Tuesday, March 29, 2011

மாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!



கல்வி கற்கும் வயதில் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை ஒரு பந்தயக்குதிரை போல பெற்றோர்கள் தயார் செய்யும் வேகத்திலும் அவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பீடு செய்வதிலும் மறைமுகமாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.

உளவியல் ரீதியாக பயணிக்கும் இக்கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்...



இது தேர்வுக் காலமும், அதன் முடிவுகளும் வரும் நேரம். பலருக்கு இது மகிழ்ச்சியானது தான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இருப்பினும் ஒவ்வொரு வருடமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவன்/மாணவி தற்கொலை என்று இப்படிப்பட்ட செய்திகளும் நம் காதுகளை வந்தடைவதோடு, நம் இதயத்தையும் கணக்கச் செய்கிறது.





இப்படித் தான் சமீபத்தில், மிகப் பெரிய தேசியக் கல்லூரியில், நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதாகப் பட்டது, ஒரு கிராமத்திலிருந்து தமிழ் வழிக் கல்வி மூலம் பயின்று,AIEEE தேர்வு எழுதி, இக்கல்லூரிக்கு வந்த ஒரு மாணவன் பற்றியது. இவ்விடத்தில் ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். எத்தனையோ பேர் CBSE சிலபஸில் படித்தும், 2 laksh/year  கோச்சிங்கில் சேர்ந்தும் அந்த கல்லூரியின் ஷீட் கிடைக்காதவர்கள் ஏராளம் என்பதை நினைவில் கொள்க. Its purely on merit only.




சரி, இப்படியாக கஷ்டப்பட்டு அப்பெரிய கல்லூரிக்குள் நுழைந்து, படிப்பைத் தொடர்ந்தாலும், ஏனைய பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்தன.தேர்வு முடிவுகள் வெளியான ஒரு நாள் மதியம், லெட்டர் எழுதி வைத்துவிட்டு, அவன் ஹாஸ்டல் ரூமின் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு, தன் வாழ்க்கையை     முடித்துக் கொண்டான் அம்மாணவன். இது கதை அல்ல நிஜம். இதன் பிண்ணனியை ஆராயும் பொழுது, அவனுடன் படித்த சில மாண்வர்கள் கொடுத்த தகவலின் பேரில், அவனுக்கு  அரியர்ஸ் என்றும், அத்தோடு, லேபில்(@ lab)  சக மாணவ மாணவிகளுக்கும் முன்பாக பேராசிரியர் திட்டி விட்டார் என்றும் காரணங்கள் வருகின்றன.

இப்பொழுது இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று தொடர்ந்தால், அம்மாணவன் செய்ததும் தவறு, அப்பேராசிரியர் திட்டியதும் தவறு என்றும் நாள் முழுதும் பேசலாம். ஆனால், அது எம் நோக்கமல்ல அதற்காக ஒரு உளவியல் நிபுணரிடம் கேட்டு சில ஆலோசனைகளை இங்கே வழங்குகின்றோம் மாணவர்களின் நலம் கருதி...தற்கொலை பள்ளி/கல்லூரி மாணவர்களின் இறப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். பள்ளி/கல்லூரி மாணவர்களின் தற்கொலைகளுக்கு (மேலும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு) காரணம் சரி செய்யப்படாத மன அழுத்தமே ஆகும்.

பள்ளியிலிருந்து கல்லூரிகளுக்கு மாறுவது என்பது ஒரு மாற்றமடையும் நிகழ்வாகும். இங்கே மாணவர்களுக்கு தனிமை, குழப்பம், அமையின்மை, இழந்தது போன்ற உணர்வு, தன் திறமை மீது நம்பிக்கையின்மை, மன அழுத்தம் போன்ற பல வித உணர்வுகள் ஏற்படக் கூடும். மேலும் இந்த பிரச்சனைகள் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இந்த மன அழுத்தம் சரி செய்யப்படாமல் போனால் அது தற்கொலைக்கு காரணமாகலாம்.

பொதுவாக தற்கொலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று தற்கொலை எண்ணம் நீண்ட நாட்களாக இருப்பது, ஒரு நாள் அது முற்றிப் போய் தற்கொலை செய்து கொள்வது. மற்றொன்று தற்கொலை எண்ணம் திடீரென தோன்றி அதை செயல்படுத்தி விடுவது.
தற்கொலை எண்ணம் கொண்ட மாணவர்கள், மிக அமைதியாகவும், தனிமையாக யாரோடும் அதிகமாக பழகாமலும், மன அழுத்தத்தோடும் காணப்படுவார்கள். தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கான சில அறிகுறிகள் உள்ளன.


 ஒரு சர்வே சொல்கிறது. ஐந்தில் ஒரு மாணவர் தங்கள் உண்மையான மனஅழுத்த நிலையை விட அதை பெரிய விசயமாக நினைத்துக் கொள்கிறார்கள். மேலும் வெறும் 6% பேரே அதற்கான தீர்வை காண முற்படுகிறார்கள். அப்படியானால் தீர்வை காணாவிட்டால் அந்த மன அழுத்தம் தற்கொலைக்கு வழி வகுக்கலாம்.

தற்கொலை எண்ணம் சில அறிகுறிகள்:
  • பெரும்பாலான நேரங்களில் சோகமாக இருப்பது.
  • தற்கொலை அல்லது இறப்பை பற்றி பேசுவது அல்லது எழுதுவது.
  • குடும்பம், நண்பர்களிடமிருந்து விலகிச் செல்லுதல்/பழகுவதை குறைத்துக் கொள்தல்.
  • நம்பிக்கையில்லாமல் இருத்தல்.
  • கைவிடப்பட்டவர் போன்ற உணர்வு.
  • அளவுக்கு மீறிய கோபம் அல்லது ஆவேசம்.
  • எதிலோ/எங்கேயோ மாட்டிக் கொண்ட உணர்வு.
  • அடிக்கடி மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
  • போதை மருந்து/ ஆல்கஹால் போன்றவை உபயோகித்தல் (இதுநாள் வரை இல்லாத வகையில்).
  • நடத்தை/பண்புகளில் மாற்றம் தெரிதல்.
  • திடீரென உணர்ச்சிவசப்படுதல்.
  • பெரும்பாலான செயல்களில் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
  • தூங்கும் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்.
  • உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்
  • ஒழுங்காக படிக்காமல் இருத்தல்.
  • ரொம்பவும் நேசிக்கும் விசயங்களை விட்டுக் கொடுத்தல்.
  • குற்ற உணர்வு/வெட்கப்படும் உணர்வோடு இருத்தல்.
  • அசட்டையாக இருத்தல்.


தற்கொலை எண்ணம் கொண்ட சிலருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் 75% பேர் சில அறிகுறிகளை நிச்சயம் கொண்டிருப்பார்கள். எனவே அவற்றை கண்டறிவது நல்லதாகும்.

இங்கே மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஒரு மனிதரும் கவலையில் இருக்கும்போது தனக்கு ஆறுதல் சொல்ல ஒரு மனிதரை எதிர்பார்ப்பார். அப்படி ஒருவர் இல்லாதபோதுதான் அந்த கவலை மன அழுத்தமாக மாறி பிரச்சனையாகிறது.

எனவே மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக அவர்கள் பிரச்சனைகளை அறியும் வகையில் நடந்துகொள்ள வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகிறது. இங்கே சக நண்பர்கள் ஆறுதல் கூறுவதும் முக்கியமாகிறது.

திடீரென தற்கொலை முடிவு எடுக்கும்போது அருகிலுள்ளவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உடன் இருந்தால் அதனை தடுக்கலாம். ஏனெனில் இப்படிப்பட்ட முடிவுகள் ஒரு முறை தடுத்த பின் மீண்டும் எழாது.


கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக
 மகேஷ்வரி

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

9 comments:

சேலம் தேவா said...

தேர்வுகள் நடைபெறும் சமயத்தில் நல்ல விழிப்புணர்வு பதிவு..!!

செல்வா said...

பொதுவா தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் இதுதான் உன்னோட வாழ்க்கை இதுல பெயில் ஆகிட்டா வாழ்க்கையே முடிஞ்சது அப்படின்னு ஒரு பயத்த ஏற்ப்படுத்தி வச்சிருக்காங்க . இதுதான் அதிகமான மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது .. நல்ல கட்டுரை அக்கா ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல விழிப்புணர்வு பதிவு..!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Asiya Omar said...

மிக நல்ல பகிர்வு,பாராட்டுக்கள் மகேஷ்வரி.படிக்கும் பொழுது பக்குன்னு இருக்கு,நான் கூட இந்த தற்கொலை விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு முருகன் பார்ட்டி என்று ஒரு கதை எழுதினேன்.
சமுதாயத்தில் மிகவும் கவலைப்படக்கூடிய விஷயம் இப்ப இது தான்.பிள்ளைகளுக்கு எல்லாவிதத்திலும் அழுத்தம் அதிகம் ,அத்னை பேலன்ஸ் செய்ய தெரிந்த பிள்ளைகள் பிழைக்கிறார்கள்.அதற்கு பள்ளிகள்,கல்லூரிகள் தோறும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,மாணவ மாணவிகளூக்கு கவுன்சிலிங் நிச்சயம் இருக்க வேண்டும்.

Chitra said...

தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், மிகவும் தேவையான நல்ல பதிவு. பாராட்டுக்கள்!

Unknown said...

மிகச்சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.. இதனை நாம் பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரமாக கொண்டு செல்லலாம்..

கழுகுக்கும்,மகேஷ்வரிகும் பாராட்டுக்கள்..

அன்பரசன் said...

//இங்கே மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஒரு மனிதரும் கவலையில் இருக்கும்போது தனக்கு ஆறுதல் சொல்ல ஒரு மனிதரை எதிர்பார்ப்பார். அப்படி ஒருவர் இல்லாதபோதுதான் அந்த கவலை மன அழுத்தமாக மாறி பிரச்சனையாகிறது.//

மிகச் சரி..

Jaleela Kamal said...

எல்லா பெற்றொர்களுக்கும் தேவையான தெரிந்து கொள்ளவேண்டிய இடுகை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes