Friday, March 18, 2011

49 O வா" அப்டீன்னா............? ஒரு அனுபவக் கட்டுரை...!




வாக்களிக்க செல்லும் போது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எங்ஙனம் நடத்தப்படுகிறார்கள்? வாக்களிக்க விருப்பமில்லையெனில் என்ன செய்வது? 49 ஓ பற்றிய விலாவரி விளக்கங்கள் என்ன?கட்டுரையாளரின் அனுபவத்தை நமக்கான கட்டுரையாக்கியிருக்கிறார்....


கழுகின் இந்த கட்டுரையை வாசித்து முடித்தவுடன்........எல்லா விபரங்களும் அறியப்பெற்று நீங்கள் இருக்கப்போவது திண்ணம்.

 



கட்டுரைக்குள் செல்வதற்கு முன் மூன்று சம்பவங்களைப் பார்த்து விடுவோம்..



இந்தியாவின் ஓர் மூலையில் வாக்குச்சாவடிக்கு சென்ற ஓர் இளைஞன் அங்குள்ள அலுவலரிடம் 49ஒ விதியின் படி தனக்கு வாக்களிக்க விரும்பும்  இல்லை என்று பதிவு செய்ய 17ஏ படிவத்தினை தருமாறு கேட்டிருக்கின்றான்.  அங்குள்ளவர்களுக்கு அது என்ன வென்றே தெரியவில்லை, அவ்வாறு செய்வதற்குண்டான சட்ட விதிகள் ஏதும் எதுவும் இல்லை என்று மறுத்திருக்கின்றனர்.  இளைஞனோ விடாமல் வற்புறுத்தவே அரை மணி நேர விவாதத்திற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப் பட்ட தேர்தலில் வாக்கு அளிப்பதற்கான சட்ட வழிமுறைகள் அடங்கிய கையேட்டினை அரைமணிநேரம்(?) அலசிய பிறகு அந்த இளைஞனை 49ஒ விதியின் படி யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என்று பதிவு செய்ய அனுமத்தித்துள்ளனர்.




இதே தேசத்தின் இன்னோர் மூலையில் இதே விருப்பத்துடன் சென்ற மற்றோர் இளைஞனக்கோ ஓட்டு போட விரும்பமில்லையென்றால் வந்த வழியே திரும்பிவிடு, இல்லையென்றால் கருப்பு நிற கம்பிக்களுக்கு பின்னால் நிற்க வேண்டியிருக்கும் என்று மிரட்டப்பட்டு இருக்கின்றார், இளைஞனோ வேறு வழியில்லாமல் யாரோ ஒருவருக்கு ஓட்டு போட்டுவிட்டு இந்திய சனநாயகத்தை தூக்கி நிறுத்தி விட்டு வந்தாராம்.




இன்னும் ஒன்று இங்கு இளைஞி, அவருக்கு வாக்குச்சாவடியின் மூத்த அலுவலர் சொன்னாராம், அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவே இல்லையென்று.தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவர் வெளியேறினாறாம்.




இங்கு நாம் கவனிக்க வேண்டியது அரசு அலுவலர்களைத்தான். ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்கள் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  மேலே உள்ள சம்பவங்களின் வழி நாம் அறிய முடிவது மூன்று நாளும் இவர்களுக்கு சம்பளத்துடன் கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் என்ன நடக்கின்றதா? அங்கு என்ன சொல்லித்தரப்படுகின்றது? இல்லை பூத் ஏஜெண்ட்களின் அறிவுரையின் அடிப்படையில் இவர்கள் இவ்வாரு செயல்படுகின்றார்களா என்ற ஐயப்பாடும் எழுகின்றது. இங்கு அனைவரையும் குற்றம் சாட்டவில்லை... நிறைகள் இருந்தாலும் குறைகள் நிறைகளை நீர்த்துவிடச்செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்றது.





மூன்று சம்பவங்களிலும் அனைவரும் படித்த இளைஞர்கள்.. இவர்களின் நிலையே இப்படியென்றால்.... படிக்காத பாமரனுக்கு என்ன தெரியும்.. அப்படியே தெரிந்தாலும் மேலே உள்ள படி நடந்தால் அவனால் என்ன செய்ய முடியும்...




ஒவ்வொரு தேர்தலின் போது 49ஓ வசதியை அனைத்து வாக்கு இயந்திரத்திலும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகின்றது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு இந்திய நாடாளும் பெரும் தலைகளின் வசம் கருந்து கேட்ட போது மொத்தமாக அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக  எதிர்த்தது தனி வரலாறு. இதனை சரி செய்வது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை. இது தொடர்பாக சட்டத்தில் செய்ய வேண்டிய மாறுதல்கள் தொடர்பான ஒரு விண்ணப்பம் 2001 மற்றும் 2004 ஆண்டுகளில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பிரதமரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு.... கிடப்பில் கிடக்கின்றது.  மீண்டும் அனுப்பப்பட்டாலும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பது தெளிவாகின்றது.



இந்திய தேர்தல் சட்டம் 49ஓ விற்கான வழிமுறை.. பற்றிக்கூறுகையில் 



ஓட்டுபோட விருப்பமில்லை என்று பதிவு செய்ய 49ஓ விதியின் படி 17ஏ விண்ணப்பத்தில் (வாக்களர் அட்டவணை புத்தகம்) வாக்களரின் பதிவு எண் குறிக்கப்பட்டு உங்கள் பெயருக்கு நேராக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று எழுதப்பட்டு அலுவலர் முன்னிலையில் அதற்கு நேராக உங்கள் கையெழுத்தோ இல்லை கைரேகையோ பதியப்பட வேண்டும் என்று இருக்கின்றது. இந்த வழிமுறையில் நம் ஓட்டின் ரகசியம் காக்கப்படவில்லை. அதன் காரணமாகவே இதற்கு மாற்று முறை வேண்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் வாக்குசீட்டு அல்லது வாக்கு எந்திரத்தில் அதற்கான வசதி செய்யப்படவேண்டியதன் அவசியத்தை அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 




மூன்று சம்பவங்கள் மட்டுமல்ல இது போன்று ஏராளமான சம்பவங்கள் இருக்கக்கூடும்.  நானும் ஒரு முறை 49ஓ பயன்படுத்திய வகையில் என் அனுபவத்தில் கண்டது,  வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட விரும்பவில்லையென்றேன்...அங்கிருந்த அனைவரும் ஒரு நொடி என்னை உற்றுப்பார்த்தனர்... ரெஜிஸ்டரில் என் பெயருக்கு நேரே என்னவோ(அந்தக் கையெழுத்து  அப்படி, இது நடந்தது என் இருபது வயதில்) எழுதினார். எழுதிவிட்டு கையெழுத்து போட சொன்னார்கள், போட்டுவிட்டு கையில் மையுடன் வெளியேறினேன்.




இதனை இந்திய அரசியல் வாதிகள் எதிர்ப்பதற்கு முக்கியமான காரணமாக ஒரு விசயம் கூறப்படுகின்றது.. வெற்றி பெறும் வாக்களரை விட அதிகமான வாக்குகள் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவாகும் பட்சத்தில் அந்தத்தொகுதியின் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வாழ் நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் விக்கிபீடியாவில் கொடுக்கப்படுள்ளது.

http://en.wikipedia.org/wiki/49-O


கழுகுகுழுமத்தில் இணைய....


கழுகிற்காக


சமீர் அகமது


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)
 

8 comments:

Pranavam Ravikumar said...

Now I am a great fan of 49-O. Thinking to create a communit in Orkut. Whats Say?

செல்வா said...

அரசியல் வாதிகளின் தலையீடு இன்றி 49-0 ஆனது மின்னணு இயந்திரத்தில் இணைக்கப்பட்டால் தான் இந்தப் பிரச்சினை தீர்வுபெரும் .. ஆனா அப்படி பண்ணினா கண்டிப்பா 50 - 60 சதவிகித வாக்குகள் அதுக்குத்தான் விழுனு நினைக்கிறேன் ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

பயனுள்ள தகவல் எல்லாருக்கும் சென்றடையணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போன தேர்தல்ல எனக்கும் கிடைக்கல..

அருண் பிரசாத் said...

தற்போது அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று

Good job kazhughu

எஸ்.கே said...

தேவையான பதிவுதான்! இந்த காலகட்டத்தில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் அதே சமயம் நம் ஓட்டும் மற்றவரால் தவறாக பயன்படுத்த படாமல் இருக்க 49ஓ சிறந்த முறையில் பயனளிக்கிறது!

ஆனால் அரசு பணியாளர்களுக்கே அதைப் பற்றி தெரியவில்லை என்பது வருத்தமாகவே உள்ளது!

TERROR-PANDIYAN(VAS) said...

//ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்கள் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலே உள்ள சம்பவங்களின் வழி நாம் அறிய முடிவது மூன்று நாளும் இவர்களுக்கு சம்பளத்துடன் கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் என்ன நடக்கின்றத? அங்கு என்ன சொல்லித்தரப்படுகின்றது? இல்லை பூத் ஏஜெண்ட்களின் அறிவுரையின் அடிப்படையில் இவர்கள் இவ்வாரு செயல்படுகின்றார்களா என்ற ஐயப்பாடும் எழுகின்றது.//

சூப்பர் மச்சி! அருமையான கேள்வி. பூத்ல வேலை செஞ்ச அனுபவம் உள்ள அரசு ஊழியர் யாராவது பதில் சொல்றாங்களா பார்ப்போம்.

ganush said...

இன்னைக்கு நடந்த தேர்தல்ல அதே தான் நடக்குது. நான் 49 o கேட்டா அரைமணிநேரமா தேடுறாங்க ஆனா கொடுக்கவில்லை, என்னக்கு பின்னாடி 80-100 பேர் நிக்குறாங்க, இவங்க நேரத்தை வீணாக்க வீணாக்க என்னகுப்பின்னாடி சிலர் நிக்கமுடியாம களம்பி போறத பார்த்தேன், என்னால யாரும் கஷ்டபடகூடாதுனு, சுமாரான கட்சிக்கு வோட்டு போட்டுட்டு வந்துட்டேன், தேர்தல் ஆணையம் இதை மட்டும் கண்டுகாமல் இருப்பது வருத்தம் அளிகுறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes