Thursday, September 29, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (29.9.2011)

பஞ்ச்: 1 வரலாறு காணாத அளவுல ஒரு பன்முகப் போட்டி இருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வகையில் பாத்தா சில முக்கியமான தடயங்களை தேர்தல் முடிவுகளோட விட்டுத் தரும்னுதான் சொல்லணும்...! கடந்த 25 வருட அரசியல்ல அதிமுக மற்றும் திமுக இந்த ரெண்டு கட்சியும் தமிழர்கள் வாழ்க்கையில நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது நமக்கு நல்லாவே தெரியும். ஆனா, முதல் தடவையா இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியா களம் காணுவதின் விளைவு இவற்றின் சொந்த பலம் என்ன அப்டீன்னு இந்த முறை தெளிவா காட்டிடும்.  இது ஒரு அவசியமான நிகழ்வுன்னு கூட சொல்லலாம்...! பார்க்கலாம் வெல்லப்போவது அதிமுகவா? திமுகவா...?இல்லை தேமுதிக கூட்டணியா அப்படின்னு? பஞ்ச்: 2 இந்த ப. சிதம்பரம் இருக்காரே அவரு நல்லவரா? இல்லை கெட்டவரான்னு பிரதமர் மன்மோகன் சிங் கிட்ட கேட்டா.. தெரியலையேப்பான்னு டர்பன கழட்டி வச்சுட்டு...

Wednesday, September 28, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (28.9.2011)

என்ன சொல்லப் போகிறாய்..  என்ன சொல்லப் போகிறாய் என பாடிக்கொண்டே டீக்கடைக்கு சென்றார் ரெங்கு... கனகு : என்ன ரெங்கு... போற வர பொம்பளை பிள்ளைய பார்த்து பாட்டு பாடிட்டு வரியா..?? ரெங்கு : எதுக்குய்யா... நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..?? நம்ம மன்மோகன்சிங் அய்யா வர்றாரு... அதான் அவர் என்ன சொல்ல போறார்ன்னு காத்துட்டு இருக்கேன்..கனகு : என்ன விஷயம் பத்தி நீ சொல்ற ரெங்கு..?!  அவர் மேல இருக்குற 2ஜி குற்றசாட்டுக்கு பதில் சொல்லப்போறாரா..?!  ரெங்கு : அட.. அதுக்கு பதில் அடுத்து சொல்வார் கனகு. இப்போ நம்ம ப. சி மேல இருக்கற குற்றசாட்டுக்கு பதில் சொல்வார்ன்னு எதிர்பார்க்கறேன்.கனகு : அவர் என்ன பதில் சொன்னாலும் நீ நம்பிட போறியா ரெங்கு. அவர் வந்து சிதம்பரம் மீது தப்பே இல்லைன்னு சொல்ல...

Tuesday, September 27, 2011

விழித்து எழுக எம் தோழர்களே...! சமூக பிரஞை பற்றிய ஒரு பார்வை!

    எந்த கணமும் தாக்குதல் நடத்தப்படலாம்,உடலின் எங்கே வேண்டுமனாலும் அம்புகள் தைக்கலாம், எதிரியின் வாள் வீச்சில் எப்போது வேண்டுமானாலும் கழுத்தறு படலாம், உறக்கத்தையும் பசியையும், உறவுகளையும் கடந்து...இரவையும், பகலையும், வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது எந்நேரமும் வாள் வீசிக் கொண்டு இருப்பவன் தான் போராளி..... கூச்சலுக்கும்,அலறலுக்கும் சுற்றி கிடக்கும் பிணங்களுக்கும் நடுவே..இருப்பவனுக்குத் தெரிவதெல்லாம் ஒன்றேதான் லட்சியம்....! தம்முடைய சோர்வு தமது சகாக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று எப்போதும் தன்னை முன்னிறுத்தி.....முன்னேறி.. முன்னேறி தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் சுற்றியுள்ள தோழர்களுக்கு பரவச் செய்கிறானே...அவனின் புத்தியில் வேறு என்ன இருந்து விடப் போகிறது....? கொள்கையும் லட்சியமும்தானே? வாள்களின் வீச்சு..கேட்டு…...

Saturday, September 24, 2011

யாருக்கு வெற்றி....? உள்ளாட்சித் தேர்தல் பற்றிய ஒரு அதிரடி பார்வை.

எட்டு முனைப் போட்டியாக பரிணமத்திருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் தற்போதைய தமிழகத்துக்குப்  புதியதுதான். சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு இது போன்ற அரசியல் களத்தினை தமிழக வாக்காளர்கள் சந்திப்பது சிறப்பான ஒரு விடயம் என்று நாம் கணித்தாலும் ஒரு குழப்பமான மனோநிலையை இது மக்கள் மனதில் விதைத்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு கட்சிகளும் தத்தம் ஈகோவினை விட்டுக் கொடுக்க முடியாமல் தனித்தனியாக களம் காண மற்றொரு கட்சியைக் குறைக் கூறிக் கொண்டாலும், பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மக்கள் எளிதில் புறம் தள்ள நிறைய காரணங்கள் இருக்கின்றன. தமது சாதியினர் அதிகமாக இருக்கும் இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளைக் கைக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கிறது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இதிலும் மிக சொற்ப பதவிகளே கிடைக்கும்.  இதற்கு காரணமாய்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes