கிழக்கு எப்போதும் விடிந்து கொண்டுதானிருக்கிறது, அஸ்தமனங்கள் மேற்கில் நடந்து கொண்டுதானிருக்கின்றன. மாறாத செயல்பாட்டுத் தன்மையை இயற்கை என்றுமே நடத்தத் தவறியதில்லை. அப்படி மாறினால் அதுவே நியதியாகவும் மாறிவிடுகிறது. மனிதர்களுக்குள் மட்டுமே கடுமையான முரண்பாடுகளும், தத்தம் வசதிக்கேற்ப நியாயங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.
மனித சமுதாயத்தில் முரண்பட்ட மனோநிலையான சாதி என்னும் கொடும் தீயின் முடிச்சும் மதம் என்ற முடிச்சும் எந்தக் கணங்களில் விழுந்ததோ அந்தக் கணத்தை சாத்தானின் பிறப்பு என்றே வர்ணிக்கலாம். எல்லா ஜீவராசிகளிலும் மேலானவன் மனிதன் என்று நாமே வர்ணித்துக் கொண்டாலும் அதை வளைத்துப் பிடித்து இழுத்து மிருகத்திலும் கேவலமானவன் என்று சொல்லவைப்பது மதம் சார்ந்த வன்முறைகளும் சாதி சார்ந்த வன்முறைகளும்...
காலத்தின் சூழலில் சாதி என்ற ஒன்றினால் செய்யும் தொழிலினை வைத்து மனிதர்களைப் பிரித்தாளும் மிருக குணத்தினை மனிதர்கள் பெற்று அதைக் கடவுள் என்னும் ஒரு கண்ணுக்குத் தெரியாத, இதுவரையில் பொதுவில் காட்சிக் கொடுக்காத ஒரு பெயரினை வைத்து வலுப்படுத்தி, தெளிவற்ற, கபடமற்ற, வெள்ளந்தியாய் வெளுத்ததெல்லாம் பாலென்று எண்ணும் ஒரு வித மனிதர்களை தாழ்மைப்படுத்தி சாதி என்ற ஒன்றில் தரங்களை செய்து வைத்தான்.
நன்றாக சிந்தித்த்ப் பாருங்கள்...மனிதர்களுக்கு, மனிதத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பணி செய்த மனிதர்களை எல்லாம் சாதி என்ற ஒன்றினைக் கொண்டு ஏளனப்பார்வைகள் பார்க்க வைத்தது சரியா தவறா?
மனிதனின் தேவைகளைப் பேணியிருப்பவர்களை நியாயப்படி பார்த்தால் போற்றியிருக்க வேண்டும்? ஆனால் நமது சமுதாயத்தின் கருப்பு வரலாறு தாழ்த்தியிருக்கிறது. மனித சமுதாயத்தின் இயங்கு தன்மையை சீராக்கிய மனிதர்களை உச்சபட்சமாக நேசிப்பவனாய் இருந்திருக்க வேண்டும்...அல்லவா?
சாதி என்ற ஒன்றே வேண்டாம் என்று கூறிப் போராடி வந்தாலும் சாதி என்ற ஒன்றினை வைத்துதான் இட ஒதுக்கீடு போன்ற விடயங்களில், மனிதர்கள் மேலேறி வர முடியும் என்ற கூற்று முழுக்க சரிதான். ஆனால் காலங்களாய் விளிக்கப்பட்டு வரும் சாதிய பெயர்களும் அதன்மூலம் அடையாளம் காணும் ஒரு தற்குறித்தனமும் அடுத்தடுத்த தலைமுறையின் மூளைகளுக்கு சென்று சேரக் கூடாது என்று நாம் கூறுவதின் பின்ணயில் பல்வேறு மனோதத்துவ கூறுகளும் இருக்கின்றன.
காலமெல்லாம் சாதியென்ற மாய விலங்கினைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு அதன் பெயரால் அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டு இனியும் இந்த பூமியில் மனிதர்களை அனுமதித்தல் கூடாது. சட்டென்று தெளிந்தவர்களும், நேரான ஒரு சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தலைவர்களும் சாதி என்ற ஒன்றினைச் சாகடிக்க குறைந்த பட்சம் அடுத்தடுத்த தலைமுறைகள் சாதியால் வேறு பட்டு நிற்காமல் அதே சமயம் வாழ்க்கைத் தரத்தால் தாழ்த்தப்பட்டு, வர்க்க ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டு சூழலின் காரணமாய் பின் தங்கிய மக்களை நவீன தொழில் நுட்ப யுத்திகளைக் கொண்டு அடையாளம் கொண்டு இட ஒதுக்கீடு போன்ற விடயங்களைக் கையாள வழி வகைகள் செய்திட வேண்டும்...!
சாதி என்ற ஒன்றினை உணர்வு ரீதியாக மனிதர்கள் ஏந்திக் கொண்டிருப்பதால்தான் சமுதாயத்தில் ஏதோ மிகப்பெரிய அவமானம் தனக்கு நிகழ்ந்து விட்டதாக எண்ணி மனிதன் சீற்றங்கள் கொள்ளவும், அதனால் வன்முறையில் ஈடுபடவும் வழிமுறைகள் தோன்றுகின்றன.
நேற்றைய பரமக்குடி சம்பவம் ஒன்றும் ஏதோ ஒரு கலவரம், அதில் துப்பாக்கிச் சூடு அதில் 6 பேர் பலி என்று விட்டுச் செல்ல முடியாது. கலவரத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்த்தால் சாதி என்ற முரண் தனது கோரப்பல்லினைக் காட்டி இரத்தம் குடித்து சிரித்துக் கொண்டிருப்பதை அறியலாம்.
சரி தவறுகளைப் பேசினால் வாதங்களினாலும்,வரலாற்றின் பல்வேறு பருவங்களில் எடுக்கப்படும் ஆதாரங்களினாலும், புள்ளி விபரங்களை மனிதர்கள் குவித்துப் போடலாம். மனிதர்களை, மனிதப் பிரச்சினைகளை மனதினால் அன்பு கொண்டு தீர்க்க முடியாத பல்வேறு வகையான சோ கால்ட் அறிவு ஜீவிகளுக்கு எதிரில் உள்ள மனிதர்களைப் பார்த்துப் புன்னகைத்து அந்தந்த சூழலுக்கு எது தேவை என்று முடிவெடுக்க முடியாத மனிதர்கள் ஒரு மிகப்பெரிய நடமாடும் என்சைக்ளோ பீடியாவாய் அலைகிறார்கள்.
கை வலிக்கிறது என்று அவர்களிடம் சொன்னால்? அன்பாய் பார்த்து ஆதரவாய் சிரித்து உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள், மருத்துவரை அணுகுங்கள் என்று இப்படியான புள்ளி விபர மனிதர்கள் ஒரு போதும் சொல்வது கிடையாது. மாறாக ஒரு இயந்திரத் தன்மையோடு வலியின் வகைகளையும், அது பற்றிய அறிவியலையும், யார் யாருக்கு இந்த உலகில் எப்படி எப்படி எல்லாம் வலி வந்தது என்று வரிந்து கட்டிக் கொண்டு ஏகப்பட்ட சுட்டிகளை இணையத்தில் இருந்து கொடுப்பார்கள்....! ஆனால்.... உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு போதும் அன்பு மொழி பகிரத் தெரியாத இயந்திர அறிவியல் ஜீவிகள் இவர்கள்...
இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையும் அதன் இயல்பும் இயங்குதன்மையும் முக்கியமே இல்லை....எல்லா சூழலிலும் தன்னை ஒரு அறிவாளியாய்க் காட்டிக் கொள்வதே இவர்களின் குறிக்கோள். மருந்து மாத்திரைகளை விட, அறிவை விட, மனோ ரீதியான அனுசரனை மனிதர்களை மேலும் வலுவாக்கும் என்பதை மறந்து போன ஒரு நவீன மேதாவி உலகமாய் இது மாறி வருவதும் ஒரு வருத்தத்திற்குரிய விடயம்.
நேற்றைய பரமக்குடி கலவரத்தின் மூலமும் ஆழமும் எதுவாய் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், இறந்து போன 6 உயிர்களையும் யாராலும் திருப்பிக் கொடுக்க முடியுமா?
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஜான் பாண்டியன் அஞ்சலி செலுத்தக்கூடாது என்று ஏன் காவல்துறை தடுத்தது?
அங்கே அஞ்சலி செலுத்தச் சென்றால் என்னவிதமான பாதுகாப்பு இன்மை ஏற்பட்டிருக்கும்?
அப்படி ஒரு பாதுகாப்பின்மை இல்லை என்றால் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?
போலீஸார் துப்பாக்குச் சூடு நடத்தும் அளவிற்கு கடும் வன்முறையில் மக்கள் ஈடுபட்டார்களா?
அப்படி தம் கட்சியை சார்ந்த மக்கள் கட்டுக்கடங்காமல் காவல்துறையைத் தாக்கும் போது அதை கட்டுப்படுத்த முடியாத ஒரு தலைவரா ஜான் பாண்டியன்?
இல்லை தன்னை தடுத்தார்கள் என்பதால் கலவரத்தைத் தூண்ட அவர்களுக்கு ஆணையிடப்பட்டதா?
எந்த ஒரு தனிமனிதனுக்கும் தனக்குப் பிடித்த மனிதனை ஆதரிக்கவும் அஞ்சலி செலுத்தவும் உரிமை உண்டு....! அதை அரசியல் காரணங்களுக்காக தடுத்து நிறுத்த ஆளும் ஆட்சி காவல்துறையை ஏவி விட்டிருந்தால் அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே...
காலத்தின் சுவடுகளில் இருந்து ஏதேனும் உதாரணங்களை எடுத்து வைத்துக் கொண்டு நான் செய்தது சரி. நீ செய்தது தவறு என்று வாதிட்டு மனிதர்கள் மனிதர்களை மாய்த்துக் கொள்ளாமல் மாண்புடன் வாழ வழி வகைகளையும் சூழலையும் கொஞ்சம் கொஞ்சமாக நமது சமுதாயத்தினுள் செலுத்தி மனிதர்களாக வாழ வழி செய்தல் வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் இந்தக் கலவரத்தின் முழு விபரமும் விசாரிக்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்ததோடு நில்லாமல் இதன் முழு விபரங்களையும் வெகு விரைவாக அலசி....துப்பாக்கிச் சூட்டின் பின் புலத்தில் எந்த மாதிரியான அரசியல் விளையாடி உள்ளது என்ற உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
காலங்கள் தோறும் இல்லாத ஒரு மாயா விடயத்துக்காக மனிதர்கள் அடித்துக் கொல்வதும், அதற்காய் உயிர்கள் போவதும் மனித சமுதாயத்தின் மீது விழுந்துள்ள சாபக்கேடு...! காலம் காலமாய் தொடரும் இந்த அவலம் வரும் காலத்தில் நம் சந்ததிகளையும் போய்ச் சேராமல் அவர்களையாவது நிம்மதியாக வாழ விடுமா?
கழுகிற்காக
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
10 comments:
அது என்ன பிரச்சனை என்றாலும் ஜான் பாண்டியனை கைது செய்த நேரம் தவறு. இமானுவேல் நினைவு தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் நேரத்தில் கைது செய்யப்பட்டதால் தான் இத்தனை பிரச்சனை. 7 பேர் பலி.
அன்னைக்குனு முகூர்த்த நாள் வேற. வெளியூரில் இருந்து பலர், கல்யாணம் போன்ற விசேசத்துக்கு வந்திருக்கின்றனர். பலர் சொந்த ஊருக்கு போக முடியாமல் திண்டாடுகின்றனர்.
பஸ் போக்குவரத்து பாதிப்பு.
ஜான் பாண்டியனை நிகழ்ச்சி முடிந்த பின் கைது செய்திருக்கலாம்.
எந்த ஜாதியையும் எந்த ஒரு அரசியல்வாதியும் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை.. இதற்க்கு தீர்வு என்றால் சில தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.. பொது இடங்களில் எந்த தலைவரின் சிலையும் இருக்ககூடாது.. எல்லாவற்றையும் மாவட்டத்துக்கு ஒரு இடம் ஒதுக்கி ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு சிலை என்ற கணக்கில் வைக்கலாம்.. அந்த இடத்தை பராமரிக்கும் செலவை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் வாங்கலாம்... எந்த ஒரு பூஜையும் நேரம் ஒதுக்கி பத்து பத்து பேராக மட்டும் அனுமதிக்கலாம்... பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் வரக்கூடாது என்று அந்ததந்த தலைவரிடம் எழுதிவாங்கி கொண்டு அனுமதி அளிக்க வேண்டும்.. மீறினால் அந்த தலைவரும் அந்த அமைப்பும்தான் பொறுப்பாக வேண்டும்... ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது?
உள்ளாட்சி தேர்தல் முடியிற வரை மக்கள்தான் ஜாக்கிரதையாய் இருக்கணும்.. பத்தவச்சு குளிர்காய நாக்கை தொங்க போட்டபடி நாய்கள் காத்திருக்கின்றன :((
CLICK THE LINK AND READ
>>>>
இந்து மதத்தைவிட்டு நீங்க வேண்டும்?. பன்றியை விட கேவலமா? அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...?. ----- தலித் இளைஞர்கள் உயிரை அரசு குறைத்து மதிப்பிடுகிறது: திருமாவளவன்.------ <<<<<
இறப்புக்கு இவர்கள் நம்பும் மோசமான தலைவர்களும் கூட ஒரு காரணம்.
திருமாவளவன் போன்ற சாதி வெறி பிடித்த சொறியனுங்களால்தான் இப்படிபட்ட துர்பாக்ய நிகழ்சிகள் ஏற்படுகின்றன.
அது சரி.இந்த முண்டங்களெல்லாம் ஏன் தூய திராவிட தமிழ்ப் பெயரை வைத்துக்கொள்ளாமல் ஜான் பாண்டியன்,இம்மானுவேல் சேகரன்,பால் சொன்டியன் என்று வைத்துக்கொள்கிறார்கள்.இவனுங்க மூஞியைப் பாத்தா சொமாலிய வெறி நாய் மாதிரி இருக்கும்.ஆனால் பெயரில் ஜான்,பால்,தாமஸ் என்றெல்லாம் வெட்கமில்லாமல் சேர்த்துக்கொள்வார்கள்.
துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குகள் பதிவுச் செய்ய வேண்டும்
ஒட்டுமொத்த தேவர்சாதி காவல்துறை அதிகாரிகள் உடனே தெந்தமிழ்கத்தில் இருந்து வடதமிழகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்
ஜான் பாண்டியனை கைது செய்யணும்னு தேவர் அமைப்புகளா சொன்னது.?
உலகமே உள்ளங்கையில் இருக்கும் இந்த காலத்தில், ஜாதி ஒரு சாபக்கேடு....
@ periyar
//திருமாவளவன் போன்ற சாதி வெறி பிடித்த சொறியனுங்களால்தான் இப்படிபட்ட துர்பாக்ய நிகழ்சிகள் ஏற்படுகின்றன.//
மரியாதையான வார்த்தைகளில் கருத்துகளை தெரிவியுங்கள் நண்பரே... கழுகு வலைத்தளம் இது போன்ற வார்த்தைகளை வரவேற்காது.
\\அது சரி.இந்த முண்டங்களெல்லாம் ஏன் தூய திராவிட தமிழ்ப் பெயரை வைத்துக்கொள்ளாமல் ஜான் பாண்டியன்,இம்மானுவேல் சேகரன்,பால் சொன்டியன் என்று வைத்துக்கொள்கிறார்கள்.இவனுங்க மூஞியைப் பாத்தா சொமாலிய வெறி நாய் மாதிரி இருக்கும்.ஆனால் பெயரில் ஜான்,பால்,தாமஸ் என்றெல்லாம் வெட்கமில்லாமல் சேர்த்துக்கொள்வார்கள். \\
ஒருவருக்கு பிடித்தமான பெயரை அவர் வைத்துக்கொள்கிறார். நாம் ஏன் இது போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். மனித உறவுகளை பேணுதல் என்பது கழுகின் அடிநாதம்.
அன்புடன் இது போன்ற கருத்துகளை இனி மேற்கொண்டு இங்கு தரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். படிக்கும் மற்றவர்கள் நாங்கள் இதனை ஊக்குவிப்பதாக த்வறான அர்த்தம் கொள்ள வாய்ப்பு உண்டு.
Post a Comment