அணுமின் உற்பத்தி மட்டுமே நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் என்ற பொய்யான மாயையில் திளைக்கிறது அரசாங்கம். அதன் விளைவுகளை துளி கூட சிந்திக்காமல் பாதுகாப்பானது, பாதுகாப்பானது என்று மட்டும் ஒப்புவிக்கிறது. அவர்கள் பேச்சின் உண்மை கல்பாக்கம் மின் நிலையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையிலேயே தெரிந்து விட்டது. இன்னும் அணுமின் நிலையத்தை கட்டிக் கண்டு அழ வேண்டும் என்றால் என்ன செய்ய? அத்தோடு பல ஆண்டுகளாக அணுமின் சக்தி துறை உற்பத்தி செய்த லட்சணம்
இனி மாற்று வழிக்கு வருவோம்.
முதலில் நம் கண்ணில் படுவது சூரிய ஒளியில் மின்சாரம். இதற்கு ஆகும் செலவு என்பது மற்றவற்றில் இருந்து இரண்டு மடங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் கிராமப்புற மக்கள் பயன்படுத்துவது இதுதான். அங்கு என்ன அம்பானியா இருக்கிறார்கள்? முன்னதாக தெருக்களில் எல்லாம் கூட இந்த வகை விளக்கை அமைத்தார்கள். இதற்கு ஆகும் முதலீடு மட்டுமே அதிகம்.மற்றபடி இதை பராமரிப்பது எளிது,அத்தோடு அதிக பின் விளைவு இல்லாத ஒன்று இதுவே. மத்திய அரசே ஒரு திட்டம் அமைத்து இது குறித்த விழிப்புணர்வை ஓரளவிற்கு பரப்பி வருகிறது. இது நாம் காலத்தால் மறந்து விட்ட பொதிகை தொலைக்காட்சியில் கூட முன்னர் ஒளிபரப்பப்பட்டது. அதாவது ஒரு வீட்டுக்கு அடிப்படை மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய 5 லட்சம் ஆகும். இதில் அரசே மானியமாக இரண்டு லட்சம் வேறு தருகிறது. மீதிக்கு வங்கி மூலம் கடன் பெறலாம். தனியொரு குடும்பத்துக்கு இது அதிகம் என்றாலும் அரசாங்கம் நினைத்தால் இது எளிது.
இது போக பல சாதனங்கள் சூரிய ஒளியில் இயங்கும் வண்ணம் வந்துவிட்டது. பெங்களூரு நகரில் பெரும்பாலும் சூரிய ஒளி மூலம் மட்டுமே வாட்டர் ஹீட்டர்கள் செயல்படுகிறது. இது போக பல இடங்களிலும் சூரிய ஒளியில் இயங்கும் அடுப்புகள் வந்து விட்டன.
Harish Hande என்ற கர்நாடக இளைஞர் செய்த முயற்சி இந்தியாவில் பிற்படுத்த பகுதிகளில் 120,000 வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைத்து உள்ளது. இவர் இந்த முயற்சிக்கு பெற்ற விருதுகள் ஏராளம். இவரின் முயற்சிகளை பின் தொடர்ந்தாலே நாம் சூரிய ஒளியில மின்சாரம் மூலம் தன்னிறைவு அடைய முடியும்.
சரியாக கூறுவது என்றால் 60 km x 60 km உள்ள இடத்தில் 1,00,000 MW மின்சாரம் நாம் உற்பத்தி செய்ய முடியும். இது எத்தனை நம் அணு உலைகளை விட பல மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள பாலைவனப் பகுதி மட்டும் 2,08,110 km. இதில் மட்டுமே நாம் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய இயலும்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள் அணு உலை, அதன் விளைவுகள், கடல் நீர் பிரச்சினை, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது என எல்லாவற்றையும் நாம் யோசிக்க வேண்டும்.
நான் முன்னர் கூறியது போல தனியொரு குடும்பம், ஒரு அரசாங்கம் என எவர் வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யும் அளவுக்கு வசதி உள்ளது தான் சூரிய ஒளியில் மின்சாரம். கைக்கடிகாரம் தொடங்கி, வாட்டர் ஹீட்டர் வரை வந்து நிற்கும் இந்த வசதி ஏன் வீடுகளுக்கு பயன்படுத்த முடியாது ?
ஒரு அரசு நினைத்தால் இதை நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டுகளில் (2000 இல்) இருந்தததை விட Photo Voltaic(PV) cellவிலை இப்போது பாதி ஆகி விட்டது. அத்தோடு இதன் மூலம் மின்சாரத்தை நாம் சேமிக்க உதவும் லித்தியம் பாட்டரிகள் Recycle செய்யும் வண்ணம் இப்போது உருவாக்கப்படுகின்றன.
இந்தக் கணக்கு தனியார் சொல்வது. மூலப்பொருள்கள் விலை மாறப்போவது இல்லை, உற்பத்தி இதுவரை சொல்வது எல்லாம் உண்மை. அணு மின் போல பொய் அல்ல. வேறு என்ன வேண்டும்
அணு மின்சாரத்திற்கு ஆரம்பத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம். அதை பராமரிக்க எவ்வளவு முதலில் அணு மின் கழிவுகளை எங்கு கொண்டு எறிய போகிறோம்? இதை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களும் செலவுகளும் எந்தக்கணக்கில் அடங்கும்? என்று அரசாங்கம் கணக்கிட்டால் சூரிய ஒளி மின் உற்பத்தி இதில் பாதி கூட வராது.
அணு உலை அமைக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி வேண்டும் என நிர்ணயிக்கும் அரசாங்கம்அதை உற்பத்தி செய்கிறதா? என்றால் இதுவரை இல்லை. ஆனால் செலவு மட்டும் பன்மடங்கு ஆகும்.
நாம் கையேந்தும் அமெரிக்கா கூட இந்த தொழில்நுட்பதுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்தியாவில் இது பெரும்பாலும் தனியார்கள் கையில் மட்டுமே உள்ளது. நிலக்கரி மூலம் பெறப்படும் அனல்மின்சாரம் ரொம்ப நாள் வராது சூரிய ஒளி ஒன்றும் தீரக்கூடியது இல்லை. ஒரு வேலை இதிலும் தனியார் தான் கொழிக்க வேண்டும் என்பது அரசின் எண்ணமாக இருக்கலாம்.
இரண்டாவது நதி நீர் இணைப்பு. நதி நீர் இணைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நதி நீர் இணைப்பின் போது நிறைய அணைகள் கட்டப்பட வேண்டும். அதிலிருந்து செய்யப்படும் உற்பத்தி போதாதா? ஓட்டு அரசியல் மட்டுமே செய்யும் கட்சிகள் இதை செய்யுமா?
மூன்றாவது காற்றாலை. இதனால் நட்டம் தான் என்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் நம் மாநில அரசு தமிழக காற்றாலை உற்பத்தியை முழுவதுமாக பயன்படுத்தி இருந்தால் மின் தட்டுப்பாடே நம் மாநிலத்துக்கே வந்து இருக்காது. விலை அதிகம் என்று கூறி அதை மறுத்து, வாங்கிய மின்சாரத்தை ஒழுங்காக கொண்டுவரத் தெரியாமல் அதிலும் இழப்பு.
உற்பத்தியை மட்டும் கவனத்தில் கொள்ளும் அரசாங்கம் ஒழுங்காக சேமிக்கிறதா மின்சாரத்தை உற்பத்தி செய்த மின்சாரத்தை கடத்தி செல்லும் மின்கம்பிகள் சக்தியற்று இருப்பதால் பாதி இழப்பு வருகிறது. நம் உற்பத்தியில் பாதி இழப்பிலேயே போய் விடுமானால் இனி உற்பத்தி செய்வதை மட்டும் எந்த லட்சணத்தில் சேமிக்கப் போகிறோம்? ஆனால் சூரிய ஒளியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக சேமிக்க வேண்டும். இதை மற்றவற்றுக்கும் பின்பற்றும் எண்ணம் அரசுக்கு வரும்.
சூரியஒளி மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கின்றது. நீரோ காற்றோ குறிப்பிட்ட பருவகாலத்தில்தான். நிலக்கரியோ என்றுவேண்டுமானாலும் தீர்ந்துவிடும்.
சூரிய ஒளியோ இப்பூமி உள்ள மட்டும் நமக்கு கிடைக்கும் வற்றாத வளம். இதை பயன்படுத்த அரசு முன் வரவேண்டும். இதற்கு நாம் அரசை தூண்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனக்கூறி கட்டுரையை நிறைவு செய்வோம்.
10 comments:
http://www.kazhuku.com/2011/09/blog-post_19.html
மேற்படி கட்டுரை பிரச்சினையை பேசியது..
இன்றய கட்டுரை தீர்வுகளை சொல்கிறது .,
பலே பிரபு உண்மையிலேயே பலே பிரபுதான்..!!
கலக்கிட்டீங்க தோழர்
அருமையான தகவல்களுடன் இன்றைக்குத்தேவையான கட்டுரை வாழ்த்துக்கள் பிரபு.
கலக்கல் பதிவு......
தொடர்ந்து எழுதுங்கள்....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
சூரிய ஒளிகுறைந்த அளவிலும் குறிப்பிட்டகாலங்களில் மட்டுமே போதிய அளவிலும் கிடைக்கும் ஜேர்மனி நாட்டிலேயே சூரியசக்திமூலம் மின்சார உற்பத்தி செய்வது பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு தனியார்வீடுகளில் சூரிய சக்திமூலம் உற்பதி செய்யப்படும் மின்சாரம் அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்படுகிறது. காற்றாலைகளின்மூலமான மின் உற்பத்தி பெரிய தொழில்நிறுவனங்களினால் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக உற்பத்திசெய்யப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிகளினால் ஏறத்தாள வங்குரோத்துநிலைக்குத் தள்ளப்பட்டிருந்த கிரேக்கநாட்டின் வருமானத்தை அதிகரிக்கும்முகமாக அங்கு பெருமளவில் சூரிய சக்திமூலம் மின் உற்பத்திசெய்ய ஏனைய ஐரோப்பிய நாடுகள் முதலிட உள்ளன. இங்கு உற்பதியாக இருக்கும் மின்சாரத்தை எனைய ஐரோப்பியநாடுகள் கொள்முதல்செய்யவும் இணங்கியுள்ளன.
அதிகளவு சூரிய ஒளியும் போதிய காற்றுவீச்சு உள்ள கடற்கரை பிரதேசங்களும் கொண்டுள்ள தமிழகம் இத்துறைகளில் போதிய கவனம் செலுத்தினால் மின் உற்பத்தியில் தன்னிறைவும் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம்காணவும்முடியும்
நல்ல பதிவை அருமையாக தந்தீர்கள்.
நீங்கள் சொன்ன படி சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பது நல்ல விஷயம் தான். பசுமையான விஷயம் கூட . நம் வீட்டிற்கு , அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து பெறலாம். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து தற்பொழுது பெற இயலாது என்பதை கூற கடமைப்பட்டுளேன். ஆனால் அதற்காக அது சாத்தியமல்ல என்று கூற முடியாது. சீக்கிரம் அந்த கனவு நிறைவேறலாம். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க தேவையான சூரிய தகடுகளை தயாரிப்பதில் சுற்று சூழல் கெடுகிறது என்ற ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. தங்கள் பார்வைக்கு
// இரண்டாவது நதி நீர் இணைப்பு. //
உண்மை .. உலகின் அதிக மழை பொழியும் இடம் என்று அழைக்கப்படும் சிரபுஞ்சியில் 5 வருடங்களாக மழை இல்லை என்பதை நீங்கள் நம்புவீர்களா..? நம்பி தான் ஆக வேண்டும். நதிகள் இணைப்பு என்ற கருத்து பல காலமாக நடைபெற்றாலும் , சாத்திய கூறுகள் அதிகமாக இலை என்பது உண்மை. நீங்கள் சொல்லுவது போல அணைகள் கட்டுவதினால் மின்சாரம் தயாரிக்க முடியாது. அந்த அணையில் இருந்து தண்ணீர் வெளியேறினால் தான் மின்சாரம் தயாரிக்க முடியும். தென்னக நதிகளை குறித்து நீங்களே ஒரு பதிவு எழுதுங்களேன்.
// மூன்றாவது காற்றாலை. //
தமிழ்நாட்டில் இப்போது 1500 MWE மின்சாரம் தட்டுப்பாடு என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்தே இருக்கும். இந்தியாவின் காற்றாலைகளில் முதல் இடம் பிடித்துள்ள தமிழ்நாட்டில் நீங்கள் சொல்லுவது போல அரசு மின்சாரத்தை வாங்காமல் இல்லை , மின்சாரம் தயாரிக்க தேவையான காற்று இல்லை என்பது தான் உண்மை.
மாத்திரமல்ல , நீங்கள் அணு மின்சாரத்தை குறித்து தவறான கருத்து கொண்டு உள்ளீர்கள். நாம் நினைப்பது போல அது ஆபத்தானது அல்ல. தொடர்ச்சியாக எந்த பருவ காலத்திலும் மின்சாரம் பெற முடியும். எல்லாவற்றிலும் மேலாக , உலக வெப்பமயமாதலை தடுக்கிறது. அரசு கூறுவது போல அணு மின்சாரம் பாதுகாப்பாக இருக்கும் போது அதை வரவேற்க நாம் ஏன் தயங்க வேண்டும்.. என்பது எனது கருத்து.
அருமையான கட்டுரை பாராட்டுக்கள் பிரபு...! சூரிய சக்தியைப் பற்றி சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்,
1. ஹெவிடூட்டி உபகரணங்களை இதில் பயன்படுத்த முடியாது. (பம்புகள் வாஷிங் மெசின்)
2. இரவு நேரத்தில் முழுக்க முழுக்க பேட்டரியில் ஓட வேண்டி இருக்கும். இன்வர்ட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இதன் பிரச்சனை தெரிந்திருக்கும். (லோ வோல்டேஜ், ஃபேன்கள் முழு வேகத்தில் சுத்தாது). எனவே இது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
எனினும், இதுதான் இனி எதிர்காலத்தின் மின்சார உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்க போகிறது.
அருமையான கட்டுரை.
@ இருதயம்
முதலில் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சூரிய ஒளிக்கு பயன்படுத்தும் தகடுகளை ஒழுங்காக பராமரித்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
நதிநீர் இணைப்பு எதற்கு? எங்கிருந்தாலும் நீர் பாயத்தானே?
இதில் உண்மை காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்ளவில்லை என்பதுதான்.
ஆம் எங்கள் புரிதல்கள் தவறுதான். ஏன் என்றால் அரசு கூறும் பல பொய்களை எங்களால் உண்மை என்று ஒப்புக்கொள்ள முடியவில்லையே.
அணு மின்சாரம் பாதுகாப்பானது என்று அரசு சொல்கிறது சரி, அதன் விதிமுறை மீறல்களை படித்தீர்களா? கழிவுகளை என்ன செய்யப் போகிறோம்? விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய போகிறார்கள்? கேள்விகள் பல சகோ.
@ பன்னிக்குட்டி ராம்சாமி
வணக்கம் அண்ணா.
மனிதன் ஒரு அறைக்கு இருந்த கணினியை ஒரு உறைக்குள் கொண்டு செல்லும் வண்ணம் படைத்து விட்டான். இதற்கு மாற்றா இல்லை?
Post a Comment