Friday, January 13, 2012

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்வுத் தொடர் iv

 
 
 

வார்த்தைகளினூடே கவனியுங்கள்!!!
 
நம்மில் பலர் பேச்சாலேயே ஏமாந்து போகிறோமே ஏன்? யாரோ ஒருவன் நம் மனம் மகிழ பேசிவிட்டு, நம்மை சுலபமாய் ஏமாற்றி செல்கிறானே ஏன்?

நமக்கு இந்த ஒரு சின்ன இடத்தில் கவனமில்லை, அதாவது, வார்த்தைகளினூடே கவனிக்கும் கவனமில்லை.
எல்லாருக்கும் வார்த்தைகளை கவனிக்க தெரியும்..எத்தனை பேருக்கு வார்த்தைகளுக்கு நடுவில் அந்த மில்லிசெகண்ட் மவுனங்களை, அந்த மவுனங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் புரிந்துகொள்ள தெரியும்?

எனக்கு தெரியும் என்பதற்காக இதை சொல்லவில்லை. எல்லாராலும் முடியக்கூடிய ஒரு சங்கதி என்பதால் இதை உங்களுக்கு மறுஅறிமுகம் செய்துவைக்கிறேன் அவ்வளவுதான்.

எத்தனையோ முறை, நாம் ஒரு நண்பரிடமோ, அல்லது நம் உறவுகளிடமோ, நம் உடன் வேலைசெய்பவர்களிடமோ பேசி இருப்போம்.. ஆனால் இவ்வளவு கூர்மையான கவனம் நம்மிடத்தில் இருக்காது. காரணம், அவர்கள் பேச்சை நாம் கவனிப்பதே குறைவுதான்.அவர்கள் பேசி முடித்ததும், நம் பேச்சை வீசிவிடவே நம் மனம் தயாராய் இருக்கிறதே தவிர, நம் முழுகவனத்தோடு நாம் ஒரு பேச்சை கவனிக்கும் நேரம்  மிக மிக குறைவுதான்.

அப்படி நீங்கள், நின்று நிதானித்து, அவர் பேச்சை உன்னிப்பாக கேட்பவராக இருக்கும்பட்சத்திலேயே உங்களிடம் பேசுபவர் கொஞ்சம் கலக்கமடைவார். இது முதல் கட்டம்.

அடுத்த கட்டம், அவரின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, அவரை முழுதாய் கவனிக்கிறீர்கள் என்று அவருக்கே சுட்டிக்காட்டும்போது, அவருக்குள் தானே நேர்மை பொங்கும்.. இப்போது ஒன்று அவர் உண்மையானவர் என்கிற பட்சத்தில் அவர் உங்களோடு நெருங்கி பழக விரும்புவார், பொய்யானவர் தப்பித்து ஓடவே முயல்வார்.

இப்படி, நீங்கள் வெறுமனே கவனமாய் இருக்கும்பட்சத்திலேயே, உங்களின் நண்பர் யார், உங்களுக்கு ஆகாதவர் யார் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

இவைகளை எல்லாம் தாண்டி, மூன்றாவது கட்டம், வார்த்தைகளினூடே கவனித்தல்- இது ஒன்றும் பெரிய கம்பசூத்திரமில்லை. முதல் இரண்டு கட்டங்கள் உங்களுக்கு நன்கு பழகி இருந்தால், இந்த மூன்றாவது கட்டம் தானே நிகழும். நீங்கள் உங்களோடு பேசுபவரின் Intentions -ஜ சரியாக நீங்கள் புரிந்துகொள்ளலாம். சிலருக்கு தனிமையை போக்க, உங்களோடு பேசுவது உதவியாய் இருக்கும், சிலர் விஷயங்களை கறக்க உங்களோடு பேசிகொண்டிருப்பார்கள், சிலர் உங்களை அவர்களின் பேச்சால் ஈர்த்துவிட உங்களிடம் பேசுவர், வெகு சிலர், அவர்களின் மனகஷ்டங்களை சொல்ல உங்களிடம் பேசுவர், லட்சத்தில் ஒருவர், உங்களுடைய வளர்ச்சிக்காக பேசிக்கொண்டிருப்பார்...

இப்படி, நீங்கள் வார்த்தைகளினூடே கவனிக்கும்போது, அடுத்த நபரின் Intentions(சீனா அய்யா தமிழர்த்தம் வேணும்) நமக்கு எளிதில் புரிபடும். அப்போது, நாம் சொல்லவேண்டியவற்றை மட்டும், சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லி, வாழ்வை செம்மையாக நடத்தி செல்ல முடியும் என்பது என் கருத்து.

அப்புறம், உடனே கண்ணை சார்ப்பாகிகிட்டு, சீரியஸா முகத்தை வெச்சிகிட்டு, வெறிச்சு பார்த்துகிட்டு இருக்காதீங்க.. வெளியில் முகம் சாந்தமாய் தெளிவாக இருக்கட்டும், உள்ளே கவனம் கூர்மையாய் இருந்தால் போதும்..Hahhaha!...இது வெறுமனே எனது சிந்தனைகள் தான்..உங்களுக்கு உதவுமென்றால் எடுத்துகொள்ளுங்கள்..இல்லையேல் வேண்டாம்..


 
ழுகிற்காக  
உங்கள் ரங்கா



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)
 
 

5 comments:

நிகழ்காலத்தில்... said...

\\அவர்கள் பேச்சை நாம் கவனிப்பதே குறைவுதான்.அவர்கள் பேசி முடித்ததும், நம் பேச்சை வீசிவிடவே நம் மனம் தயாராய் இருக்கிறதே தவிர, நம் முழுகவனத்தோடு நாம் ஒரு பேச்சை கவனிக்கும் நேரம் மிக மிக குறைவுதான்.\\

பெரும்பாலும் இதுதான் பொதுவாக நடக்கும் :) இதிலிருந்து மீளவேண்டும் என்பதை திரு.ரங்கன் தெளிவா சொல்லி இருக்கிறார்.

வாழ்த்துகள்

நாய் நக்ஸ் said...

வாழ்த்துக்கள்...
ரங்கா.....

:)

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப சரியா சொன்னீங்க. வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா - ஒருவர் பேச்சைக் கவனிக்கும் போது அவரின் சொற்களுக்கு இடையே நாம் கவனிக்க வேண்டும். அவரது இண்டென்ஷன்ஸ் ( தமிழில் நோக்கம் - சிந்தனை - விருப்பம் எனக் கொள்ளலாம் ) நமக்குப் புரியும்.

ரங்கா - தூள் கெளப்புறே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

saidaiazeez.blogspot.in said...

பல சமயங்களில் நாம் SERIUSஆ சொல்வதை ஜோக்கா எடுத்துக்கறாங்க! ஜோக்கா சொன்னதை புடிச்சுக்கிட்டு பிராணனை வாங்கிடுறாங்க!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes