எத்தனையோ முறை, திருவிழாக்களில், பண்டிகைகளில், வருட முடிவுகளில், வருட பிறப்புகளில் இப்படி எத்தனையோ முறை நான் விழாக்களை கொண்டாடி இருக்கிறேன். ஆனாலும் எதோ ஒன்று உதைக்கிறது.
என்னவென்றால்...ஏன் பண்டிகைகளில் மட்டுமே கொண்டாட்டம் இருக்கிறது? ஏன் மற்ற நாட்களில் நாம் அதே கொண்டாட்டத்தின் பரவசத்தோடும், ஆனந்தத்தோடும் இருப்பதில்லை? இல்லை.. ஒருவேளை நாம் மகிழ்ச்சியாக கொண்டாட முடியுமா..இன்னும் அந்த கொண்டாட்ட மனப்பான்மை இருக்கிறதா என்று சோதித்துகொள்ளத்தான் நாம் விழாக்களில் கலந்துகொள்கிறோமோ? அல்லது எப்பவும் போல் நானும் கொண்டாடுகிறேன் பார் என்று பகட்டுக்காகத்தான் எல்லாரும் கொண்டாடுகிறோமா?
எனக்கென்னவோ மேற்சொன்ன இரண்டிலுமே கொஞ்சம் உண்மை இருப்பதாகவே படுகிறது. காரணம், நாம் கொண்டாட்டத்தில் முதலீடு செய்வதில்லை..செய்பவர்களில்லை.. நாம் துன்பத்திலும், துயரத்திலும், சோகத்திலும் முதலீடு செய்பவர்கள்.. அப்படி இருக்க.. கொஞ்சம் நட்டமானாலும் பரவாயில்லை என்றுதான் நாம் கொண்டாடுகிறோம் என்று எனக்கு படுகிறது. உண்மைதானே..!!
சரி.. விஷயத்திற்கு வருகிறேன்...எனக்கு தேதிகளை சார்ந்த கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஒன்று அந்த தேதியில் மட்டுமே முகம் மலர்ந்த மனிதத்தை பார்க்க முடிகிறதென்றால்.. ஒன்று, அந்த தேதி போலியாய் இருக்கவேண்டும்..அல்லது அந்த முகமலர்ச்சி போலியாய் இருக்கவேண்டும்.
ஒன்று மட்டும் நிச்சயம், மனிதனுக்கு மட்டுமே கொண்டாட்டம் சாத்தியம். சிரிப்பும், அழுகையும் மனிதனுக்கு எப்படி தனிச்சிறப்போ, அதே போல் ஒரே இனமாய்..மனித இனமாய் நின்று, ஆடி, பாடி, நகைத்து, குதூகலித்து கொண்டாட தெரிந்த ஒரே இனம், மனித இனம் மட்டுமே.
இந்த பூமியில் வாழ தனக்களித்த வாய்ப்புக்கு, இயற்கைக்கு நன்றி சொல்லி, அதன் நன்றியில் பூக்கும் மகிழ்ச்சியை பிறரோடு பங்கிட்டு, அதை கொண்டாட்டமாய் மாற்றதெரிந்த ஒரே இனம், மனித இனம் மட்டுமே.
எனவே, துன்பப்படுவதற்கும், அவதிக்குள்ளாவதற்கும் வாய்ப்பை தேடி அலைவதை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, கொண்டாட்டத்திற்கான வாய்ப்பை தேடுங்கள், நகைச்சுவைக்கான வாய்ப்பை தேடுங்கள், சின்ன சின்ன சூழல்கள், வெகு சிறிய கணங்களில் கூட கொண்டாட்டத்தை ஏற்படுத்துங்கள்.
எத்தனையோ முறை சாலைகளில் செல்கிறோம், ஒரு பட்டாம்பூச்சி குறுக்கே லாவகமாய் பறந்துபோகிறதே..கொண்டாடுங்கள்.. ஆஹா எவ்வளவு அழகாய் பறக்கிறது..எத்தனை லாவகம், அதன் சிறகுகளில் எத்தனை சுதந்திரம், அதன் அழகில் மயங்கி எத்தனை எத்தனை கவிதைகள்.. மெய்சிலிர்த்து போகலாமே..நாம்.. ஏன் சிலிர்ப்பதில்லை...இனி சிலிர்க்கட்டும்.
இன்று இட்லிக்கு சட்னி இல்லையா? அருமை.. ஆஹா.. சட்னி இல்லாத இட்லி.. இதன் சுவை எப்படி என்று ஒரு கை பார்ப்போம், என்று நீங்கள் ரணப்பட்டுப்போகும் சந்தர்பங்களில் கூட சுகப்பட்டுகொள்ளுங்கள்..!!
..பேருந்தை தவற விட்டுவிட்டீர்களா? ம்ம்..நல்லது இன்று காலார நடக்கலாம்..!!
இப்படி சின்ன சின்ன கணங்களில் ஒளிந்திருக்கும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, ஒரே நாளில், ஒரே தேதியில் மட்டுமே எனக்கு கிடைத்துவிட வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
அதற்காக, புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும், தீபாவளிக்கும் நான் எதிரியில்லை. அந்த கொண்டாட்ட மனப்பான்மை அந்த ஒரு நாளோடு இறந்துவிடாது பார்த்துகொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தில் மட்டுமே வாழ்க்கை நம்மை பார்க்கும். இனி வாழ்க்கையை ஒரு கால ஓட்டமாக, ஒரு சில ஆண்டு உயிரோடிருத்தலாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையை ஒரு காதலியாய், காதலனாய், தாயாய், தந்தையாய் பாருங்கள். அதனோடு கொஞ்சுங்கள், அதன் அழகில் மயங்குங்கள், அதன் கிறுக்குத்தனத்தில் வாய்விட்டு சிரியுங்கள், அதனோடு காதல் கொள்ளுங்கள்.. அந்த காதலை கொண்டாடுங்கள்.!!
இந்த கணம், ஒரு வரம், இந்த வரத்தை அடைய நீங்கள் தகுதியுடையவர் என்பதாலேயே அந்த வரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதை கொண்டாட வேண்டாமா?
எல்லோரும் கொண்டாடுவோம்..எப்போதும் கொண்டாடுவோம்..!!
எனக்கென்னவோ மேற்சொன்ன இரண்டிலுமே கொஞ்சம் உண்மை இருப்பதாகவே படுகிறது. காரணம், நாம் கொண்டாட்டத்தில் முதலீடு செய்வதில்லை..செய்பவர்களில்லை.. நாம் துன்பத்திலும், துயரத்திலும், சோகத்திலும் முதலீடு செய்பவர்கள்.. அப்படி இருக்க.. கொஞ்சம் நட்டமானாலும் பரவாயில்லை என்றுதான் நாம் கொண்டாடுகிறோம் என்று எனக்கு படுகிறது. உண்மைதானே..!!
சரி.. விஷயத்திற்கு வருகிறேன்...எனக்கு தேதிகளை சார்ந்த கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஒன்று அந்த தேதியில் மட்டுமே முகம் மலர்ந்த மனிதத்தை பார்க்க முடிகிறதென்றால்.. ஒன்று, அந்த தேதி போலியாய் இருக்கவேண்டும்..அல்லது அந்த முகமலர்ச்சி போலியாய் இருக்கவேண்டும்.
ஒன்று மட்டும் நிச்சயம், மனிதனுக்கு மட்டுமே கொண்டாட்டம் சாத்தியம். சிரிப்பும், அழுகையும் மனிதனுக்கு எப்படி தனிச்சிறப்போ, அதே போல் ஒரே இனமாய்..மனித இனமாய் நின்று, ஆடி, பாடி, நகைத்து, குதூகலித்து கொண்டாட தெரிந்த ஒரே இனம், மனித இனம் மட்டுமே.
இந்த பூமியில் வாழ தனக்களித்த வாய்ப்புக்கு, இயற்கைக்கு நன்றி சொல்லி, அதன் நன்றியில் பூக்கும் மகிழ்ச்சியை பிறரோடு பங்கிட்டு, அதை கொண்டாட்டமாய் மாற்றதெரிந்த ஒரே இனம், மனித இனம் மட்டுமே.
எனவே, துன்பப்படுவதற்கும், அவதிக்குள்ளாவதற்கும் வாய்ப்பை தேடி அலைவதை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, கொண்டாட்டத்திற்கான வாய்ப்பை தேடுங்கள், நகைச்சுவைக்கான வாய்ப்பை தேடுங்கள், சின்ன சின்ன சூழல்கள், வெகு சிறிய கணங்களில் கூட கொண்டாட்டத்தை ஏற்படுத்துங்கள்.
எத்தனையோ முறை சாலைகளில் செல்கிறோம், ஒரு பட்டாம்பூச்சி குறுக்கே லாவகமாய் பறந்துபோகிறதே..கொண்டாடுங்கள்..
இன்று இட்லிக்கு சட்னி இல்லையா? அருமை.. ஆஹா.. சட்னி இல்லாத இட்லி.. இதன் சுவை எப்படி என்று ஒரு கை பார்ப்போம், என்று நீங்கள் ரணப்பட்டுப்போகும் சந்தர்பங்களில் கூட சுகப்பட்டுகொள்ளுங்கள்..!!
..பேருந்தை தவற விட்டுவிட்டீர்களா? ம்ம்..நல்லது இன்று காலார நடக்கலாம்..!!
இப்படி சின்ன சின்ன கணங்களில் ஒளிந்திருக்கும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, ஒரே நாளில், ஒரே தேதியில் மட்டுமே எனக்கு கிடைத்துவிட வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
அதற்காக, புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும், தீபாவளிக்கும் நான் எதிரியில்லை. அந்த கொண்டாட்ட மனப்பான்மை அந்த ஒரு நாளோடு இறந்துவிடாது பார்த்துகொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தில் மட்டுமே வாழ்க்கை நம்மை பார்க்கும். இனி வாழ்க்கையை ஒரு கால ஓட்டமாக, ஒரு சில ஆண்டு உயிரோடிருத்தலாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையை ஒரு காதலியாய், காதலனாய், தாயாய், தந்தையாய் பாருங்கள். அதனோடு கொஞ்சுங்கள், அதன் அழகில் மயங்குங்கள், அதன் கிறுக்குத்தனத்தில் வாய்விட்டு சிரியுங்கள், அதனோடு காதல் கொள்ளுங்கள்.. அந்த காதலை கொண்டாடுங்கள்.!!
இந்த கணம், ஒரு வரம், இந்த வரத்தை அடைய நீங்கள் தகுதியுடையவர் என்பதாலேயே அந்த வரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதை கொண்டாட வேண்டாமா?
எல்லோரும் கொண்டாடுவோம்..எப்போதும் கொண்டாடுவோம்..!!
உலக சாதனை படைத்திருக்கும் நெல்லையைச் சேர்ந்த சிறுமி விசாலினியைப் பற்றி அறிந்த போது எமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி மட்டில்லாதது. எத்தனையோ எதிர்மறை கருத்துக்களையும், தேவையற்ற செய்திகளையும் பரப்பி வரும் தமிழ் ஊடகங்கள், எம் தமிழ் தேசத்தின் பிஞ்சின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்டாமல் இருப்பதின் பின்ணயில் வழமையில் ஊறிப்போன வணிக புத்திகள் இருப்பதை நாம் உணராமலும் இல்லை.
சிறுமி விசாலினியின் ஐ.க்யூ எனப்படும் நுண்ணறிவின் அளவு 225 என்பது நாம் வியந்து பார்க்கும் அளவில் இருக்கிறது என்றால் இந்த சிறுவயதிலேயே அவள் செய்திருக்கும் சாதனைகள் இன்னும் அளப்பரியது. இத்தகைய நுண்ணறிவுகள் கொண்ட சிறுமி விசாலினி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நமது தேசத்தின் சொத்து. மத்திய மாநில அரசுகள் சரியான உதவிகளைச் செய்து மேலும் அவள் பலப்பல சாதனைகளை புரிய உதவ வேண்டும் என்ற வேண்டுகோளினை இந்தக் கட்டுரையின் மூலம் வைப்பதோடு உங்களின் அன்பையும் பாரட்டுதல்களையும் சிறுமி விசாலினிக்கு என்ற visalini2000@gmail.com மின்னஞ்சலாய் அனுப்பு வையுங்கள்.
மேலதிகமாக இவரைப் பற்றி அறிய: இங்கே அழுத்தவும்

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)
8 comments:
ஒவ்வொரு நாளும் கொண்டாட்டத்திற்கான நாளே...
வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியொடு இருக்க வேண்டியது பற்றி எழுதியவிதம் அருமை.,
வாழ்த்துகள்
இந்த கணம், ஒரு வரம், இந்த வரத்தை அடைய நீங்கள் தகுதியுடையவர்
நிச்சயமாக மிகவும் சரியான உண்மை
பகிர்வுக்கு நன்றி
படிக்கும்போதே மனம் கொண்டாட்டநிலைக்கு செல்கிறது.அருமையான கட்டுரை ரங்கா..!!
மிக இயல்பாக நீங்கள் சொன்னவிதம் மிக ரசிக்க வைக்கிறது.
ம்...ஒவ்வொரு கணத்தின் அற்புதத்தை அனுபவிக்க தவற விட்டு விடக்கூடாது...
உற்சாக மனநிலைக்கு நம்மை கொண்டு செல்ல இது போன்றவை நிச்சயம் உதவும்...அதற்காக உங்களுக்கு நன்றிகள் ரங்கா.
கழுகுக்கு என் வாழ்த்துக்கள்
Nalla pakirvu.....
Nanri ranga
@நிகழ்காலத்தில் சிவா,
வாழ்த்துக்கு நன்றி சிவா..!!
நிகழ்காலத்தில் கொண்டாடுங்கள்..!!
@சசிகலா,
வருகைக்கு நன்றி சசிகலா..!!
அன்பின் ரங்கா - கொண்டாட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை - தினந்தினம் கொண்டாடுவோம் - மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம் - இரசனையுடன் கொண்டாடுவோம்.
//இன்று இட்லிக்கு சட்னி இல்லையா? அருமை.. ஆஹா.. சட்னி இல்லாத இட்லி.. இதன் சுவை எப்படி என்று ஒரு கை பார்ப்போம், என்று நீங்கள் ரணப்பட்டுப்போகும் சந்தர்பங்களில் கூட சுகப்பட்டுகொள்ளுங்கள்..!!
..பேருந்தை தவற விட்டுவிட்டீர்களா? ம்ம்..நல்லது இன்று காலார நடக்கலாம்..!! //
நல்ல சிந்தனை - அனைத்தையும் நேர்மறை எண்ணங்களுடன் சிந்திப்போம் - மன அழுத்தம் வராது சிந்திப்போம். உடல் நலம் சீராக இருக்க சிந்திப்போம்.
நல்வாழ்த்துகள் ரங்கா - நட்புடன் சீனா
Post a Comment