Monday, October 03, 2011

நீங்கள் தான் தலைவர்....! தலைமைத்துவ பண்புகள் பற்றிய பார்வை...!


புறத்தில் ஆயிரம் நடக்கலாம் நண்பர்களே, எல்லா செயல்களையும் நாம் பயணத்தின் வழியே காணும் காட்சிகளைப் போல கண்டு கொண்டு நமது பயணத்தில் கவனத்தைச் செலுத்துவோம். இலக்குகள் இல்லா வாழ்க்கையில் வெறும் மனிதனாகத்தான் வாழ்ந்து மரிக்க முடியும்...!


ஆனால்....

இலக்குகள் கூடிய வாழ்க்கையில் ஒரு தலைவனாக வாழ்ந்து மரிக்க முடியும். நாமெல்லாம் எரியும் கனவுகளை இலக்குகளாக கொண்ட வேங்கைக் கூட்டம்...! ஆங்காங்கே இயன்றவரை எல்லோருக்கும் வழிகாட்டும் காட்டப் போகும் சீரிய பண்பினைக் கொண்டவர்கள்.


அறிவினைக் கொண்டு நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து கட்டுக் கோப்புடனும், ஜனநாயகத்துடனும் அறிவு சார் பயணம் மேற்கொண்டிருக்கும் நாம். தலைமைத்துவம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்போம்.


எ மேனேஜர் அட்மினிஸ்ட்ரேட்ஸ்....பட் த லீடர் இன்னோவேட்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒரு அதிகாரியால் நிர்வாகத்தை மட்டும்தான் செய்ய முடியும் ஆனால் ஒரு தலைவன் உருவாக்குகிறான். அவன் புதிது புதிதாய் சீரிய எண்ணங்களை படைத்து அதை செயலாக்குகிறான்.


தலைமைத்துவ பண்பு என்பது நமது குணநலன்களை நாம் சீர்தூக்கி நம்மை நாமே மாற்றிக் கொள்வது. ஒரு அலுவலகத்தில் இரு மேனேஜர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் இருவருமே அற்புதமான நிர்வாகிகள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்...இருவரில் யார் தலைமைத்துவப் பண்பினைக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தேர்களேயானால்.....


அதே அலுவலகத்தில் கடை நிலை தொழிற்சாலை பணியாளர் வராத அன்று அந்த வேலை தேங்கிக் கிடக்கும், அது புரடக்டிவிட்டியை பாதிக்கும் என்று தெரிந்தவுடன் வேறு ஆளும் கிடைக்கவில்லை என்று எண்ணிக் கொண்டு கோபத்தில் அடுத்த நாள் அந்த தொழிலாளியை கூப்பிட்டு  தண்டனை கொடுப்பவர் மேனேஜர் மட்டும்தான்.....


ஆனால்.. .இன்னொருவர்....

அந்த தொழிலாளி வராத அன்று அந்த வேலைத் தேக்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டு தனது டையை கழட்டி தூர எறிந்து விட்டு கை சட்டையை மடக்கி விட்டு.....அந்த தொழிலாளியின் வேலையைப் போய் தொழிற்சாலையில் செய்து விட்டு அடுத்த நாள் அந்த தொழிலாளி வந்தவுடன்....அவர் வராததால் எந்த மாதிரியான இழப்பு ஏற்பட்டது என்று விளக்கி, இனி அத்தியாவசியமான விடுமுறை என்றால் முன் கூட்டியே தெரிவித்தால் நிர்வாகம் வேறு ஒருவரை அந்தப் பணியில் ஈடுபடுத்த ஏதுவாக இருக்கும் என்றூ கூறி.. நெக்ஸ் டைம் ரிப்பீட் ஆகாம பாத்துக்கோங்க என்று தோளில் கை போட்டுக் கூறி விட்டு....அந்த தொழிலாளியின் வீட்டில் உள்ளவர்களின் நலனையும் சேர்த்தே விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்....


அவர் வெறும் மேனேஜர் அல்ல....................ஒரு தலைவரும் கூட....!


1) ஒரு அதிகாரியானர் கட்டுக்கோப்பான நிர்வாகத்தைச் செய்கிறார்...


2) ஒரு தலைவன்...அதனை மென்மேலும் வளர்த்துகிறான்...


3) ஒரு அதிகாரி....ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனிலும் சிஸ்டத்திலும் நம்பிக்கையா இருக்கிறார்....


4) ஒரு தலைவன்...........மனிதர்களை நம்புகிறான்...

5) ஒரு அதிகாரி அதிகாரத்தை மட்டுமே கணக்கில் வைத்துக் கொள்கிறார்..


6) ஒரு தலைவன்...நம்பிக்கையை மட்டுமே கணக்கில் வைத்துக் கொள்கிறார்


7) ஒரு அதிகாரி சரியான செயலை மட்டும் செய்கிறார்....


8) ஒரு தலைவன்..செய்யும் செயல்களில்ள் எல்லாம் சரியானதாய் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்..!



தலைமைத்துவத்தின் ஆச்சர்யமான ஒரு பண்பு... என்ன தெரியுமா? விட்டுக் கொடுத்துப் போவது....!


விட்டுக் கொடுத்தலில் ஒரு மிக முக்கியான விடயம் இருக்கிறது. யாருக்கு விட்டுக் கொடுக்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...


அகங்காரம் கொண்டிருப்பவர்களை அகங்காரத்தாலேயே சிறுமைப்படுத்தி அந்த அகங்காரத்தை நொறுக்கிப் போட்டு இது எல்லாம் ஒன்றும் இல்லை என்று காட்டியே ஆக வேண்டும். அந்த இடத்தில் விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான்....


மாயையில் தன்னை யாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் கர்விகளுக்கு அது இன்னமும் பூஸ்ட் ஆகிவிடும். இயல்பில் குற்றமில்லாமல் புரிதலினால் கோபமாய் இருப்பவர்களிடம் அவர்களின் குணநலனை கருத்தில் கொண்டு மேலும் நம்மை புரிந்து கொள்ளும் படி விட்டுக் கொடுத்தால் எதிராளியின் பண்பு இன்னும் மெருகேறி புரிதலை பலப்படுத்தும்.


ஒரு தலைவன் எப்போதும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்காக, தன்னை நம்புவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறான் என்று சொல்வதை விட தன்னை  முன்னிலைப்படுத்துவதை தவிர்க்கிறான் என்றே சொல்ல வேண்டும்.


ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம், தலைமையில் இருக்கும் ஒரு மனிதன் தானே ஆக்கவேண்டும் என்று பிடிவாதமாகவும், தன்னுடைய கருத்துக்களே மிகச்சிறந்தது என்ற ஒரு மன ஓட்டமும் கொண்டிருந்தால் அவனால் புதிய மூளைகளில் இருந்து பிறக்கும் ஆக்கப்பூர்வ கருத்துக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.


ஒரு நல்ல தலைவன் தன் சுகத்தை மட்டும் எண்ணுவது இல்லை, எந்த ஒரு செயலாய் இருந்தாலும் தனக்கும் தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கும், சமுதாயத்திற்கு நலம் பயக்கும் செயல்களையும் எப்போதும் ஆதரிப்பவனாகவும் அப்படியான கருத்துக்களையும் செயல்களையும் செட்பவர்களையும் அடையாளம் கட்டுபவனாகவும் இருக்கிறான்.


எல்லோரும் நினைப்பார்கள்...... எதிரியை வீழ்த்தி விடுவது அல்லது மாற்றுக் கருத்தை வாதிட்டு தன் கருத்தை நிலை நிறுத்துவது மட்டுமே வெற்றி என்று....


அல்ல அல்ல....

ஏற்றதொரு கருத்து அல்லது வடிவம் அல்லது செயல் வரும் போது அதை ஆதரித்து வழி விட்டு அதை செய்ய எல்லா உதவிகளையும் செய்வது தலைமைத்துவ பண்புகளில் தலையாயது...!


ஒரு வண்டியை ஓட்டி ரோட்டில் செல்பவனுக்கு தன்னுடைய வண்டி மற்றும் தன்னைப் பற்றிய கவலைதான் இருக்கும்.. 

ஆனால் 

ட்ராபிக் போலிஸ்காரருக்கோ எல்லா வண்டியும் ஒழுங்காய் செல்ல வேண்டும் என்ற எண்ணமிருக்கும்....


இப்படியான எண்ணங்களால் ஒரு தலைவன் எப்போது வித்தியாசப்படுகிறான்....!


ஆனால் அகங்காரமும், கர்வமும் தன்னைப் பற்றி எப்போதும் ஒரு மாயமான மேலான கருத்து என்னும் சுப்பிரியாட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கும் மனிதர்கள் தலைமையில் இருப்பார்கள். சூழல் அதை ஏற்படுத்தி இருக்கும்...ஆனால் அவர்கள் ஒரு போதும் தலைவர்கள் ஆக மாட்டார்கள்.. அல்லது மக்களால் வெறுக்கப்படவே செய்வார்கள்.


பதவி என்பது வேறு பண்பு என்பது வேறு....! பதவியில் அதிகாரம் இருக்கும்.. ஆனால் பண்போடு கூடிய தலைவனுக்கு மக்கள் ஆதர்வு எப்போதும் இருக்கும்...!


கர்வம் பற்றியும் அகந்தை பற்றியும் வரும் நாட்களில் காணலாம்...!


(இன்னும் பேசுவோம்...)



கழுகிற்காக






(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

6 comments:

தமிழ் அமுதன் said...

தலைமைத்துவத்தின் ஆச்சர்யமான ஒரு பண்பு... என்ன தெரியுமா? விட்டுக் கொடுத்துப் போவது....!///


அருமை...!

ரேவா said...

பதவி என்பது வேறு பண்பு என்பது வேறு....! பதவியில் அதிகாரம் இருக்கும்.. ஆனால் பண்போடு கூடிய தலைவனுக்கு மக்கள் ஆதர்வு எப்போதும் இருக்கும்...!

பண்போடு கூடிய தலைவனுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் உண்மையான வரிகள் ... .. நல்ல பதிவு வாழ்த்துகள்:)

டிராகன் said...

/////// அந்த தொழிலாளி வராத அன்று அந்த வேலைத் தேக்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டு தனது டையை கழட்டி தூர எறிந்து விட்டு கை சட்டையை மடக்கி விட்டு.....அந்த தொழிலாளியின் வேலையைப் போய் தொழிற்சாலையில் செய்து விட்டு அடுத்த நாள் அந்த தொழிலாளி வந்தவுடன்....அவர் வராததால் எந்த மாதிரியான இழப்பு ஏற்பட்டது என்று விளக்கி, இனி அத்தியாவசியமான விடுமுறை என்றால் முன் கூட்டியே தெரிவித்தால் நிர்வாகம் வேறு ஒருவரை அந்தப் பணியில் ஈடுபடுத்த ஏதுவாக இருக்கும் என்றூ கூறி.. நெக்ஸ் டைம் ரிப்பீட் ஆகாம பாத்துக்கோங்க என்று தோளில் கை போட்டுக் கூறி விட்டு....அந்த தொழிலாளியின் வீட்டில் உள்ளவர்களின் நலனையும் சேர்த்தே விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.... ////////

WINGS OF FIRE ..,

டிராகன் said...

///// ஆனால் அகங்காரமும், கர்வமும் தன்னைப் பற்றி எப்போதும் ஒரு மாயமான மேலான கருத்து என்னும் சுப்பிரியாட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கும் மனிதர்கள் தலைமையில் இருப்பார்கள் /////

TVS AND AMALGAMATION GROUP !!!

டிராகன் said...

''' எடித் ஹாமில்டன் பண்டைய கிரேக்கர்கள் பற்றி ,பெரும்பாலனவர்கள் பொறுப்புகளிருந்து விடுபட வேண்டும் என்ற விடுதலையை தான் நாடினார்கள் .விளைவு ஏதன்ஸ் நகரை மீட்பது பகற்கனவாகிவிட்டது.'''

'பரிவை' சே.குமார் said...

அருமை...!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes