Monday, January 30, 2012

அடிப்படை கல்வி--இன்றைய நிலை...ஒரு விழிப்புணர்வு பார்வை!

அன்பர்களே .... கழுகில் இன்றைய தலைப்புஅடிப்படை கல்வி--இன்றைய நிலை... இது பற்றி ஒரு சின்ன அலசல்... நம் இந்திய திரு நாட்டின் பண்டைய கல்வி முறை  குருகுலத்தை சார்ந்து இருந்தது... மாணவர்கள் குருவின் வீட்டிலேயே தங்கி படித்துவந்தார்கள்... பின்னர் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நம் கல்வி முறையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தற்போது இருக்கும் மெக்காலே  முறைக்கு---முற்றிலுமாக நம்மை மாற்றி அதற்கு நம்மையும் அடிமை ஆக்கிவிட்டார்கள்..... இப்போது எல்லாம் மதிப்பெண்,,மதிப்பெண்,...மதிப்பெண்..... செயல் வழி கற்றல் என்று ஆரம்பித்தார்கள்....அது எந்த அளவுக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது ..???? அன்பர்களே..பொதுவா நம் எல்லாருடைய எண்ணமும்... நமது குழந்தைகள்...மதிப்பெண் நிறைய வாங்கவேண்டும்.. வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்...இது மட்டும் தான். நம்மில் எத்தனைபேர்...விடைத்தாளில்...வாந்தி...

Thursday, January 26, 2012

இந்தியக் குடியரசும்...வல்லரசுக் கனவும்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...!

இந்திய குடியரசின் ஒப்பற்ற நாளை விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்களை கழுகு தெரிவித்துக் கொள்கிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னை வல்லரசாக பார்க்கச் சொல்லி இந்திய தேசத்தின் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் இதுவரை இந்தியாவை ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் ஒரு இந்தியக் குடிமகனாக கடும் கண்டனத்தை இந்த 63 ஆம் குடியரசு தினத்தில் தெரிவிக்கும் கடமை நமக்கு உள்ளதையும் மறக்க வேண்டாம் தோழர்கள்..! 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயனும், டச்சுக்காரனும், பிரெஞ்சுக்காரனும் மென்று தின்றது போக மீதமுள்ள நாட்டை நாங்கள் போராடித்தான் சுதந்திரம் பெற்றோமென்று இந்திய...

Wednesday, January 25, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (25.1.2012)

கனகுவும் ரெங்குவும் பேசிக்கொண்டு வந்தனர்.... என்னய்யா ரெங்கு இப்படி பயந்து பதுங்குற..?! என்ன உன் வீட்டு அம்மா வராங்களா..??  ரெங்கு : அட நீ வேறய்யா.. அங்க பாரு ஒரு வெறிநாய் போகுது... அதான்.  கனகு : அதுக்கு நீ ஏன்யா பயப்படுற..?! அதுங்க தானே பயப்படனும்..?? ரெங்கு : என்ன ஜோக்கா..?? போன வருஷம் வெறி நாய் கடிச்சு இருபதாயிரம் பேர் இறந்து போய் இருக்காங்களாம்..!! அப்போ பயப்படாம இருக்க முடியுமா..??  கனகு : அட கொடுமையே.. இது வேறயா... நாயை கொன்னா அனிமல் பிளானட்ல இருந்து வருவாங்க... நாம என்னதாய்யா பண்றது ... சரி.. சரி.. நீ என்ன கடிக்காம வா.. ரெங்கு : ஹெல்மட் போடலேன்னா போலீஸ் பிடிக்குது... போட்டா நாய் பிடிக்குது. என்ன கொடுமை கனகு..?! இதுல வேற அபராத தொகைய வேற உயர்த்திட்டாங்களாம்.  கனகு : அட பாவிங்களா..போலீஸ்க்கு கிம்பளம் உயர்வு வேறயா......

Thursday, January 19, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (19.1.2012)

பஞ்ச் : 1 தமிழகத்துல ஆட்சி மாற்றம் நடந்ததுக்கு காரணம் நடராசன் ஐயாதானுங்களாமே...?  அவரு மனசு வச்சிதான் கலைஞர் கூட போன வருசம் இருந்து இருப்பாருன்னு நினைக்கிறேன். யாருக்கும் கட்டுப்படாத ஒரு தலிவராம் நடராசரு... ஆனா ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் பயப்புடுவாராம்...ஒண்ணு நம்ம பழ. நெடுமாறன் ஐயா..... ரெண்டாவது அவுரு கல்யாணம் கட்டுன அம்மிணி... தஞ்சாவூர்ல கொதி கொதின்னு கொதிச்சு இருக்காரு நடராசரு, ரெண்டு உலக்கு அரிசிய போட்ருந்தா கொதிச்ச கொதிப்புல பொங்கி சாப்டு இருக்கலாம் போலருக்கே...! அம்மாவுக்கு பூசாரிங்க எல்லாம் ஒண்ணு கூடி மந்திரிச்ச மந்திரிப்புல லவக்குனு ஒடன் பொறவா சகோதரிய வெளிய அனுப்பிடுச்சு.. இப்போ நடராசன் & கோ தைய தக்க தைய தக்கானு வெறி கொண்ட மாறி குதிக்க ஆரம்பிச்சுடுச்சு... தானை தலைவர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழகத்தின் தலையெழுத்துதான்.....

Sunday, January 15, 2012

பொங்கலோ பொங்கல்...! தமிழர் திருநாள் பற்றிய ஒரு பார்வை.....!

எத்தனையோ பண்டிகைகளை இந்திய தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாய் கொண்டாடி வந்தாலும் தமிழ்த் தேசத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்னும் தமிழர் திரு நாள் விழா மற்றர் எல்லா விழாக்களையும் விட வித்தியாசமானதுதான்... மதத்தின் வெளிப்பாடாய், சாதியின் வெளிப்பாடாய், பல்வேறு கடவுளர்களையும், பலதரப்பட்ட மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதமாகத்தான் மனிதர்களின் பண்டிகைகள் வடிவமைக்கப்ப்பட்டது, ஆனால் பொங்கல் பண்டிகை என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் கலாச்சார விழாவாக, தொன்மையை விளக்கும் ஒரு ஆத்மார்த்த நிகழ்வாக பாகுபாடுகளை எல்லாம் களைந்தெறிந்து ஒரு இனத்தின் விழாவாய் எப்போதும் மிளிர்கிறது. விவசாயத்தை சார்ந்த ஒரு இயற்கை வாழ்வினை வாழ்ந்து அதை சிறப்பித்து நன்றி கூறும் ஒரு ஒப்பற்ற நிகழ்வாய் தமிழர்களுக்கு பொங்கல் அமைந்ததோடு மட்டுமில்லாமல் அவனது கலை, வீரம்,...

Friday, January 13, 2012

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்வுத் தொடர் iv

    பாகம் i பாகம் ii  பாகம் iii வார்த்தைகளினூடே கவனியுங்கள்!!!  நம்மில் பலர் பேச்சாலேயே ஏமாந்து போகிறோமே ஏன்? யாரோ ஒருவன் நம் மனம் மகிழ பேசிவிட்டு, நம்மை சுலபமாய் ஏமாற்றி செல்கிறானே ஏன்? நமக்கு இந்த ஒரு சின்ன இடத்தில் கவனமில்லை, அதாவது, வார்த்தைகளினூடே கவனிக்கும் கவனமில்லை.எல்லாருக்கும் வார்த்தைகளை கவனிக்க தெரியும்..எத்தனை பேருக்கு வார்த்தைகளுக்கு நடுவில் அந்த மில்லிசெகண்ட் மவுனங்களை, அந்த மவுனங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் புரிந்துகொள்ள தெரியும்? எனக்கு தெரியும் என்பதற்காக இதை சொல்லவில்லை. எல்லாராலும் முடியக்கூடிய ஒரு சங்கதி என்பதால் இதை உங்களுக்கு மறுஅறிமுகம் செய்துவைக்கிறேன் அவ்வளவுதான். எத்தனையோ முறை, நாம் ஒரு நண்பரிடமோ, அல்லது நம் உறவுகளிடமோ, நம் உடன் வேலைசெய்பவர்களிடமோ பேசி இருப்போம்.....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes