கனகு : என்னது காங்கிரஸா.. அதுக்கு அவர் நடிக்கவே போயிடலாம்.. யாராவது நம்ம கேப்டனை காப்பாத்துங்கப்பா...

 ரெங்கு : அவர காப்பாத்தினா நம்மள யார் காப்பாத்துவா..?? ரெண்டு கட்சிகளும் தமிழகத்தை கொள்ளை அடிச்சாங்களாம்.... அதனால அவருக்கும் ஒரு வாய்ப்பு தரணுமாம்...!!

கனகு : எனக்கும் கொள்ளையடிக்க வாய்ப்பு தரனும் கேகுறாரா..?? ரொம்ப வெளிப்படையா தான் பேசுறார் நம்ம கேப்டன் 

ரெங்கு : யோவ் அவர் எப்போய்யா அவர் அப்படி சொன்னார்.. ஆனா ஒன்னு மட்டும் புரியல கொள்ளை அடிச்சாங்க... கொள்ளை அடிச்சாங்கன்னு சொல்றார். ஆனா அவங்க கூட கூட்டணி வைச்சார்... அது ஏன் கனகு..??

கனகு : கொள்ளை அடிச்துலே பங்கு கொடுதிருப்பாங்களோ..என்னவோ..  அதான் அப்போ மறந்துட்டார்..இப்போ  தெளிஞ்சு இருக்கும் நான் கூட்டணிய சொன்னேன்   சரி.. சரி.. ரெங்கு அவர்கிட்ட போய் சொல்லு. தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் இல்லைன்னு..  அப்படியே டீயும் சொல்லிடு..

ரெங்கு : என்னது டீயா..?! வேட்பாளர் ஒருத்தரு எல்லாருக்கும் சரக்கு கொடுத்திட்டு இருக்கார். நீ என்னனா அசிங்கமா டீ கேக்குறே..?!


கனகு : இது எங்கய்யா நடக்குது..?! 

ரெங்கு : புதுகும்மிடிப்பூண்டிலதான். அங்க போட்டியிடுற வேட்பாளர்கள் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு சரக்கு சப்ளை பண்றாங்களாம்... 

கனகு : யோவ் ரெங்கு.. நீ எல்லாம் வேஸ்டுய்யா... ஒரு டீ சொல்ல மாட்ற.. பணம் வாங்குறது எல்லாம் பழைய ஸ்டைல். இப்போ சரக்கு வாங்குறதுதான் புது ஸ்டைல் போல..

ரெங்கு : பார்த்துய்யா... பால் பாக்கெட் போடுற மாதிரி போடுறாங்களாம்.... நீ வேற குழந்தை பையன் எடுத்து குடிச்சுறப்போற.. தாங்காது...

கனகு : யாரு நான் குழந்தையா..?? நான் உடனே புதுகும்மிடிப்பூண்டி போறேன். வாழ்க ஜனநாயகம். வளர்க இந்தியா. 

ரெங்கு : யோவ் கனகு.. டீய குடிச்சிட்டு போய்யா.


கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

5 comments:

SURYAJEEVA said...

கலக்கல்

'பரிவை' சே.குமார் said...

ARUMAI.

boopathyp said...

poor people always suffer.human right voilasion by responceble officer are intolerable.every where corruption.one officer ruined a poor lorry driver for bribe

அம்பலத்தார் said...

நாட்டுநடப்பை சாதாரண பாமரனும் புரிந்துகொள்கிறமாதிரி எழுதிவருகிறீர்கள் வாழ்த்துக்கள்

MUTHU said...

FANTASTIC WORDS.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes