Thursday, October 13, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (13.10.2011)



பஞ்ச்: 1
 

இடைத்தேர்தல்னு சொன்னாலே அங்க ஆளும் கட்சிதான் அடிச்சு விளையாடும்ன்றது தமிழ் நாட்ல எழுதப்படாத விதின்னு சொல்லலாம். திருச்சி மேற்கு சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஜரூரா தொடங்கிருச்சு, திமுக மற்றும் அதிமுகவோட நேரடி போட்டி இருக்குறதனால தொகுதி முழுதும் ரொம்ப பதட்டமாத்தான் இருக்கும்.


ஆளும் கட்சியே ஜெயிச்சா தொகுதிக்கு உதவியா இருக்கும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னும் சொல்லிக்கலாம் ஆனா திமுக ஜெயிச்சா அதிமுகவுக்கு சங்கு ரெடின்னு சிம்பாலிக்கா இல்லை பகிரங்கமாவே சொல்லிக்கலாம்.

வெயிட் பண்ணி பார்ப்போம்...!


 பஞ்ச்: 2
 

தங்கபாலு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிய சுத்தமா தொடச்சி அழிச்சு மண்ணோட மண்ணா ஆக்கணும்னு ஒரு வெறியோடத்தான் இருக்காரு. ஆமாம், தமிழ் நாட்ல இனி எந்த தேர்தலா இருந்தாலும் காங்கிரஸ் தனிச்சுதான் போட்டியிடும்னு சவாலா சொல்லி இருக்காரு.


எப்டி இருந்தாலும் ஒரு தமிழர்தானே அவரு... தமிழருக்கு எதிரான காங்கிரஸ் மேலிட நடவடிக்கைகள அழிக்க அந்த கட்சியின் தமிழ்நாட்டு தலைவனா ஊடுருவி போயி கட்சிய அழிக்க அவருக்கே தெரியாம பெரும்பாடு பட்டுகிட்டு இருக்காரு.

காங்கிரஸ்னு ஒரு கட்சியே இல்லாம ஆக்கிடுங்க தங்கபாலு சார்...ஹேட்ஸ் அப்!!!

பஞ்ச்: 3
 

கலிஞர் ஐயா மத்திய அரசுக்கு கடிதாசி எழுதினப்பா ஜீமான் ஐயா மாதிரி ஆளுங்களும் இன்னும் வெகு ஜன ஊடகங்களும் வெகுண்டெழுந்து அட என்னய்யா இது மீனவன் சுடப்படுறான் நீ பாட்டுக்கு லெட்டர் எழுதிட்டு இருக்கியேன்னு கேட்டாங்க..அப்போ


இப்போ பொரட்சித் தலைவி அம்மாவும் அதே கடுதாசிய எழுதி பிரதமருக்கு அனுப்பிகிட்டு இருக்காங்க. வர்ற மொதலமைச்சருங்க எல்லாம் மத்திய அரசோட டர்பன் பிடிச்சு உலுக்கு கேக்குறதுக்கு அதிகாரம் கிடையாது போல கடிதாசி எழுதமட்டும்தான் முடியும் போல. அவரால முடியல இவரால முடியும்னு சொல்றது எல்லாம் நம்மள ஏமாத்ததானோ

மாநில சுயாட்சி அப்டீன்றத முறையா கொண்டு வந்து மாநில அரசுகளுக்கு சுயமா முடிவெடுத்து தத்தம் மாநிலங்களோட சில வீரியமான சென்சிட்டிவ் பிரச்சினைகளை தீர்த்துகிற அதிகாரத்தமத்திய அரசு கொடுக்கணும். அது வரைக்கும் யாரு வந்தாலும் கடிதாசிதான் எழுத முடியும். சிதம்பரத்த காப்பத்தறக்கே நேரம் பத்தமாட்டீங்கிது. அவங்க எங்க இதப் பத்தி எல்லாம் நினைக்கப்போறாங்க....

பஞ்ச்: 4
 

அதிமுகவுக்கு சப்போர்ட் உள்ளாட்சித் தேர்தல்ல கொரலு கொடுக்குறதா இளைய தளபதி விஜயோட அப்பா சந்திரசேகர் அறிவிச்சு இருக்காரு. ரசிகப் புள்ளைங்க எல்லாம் கவனமா கேட்டுகிட்டு இளைய தளபதி சாரோட அப்பா சொல்லு படி வேலை செஞ்சு கழகத்துக்கு அரும்பணி ஆற்றுங்கப்பா....!!!!


கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். சினிமாவுல நடிச்சே இன்னும் ஒன்ணும் கிழிக்க முடியலையாம் அதுக்குள்ள அரசியல்ல வழிகாட்டியா இருக்காறாம் ரசிகர்களுக்கு...ச்ச்சே..ச்ச்சே தொண்டர்களுக்கு...


ரசிகர்களை தொண்டர்களாக மாற்றும் அல்லது மாறும் அயோக்கியத்தனம் என்னிக்கு தமிழ்நாட்ல ஒழியுமோ தெரியலை போங்க!

பஞ்ச்: 5
 

தமிழ் நாட்ல எதை வேணும்னாலும் நிர்ணயம் பண்ணிடலாம் போல இருக்கு ஆனா இந்த ஆட்டோ கட்டணத்தை யாராலும் நிர்ணயிக்க முடியாது போல..., ஆட்டோ ஓட்டுறவங்கள கேட்டா அரசு நியாயமா ஒண்ணும் செய்யறது இல்லை சார், அவுங்க பிக்ஸ் பண்ணின ரேட்ட வாங்கினா பெட்ரோல், டீசல் போடவே காசு பத்தாது சார்.. அதான் நாங்க ரஃப்பா ஒரு அமொண்ட் வாங்குறம்னு சொல்லிட்டு மினிமம் 50 ரூபாய் வாங்குறாங்களாம்...


வெளியூர்ல இருந்து பொழப்பு  தேடி சென்னை மாதிரி ஊர்களுக்கு வர்றவங்ககிட்ட ரேட்டுன்னு சொல்லி கேக்குறதுக்கு ஒரு அளவே கிடையாது. ஆளு எப்டி இருக்கான்னு பாத்துகிட்டு அதுக்கு ஏத்தாப்ல இரண்டு மடங்கோ மூணு மடங்கோ கொடுத்து போக வேண்டிய சூழல்ல உண்டு பண்ணிடுறாங்க...! சைதாப் பேட்டைல இருந்து தி.நகர் போறதுக்கு 200 ரூபாய் கொடுத்து போன கதைகள கேக்குறப்ப....


ஏன் இந்த கவர்மெண்ட் முறையா ஒரு மீட்டர வச்சு அது பொது மக்களுக்கும் பாதிக்காம ஆட்டோ டிரைவர்களையும் பாதிக்காம இருக்குற மாதிரி பாத்துக்க கூடாது? இது என்ன அம்புட்டு குதிரைக் கொம்பா? டெக்னாலாஜி முன்னேறி இருக்குற இந்த காலத்துல ஆட்டோ மீட்டர்களை சரியா வைச்சு ஒழுங்க நடத்த ஏதாச்சும் நடவடிக்கை எடுங்கப்பா? காலத்துக்குமா இப்படி...???




கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


6 comments:

SURYAJEEVA said...

அரசு? நம்ம மக்கள் ஆட்டோ கட்டணத்தையும் தேர்தல் பிரச்சினையா மாத்தினா தான் அதுக்கு ஏதாவது வழி பிறக்கும் போல

நாய் நக்ஸ் said...

நல்ல விஷயம் ....

பார்ப்போம் .....

Anonymous said...

ம்ம்ம்ம் நானும் என் வீட்டு ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ சில‌ரிட‌ம் விசாரித்தேன். அதிலிருந்து நான் தெரிந்து கொண்ட‌து.

1, இந்த‌ தேர்த‌லைப் பொறுத்த‌ வ‌ரை அவ‌ர்க‌ள் கொள்கை எல்லாம் பார்த்து ஓட்டு போட‌ப் போற‌ மாதிரி தெரிய‌ல‌, யார‌க் கேட்டாலும் இந்த‌ வேட்பாளார் தான் ந‌மக்கு தெரிஞ்ச‌வ‌ங்க‌ அதுனால‌ இவ‌ங்க‌ளுக்கு போட‌லாம். இந்த‌ வேட்பாள‌ர் ந‌மக்கு சொந்த‌கார‌ர் எதுனாலும் பிர‌ச்ச‌னைனா அவ‌ர்ட‌ போய் சொல்ல‌லாம். இப்ப‌டி தான் க‌ண‌க்கு போடுகிறார்க‌ள். அதுனால‌ யார் ம‌ன‌சுல‌ யார்ன்னு தேர்த‌ல் முடிவுல‌ தான் தெரியும். அதுவும் இந்த‌ முறை எல்லா க‌ட்சிக‌ளும் பிரிந்து த‌னித்து போட்டி போடுவ‌தால் தெரிந்த‌வ‌ர்க‌ளே 5, 10 பேரும் ஒட்டு கேட்க‌றாங்க‌, நான் யாருக்கு ஓட்டு போட‌ற‌துன்னு குழ‌ப்ப‌ம் வேற‌,

Unknown said...

//கேக்குறதுக்கு அதிகாரம் கிடையாது போல கடிதாசி எழுதமட்டும்தான் முடியும் போல//

அக்னாலெட்ஜ்மென்ட்டோட சேர்த்து அவரும் பதில் போட்டுட்டாரே... அப்புறம் என்ன ஆறு மாசம் கழிச்சு அடுத்த லெட்டர்

saidaiazeez.blogspot.in said...

எல்லாதையும் அரசே செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தால், பிறகு "நான்" எதற்கு?
உதாரணத்திற்கு, ஆட்டோ கட்டணம்.
அவசரத்திற்கேற்ப 50 ரூபாய்க்கு பதிலாக 200 ரூபாயை அழுவதற்கு நாமும் தயார்தான். இதை வரைமுறை செய்ய அரசு எதற்கு? ஆட்டோ உரிமையாளர்கள் சங்கம் இருக்கிறதே. அதில் அவர்களே தங்களுக்குள்ளாகவே பேசி இதற்கு ஒரு வரைமுறை ஏற்படுத்தலாமே.

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes