Wednesday, September 28, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (28.9.2011)




என்ன சொல்லப் போகிறாய்..  என்ன சொல்லப் போகிறாய் என பாடிக்கொண்டே டீக்கடைக்கு சென்றார் ரெங்கு...




கனகு : என்ன ரெங்கு... போற வர பொம்பளை பிள்ளைய பார்த்து பாட்டு பாடிட்டு வரியா..?? 


ரெங்கு : எதுக்குய்யா... நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..?? நம்ம மன்மோகன்சிங் அய்யா வர்றாரு... அதான் அவர் என்ன சொல்ல போறார்ன்னு காத்துட்டு இருக்கேன்..


கனகு : என்ன விஷயம் பத்தி நீ சொல்ற ரெங்கு..?!  அவர் மேல இருக்குற 2ஜி குற்றசாட்டுக்கு பதில் சொல்லப்போறாரா..?!  


ரெங்கு : அட.. அதுக்கு பதில் அடுத்து சொல்வார் கனகு. இப்போ நம்ம ப. சி மேல இருக்கற குற்றசாட்டுக்கு பதில் சொல்வார்ன்னு எதிர்பார்க்கறேன்.


கனகு : அவர் என்ன பதில் சொன்னாலும் நீ நம்பிட போறியா ரெங்கு. அவர் வந்து சிதம்பரம் மீது தப்பே இல்லைன்னு சொல்ல போறார்.. அவர் மேல தப்பு இருக்குன்னு சொன்னா... ராசா ப.சி மேல பழி போட்ட மாதிரி ப.சி பிரதமர் மேல பழி போட்டுடுவார்ல... 


 ரெங்கு : இது வரை மௌனமா இருந்தவர் இப்போ என்ன சொல்றார்ன்னுதான் பார்ப்போம்.. 


கனகு : ஆமா.. ஆமா.. மௌன குரு வருக!! வருக..!! ன்னு பேனர் கட்டி வை... 


ரெங்கு : கூட்டணிக்கட்சிக்கு தாராளமா இடம் கொடுத்து இருக்காங்க...  


கனகு : கூட்டணியா????  இந்த தேர்தல்ல கூட்டணின்னு ஒன்னு இருக்கா..??  


ரெங்கு : நம்ம கேப்டன் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரெண்டு மேயர் சீட் கொடுத்து இருக்காரு... இது தாராளம் இல்லையா?.. 


கனகு : போய்யா... கடுப்ப கிளப்பிட்டு இருக்காதே. ஏற்கனவே நம்ம கேப்டன் கடுப்புல இருக்கார்.. இடைத் தேர்தல்ல நிக்க முடியலையேன்னு...

ரெங்கு : நீ சொல்றதும் கொஞ்சம் உண்மை தான் கனகு... எப்படியாவது பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் அம்மா கூடவே கூட்டணி வைச்சுக்கலாம்ன்னு  நினைச்சாராம்.. அது முடியுமான்னு கொஞ்சம் கடுப்புல தான் இருக்காராம். எதிர்க்கட்சி வேலையும் ஒழுங்கா செய்யல... இப்போ எப்படி ஓட்டுகேப்பார்ன்னும் தெரியல... நம்ம கேப்டன்.  


கனகு : என்னது... ஓட்டு கேப்பாரா?  ஒரு வேளை அவர் வேட்பாளர் ஒருத்தருக்கு ஓட்டே இல்லை .......அவருக்கு ஓட்டு கேப்பாரோ...?? 

ரெங்கு : நம்ம கனிமொழி சீக்கிரமே வெளிய வர போறாங்களாம்.. அய்யா சொல்றார்.. 

கனகு : என்னய்யா சொல்ற...!! பேரனுடைய பாசப் போராட்டம் ஜெயிக்கப்போகுதா..??  

ரெங்கு : அது வேற ஒரு கதை கனகு... விசாரணை முடிந்து விட்டது. ஜாமீனில் வெளிய விடுவதில் ஆட்சேபணை இல்லைன்னு சிபிஐ சொல்லி இருக்காம்.. 

கனகு : அப்போ சீக்கிரமே கனிமொழி வெளியவர போறாங்க.. அப்போ திமுக காரங்களுக்கு சந்தோசமான செய்தி கிடைக்க போகுது...  

ரெங்கு : ஆமா.. ஆமா... அந்த சந்தோசமான செய்தி கிடைக்கும். இருந்தாலும் இப்போ திமுகவிற்கு சின்ன சின்ன சந்தோசம் கிடைச்சுட்டு தான் இருக்கு.. இன்னொரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியவந்திடுச்சுல.

கனகு : அட பாருய்யா! நேத்து கூட அம்மா வீட்டு வாசலிலே காத்துகிடந்தார்.. ஏன் வெளிய வந்தார் கேப்டன் அதிக சீட் தரேன்னு சொல்லிட்டாரா...??!
  
ரெங்கு : இன்னும் கேப்டன் கிட்ட பேச்சு வார்த்தைக்கு போகல... தனியா நிக்க போறாங்களாம்... அங்க மரியாதை தரலையாம். கேட்ட இடம் தரலைன்னு காரணம் சொல்றாங்க கனகு... 

கனகு : என்னது மரியாதையா..?? கூட்டணிக்கு மரியாதை அப்டினு இன்னும் படம் வரலை. அப்படி வந்தா தருவாங்க... அந்த அம்மா தான் யாரையும் மதிக்க மாட்டாங்களே.. அப்பறம் ஏன் இவிங்க எதிர் பாக்குறாங்க.

ரெங்கு : இவங்களும் தனியா நிக்குறாங்க இந்த தேர்தல்ல. இனி மக்கள் தான் தனியா நிக்கல. எல்லாரும் இப்டி தனித்தனியா நின்னா  யாருக்கு ஓட்டு போடுறது..?! ஒரே குழப்பமா இருக்கு கனகு.. 

கனகு : என்னது! இவங்க தனியா நிக்க போறாங்களா? நாளைக்கே கேப்டன் ஒரு மேயர் சீட் கொடுத்தா கூட்டணிக்கு போய்டுவாங்க பார்.... இந்த தேர்தலுக்கு ஓட்டுப்போட போயிடாதே. அதிமுக காரங்க வெறியோட இருக்காங்க ஓட்டு மிஷினை தூக்க..!!  

ரெங்கு : அந்த பயமும் இருக்கு கனகு.. ஆமா என்ன உன் ஏரியாவுல எக்ஸ் மினிஸ்டர அரஸ்ட் பண்ணிட்டாங்களாமே... என்னய்யா ஆச்சு...?!  

கனகு : அதை ஏன் கேக்குற கனகு... அவர கைது பண்ணிடுவாங்கன்ற பயத்துலே அவங்க மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போய்ட்டாங்க... சாமிய கைது பண்ண போறதா ஒரு மாசமா சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ தேர்தல் நேரத்தில் சரியா பிடிச்சு போட்டுட்டாங்க.. 

ரெங்கு : அடப் பாவமே.. அவர் மேல என்னய்யா கேசு..??

கனகு : கொலை கேஸ் & ஆள்கடத்தல். 2006 ல  ரெண்டு பேர் காணாம போய்ட்டாங்க. அவங்களை இவர் தான் கொலை பண்ணி இருப்பார்னு சொல்லி கேஸ் போட்டுட்டாங்க.. இவங்க தம்பிங்க மேலயும் கேஸ் போட்டுட்டாங்க. இப்போ அவங்களும் உள்ளதான் இருக்காங்க..

ரெங்கு : ஓ... இது 2006ல நடந்த விஷயமா..??  இப்போ ஏன் இத தோண்டி எடுக்குறாங்க..?? 

கனகு : அது வேற ஒன்னும் இல்லை ரெங்கு. எல்லாம் தேர்தல் வேலை செய்ய கூடாதுன்னுதான். இங்க KPP.சாமி தம்பி எலெக்சன்ல நிக்குறார். அதுவும் இல்லாம இந்த தொகுதில தேர்தல் வேலையெல்லாம் நடக்க விட கூடாதுன்னு தான் அவரை இப்போ கைது பண்ணிட்டாங்க... 

ரெங்கு : ஓ.. இதான் பிரச்னையா! அப்போ அவர் தப்பு பண்ணவே இல்லைன்னு சொல்றியா..?? அம்மா கூட அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏதோ பரிசு கொடுத்தாங்களாமே..??  

கனகு : ஹா.. ஹா.. ஆமா.. ஆமா... பரிசு கொடுத்தாங்க. ஸ்டேஷன்ல இருக்கற எல்லாரையும் கூண்டோட மாத்திட்டாங்க. அவர் தப்பு பண்ணினாரான்றதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா... நான் எங்க ஏரியாவுல இருக்க வேணாமா..?? எனக்கு ஒரே பதட்டமா இருக்கு டீ சொல்லு....




கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

8 comments:

வைகை said...

டாட் காம் ஆக மாற்றியதற்கு வாழ்த்துக்கள் :)))

வைகை said...

இந்த தேர்தலுக்கு ஓட்டுப்போட போயிடாதே. அதிமுக காரங்க வெறியோட இருக்காங்க ஓட்டு மிஷினை தூக்க..!! /////

இது கட்டுரை ஆசிரியரின் கருத்தா இல்லை கழுகின் ஒட்டுமொத்த கருத்தா? எதை வைத்து இப்படி ஒரு கருத்தை மக்களிடம் பரப்புகின்றீர்கள்? ஒவ்வொரு குடிமகனும் அவசியம் வோட்டு போட வேண்டும் என்று இதற்க்கு முன் பல கட்டுரைகள் இங்கு வந்ததாக ஞாபகம்! இப்போது வோட்டு போட போய் விடாதே கலவரம் வரும் என்கிறீர்கள்? உங்கள் நிலைப்பாடு என்ன? நல்ல மாற்றங்களையும் சமூக விழிப்புணர்வையும் உங்களால் ஏற்ப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்பும்போது பிறகு ஏன் இப்படி மக்கள் மனதில் ஒரு அவநம்பிக்கையையும் பீதியையும் ஏற்ப்படுத்த வேண்டும்? அல்லது உங்களுக்கு ஏதேனும் தகவல் வந்ததா? அல்லது ஊகமா? தகவல் வந்தது உண்மை என்றால் பொறுப்புணர்வோடு காவல்துறையிடம் தகவல் சொல்லுங்கள்! சரி.. நீங்கள் சொல்வதை வைத்து அதிக பாதுகாப்போடு சில முன்னெச்சரிக்கை கைதுகள் செய்து கலவரம் செய்பவர்களை அடக்கினால்... காவல் துறைக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது என்று கட்டுரை செய்வீர்கள்? எது..எப்படியோ... மக்கள் மனதில் தேவையற்ற பயங்களை ஏற்ப்படுத்த வேண்டாம்... அதிக பட்ச வாக்குகள் பதிவானால்தான் மக்களின் உண்மையான மனநிலை தெரியவரும்! நன்றி :))

வைகை said...

ரெங்கு : ஓ... இது 2006ல நடந்த விஷயமா..?? இப்போ ஏன் இத தோண்டி எடுக்குறாங்க..??


கனகு : அது வேற ஒன்னும் இல்லை ரெங்கு. எல்லாம் தேர்தல் வேலை செய்ய கூடாதுன்னுதான். இங்க KPP.சாமி தம்பி எலெக்சன்ல நிக்குறார். அதுவும் இல்லாம இந்த தொகுதில தேர்தல் வேலையெல்லாம் நடக்க விட கூடாதுன்னு தான் அவரை இப்போ கைது பண்ணிட்டாங்க... //////////


ஓ.. அப்ப அஞ்சு வருஷம் ஆயிட்டா அவரு பரிசுத்தம் ஆயிருவாரா? 2006- இல் இருந்து 20011 வரை திமுகதான் ஆளும் கட்சி என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் நண்பரே! ஒரு அரசியல்வாதி மீது வழக்கு இருந்தால் அவர் சார்ந்த கட்சி ஆளும் அரசாக இருந்தால் கைது செய்ய கூடாது? அப்படியே அடுத்த கட்சி வந்தாலும் எல்லா தேர்தலும் முடியும் வரை பொருத்து இருந்து அவருக்கு வசதிப்பட்ட நேரத்தில் கைது செய்ய வேண்டுமா? இதை நான் இவர் திமுக ஆள் என்பதால் கேட்க்கவில்லை... அதிமுக ஆளாக இருந்தாலும் இதைதான் கேப்பேன்! புரிதலுக்கு நன்றி :))

சௌந்தர் said...

@@@வைகை

வாழ்த்துக்கு நன்றி வைகை..

அப்படி கூறி இருப்பது இருவர் பேசி கொள்வது போல தான் யாரும் வாக்களிக்க போகாதீர்கள் என்ற நோக்கத்தோடு எழுதவில்லை அப்படியும் நடக்கும் என்ற எண்ணத்தில் தான் எழுதியது...

தவறாக புரிந்து கொள்ளும் படி எழுதியது தவறு தான் அதை இனி வரும் காலத்தில் திருத்தி கொள்கிறேன் வைகை..

அவர் தப்பு பண்ணினாரான்றதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா... நான் எங்க ஏரியாவுல இருக்க வேணாமா..??//

இதன் மறைமுக கருத்தை புரிந்து கொள்ளவில்லையா வைகை..??? கைதுக்கு சரியான நேரத்தை பயன்படுத்தி கொண்டார்கள் அவ்வளவு தான்...

வைகை said...

அப்படி கூறி இருப்பது இருவர் பேசி கொள்வது போல தான் யாரும் வாக்களிக்க போகாதீர்கள் என்ற நோக்கத்தோடு எழுதவில்லை அப்படியும் நடக்கும் என்ற எண்ணத்தில் தான் எழுதியது...

தவறாக புரிந்து கொள்ளும் படி எழுதியது தவறு தான் அதை இனி வரும் காலத்தில் திருத்தி கொள்கிறேன் வைகை..//


புரிதலுக்கு நன்றி சௌந்தர் :))

வைகை said...

அவர் தப்பு பண்ணினாரான்றதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா... நான் எங்க ஏரியாவுல இருக்க வேணாமா..??//

இதன் மறைமுக கருத்தை புரிந்து கொள்ளவில்லையா வைகை..??? கைதுக்கு சரியான நேரத்தை பயன்படுத்தி கொண்டார்கள் அவ்வளவு தான்...//


மறைமுக கருத்து ஓக்கேதான் எனக்கும் புரிந்தது சௌந்தர்.. ஆனால் அவரை தேர்தல் வேலை செய்யவிடாமல் ஏதோ அவர் வேலை செய்தால் ஆளும் கட்சிக்கு பெரிய இழப்பு வரும் என்ற நோக்கத்தில் கைது செய்தது போல இருந்தது அதற்க்கு முந்தைய பாரா.. அதனால்தான் சொன்னேன்... உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. காலம் கடந்தாவது... இது அனைவருக்குமே :))

சௌந்தர் said...

மறைமுக கருத்து ஓக்கேதான் எனக்கும் புரிந்தது சௌந்தர்.. ஆனால் அவரை தேர்தல் வேலை செய்யவிடாமல் ஏதோ அவர் வேலை செய்தால் ஆளும் கட்சிக்கு பெரிய இழப்பு வரும் என்ற நோக்கத்தில் கைது செய்தது போல இருந்தது அதற்க்கு முந்தைய பாரா.. அதனால்தான் சொன்னேன்... உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. காலம் கடந்தாவது... இது அனைவருக்குமே :))//

நிச்சயம் அவர் தேர்தல் வேலை செய்தால் ஆளும் கட்சிக்கு இழப்பு தான் நடந்தவை எங்கள் வீட்டு அருகில் என்பதால் நான் சொல்கிறேன் அவரை 30 நாட்களுக்கு முன்பே கைது செய்து இருக்க வேண்டும் அப்போது கைது செய்யாமல்... தேர்தல் நேரத்தில் கைது செய்கிறார்கள் என்றாள் என்ன அர்த்தம்.. ஒரு மாதத்திற்கு முன்பே கைது செய்திருந்தால் தேர்தல் சமையத்தில் பிணையில் வந்துவிடுவார் என்று தான் இப்பொழுது கைது செய்கிறார்கள்... அரசு நல்லநோக்கத்தில் கைது செய்கிறது என்றாள் முன்பே கைது செய்து இருக்கலாமே...

வைகை said...

சௌந்தர் கூறியது...
/
நிச்சயம் அவர் தேர்தல் வேலை செய்தால் ஆளும் கட்சிக்கு இழப்பு தான் நடந்தவை எங்கள் வீட்டு அருகில் என்பதால் நான் சொல்கிறேன் அவரை 30 நாட்களுக்கு முன்பே கைது செய்து இருக்க வேண்டும் அப்போது கைது செய்யாமல்... தேர்தல் நேரத்தில் கைது செய்கிறார்கள் என்றாள் என்ன அர்த்தம்.//////

அப்ப வீரபாண்டி ஆறுமுகம் அனிதா ராதா கிருஷ்ணன் இவங்களையும் இந்த மாதிரியே செஞ்சிருக்கலாமே? அவங்க இப்ப ஜாமீன்லதானே இருக்காங்க? ஒருவரை தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்தால் என்ன ஆகும் என்பதை ஐயோ கொல்றாங்களே நாடகம் மூலம் இந்த அரசாங்கத்துக்கு நல்லாவே தெரியும்... தப்பு செஞ்சவங்கள கைது பண்ணும்போது அதில் அரசியல் இருந்தாலும்... கண்டுகொள்ளாமல் விடுவதே நமக்கு நல்லது.. அதனால் சொன்னேன்.. நன்றி :))

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes