கழுகின் விழிப்புணர்வுப் பயணம், அரசியல், சினிமா, சமூகம் என்று எங்கெல்லாம் மனிதம் சிறக்க வேண்டுமோ, எங்கெல்லாம் மனிதம் சிறகடிக்கவேண்டுமோ அங்கே எல்லாம் தன்னால் இயன்ற அளவு தமது கருத்துக்களைப் பகின்ற படி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எமது குழுமத் தோழி மகேஷ்வரி அவர்களிடம் இருந்து மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வழிகாட்டலாம் என்ற ஒரு கட்டுரையை தேர்வுகள் முடிந்திருக்கும் இந்த தருவாயில் உங்களின் பார்வைக்கு ஒரு தொடராய் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
எமது குழுமத் தோழி மகேஷ்வரி அவர்களிடம் இருந்து மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வழிகாட்டலாம் என்ற ஒரு கட்டுரையை தேர்வுகள் முடிந்திருக்கும் இந்த தருவாயில் உங்களின் பார்வைக்கு ஒரு தொடராய் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
ப்ளஷ் டூ (+2) பரீட்சை முடிந்தாகி விட்டது. இனி எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்று, இந்த வயது ஒவ்வொரு மாணவனின்/மாணவியின் வாழ்க்கையிலும் இது ஒரு முக்கிய நிகழ்வு அல்லது ஒரு திருப்பு முனை என்றும் கூட சொல்லலாம். இனி என்ன செய்வது என்று மாணவர்களுக்கும் சரி, அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சரி, ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய காலமாய் இப்பொழுது இருப்பதால் இதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் என பல்வேறு துறைகள் இருப்பினும், அதிகப்படியான மக்கள் ஆசைப்படும் துறையான பொறியியல் படிப்பு பற்றிப் பார்க்கலாம். ஏனெனில், இப்படிப்பின் வழியாக மென்பொருள் கம்பெனிகளின் மூலம் அதிக சம்பளத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்பும் இப்படிப்பைத் தேர்ந்த்தெடுப்பதற்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
முதலில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு என்ன என்ன செய்ய வேண்டும், எந்த கல்லூரியை அல்லது எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து, கடைசி நோக்கமான வேலைவாய்ப்பு வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து இனி வரும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெளிவாகக் காணலாம்.
பொறியியல் படிப்பு குறித்து, ஒரு சாதாரண மாணவனுக்கு உரிய சந்தேகங்களையும், தேவைகளையும் வகைப்படுத்தலாம்.
1. எப்பொழுது/எப்படி விண்ணப்பிப்பது?
2. எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது?
3. கல்லூரிக் கட்டணங்கள் எந்த அளவில் இருக்கும்?
4. படிக்கும் பொழுது கவனம் கொள்ள வேண்டியவை(தேர்வுகள், ப்ராஜெக்ட்)?
5. கல்லூரிக் கலாச்சாரம்
6. மாணவர்கள் மன நலம்
7.கேம்ப்பஸ் (campus interview) இண்டெர்வியூக்கு எப்படித் தயாராவது?
இப்படியாக பொறியியல் படிப்பில் சேர்வதில் இருந்து, அதை வெற்றிகரமாக முடித்து குறிக்கோளான வேலையுடனும், இந்த சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல மனிதனாகவும் உருவாக்குவது வரை, எல்லாவற்றையும் ஆராய்ந்து இங்கே சமர்ப்பிக்கவிருக்கிறோம்.
முதல் கேள்வியான எப்படி/எப்பொழுது விண்ணப்பிப்பது என்பது பற்றிக் காணலாம்.
வழக்கமாக மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெற்று மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும். கடந்த வருடம் மே 12 ம் தேதி வெளிவந்தது.பின்னர் உங்கள் மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகின்றது மனதில். எப்படி மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிப்பது என்று?இக்கேள்விக்கு விடையளிக்க வேண்டும் எனில், முதலில் பொறியியல் படிப்பை அளிக்கும் கல்லூரிகளைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் உள்ளது. எடுthதுக்காட்டாக, நமது தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டோமானால், தற்போதைக்கு, நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. உங்களின் +2 மதிப்பென்களைப் பொறுத்தே cut off marks கணக்கிட்டு,ரேங்க் லிஸ்ட்(rank list) என்று ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். இந்த இடத்தில் cut off marks பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
Cut off marks calculation(out of two hundred):
1.முதலில் உங்கள் கணிதம்,வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களை நூற்றுக்கு மாற்றிக்கொள்ளுஙகள்.
2.பின்பு உங்கள் வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள்.
3.இதை கணித மதிபெண்ணோடு கூட்டிக்கொள்ளுஙகள்.
இது தான் இப்பொழுது உங்கள் cut off marks.இந்த முறைப்படியே ரேங்க் லிஸ்டும் தயாரிப்பார்கள். இதன் படியே நீங்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவீர்கள். இந்த முறையானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ்வரும் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும், தேசியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பொருந்தாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அவைகளுக்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தித்தான் சீட் வழங்குவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளல் வேண்டும். இதை விட இன்னும் ஒரு தேர்வு முறையும் மிகப் பெரிய கல்லூரிகளையும் பற்றி கிராமப்புற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று நிட்சயமாக சொல்ல முடியாது. அதாவது, இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(IIT) இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(NIT) இவைகளிலும் பொறியியல் பயிலலாம் என்று எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்? மற்றும் அதற்கு என்ன என்ன தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் அதற்கு எந்த வழிக்கல்வி பயின்று இருக்க வேண்டும் என்றும் அதற்கெல்லாம் பண வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியெல்லாம் தயார்படுதுகிறார்கள் என்றும் இனி வரும் கட்டுரைகளில் காண்போம்.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
9 comments:
நல்ல முயற்சி. தொடருங்கள்.
மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டியாய் விளங்கும் தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் பல....
மாணவர்களுக்கு உதவும் வகையில், உபயோகமான தகவல்களுடன், விளக்கங்களும் பகிர்ந்த மகேஷ்வரிக்கு, நன்றி. தொடருங்க...!
கழுகிற்கு வாழ்த்துக்கள்..! :)
மாணவர்களுக்கு நல்ல பயனுள்ள கட்டுரை... இதை PDF File- ஆக சேமித்து வைக்கும் வசதி செய்தால் பல மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!
சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை. மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு. நன்றி மகேஸ்வரி.
சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரை.
சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை சார் !
உண்மைவிரும்பி.
மும்பை
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அன்பின் மகேஷ்வரி - வலைச்சரம் மூலமாக வந்தேன் - அருமையான் தகவல்கள் நிறைந்த பயனுள்ள பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment