பஞ்ச் : 1
பாரதப் பிரதமரோட பார்வை புல்லரிக்க வைக்குது. ஏன் இலங்கைக்கு உதவி பண்றீங்க? அவன் தான் அட்டூழியம் பண்ணி தமிழர்களை எல்லாம் கொன்னு குவிச்சு கிட்டு இருகாங்களேன்னு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு கொடுத்து கேட்டதுக்கு சொல்லியிருக்காரு...நாம உதவி பண்ணலேன்னா சீனா உதவி பண்ணிடுவான், அதுக்கப்புறம் அது இந்தியாவோட பாதுகாப்புக்கு ரொம்ப அச்சுறுத்தலா போய்டும்னு...? என்ன லாஜிக் இது... சீனா உதவி பண்ணுவான்னு சொல்லிட்டு நீங்க செஞ்ச செயலால போய்ச் சேந்ததது எத்தனை லட்சம் உயிர்கள்னு யோசிச்சுப் பாருங்க!
பிரதமர் ஐயா, இப்போ நீங்க மாஞ்சு மாஞ்சு உதவி பண்ணினதுக்கு அப்புறம் சீனாவோட அச்சுறுத்தல் இல்லேன்னு நினைக்கிறீங்களா? இன்னமும் இருக்குதானே? கூடவே தென் கோடியில இருக்குற தமிழ்நாட்ல இதுக்கு எவ்வளவு எதிர்ப்ப சம்பாரிச்சு இருக்கீங்கன்னும் யோசிச்சுப் பாருங்க....!
தமிழ்நாட்ல காங்கிரஸ்னு ஒரு கட்சி தலை நிமிந்து நிக்கணும்னா ஈழப்பிரச்சினையில தமிழர்களுக்கு சாதகமான முடிவ எடுக்குறீங்களோ இல்லையோ ஆனா நியாயமான முடிவ எடுக்கணும்...அதைப் புரிஞ்சுக்கோங்க!
பஞ்ச் 2
முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் புதிய அணையைக் கட்டியே தீர்வோம்னு விளையாட்டுக் காட்டிகிட்டு இருக்குற கேரளா அரசை தட்டிக் கேட்க யாருமே இல்லையா? அட என்ன நியாயம் இது ஊர்ல இல்லாத நியாயம்.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவினர் போய் இப்போ இருக்கும் அணையை பரிசோதனை பண்ணி அணை வலுவாகத்தான் இருக்கு புதிய அணை தேவையில்லைன்னு சொன்னதுக்கு அப்புறமும் எப்பவோ மனோரமா என்னும் கேரள பத்திரிக்கை எழுதினத மட்டும் உடும்பு மாதிரி புடிச்சுகிட்டு அணை பலமா இல்லை அதனால புது அணை கட்டியே தீருவேன்னு சொல்றதுல ஏதாச்சும் அர்த்தம் இருக்கா என்ன?
ஏற்கெனவே அணையின் உயரத்தை 152 அடியில் இருந்து 136 அடியா குறைச்சதால ருபாய் 70,000/- கோடிக்கு மேல விவசாயத்தில் நமக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கு. இருக்குற அணைய வலுப்படுத்தி உயரத்த அதுக்கப்புறம் கூட்டி உச்ச நீதி மன்றம் சொன்னது போல செய்யலாம் வாங்கனு கூப்ட கேரள எல்லைக்குள்ள புதிய அணைய கட்டிட்டு எல்லா கண்ட்ரோலையும் அவன் கையில வச்சுக்கலாம்னு பாக்க்குறான்?
என்ன கொடுமை சார் இது?
பஞ்ச் 3
கடந்த வாரத்துல நிகழ்ந்த ஒரு வருத்தப்பட வேண்டிய நிகழ்வு சகோதரி செங்கொடியோட மறைவு. உணர்ச்சி வசப்பட்டு, கோபத்தின் உச்சத்தில் எதிர்ப்பை தெரிவிக்க தீக்குளித்தல் அப்டீன்ற ஒரு செயலை செய்றது கண்டிப்பா ஏத்துக்க முடியாது. செங்கொடியோட மனிதாபிமானத்தையும், தமிழ்ப் பற்றையும் பாத்து நாம மதிச்சு வணங்குற அதே நேரத்துல இது போன்ற போராட்ட முறைகளை இளைய சமுதாயத்தினர் கண்டிப்பா விட்டுடணும்.
வாழப் பொறந்த நாம நின்னு நேருக்கு நேரா அறிவினைக் கொண்டு போராடித்தான் அநீதியை ஒழிச்சு நீதியை வென்றெடுக்கணும். நல்லவங்க எல்லாம் தீக்குளிச்சு உயிர விட்டுட்டா கெட்டவன் எல்லாம் ரொம்ப சுதந்திரமா சுத்திகிட்டு இருப்பாங்க...!
சகோதரி செங்கொடிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதே நேரத்துல இது போன்ற செயல்கள் இனியும் தொடரக்கூடாதென்றது அப்டீன்றது நம்ம பார்வையா இருக்கு.
பஞ்ச் 4
இலங்கையில் 1200 தமிழர்களை (அவன் சொல்ற கணக்கு 1200ன்னா உண்மையிலயே 10,000 பேர் இருப்பாங்க) போர் நடக்கும் போது கைது செய்து வைத்திருக்கிறான் ராஜபக்சே. இப்போ அவர்களை வெளியில விடணும் அப்டீன்ற சூழ்நிலை வரும் போது பயங்கரவாத தடுப்பு சட்டம்னு ஏற்கனவே இவன் உண்டு பண்ணி அப்புறம் உலக நாடுகளுக்குப் பயந்துகிட்டு அதை ஒளிச்சு வச்சு இருந்த ராஜபக்சே....
இப்போ மறுபடியும் அந்த சட்டத்தை செயற்படுத்தி வெளியே விடப்படவேண்டிய தமிழர்களை மீண்டும் உள்ள புடிச்சு வச்சிட்டான். பண்றது அநியாயம் இதை சட்டப்படி பண்றாராம். ஏன்னா இவுங்க எல்லாம் விடுதலைப் புலிகளா இருப்பாங்கன்னு சந்தேகப்படுறாராமா?
ஒரே ஒரு டவுட்ட மட்டும் இந்த ராஜபக்சேயும் இந்தியாவுல இருக்குற சில அரசியல் மேதாவிகளும் தீத்து வச்சா நல்லா இருக்கும் அதாவது ஈழத்தின் விடுதலைக்காக போராடிய மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறா? இதை மொதல்ல வெளங்கிக்கிங்க சாமிகளா!
பஞ்ச் 5
புதிய ஆளுநர் தமிழகத்துக்கு வந்து இருக்காங்க. எல்லோரும் வரவேற்கிறாங்க..நாமளும் வரவேற்று பூங்கொத்துக்களை கொடுப்போம் இந்த அனுபவமிக்க மூத்த(78 வயது) காங்கிரஸ்(????!!!!!) தலைவருக்கு,
தமிழகத்தின் 24வது ஆளுநராய் பதவி ஏற்கும் மாண்புமிகு ரோசையா அவர்களுக்கு சுதந்திரத்துக்கு போராடுன காங்கிரஸ பத்தி நிறையவே தெரிஞ்சு இருக்கும். இப்போ இருக்குற காங்கிரசை பத்தியும் புரிஞ்சு இருப்பாங்க.
இது எல்லாம் விடுங்க...ஆளுநர் என்பவர் ஆக்சுவலா மந்திரி, எம்.எல்.ஏ இவுங்களுக்கு எல்லாம் பதவி ஏற்பு செஞ்சு வைப்பாங்க, அப்புறம் முதல்வரை பிடிக்காதவங்க எல்லாம் இவர் கிட்ட போய் மனு கொடுப்பாங்க...(அதுக்கப்புறம் இவர் முதல்வர் கிட்ட அனுமதி கேட்பாரு அப்டீன்ற வழமைய விடுங்க...) இது எல்லாம் போக, ஆளுநர் என்பவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எந்த அளவு அவசியமானவர்னு எத்தனை பேருக்குத் தெரியும்...?
அட வாழ்த்தியாச்சு அதோட விடுவீங்களா...அப்டீன்னு போறதை விட இவருக்கு என்ன அதிகாரம் இருக்கு என்னவெல்லாம் செய்வாருன்னு.. நீங்க யோசிச்சு வைங்க நாங்க ஒரு கட்டுரைல விரிவா சொல்றோம் ஒப்பிட்டு பாத்து புரிஞ்சுக்கங்க.!
கழுகிற்காக
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
2 comments:
//வாழப் பொறந்த நாம நின்னு நேருக்கு நேரா அறிவினைக் கொண்டு போராடித்தான் அநீதியை ஒழிச்சு நீதியை வென்றெடுக்கணும். நல்லவங்க எல்லாம் தீக்குளிச்சு உயிர விட்டுட்டா கெட்டவன் எல்லாம் ரொம்ப சுதந்திரமா சுத்திகிட்டு இருப்பாங்க...!//
...முற்றிலும் உண்மை.
செங்கொடியின் முடிவு..
வருந்தத்தக்க விஷயம்! :(
சீன அச்சுறுத்தல் காரணமென்றால் நமக்கு சாதகமாக தமிழர்களை பலப்படுத்தியிருந்தால் நாம் அங்கிருந்தே சீனாவையும் இலங்கையையும் கண்காணித்திருக்கலாம் அல்லவா ?அதைவிட்டுவிட்டு இலங்கையை ஆதரித்து நாம் கண்ட பலன் என்ன ?
செங்கொடியின் தற்கொலை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று .விவேகமில்லாத செயல் இது ..இதற்கு தூண்டியவர்களை தற்கொலைக்கு தூண்டியவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் .
Post a Comment