Wednesday, September 14, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (14.9.2011)டீக்கடையில் பதற்றத்தோடு போனில் பேசிக்கொண்டு இருந்தார் ரெங்கு.. என்ன ரெங்கு ரொம்ப பதற்றமா பேசிட்டு இருக்க... என்றார் கனகு..

ரெங்கு : ஆமாம் கனகு எங்க மாமனார், மாமியார் ராமேஸ்வரம், போயிருக்காங்க..ஒரே கலவரமா இருக்கு அதான் என்ன ஆச்சுன்னு விசாரிச்சிட்டு இருக்கேன்...

கனகு : அடடா  ரெங்கு பத்தரமா தானே இருக்காங்க...

ரெங்கு : இவங்க பத்தரமா தான் இருக்காங்க ஆனா பரமக்குடி, நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், அங்க எல்லாம் எந்த நேரம் என்ன நடக்கும் சொல்ல முடியலையாம்..!! 

கனகு : என்னய்யா இன்னும் இந்த சாதி சண்ட நிக்க மாட்டுது... ?? 7 பேரை வேற சுட்டு போட்டாங்க.. பாவம்யா அந்த குடும்பங்க

ரெங்கு : இந்த கலவரம் சின்னது அந்த ஜான் பாண்டி ஊர்குள்ள வந்து இருந்தா இதைவிட பெருசா கலவரம் வந்து இருக்குமாம்ய்யா... அப்பறம் முப்பது நாற்பது பேர் செத்து இருப்பாங்க.. 


கனகு : யார்ய்யா இந்த இமானுவேல்..??  ஜான் பாண்டி..??

ரெங்கு : இரண்டு பேரையும் பத்தி தப்பாதான் நிறைய சொல்றாங்க...அட நான் சொல்லலையா எதிர் கோஷ்டிக் காரங்க...! ஜான் பாண்டியன் ஒரு சாதிக் கட்சியோட தலைவர்யா....


கனகு : அட ஜாதி கட்சியா,  அப்போ அவர் கலவரம் பண்ணாதீங்க பண்ணாதீங்க சொல்வாரே..??? முதல்ல இந்த ஜாதி கட்சியை எல்லாம் தடை செய்யணும்...!!

ரெங்கு : என்னது தடை செய்யணுமா அதுக்கும் ஒரு கலவரம் வரும் பரவாயில்லையா..??

கனகு : யோவ் போய்யா போ கலவரம் வரும்ன்னா இனி நான் என் பொஞ்சாதி பத்தி கூட பேசமாட்டேன்

ரெங்கு : மதுரையிலும் ஒரு கலவரம் வரும் போல இருக்கு யா...?

கனகு : என்னய்யா சொல்ற அங்கயும் ஏதாவது ஜாதி கட்சிகாரங்க பிரச்சனை பண்றாங்களா..??

ரெங்கு : அட அது இல்லையா அழகிரி கைதுன்னு சொல்லி மதுரை ஃபுல்லா ஒரே புரளியாம்.. அவரை கைது பண்ணினா ஏதாவது கலவரம் வரும்னு சொல்றேன்..

கனகு: அட போய்யா ரெங்கு நீ வேற அவங்களே எப்போ தூக்கி உள்ளபோடுவாங்க பயந்துட்டு இருக்காங்க இப்போ போய் கலவரம் பண்ணா அதை வைச்சே ஒரு வருஷம் உள்ள போட்டுரும் இந்த அம்மா..

ரெங்கு : பையன் பேர்லையும் பொண்டாட்டி பேர்லையும் நிலம் வாங்கி போட்டுருக்கார் நம்ம அஞ்சாநெஞ்சன் அதையெல்லாம் இப்போ தோண்ட ஆரம்பிச்சுட்டாங்க.... குடும்பத்தில் யாரையாவது உள்ள போட்டுடுவாங்களோனு பயப்படுறார் நம்ம அஞ்சா நெஞ்சன்..

கனகு : இதெல்லாம் சும்மாவா ஆட்சியில் இருக்கும் போது ஓவரா ஆட கூடாது..  இப்போ பார் அம்மா ஆப்பு வைக்குறாங்க...

ரெங்கு : அடுத்து ஒரு உண்ணாவிரதம் போராட்டம் வரும் போல... ஒரே காந்தியவழி போராட்டமாம்பா.. ஆனா காந்தி சொல்றதை மட்டும் இவனுங்க கேக்கவே மாட்டாங்க...

கனகு : என்னய்யா மறுபடி அன்னா உண்ணாவிரதம் இருக்க போறாரா..?? 

ரெங்கு : இது திமுக காரங்க கனகு, ஜெயில இருந்து வரும் போதே இன்னொரு வழக்குல உள்ள தூக்கி போட்டா உண்ணாவிரதம் இருப்பாங்கன்னு திமுக தலைமை அறிக்கை விட்டு இருக்கு..    

கனகு : அட பாத்துய்யா இவங்க அய்யா மாதரி உண்ணாவிரதம் இருக்க போறாங்க அப்பறம் மழை விட்டாலும் தூவானம் விடாதுனு  அவர் டைலாக்கயே திருப்பி சொல்வாங்கஅம்மா.. 

ரெங்கு : யோவ் உனக்கு ரொம்ப தானய்யா நக்கல்... பாவம் திமுக காரங்க..!!

கனகு : யோவ் பாவம்ன்னு வெளிய சொல்லாத எவனாவது அடிக்க வருவான்.... ஐந்து வருஷத்தில் கண்ணுல படுற இடத்தை எல்லாம் தன் பேருக்கு மாத்திகிட்டாங்க... இப்போ வந்து உள்ள தூக்கி போடாதேனா எப்படி..அவன் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு வீடு, இடம் வாங்கி போடுறான். 

ரெங்கு : சரி சரி டென்சன் ஆகாத தண்ணிய குடி, தண்ணிய குடி...

கனகு : யோவ் தண்ணிய்யா டீ சொல்லுய்யா..

ரெங்கு : நம்ம சீமான் அம்மாவை ரொம்ப நம்பினாராம் 

கனகு : என்ன நம்பினாராம் விஜயலட்சுமி விஷயத்தில் இவரை கைது செய்யமாட்டங்கன்னா..??

ரெங்கு : யோவ் நீ இந்த விஜயலட்சுமி விஷயத்தை இன்னும் விட மாட்டியா.. பேரறிவாளன், இவங்களை தூக்குல போட கூடாதுன்னு அம்மா சொல்வாங்கன்னு...

கனகு : ஓ... இந்த விஷயமா இந்த விஷயத்தில் எல்லாரும் தான் அவங்களை நம்பினாங்க.. இவர் என்னாதான் ஐஸ் வைச்சாலும் அம்மா இவரை நம்ப மாட்டாங்க... அண்ணன் சீமான்க்கு உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு இருக்கு..பகை பகை தான்... !!

ரெங்கு : சரி அத விடுய்யா நல்ல லேப்டாப் ஒன்னு வாங்கலாம் இருக்கேன் எது வாங்கலாம் சொல்லுய்யா... 

கனகு : எதுக்குய்யா லேப்டாப் எல்லாம் வாங்குற... அதிக காசு எல்லாம் கொடுக்காதே இன்னும் கொஞ்ச நாள்ல அம்மாபுண்ணியத்தில பத்தாயிரத்திற்கு எல்லாம் லேப்டாப் கிடைக்கும்..

ரெங்கு : என்னய்யா சொல்ற பத்தாயிரமா..?? அதுவும் அம்மா புண்ணியமா...??

கனகு : ஆமா ஆமா அம்மா அறிவ வளர்க்க சொல்லி லேப்டாப் தருவாங்க ஆனா நம்ம ஜனங்க அதை என்ன பண்ணுவாங்க தெரியாதா..?? அதை வைச்சு தான் சொன்னேன் அம்மா தான் டெண்டர் விட்டுட்டாங்கல இனி சீக்கிரமே லேப்டாப் வந்திடும்..ஜாலியா போய் பேஸ்புக் அகௌன்ட் ஓபன் பண்ணிக்கோ...

ரெங்கு : யோவ் கனகு நீ எப்பவும் இப்படி எனக்கு தேவையான நியூஸ் சொல்றதுல உன்ன அடிசுக்க ஆளே இல்லை நான் பொறுமையாவே லேப்டாப் வாங்கிக்குறேன்..

கனகு : நீ லேப் டாப் வாங்குறியோ இல்லையோ முதல் டீ வாங்கு...!!!கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


4 comments:

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

-டி- ரொம்ப சூடு,,,,,,,,,
அசத்தலான கருத்துக்கள்

மாலதி said...

சிறப்பான படைப்பு நல்ல நகைச்சுச்வை கலந்த பல உண்மை செய்தி அஞ்சாநெஞ்சன் பற்றிய செய்தி பாராட்டுகள் அது உப்பை தின்றால் தண்ணீர் குடித்துதனே ஆகவேண்டும் எல்லோரையும் அஞ்சாநெஞ்சன் போய் பார்கிறார் இவரே உள்ள போயிட்ட பின்னால யாரு இவர போயி பாப்பாங்க ? பாவமாடசாமி திருட்டு முன்னேற்ற கழத்திற்கு இந்த நிலை வரகூடாது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
ஜாலியா போய் பேஸ்புக் அகௌன்ட் ஓபன் பண்ணிக்கோ...

//

முதல் வேல அதான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes