Tuesday, March 15, 2011

பதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....!

பதிவுகள் எல்லாம் சேர்ந்ததுதான் பதிவுலகமா? இந்த பதிவுகின் பயணம் எதை நோக்கி செல்கிறது அல்லது பதிவுலகம் எப்படி இருக்கவேண்டும் என்பது போன்ற பொதுவான கேள்விகள் நமக்குள் எழத்தானே செய்யும்? கருத்துக்களின் தொகுப்பாய் விரியும் இந்த கட்டுரையில் அதற்கான விடை உங்களுக்கு கிடைக்கலாம்...இதோ தோழி சாந்தியின் கட்டுரை....



ஆங்கில பிளாக் தினமும் வாசித்து விடுவேன்..அங்கும் தலைப்பை பார்த்துதான் வாசிப்பேன்..மிக தெளிவான கருத்துகளை சொல்லியிருந்தாலும் பின்னூட்டமெல்லாம் இருக்கவே இருக்காது. அல்லது வெகு சில..அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனக்கு தோன்றியதை எழுதிக்கொண்டும், பகிர்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.. எவையெல்லாம் சிறப்போ அவை தேர்ந்தெடுத்து அங்கீகரிக்கப்படுகின்றன.. ஆனா அங்கீகாரத்துக்காக எழுதுவதாக தெரியவில்லை.. அங்கே வாசித்துவிட்டு தமிழுக்கு வரும்போது ஒரு 30-40 வருடம் பின்தங்கியிருப்பதை போல தோணும்..சரி பரவாயில்லை.. நாம் இப்போதுதானே நுழைகிறோம். இதில் நம்ம கலாச்சாரம், பண்பாடு, பெண் என்ற அடையாளம் இதையெல்லாம் தாண்டி வரணும்னாலே பெரிய போராட்டம் காத்திருக்கின்றது..ஜாலியா , சிரித்து பேசி பொழுது போக்குவது தவறே இல்லை.. அதுவும் மன உளைச்சலோடு இருப்பவர்களுக்கு சிரிப்பு மிக சிறந்த மருந்து..இபோதுதெல்லாம் வெளிநாட்டில் இருப்பதும் ஒன்றுதான் தமிழ்நாட்டில் இருப்பதும் ஒன்றுதான்.. 


தமிழ்நாட்டில் இருந்தா மட்டும் அக்கம் பக்கம் கலகலப்பாக பேசிவிடுகிறார்களா என்ன.. ஆனாலும் 100% சிரிப்பு பொழுதுபோக்கு மட்டுமே என இல்லாமல் சமூக சிந்தனையோடு கூடியதாக இருப்பின் அது வரப்பிரசாதம்.. நகைச்சுவையாக சமூக பிரச்னைகளை அரசியல் விமர்சனங்களை வைத்து பலருக்கு நம் கருத்தை சேர வைப்பதும் வெற்றிதானே?..இதில் முக்கியமா ஒரு விஷயம், நம் ரசனைகளை உயர்த்தணும்.. 


என்னைப்பொறுத்தவரையில் கிசுகிசு , நடிக, நடிகையர்,  போன்ற விமர்சனங்கள் மிக கீழ்தரம் வாய்ந்தவை.. அதைவிட்டு மேலே வரணும்.. திட்டினாலும் ஆணித்தரமாக அடித்து துவைத்து காயப்போடலாம் , ஆனால் ஒருபோதும் கெட்டவார்த்தைகள் உபயோகிக்காமல்.. கெட்ட வார்த்தை ரொம்ப கோழைகளுக்கு மட்டுமே.. எங்க பாட்டி உபயோகித்தார்கள் என்றால் அதுதான் அவர்களுக்கு துணை , துணிவு எல்லாமே. அவர்கள் பள்ளி செல்லவில்லை. இங்கே பதிவெழுதும் நாம் அனைவரும் கண்டிப்பாக 8ம் வகுப்பாவது படித்திருப்போம்தானே?.. அதுபோதும்.. நாகரீகமாக எழுதப்பழக..ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமையுண்டு எழுத்துக்கு.. அது நம் கையில் லட்டுபோல கிடைத்திருக்கு..என்னென்ன சமூக பிரச்சனைகள் குறித்து எழுத முடியுமோ அத்தனையும் எழுதி தள்ளலாம்..விவாதிக்கலாம்.. களம் அமைத்து தரலாம்.. இதன்மூலம் போட்டி வரச்செய்து  நல்ல வேகமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்..அப்படியென்றால் இப்படியானவை இதுவரை இல்லையா என்றால் , இருக்கிறது. ஆனால் வெகு சிலரே பங்கெடுக்கிறார்கள்


பெண்கள் பதிவுகள் பற்றி குறிப்பா சொல்லணும் என்றால் சமையல் குறிப்புகள், தோட்டம், இல்லம், குழந்தை எல்லாமே சிறப்புதான்.. ஆனால் அதிலேயே தங்கிவிடாமல் அடுத்த கட்டத்துக்கு விரைவாக நகர்ந்திடணும்.. நாட்டு நடப்புகள் , செய்திகள் பற்றி பேச ஆரம்பிக்கணும்.. கவிதை எழுதி ஒரு பத்திரிக்கையில் வருவது குழந்தை ஓட்டப்பந்தயத்தில் ஓடி பரிசு பெற்ற சந்தோஷம் கிடைக்கும் தான்.. நல்லது.. அடுத்தவருக்கு வழிவிட்டுவிட்டு உடனே அதற்கடுத்த நிலைக்கு நகரணும்..அதே போல எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் போடாதீர்கள்.. உங்க நல்லெண்ணம் புரியும் அதே வேளையில், என்ன எழுதினாலும் பின்னூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பை கூட்டிவிடும் தவறை செய்கிறோம்..புதியவர்களுக்கு ஊக்கம் இருக்கணும்தான்.. ஆனால் அதற்காக திருமணம் வரை குழந்தைதானே என இடுப்பை விட்டு இறக்க மாட்டேன்னா எப்படி..?


அதே போல பதிவிடுபவரும், தன் பதிவின் தரம் பற்றி அறிந்துகொண்டு , " இந்த பதிவுக்கெல்லாம் பின்னூட்டம்  இடவேண்டாம். உங்க நேரம் செலவழிக்க வேண்டாம் " என சொல்லும் நிலை வரணும்..அடுத்தவர்களை பின்னூட்டம் இட செய்வதும் ஒரு வித நேர திருட்டே.. ஆனால் நமக்கு அது பெரிதாக தெரிவதில்லை..நம்மில் அனேகர் முக்கியமாக ஆண்கள் அலுவலகத்தில் இருந்தே பதிவிடுவதும், பின்னூட்டமிடுவதும்.. ஆக அதை கணக்கில்கொண்டு நாமும் அவர்களுக்கு உதவ, பின்னூட்டம் விரும்புவதை தவிர்க்கணும்.. மொத்தத்தில் நம் தமிழர்களின் நேர இழப்புதானே..


அடுத்து பதிவு போட்டே ஆகணும் என்ற கட்டாயத்தில் அடிக்ட் போல ஆகிடுவது.. யுடியூபிலும், இணையத்திலும் நாம் கற்றுக்கொள்ள கடலளவு விஷயம் இருக்கு.. கடுகளவுதான் நமக்கு தெரியும்.. அதனால் எழுதுவதை விட வாசிக்கலாம்..எழுதுவது விசேஷமாக இருக்கட்டும்.. ( இது எனக்கும் )..பதிவுலகத்தை அரசியல் மேடையாக்க விரும்புகின்றார்கள் சிலர்.. எதிரிக்கு எதிரி நண்பர் என்பது இங்கே காணலாம்..ஆனால் நிஜம் என்னவென்றால் இதுபோன்ற சின்னத்தனமான , நல்லெண்ணம் இல்லாதவர்கள் சீக்கிரம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்படுவார்கள்..அதனால் தயவுசெய்து கூட்டம் சேர்க்க திட்டமிடாதீர்கள் . அவை பலனளிப்பதில்லை.. ஏனெனில் எல்லோருமே விபரம் தெரிந்தவர்களாகிடுவார்கள்  வந்து சில மாதங்களிலேயே.. அதனால்தான் சொல்கிறேன் நல்ல எழுத்துகள், கருத்துகள் தனித்து தெறியும், எப்போதும் ஜொலிக்கும்..அதற்காக மெனக்கிடுங்கள்..அதேபோலத்தான் ஆபாச எழுத்துகளும் , கவர்ச்சியும்.. அவற்றுக்கு ஆயுசு சில காலம் மட்டுமே.. 


கடவுள் இல்லையா, மதம் சரி இல்லையா, முட்டாள் தனமா?.. இருந்துவிட்டு போகட்டும்.. எல்லா மனிதனுக்கும் முட்டாளாக இருக்க முழு உரிமை உண்டு.. நாம் எல்லோருமே முட்டாளாக இருந்திருக்கோம் , இன்னும் இருப்போம்..ஆனாலும்சில மூடப்பழக்கவழக்கங்களால் ( நரபலி போன்றவை ) சமூகம் சீரழியும்போது கண்டிப்பாக குரல் கொடுக்கணும்.. அதுவும் நாகரீகமாக..என்னதான் ஆன்மீகம் படித்தாலும், அன்பான சூழலை நாம் உருவாக்க நினைத்தாலும், நம் சுற்றத்தை மாற்றாமல் நம்மால் நிம்மதியாக ஒருபோதும் இருந்திட முடியாது.. ஆகவே நம் எல்லோருக்குமே சுற்று சூழலை எல்லா விதமான மாசிலிருந்தும்( அழுக்கு அரசியலிலிருந்தும்)  காப்பற்ற வேண்டிய கடமை நம் எல்லோருக்குமே உண்டு.. 


ஊர் கூடிதான் தேர் இழுத்தாகணும்.. பதிவுலகில் எங்கோ ஓரிடத்திலேதானே பிரச்னை, ஆபாசம் , வக்கிரம் , அரசியல் என ஒதுங்கிட முடியாது.. நம்மையும் சூழும் விரைவில் எந்த வடிவிலாவது.. முடிந்தவரை தப்புகளை எடுத்து சொல்வோம்.. அல்லது சொல்பவர்க்கு துணை நிற்போம். நமக்கு எத்தனை எண்ணிக்கையில் ஹிட்ஸ் ஓட்டு பின்னூட்டம் வருகிறது என்பது முக்கியமேயல்ல.. எத்தனை தரமானவர்களின் பின்னூட்டம் என்பதே முக்கியம்.. இந்த தரமானவர்கள் என்பது சமூகப்பார்வையுள்ளவர்கள் என்னைப்பொறுத்தவரையில்.. சுயநலமற்றவர்கள்..  ஆக பின்னூட்டமே வராவிட்டாலும் பரவாயில்லை ஆனால் சமூக விரோத கும்பலிடமிருந்து வருவதை ஊக்கப்படுத்திடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாலே போதும்.. இப்படி தரம் வளர்க்கணும்.. நல்ல பல அறிஞர்கள், பெரியவர்களின் கட்டுரைகளை பாருங்கள்.. வெகு சில பின்னூட்டங்களே இருக்கும்.. ஏனென்றால் அவர்கள் கட்டுரையை பொழுதுபோக்குக்காக வருபவர்கள் படிப்பதில்லை.. நிஜமாகவே அக்கறை உடையவர்கள் மட்டுமே முழுதுமாக படித்து உள்வாங்கி பின்னூட்டம் இடுவார்கள்.. 


நான் இணையம் வந்து இந்த 4 வருடங்களில் பல கருத்தாடல்கள் மூலம் பல கற்றுக்கொண்டேன். பல கருத்துகளை ஆங்கிலத்தில் வாசித்தும் , தமிழில் மொழிபெயர்த்தும் பகிர்ந்தும் கொண்டேன்..ஒருவேளை நான் தொடர்ந்து எழுத முடியாமல் போகலாம். என் பிளாக் அழிக்கப்படலாம்.. ஆனாலும் என் கருத்துகள் ஆங்காங்கே நிற்கும் என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.. திருப்தியாகவும் உள்ளது.. பல பிரச்சனைகளை வெளிக்கொண்டதன் மூலம் , சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் மூலம் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு.. என்பது எனக்கு மகிழ்ச்சி.. 
ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தவர்கள் கூட ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதையும் கண்டு வியந்துள்ளேன் .. சிரித்துள்ளேன்.. இதுதான் நிதர்சனம்.. போலிகளுக்கு அங்கீகாரம் தேவை.. அதற்காக எதுவும் செய்வார்கள்.. எந்தப்பக்கமும் சாய்வார்கள்.. பின் அம்பலப்பட்டும் போவார்கள்... பொய் வேகமாக உலகம் சுற்றி வரும்..ஆனால் உண்மை எல்லா இழிவுகளையும் , புரளிகளையும் , முதலில் தாங்கிக்கொண்டு தன்னை நிலைநிறுத்தும் மெதுவாக..அதனால் விரைவான புகழுக்கோ, அங்கீகாரத்துக்கோ மனம் சலனப்பட்டு விடாமல் , நல்ல பதிவுகளை வாசிக்க ஆரம்பியுங்கள்.. பல விதமான கருத்துகளை உள்வாங்கிக்கொள்ளுங்கள்.. பதிவர்களை அவர்களின் பதிவின் மூலம் மட்டுமல்ல , பல இடங்களில் அவர்களின் பின்னூட்டம் மூலமும் அறிந்துகொள்ளுங்கள்.. பின் எழுத ஆரம்பியுங்கள்..அப்போது உங்கள் தனித்திறமையை வெளிக்காட்டுங்கள்.. 



எதிலும் அவசரமேயில்லை.. நிலைத்து நிற்கும் உங்கள் எழுத்துகள்,  கருத்துகள் பல்லாண்டு.. என்னுடைய எழுத்தை நான் உபயோகிக்க விரும்பும் இடங்களில் , பெண்ணுரிமை, சமூக ஏற்றத்தாழ்வு, குழந்தைகள்  வன்முறை ,பொருளாதாரம், ஆன்மீகம்( மதம் ) , போன்றவை முக்கியமானவை.. ஆக இதுபோல வரையறுத்துக்கொண்டு தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை கடிவாளம் போட்டுக்கொண்டு.... மற்றவருக்கு வெற்றியாக நீங்கள் தெரிகின்றீர்களோ இல்லையோ , மனதளவில் வெற்றி , திருப்தி நிச்சயம்,..அதேபோல நல்ல மாற்று கருத்துகள் வரும்போது தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள கற்கணும்.. எந்த வயதானலும் கூட நம் கருத்துகளை மாற்றிக்கொள்ள பக்குவப்படணும் இப்பவே.. அதே போல ஒரு பிரச்னை ஏற்பட்டதும் முடிந்தவரை உடனே அதிலிருந்து வெளிவந்து அறிவுபூர்வமான கருத்துகளையோ படைப்புகளையோ, வாசிக்கவும் எழுதவும் ஆரம்பித்திடணும்.. அதிலேயே ஊறிடக்கூடாது.. அது நம் சிந்தனையின் வளர்ச்சியை தடை செய்யக்கூடும்.. 



எழுத்து ஒரு நாட்டின் நான்காவது தூண்.. ஒரு நாட்டையே, ஆட்சியையே மாற்றக்கூடிய வல்லமை எழுத்துக்கு உண்டு.. அதற்கான வாய்ப்புகள் இப்போது நம் அனைவரின் கைகளிலும்.. சமீபத்திய டிவீட்டர் புரட்சிகள் இதை நிரூபிக்கின்றன..நான் ஒருவரை பின்பற்றணும் என்றால் அவர் என்னைவிட அதிக கருத்துக்கள் கொண்டவராக மட்டுமல்ல , சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவராகவும் இருக்கணும் என விரும்புகின்றேன்..ஆக நட்பை பெற நமக்கு சில மணி  நேரம் போதும்..வலிய சென்று தொடர்ந்து சில பின்னூட்டங்கள் இட்டால் போதும்..  ஆனால் சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களை தேடுவதே நம் நோக்கமாயிருக்கணும்.. உதாரணத்துக்கு தருமி ஐயா, ஜெயபாரதன் ஐயா, கணேசன் போன்ற பலர் எழுத்துகளை தொடர்ந்து வாசிப்பேன்..

சமீபத்தில் தனலட்சுமி என்ற சிறுமியைகொத்தடிமையாக கேரளாவுக்கு விற்றுள்ளனர்.. அவல் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்.. இது வெளியானதும் 5000 குழந்தைகள் விடுவிக்கப்படுகின்றனர்.. கூவி கூவி  விற்குமளவுக்கு நம் தமிழ்நாட்டின் நிலைமை இருப்பது எத்தனை கேவலம் .. அரசு ஊழல் செய்து மக்களுக்கு இலவசம் தருது.. இப்படி ஒரு பக்கம் கொடுமை நடக்குது.. நாம் தட்டி கேட்கணும். போராடணும்..ஆக்கபூர்வமான விஷயத்தில் ஒற்றுமையா குரல் கொடுக்கணும்..


நான் எப்பவும்  நல்ல  Quotes   வாசித்து என்னையே ஊக்கப்படுத்திக்கொள்ளும் பழக்கம் வைத்துள்ளேன்.. அதில் சில இங்கே..

“It is a weak, insecure and dishonest

man who seeks to make himself look

accomplished, not through his own efforts

but by defaming others”

irene roche

when a person truly desires to do

something great, nothing can stop him.//

"Achievement seems to be connected
with action. Successful men and
women keep moving. They make
mistakes, but they don't quit."
- Conrad Hilton ..

எழுத்துக்கான ஆத்திச்சூடி..:
-----------------------------
அஹிம்சை யை நாட்ட
ஆயுதமாய் எழுத்தை எடு
இகழ்வாரைக்கண்டால்
ஈயென :) இழித்துவிட்டுசெல்.
உதவா பேச்சு, கருத்துக்கு
ஊக்கமளிக்காதே
எண்ணிய செயல்முடி
ஏசினாலும் பேசினாலும்
ஐயமா அப்படீன்னா என்னன்னு கேள்
ஒதுங்கினால் ஒடுக்கிடுவார்
ஓடட்டும் அவருன் கருத்தில்
ஒளடதம் என்பதிங்கு மாற்றம்
ஃதே படைத்திடு எழுத்தில்..


ஆங்கை என்பவர் சொன்னது பதிவுலகின்/

முகநூலின் தத்துவங்கள் :
---------------------------------------------------------

---------
"சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதா? நீ

சரியான பாதையில் போய்க்

கொண்டிருக்கிறாய்!"

"எதிரி உன்னை தாக்கவில்லையா? நீ

தவறான பாதையில்

போய்க்கொண்டிருக்கிறாய்!"

"யாரையும் கோபப்படுத்தாமல்

பேசிக்கொண்டிருக்கிறாயா? நீ

நடுத்தரவர்கத்திற்கு வால் பிடிப்பவன்"


"நீரின் ஓட்டத்தின் திசையிலேயே

நீந்துவதற்கு நீயெதற்கு பெண்ணே?

பிணம்கூட அதைத்தானே செய்கிறது?"




கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

43 comments:

சமுத்ரா said...

நல்ல அலசல்..தமிழ்ப் பதிவுலகம் பின் தங்கித் தான் இருக்கிறது..
நிறைய கமெண்ட் வருவதும், ஹிட்ஸ் வருவதும் தான் பெரிது என்ற
தவறான மனோபாவம் இங்கே நிலவுகிறது

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எழுத்துக்கான ஆத்திச்சூடி..

ஒவ்வொன்றும் சூப்பர்..! :)
நல்ல பகிர்வு, நன்றி

Sankar Gurusamy said...

பதிவுலகில் எல்லாமும் இருக்க வேண்டும். அவரவர் விருப்பத்துக்கும் மன சாட்சிக்கும் விட்டுவிடுவது நல்லது என்று எண்ணுகிறேன். நான் பார்த்தவரை மாற்றத்துக்கான‌ உண்மையான உத்வேகம் நம் தமிழ் பதிவுலகில் தெரிகிறது. இப்போதைக்கு இதை ஒரு அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்தால் இது ஒரு சரியான திசையில் வேகமாக பயணிக்கும்.

http://anubhudhi.blogspot.com/

தனி காட்டு ராஜா said...

தெளிந்த நீரோடை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HI......... HI.........!

I WISH TO WRITE SOMETHING IN MYBLOG RELATED TO IT TOMMOROW

ராஜ நடராஜன் said...

சில நேரங்களில் குழந்தைதனமான சிடுசிடுப்புக்கள்,பின்னூட்டக் குறிக்கோள் என்று சில தனிமனித குணங்கள் இருந்தாலும் பொது ஊடகங்கள் செய்யாத தொண்டாக குறுகிய வியாபார நோக்கை கடந்து கருத்து பகிர்தல் என்பதில் பதிவுலகம் சிறப்பாகவே செயல்படுகின்றது.

தமிழ் மாதிரி ஆங்கில திரட்டிகள் இல்லாத காரணத்தால் ஆங்கிலத்தில் பொன்மொழிகளாக உதிர்த்தாலும் குழுவன்றி அவை பெரும்பான்மையோரைப் போய்ச் சேர்வதில்லை என்பதனாலேயே பின்னூட்டங்கள் குறைவு என்ற எதிர் வாதத்தை முன் வைக்கிறேன்.

Kousalya Raj said...

சாந்தி அவர்கள் இந்த பதிவுலகத்தில் பெற்ற அனுபவத்தை வைத்து மிக தெளிவாக கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார்.

//அன்பான சூழலை நாம் உருவாக்க நினைத்தாலும், நம் சுற்றத்தை மாற்றாமல் நம்மால் நிம்மதியாக ஒருபோதும் இருந்திட முடியாது..//

உண்மை தோழி. சுற்றம் பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொண்டு போய் கொண்டிருக்கிறோம்...மாற்ற சிறிது முயற்சியாவது செய்யவேண்டும்.

எழுத்துக்கான ஆத்திச்சூடி

புதுமை...ரசித்தேன்.

இந்த பதிவை பகிர்ந்த கழுகுக்கு என் வாழ்த்துக்கள் + நன்றிகள்

ஊரான் said...

தங்களின் அலசல் பாராட்டுக்கறியது.

”100% சிரிப்பு பொழுதுபோக்கு மட்டுமே என இல்லாமல் சமூக சிந்தனையோடு கூடியதாக இருப்பின் அது வரப்பிரசாதம்.. நகைச்சுவையாக சமூக பிரச்னைகளை அரசியல் விமர்சனங்களை வைத்து பலருக்கு நம் கருத்தை சேர வைப்பதும் வெற்றிதானே?..இதில் முக்கியமா ஒரு விஷயம், நம் ரசனைகளை உயர்த்தணும்..

சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

”என்னென்ன சமூக பிரச்சனைகள் குறித்து எழுத முடியுமோ அத்தனையும் எழுதி தள்ளலாம்

”பதிவுலகத்தை அரசியல் மேடையாக்க விரும்புகின்றார்கள் சிலர்.. எதிரிக்கு எதிரி நண்பர் என்பது இங்கே காணலாம்..

”கடவுள் இல்லையா, மதம் சரி இல்லையா, முட்டாள் தனமா?.. இருந்துவிட்டு போகட்டும்.. எல்லா மனிதனுக்கும் முட்டாளாக இருக்க முழு உரிமை உண்டு.. நாம் எல்லோருமே முட்டாளாக இருந்திருக்கோம் , இன்னும் இருப்போம்.

”ஆனாலும்சில மூடப்பழக்கவழக்கங்களால் ( நரபலி போன்றவை ) சமூகம் சீரழியும்போது கண்டிப்பாக குரல் கொடுக்கணும்

”எழுத்து ஒரு நாட்டின் நான்காவது தூண்.. ஒரு நாட்டையே, ஆட்சியையே மாற்றக்கூடிய வல்லமை எழுத்துக்கு உண்டு.. அதற்கான வாய்ப்புகள் இப்போது நம் அனைவரின் கைகளிலும்.

”அரசு ஊழல் செய்து மக்களுக்கு இலவசம் தருது.. இப்படி ஒரு பக்கம் கொடுமை நடக்குது.. நாம் தட்டி கேட்கணும். போராடணும்..ஆக்கபூர்வமான விஷயத்தில் ஒற்றுமையா குரல் கொடுக்கணும்..

மெற்கண்ட மேற்கோள்களை சற்றே ஆய்வுக்குள்ளாக்குங்கள். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டு அதற்கெதிரான ஒரு சமரச போக்கும் இந்தக் கட்டுரையில் வெளிப்படுகிறது.

அரசியல் இல்லாமல் சமூகத்தைப் பற்றி பேச முடியாது. அப்படிப் பேசும் போது அரசியல் அணிசேர்க்கை என்பது தவிர்க்க முடியாதது. அப்படி சேரும் போது அரசியல் மேடையாக ஒரு அரங்கம் மாறுவதை தவிர்க்க முடியாது.

மூட நம்பிக்கைகள் என்றால் அவற்றை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கக் கூடாதுதான். ஆனால் அறிவியல்பூர்வமாக எதிர்க்கும் போது அதற்காக ஒரு சிலர் மனம் புண்படுகிறது என்பதற்காக நிறுத்திக் கொண்டால் மூட நம்பிக்கையை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.

எனவே தங்களின் இந்தக் கட்டுரையை ஒரு முறை மீள்வாசிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனினும் தங்களின் இந்த முயற்சிக்கு மீண்டும் ஒரு மறை எனது பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

விரிவான அலசல்.....

எழில் இளவல் said...

நல்ல கட்டுரை. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

ஆனால், கட்டுரை தவறான வலைப்பூவில் வெளிவந்து விட்டது போல் தெரிகின்றது. வாய் கிழிய பேசும் கழுகு குழும உறுப்பினர்கள், செயல் படும் தருணம் வரும்போது பொட்டிப்பாம்பாய் அடங்கிப் போய்விடுகின்றார்களே. அவர்கள் பதிவிலா நீங்கள் இக்கட்டுரையை வெளியிட வேண்டும்?

இவர்களெல்லாம் ஊருக்குதான் உபதேசம். இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை இந்த பதிவில் பாருங்கள் தெரியும்.

http://rasikan-soundarapandian.blogspot.com/2010/06/blog-post_4246.html


ஹிட்சுக்காக எழுதிக் கொண்டிருந்துவிட்டு, குழுவாக சேர்ந்து தமிழிஷில் ஓட்டுப் போட்டுக்கொண்டு இருந்து விட்டு இப்போது பெரிய அப்பாடக்கர் மாதிரி பேசுகிறார்கள்.

சமூக விஷயங்களுக்காக எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிலாவது பங்கு பெற்றிருக்கின்றார்களா? இப்பொழுது கருத்து கந்தசாமி ஆகி, அதை எழுதாதே, இதை எழுதாதே என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். பேன் காத்துக்கு அடியில் உட்கார்ந்து சமூகம் பற்றி பேசும் இவர்கள் ஒரு முறையாவது தெருவில் இறங்கி குரல் கொடுத்தார்களா. அன்லிமிடெட் கனெக்ஷனும், ஒரு கணினியும் இருந்தால் போதும் அடுத்தவரை அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூற அதுப்பு ஏறிவிடும்.

கழுகு said...

வரவேற்பும் வாழ்த்துக்களும் திருவாளர். எழில் இளவல்

தங்களின் கேள்விக்கு தார்மீக ரீதியில் பதிலளிக்கும் பொறுப்புணர்ச்சி கழுகிற்கு இருக்கிறது.

விவாதத்திற்குள் நுழையும் முன் தங்களைப் பற்றிய அறிமுகம் கழுகிற்கு அவசியமாகிறது தோழர்.....!


இயலுமா?

கழுகு said...

ஹிட்சுக்காக கழுகு எழுதிய வலைப்பூக்களை வரிசைப்படுத்தும் திரணி தங்களுக்கு இருக்குமெனில் அதை பரீட்சித்து பார்க்கும் ஒரு தேட்டையுடன் காத்திருக்கிறேன்.. தோழருக்கு திரணியிருக்குமா?

கழுகு said...

ஏதோ ஒரு வருடத்தில் எழுதப்பட்ட பதிவின் சூழல் உணராது களம் இறங்யிருப்பதில் இருக்கும் அபத்தம் உணரவில்லையெனில் அதை போதிக்கும் வல்லமை எம்மிடம் இல்லை என்று கருதுவதில் சிறு குழப்பம் இருப்பதாக கழுகு கருதுகிறது.

வினோ said...

விரிவான அலசல்... பின்னோட்டம், பதிவின் தரம் (சுய மதிப்பீடு) போன்ற விசயங்கள் அருமை...

பகிர்ந்த கழுகுக்கு நன்றி...

எஸ்.கே said...

நல்ல கட்டுரை! அந்த ஆத்திச்சூடி மிக அருமை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அனைவருக்கும் என் நன்றிகள்.. மாற்றுப்பார்வையையும் உள்வாங்கிக்கொண்டேன்..

ராஜ நடராஜன் சொன்னது…


தமிழ் மாதிரி ஆங்கில திரட்டிகள் இல்லாத காரணத்தால் ஆங்கிலத்தில் பொன்மொழிகளாக உதிர்த்தாலும் குழுவன்றி அவை பெரும்பான்மையோரைப் போய்ச் சேர்வதில்லை என்பதனாலேயே பின்னூட்டங்கள் குறைவு என்ற எதிர் வாதத்தை முன் வைக்கிறேன்.//


ஆங்கில திரட்டிகள் அனேகம் இருக்கின்றது.. அதில்தான் நான் படிப்பதெல்லாம்..

உதாரணமாய் , Technorati..

http://technorati.com/blogs/directory/

எண்ணங்கள் 13189034291840215795 said...

பிளாகர் ஊரான் கூறியது...

தங்களின் அலசல் பாராட்டுக்கறியது.



அரசியல் இல்லாமல் சமூகத்தைப் பற்றி பேச முடியாது. அப்படிப் பேசும் போது அரசியல் அணிசேர்க்கை என்பது தவிர்க்க முடியாதது. அப்படி சேரும் போது அரசியல் மேடையாக ஒரு அரங்கம் மாறுவதை தவிர்க்க முடியாது.

மூட நம்பிக்கைகள் என்றால் அவற்றை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கக் கூடாதுதான். ஆனால் அறிவியல்பூர்வமாக எதிர்க்கும் போது அதற்காக ஒரு சிலர் மனம் புண்படுகிறது என்பதற்காக நிறுத்திக் கொண்டால் மூட நம்பிக்கையை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.//

நன்றி ஊரான்..

முழுதுமாய் ஏற்கிறேன்..

கண்டிப்பாக சிலவற்றை தவிர்க்க முடியாதுதான்.. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் , மதங்களில் ஆழமாக ஊறியிருப்பவர்களை மெதுவாக, மென்மையாகத்தான் வெளிக்கொணர முடியும்.. அனஸ்தீசீயா இல்லா அறுவை சிகிச்சையாகிடக்கூடாது என்பதுதான் நான் சொல்ல வந்தது..

ஏனெனில் மதம் , நம்பிக்கை எல்லாம் மிக சென்சிட்டிவான விஷயங்கள்..

நானுமே பர்கா போடும் பெண்களை பார்த்து பரிதாப்பட்டுள்ளேன். கட்டுரை எழுதியுள்ளேன்.. அதுக்கே எனக்கு ரவுடி என்ற பட்டம் ( பரிசு ) கிடைத்தது..

அடுத்து ஓரினசேர்க்கை பற்றி அறிவியல்பூர்வமாக எழுதியபோதும்..

ஆக புது விஷயங்களை சொல்ல வருபவர்க்கு அதிக பொறுமை வேண்டும்..நம் கருத்தை உரிய முறையில் சேர்ப்பிக்க..

வர்ணாசிரமத்தை எதிர்த்த காரணத்தால் ஒரே நாளில் என் குழும அன்பர்களை பகித்தேன்..

இப்படி சமூக பிரச்னை பற்றி எத்தனை மென்மையாக பேசினாலுமே, அதுவும் ஒரு பெண் பேசும்போது பல எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் .. ஆனால் சோர்வடையாது , ஓய்வுகொள்ளாமல் தொடரணும்..நாகரீகமாக என்பது மட்டுமே என் வேண்டுகோள்..

நம்மை முதலில் எதிர்ப்பவரும் கூட பிறகு புரிந்துகொள்ளலாம்..:)

Anonymous said...

ஆழமான, அறிவுப்பூர்வமான மிகவும் பயன்படக் கூடிய பதிவு.. புக்மார்க் செய்துக் கொண்டேன்.. மிக்க நன்றிகள் சாந்தி அக்கா !!!

Yowan1977 said...

எல்லா மனிதனுக்கும் முட்டாளாக இருக்க முழு உரிமை உண்டு.
supper

Asiya Omar said...

நல்ல பகிர்வு.மிக்க நன்றி.

Anonymous said...

சரியான நேரத்தில் வந்திருக்கும் அவசியமான பதிவு. நாகரீகமான வார்த்தைகளில் எழுதியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. டெம்ப்ளேட் பின்னூட்டங்களை அனைத்து பதிவுகளிலும் சென்று இடுவதை தன்மையாக விமர்சித்திருப்பது அருமை. இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து தவறோ என்று கூட சில சமயங்களில் நினைத்ததுண்டு. இனி அப்படி யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்துவிட்டது. நல்ல கட்டுரைக்கு வாழ்த்துக்கள் சாந்தி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரைக்கு வாழ்த்துக்கள் சாந்தி.
இந்த பதிவை பகிர்ந்த கழுகுக்கு என் வாழ்த்துக்கள்.

வெங்கட் said...

// பெண்கள் பதிவுகள் பற்றி குறிப்பா சொல்லணும்
என்றால் சமையல் குறிப்புகள், தோட்டம், இல்லம்,
குழந்தை எல்லாமே சிறப்புதான்.. ஆனால் அதிலேயே
தங்கிவிடாமல் அடுத்த கட்டத்துக்கு விரைவாக
நகர்ந்திடணும்.. நாட்டு நடப்புகள் , செய்திகள் பற்றி
பேச ஆரம்பிக்கணும்.. //

இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு.,
எல்லோரும் ஒரே மாதிரி நாட்டை பற்றியும்.,
சமூகம் பற்றியுமே பேச , எழுத வேண்டும்
என்று நிர்பந்திக்க முடியாது.

நீங்கள் சொல்வதை பார்த்தால்..
பிளாக் என்றாலே சமூக கருத்துக்கள்
கொண்டவையாகவே மட்டுமே இருக்க வேண்டும்
என்று சொல்வது போல் உள்ளது..

பிளாக் என்பது நமக்கு விரும்பியதை ,
தெரிந்ததை எழுத தான்..

ஆங்கில Blog-ல் பல Types இருக்கின்றன..
அதை விக்கிபீடியா விளக்குகிறது..

There are many different types of blogs, differing not only
in the type of content, but also in the way that content is
delivered or written.

Personal blogs :

The personal blog, an ongoing diary or commentary by an individual,
is the traditional, most common blog. Personal bloggers usually take
pride in their blog posts, even if their blog is never read.
Blogs often become more than a way to just communicate;
they become a way to reflect on life, or works of art.

By Genre :

Some blogs focus on a particular subject, such as Political blogs,
Travel blogs, House blogs, Fashion blogs, Project blogs,
Education blogs, Classical music blogs, Quizzing blogs and Legal blogs.

By Media type :

A blog comprising videos is called a Vlog,
one comprising links is called a Linklog,
a site containing a portfolio of sketches is called a Sketchblog,
one comprising photos is called a Photoblog.
Blogs with shorter posts and mixed media types are called Tumblelogs.

எழில் இளவல் said...

"விவாதத்திற்குள் நுழையும் முன் தங்களைப் பற்றிய அறிமுகம் கழுகிற்கு அவசியமாகிறது தோழர்.....! "
என்று பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.

பிறகு மின்னஞ்சலிலும் வந்து
"வணக்கம் எழில்,

என் பெயர் தேவா. கழுகு என்னும் வலைப்பூவினை தொடங்கியவன் என்ற ரீதியிலும், தாங்கள் என் ஊரான காரைக்குடியை சேர்ந்தவர் என்ற ரீதியிலும் இந்த மின்னஞ்சல் செய்கிறேன். கழுகு பற்றிய விளக்கம் வேண்டுமெனில் உங்களுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் ஹிட்ஸ் என்னும் ஒரு மாய இலக்கு எமக்கும் முரணானது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளேன் உங்களின் ஆரோக்கியமான ஒரு கருத்துக்கு நன்றிகள் தோழர்.""

என்று கூறியுள்ளீர்கள். அதனால் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

நான் காரைக்குடி செக்காலை பகுதியில் பூர்வீக வீடு உடையவன். தற்பொழுது சென்னையில் வசிக்கின்றேன். எங்கள் உறவினர் திரைப்படத் துறையில் பெயர் பெற்ற ஒரு நபர். என் தந்தை தொடங்கிய ஒரு நிறுவனத்தையும் சேர்த்து, இன்னும் பல முகவாண்மைகளையும் நிர்வகித்து வருகின்றேன்.

எழில் இளவல் said...

உங்களுடைய இரண்டாவது பின்னூட்டத்தில்
''
ஹிட்சுக்காக கழுகு எழுதிய வலைப்பூக்களை வரிசைப்படுத்தும் திரணி தங்களுக்கு இருக்குமெனில் அதை பரீட்சித்து பார்க்கும் ஒரு தேட்டையுடன் காத்திருக்கிறேன்.. தோழருக்கு திரணியிருக்குமா?''
என்று கேட்டிருக்கிறீர்கள்.

http://rasikan-soundarapandian.blogspot.com/2010/06/blog-post_4246.html

இந்த பதிவில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டம்

''இரவு சவுந்தரிடம் தம்பி இப்படி ஆகிவிட்டது என்றவுடன், இரவு முழுதும் உறக்கமற்றுப் போய் காலையில் அவன் இந்த பதிவிட்டதைப் பார்த்த போது கண்கள் கலங்கியதை நான் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.''

ஹிட்சுக்காக உறக்கத்தைத் தொலைத்தாக கூறிவிட்டு, ஹிட்சுக்காக எழுதுவதில்லை என்று கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது.

உங்களுடைய பழைய பதிவுகள் ஒவ்வொன்றையும் படித்து பார்த்து அவற்றில் இருந்து மேற்கோள்கள் காட்டும் அளவுக்கு எனக்கு நேரமில்லை. நான் வாசிப்பதற்காகவே பதிவுலகிற்கு வருகின்றேன். ஹிட்சுக்காக எழுதியதை ஒத்துக்கொண்ட நீங்களே உங்களுடையவற்றிளிருந்து மேற்கோள்களை கேட்பது வெட்டி வாதத்திற்கே அன்றி, உங்களுடைய நிலையை உணர அல்ல.

எழில் இளவல் said...

என் உறவினர் சொன்ன ஒரு நிகழ்வு. எம்.ஜி.ஆர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், ஒரு படத்தில் எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் சேர்ந்து நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. படப்பிடிப்பு துவங்கும் நேரம் பார்த்து சந்திரபாபு மிகவும் உடல் நலனற்று இருந்தார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நிலையில் இல்லை. அதனால், தயாரிப்பாளர் சந்திரபாபுவிற்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைத்து படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறியிருக்கின்றார். எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். சந்திரபாபு உடல் நலம் தேறும் வரை படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம். படம் ஓடுவதற்கு என்னைப் போன்றே சந்திரபாபுவும் முக்கியமானவர் என்று கூறியிருக்கின்றார். நகைச்சுவை மீது மக்கள் கொண்ட விருப்பத்தை எம்.ஜி.ஆர் நன்றாக புரிந்து வைத்திருந்ததால்தான் அப்படி ஒரு முடிவை எடுத்தார்.

நீங்கள் எழுதிய பதிவும் ஒன்று
http://maruthupaandi.blogspot.com/2011/02/blog-post_03.html

அதில் உங்களது வரிகள் இப்படி இருக்கின்றன.
"எப்டி எப்டியோ ஓடிட்டு இருக்குற வாழ்க்கைல நகைச்சுவைன்ற ஒரு உணர்வு இல்லேன்னா... ரொம்ப போர் ஆயிடும் இல்லையா? சீரியஸா திங்க் பண்றதுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு அவசியமாத்தான் இருக்கு. அது எப்டினு கேக்குறீங்களா."

நானும் கூட என்னுடைய வேலைகளுக்கு மத்தியில் சிறிது இளைப்பாற எப்பொழுதும் படிப்பது சிரிப்பு போலிசின் ஓசி சாப்பாடு கதைகளும், செல்வாவின் மொக்கைக்களும்தான். எனக்கு பிடித்தவற்றை நான் படிக்கின்றேன். பிடிக்காதவற்றை படிப்பதில்லை. அது போல்தான் ஒவ்வொருவரும் இருப்பார்கள். ஆனால், நீங்கள் நகைச்சுவை பதிவுகளை எழுதாதீர்கள் அப்படி எழுதாதீர்கள் இப்படி எழுதாதீர்கள் என்று கூறுவது சரியில்லையே. எழுதுபவர்கள் எழுதட்டும். பிடித்தவர்கள் படிக்கட்டும். பிடிக்காதவர்கள் புறக்கணிக்கட்டும். ஹிட்சுக்காக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, திடீரென அட்வைஸ் அய்யாச்சாமியாக மாறி அதை எழுதாதே இதை எழுதாதே என்று நீங்கள் கூறுவதுதான் இன்னும் காமெடியாக இருக்கிறது.

இவ்வளவு எழுதும் நீங்கள் செக்ஸ் எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் ஜாக்கி சேகரிடம் சென்று செக்ஸ் பற்றி எழுதக் கூடாது என்று கூறுங்களேன். அவருக்கு தற்பொழுது குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு வாழ்த்துகள். ஆனால், அவரது எழுத்துகள் செக்ஸ் எழுத்தை விரும்புபவர்களுக்கு பிடித்திரிக்கிறது. உங்களுக்கு பிடிக்காவிட்டால் புறக்கணியுங்கள். அவரிடம் சென்று இப்படி எழுதக் கூடாது என்று ஹிட்சுக்காக எழுதிய நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது.

சாந்தி அவர்களின் கட்டுரைக்காகதான் இப்பதிவை படித்தேன். உங்கள் தளத்திற்கு நான் இனி வரப்போவதில்லை.

நன்றி.

Unknown said...

இந்த பதிவை படிக்கும்போது இனிமே போஸ்டே போடகூடாதுன்னு நாம ஒரு எல்லாம் எழுதி கஷ்ட படுத்துவதை விட எழுதாமல் இருப்பது மேல் என்று தோன்றியது ஒரு கணம்...

dheva said...

செக்காலைப் பகுதியில் தங்கள் வீடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..

1) தாங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதியே உன்னை வெறுக்கிறேன் என்ற பதிவு ஹிட்சுக்காக எழுதப்பட்டது என்று கணித்த உமது புத்தியின் தனித்திறமையினை கண்டு வியக்கிறேன்.

2) எழுதப்படும் ஒரு பதிவு எல்லோரு பார்வைக்கும் வரவேண்டும் என்ற எண்ணமற்று எழுதுவபர்கள் ஏதோ ஒரு மனக்கோளாறுதான் கொண்டிருக்க வேண்டும். ஒரு பதிவிட்டு அது எல்லோர் பார்வைக்கும் வந்த பின்பு அதற்கு கள்ள ஓட்டுக்கள் போட்டு இன்டிலியின் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் அதை முன்பகுதியில் இருந்து டெலிட் செய்வது ஏற்புடையதா?

3) இதைத்தான் தம்பி செளந்தரிடம் பகிர்ந்தேன் இதில் அது தவறு என்று நீங்கள் கூறுவது உங்கள் அபிப்ப்ராயம் என்பதை ஒத்துக் கொண்டு வரவேற்கிறேன். உங்களின் கூரான பார்வை பற்றி இப்போது எல்லோரும் அறிய ஒரு பொன்னான வாய்ப்பாயிற்றே இது.

4) ஜாக்கி சேகரில் இருந்து பதிவுலக எல்லா நிகழ்வுகளையும் தேர்ந்த பார்வையோடு அலசும் உங்களின் கலக்கலான தெளிவை வைத்து பார்க்கும் போது தாங்கள் ஏதோ எதேச்சையாக வந்தவர் போல தெரியவில்லை என்று என் முட்டாள்தனமான மூளை எனக்கு எச்சரிக்கிறது.

5) நீங்கள் சுவாசித்த அதே உப்புக்காற்றும் உரைக்கும் வெயிலும் எமக்கும் கிடைத்ததானாலோ என்னவோ கொஞ்ச வேகமாகவே உங்களை உற்று நோக்குகிறேன்.

6)பதிவுகள் எழுதும் ஆரம்ப காலத்தில் எல்லொருக்கும் தன்னுடைய பதிவினை அறிமுகம் செய்யும் விதமாக இணைப்புகளை கொடுப்பதும் பெறுவதும் பதிவுலகில் வழமையான ஒன்று ஆனல் ஒரு பதிவின் தரம் நிர்ணயம் செய்யப்பட்டு வாசகர்கள் சூழ்ந்த பின் பதிவுகளின் தரமே அந்த வேலையைச் செய்துவிடும்.

7) யாரோ ஒரு எழில் வளவன் வரவில்லை எனில் எமது உலகில் சூரியன் உதிக்காதா? அதுவும் எப்போதோ எழுதிய ஒரு பதிவினை எடுத்து வைத்துக் கொண்டு பேசும் நீங்கள் தேர்ந்த ஒரு பதிவர் என்பதும் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படும் இவ்வேளையில்

முதன் முதலாய் பின்னூட்டம் இடும் நீங்கள் இவ்வளவு கோபகாம ஆக்ரோசமா சீறும் படி தங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பெருந்தீங்கினை யாம் இழைத்துவிட்டோம் என்று நீங்கள் கருதினால்...

வாழ்த்துகளோடு வழியனுப்புகிறோம் தோழர்....எமது வலைப்பக்கத்திற்கு வரவேண்டாம்....!

எழில் இளவல் said...

ஒவ்வொரு நொண்டிச்சாக்குக்கும் பதிலளித்து பொழுதை வெட்டியாக்கவேண்டாம் என்று உங்கள் பின்னூட்டத்தில் முதலில் இருக்கும் சில புள்ளிகளை கடந்து செல்கின்றேன்.

""7) யாரோ ஒரு எழில் வளவன் வரவில்லை எனில் எமது உலகில் சூரியன் உதிக்காதா? அதுவும் எப்போதோ எழுதிய ஒரு பதிவினை எடுத்து வைத்துக் கொண்டு பேசும் நீங்கள் தேர்ந்த ஒரு பதிவர் என்பதும் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படும் இவ்வேளையில்

முதன் முதலாய் பின்னூட்டம் இடும் நீங்கள் இவ்வளவு கோபகாம ஆக்ரோசமா சீறும் படி தங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பெருந்தீங்கினை யாம் இழைத்துவிட்டோம் என்று நீங்கள் கருதினால்...

வாழ்த்துகளோடு வழியனுப்புகிறோம் தோழர்....எமது வலைப்பக்கத்திற்கு வரவேண்டாம்....! ""

kazhuhu.blogspot.com/2010/10/blog-post_18.html

செக்ஸ் எழுத்தாளரான ஜாக்கி சேகரை பேட்டி எடுத்து கழுகில் வெளியிட்டதன் மூலம் தாங்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு கூற விழைவது என்னவோ?

1. அனைவரும் செக்ஸ் ஜோக்குகளும் செக்ஸ் படங்களும் பார்த்து இன்புற வேண்டும்.

2. ஜாக்கி சேகர் பதிவு போட்டால் கழுகிற்கு hits அதிகமா கிடைக்கும்.

இவை இரண்டில் எது காரணம் அல்லது அது இரண்டுமேவா என்று உங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு கூறிக்கொள்ளுங்கள்.

kazhuhu.blogspot.com/2010/10/blog-post_20.html

ஜாக்கியின் பேட்டி எவ்வகை சமூக நன்னோக்கில் எழுதப்பட்டது?

''ஒரு ஒப்பற்ற ஜன நாயக நாட்டில், பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வரைமுறையற்று பரவிக்கிடக்குமொரு தேசத்தில்.. ஜாக்கியின் பேட்டி எடுக்க ஊரில் இருக்கும் பைரவர்களிடம் நாங்கள் அனுமதி பெற வேண்டுமா?''

என்று கேட்டிருக்கும் நீங்கள் மற்றவர்கள் எழுதும் பதிவுகள் மட்டும் உங்கள் அனுமதிக்குட்பட்ட தலைப்புகளில் மட்டும் இருக்க வேண்டும் என்று கூறுவதை சர்வாதிகாரம் என்று கூறுவார்கள்.

நகைச்சுவை பதிவுகள் கூடாது, சமையல் குறிப்புகள் கூடாது, அழகுக் குறிப்புகள் கூடாது என்றெல்லாம் கூறும் நீங்கள் ஜனநாயகவாதியா?

ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பப்பட்டதை எழுதட்டும். எழுதக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

எழில் இளவல் said...

உங்கள் பதிவுகளுக்கு நான் வரப்போவதில்லை. ஆனால், இங்கு இனி வரும் பின்னூட்டங்கள் என்னை நோக்கி வந்தால் பதில் சொல்ல வரவேண்டியது இருக்கும்.

dheva said...

அன்பின் எழில் கேள்வி கேட்டுவிட்டீர்கள் பதில் உங்களுக்கு சொல்லித்தானே ஆகவேண்டும். கண்டிப்பாய் பதில் கூறப்படும்.

dheva said...

எழில் இளவல்...@

18+ பற்றி கழுகில் கட்டுரை எழுதியிருக்கிறோம் அங்கே ஆபாசம் என்பதை எப்படி முறைகேடாக கையாளுகிறார்கள் என்றும் எழுதியிருக்கிறோம். தங்களின் வசதி கருதி அதை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறோம்.

தனிப்பட்ட எந்த மனிதரையும் குறித்து பாய்ந்து தாக்குதல் நடத்த எமக்கு எப்போதும் சம்மதமில்லை. கருவின் சாரம் பற்றியே எப்போதும் பேசி வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் பதிவு பதிவாக இப்போது நீங்கள் அலசிக் கொண்டிருப்பீர்கள்

ஜாக்கி பற்றிய நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கிறது அதை ஜாக்கியிடமே கேளுங்கள் அவரது பாணியில் தெளிவான பதிலை கொடுக்க கூடும்..

சரி...ஜாக்கி பேட்டி ஏன் எடுத்தோம் என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருப்பதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம் தோழர்;

ஜாக்கி என்பவர் இன்று ஒரு சக்ஸஸ்புல் பிளாக்கர் என்பதையும் விட அவர் சினிமாத்துறையில் ஒரு தொழில்நுட்ப பிரிவில் இருக்கிறார் என்பதை விட, வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து பலதரப்பட்ட போராட்டங்களை கடந்து வாழ்வின் மேல் மட்டத்திற்கு வந்த ஒரு மனிதர் என்று பல சூழ்நிலைகளில் நாங்கள் அறியப்பெற்றோம்.

ஜாக்கியின் சில பதிவுகளை வாசிக்கும் போது ஒரு வித வலியோடு கூடிய வேதனையும், அதில் இருந்த கஷ்டங்களும் தெரிய வந்தது. ஆபாசமாய் எழுதுவதை உங்கள் கண்கள் உற்று நோக்கிய தருணத்தில் ஜாக்கி என்ற் மனிதனை எமது கண்கள் உற்று நோக்கியது. வெள்ளந்தியாய் எல்லாவற்றையும் ஒத்துக்க் கொள்ளும் ஒருவித இயல்பான தன்மையை அறிய முடிந்தது. இப்படியாக நாங்கள் அறிந்த பல +களை கணக்கு கூட்டித்தான் ஜாக்கியின் பேட்டியை வெளியிட்டோம். மற்ற பேட்டிகளை விட அந்த பேட்டி உங்களை இவ்வளவு தொந்தரவு செய்திருக்கும் என்று நாங்களும் அறிந்திருக்கவில்லை.

ஆபாசமாய் எழுதும் அல்லது அப்படி நீங்கள் எண்ணும் வலைத்தளத்தின் கருத்துரைக்களுக்குக்ப் போய் கருத்து சொல்வதும், அல்லது நீங்கள் அல்லது இப்பொது உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களின் வலைப்பூக்களில் அவர்களைப்பற்றி எழுதுவது உங்களின் எதிர்ப்பை காட்டும் ஒரு உபாயம்..அதை எல்லாம் விடுத்து எம்மிடம் வந்திருப்பதின் நியாயம்தான் புரியவில்லை தோழர்..


//ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பப்பட்டதை எழுதட்டும். எழுதக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை//

சொல்வதற்கு கூட யாருக்கும் உரிமையில்லை என்று நீங்கள் கூறுவது எந்த உரிமையில் தோழர்....!


ஆரோக்கியமான விவாதமாக கருதுகிறேன். நன்றிகள் எழில்!

செல்வா said...

//ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பப்பட்டதை எழுதட்டும். எழுதக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை//

கண்டிப்பா போது வெளி என்று வந்துவிட்டால் நிச்சயம் நாலு பேர் பாராட்டுவாங்க நாலு பேர் திட்டுவார்கள் . போற்றுதலையும் தூற்றுதலையும் எதிர்கொள்ளும் திறம் இருப்போர் மட்டும் பொதுவெளியில் வருவது நல்லது என்று படுகிறது.

எழுத உரிமை இருக்கும் பட்ச்சத்தில் அதனை விமர்சிக்கும் உரிமையும் உண்டல்லவா ? அப்படி யாரும் விமர்சிக்க வேண்டாம் என நினைப்போர் ஒரு காகித்தத்தில் எழுதி வைத்துகொண்டால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.

சௌந்தர் said...

//ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பப்பட்டதை எழுதட்டும். எழுதக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.//

நல்ல காமெடியாவுல இருக்கு மேல இருக்கறத சொன்ன எழில்ண்ணன் ஜாக்கி சேகர இப்படி எழுத கூடாது அப்படி எழுத கூடாதுன்னு கண்டிசன் போடுறாரு. கொழப்பமா இருக்கே எழிலண்ணே தெளிவாத்தான் பேசுறீங்களா?

எழில் இளவல் said...

'ஒரு ஒப்பற்ற ஜன நாயக நாட்டில், பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வரைமுறையற்று பரவிக்கிடக்குமொரு தேசத்தில்.. ஜாக்கியின் பேட்டி எடுக்க ஊரில் இருக்கும் பைரவர்களிடம் நாங்கள் அனுமதி பெற வேண்டுமா?''

என்று கேட்ட நீங்கள், நகைச்சுவை பதிவுகள், சமையல் பதிவுகள் எழுத மட்டும் உங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுவது என்ன வகை என்று கூறுங்கள்.

யாரிடம் வேண்டுமானாலும் பேட்டி எடுக்க உங்களுக்கு இருக்கும் உரிமை போன்றே சமையல் பதிவுகள் எழுதுவதற்கும் மற்றவர்களுக்கு உரிமை உண்டு.

பொது வெளி என்று வந்துவிட்டால் விமர்சிக்கலாம். ஆனால் தடை போடுவது எவ்வகையில் நியாயம்? தடை போட நீங்கள் யார்?

எழில் இளவல் said...

சௌந்தர் .... @

"நல்ல காமெடியாவுல இருக்கு மேல இருக்கறத சொன்ன எழில்ண்ணன் ஜாக்கி சேகர இப்படி எழுத கூடாது அப்படி எழுத கூடாதுன்னு கண்டிசன் போடுறாரு. "

நான் ஜாக்கி சேகர் எப்படி எழுதவேண்டும் என்று கூறவில்லை. மற்றவர்களை மிரட்டும் நீங்கள் அவரை மிரட்டிப் பாருங்களேன் என்னும் அர்த்தத்தில்

''இவ்வளவு எழுதும் நீங்கள் செக்ஸ் எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் ஜாக்கி சேகரிடம் சென்று செக்ஸ் பற்றி எழுதக் கூடாது என்று கூறுங்களேன்.'

என்று கூறியுள்ளேன்.

சௌந்தர் .... @ வாக்கியங்களை படித்து சரியாக அர்த்தம் தெரிந்து கொள்ள யாரிடமாவது பயிற்சிக்கு செல்லுங்கள்.

சௌந்தர் said...

@@@எழில் இளவல்

நாங்கள் ஒரு பத்திரிக்கை போல் ஒருவரின் பேட்டியை வெளியிடுவோம்...ஒருவரை பேட்டி எடுப்பது அவரை பற்றி நன்கு இன்னும் தெரிந்து கொள்ள தான்....நான் ஜாக்கி சேகர் எழுதும் பதிவின் தலைப்பை பார்த்து விட்டு தான் உள்ளே செல்வேன்....உங்களை போல் போய் படித்து விட்டு இப்படி அப்படி இருக்கு என்று சொல்ல மாட்டேன்....பிடித்தால் படியுங்கள் இல்லை போய் கொண்டே இருங்கள் அவர் எழுதுவதை நிறுத்துவார். ஜாக்கி சேகர் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறார் போல.....

செல்வா said...

//பொது வெளி என்று வந்துவிட்டால் விமர்சிக்கலாம். ஆனால் தடை போடுவது எவ்வகையில் நியாயம்? தடை போட நீங்கள் யார்?
/

@ எழில்

வணக்கம் அண்ணா. நானும் கழுகினை வாசித்தும் சில கட்டுரைகள் எழுதியும் உள்ளேன் என்பதால் இந்தப் பின்னூட்டத்தை எழுகிறேன். நீங்க சொல்ல வரது கொஞ்சம் குழப்பமா இருக்கு?

கழுகு எந்தப் பதிவையும் தடை போடவில்லையே. தடை போடுவது என்று நீங்கள் கூறுவது சரியாகப் படவில்லை. இங்கே யாரும் யாரையும் தடை போட முடியாது அல்லவா ? கூகுள் காரர்கள் மட்டுமே நமது ப்ளாக் கிற்கு தடை போட முடியும் என்று நினைக்கிறேன்.

இவர்கள் விமர்சித்திருப்பது ஒருவகையில் உங்களைப் பாத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதுவும் உண்மைதான். இந்தக் கட்டுரையில் நானும் கூட சற்று யோசித்தேன். என்னென்றால் நானும் நகைச்சுவைப் பதிவுகளை எழுதுபவனே.

கழுகுகில் கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் நகைச்சுவைப் பதிவுகளையோ அல்ல பிற சமையல் குறிப்புப் பதிவுகளையோ கூறவில்லை என்று. நகைச்சுவை மட்டுமே எழுதிக்கொண்டிருக்காதீர்கள் என்று கூறப்பட்டிருகிறது. அந்த வரிகளில் நான் இந்தக் கட்டுரையில் இருந்து முற்றிலும் முரண்பட்டுப் போனேன்.

ஆதலால் வாசித்துவிட்டுக் கருத்துக்கூறும் நான் பெரும்பாலும் எனது கருத்துகளுக்கு முரணாக இருக்கும் பட்சத்தில் அதனைக் கண்டுகொள்ளாமல் விலகி விடுவேன். காரணம் பதிவுலகில் தினமும் அதை செய்யாதே இதை செய்யாதே என்ற பதிவுகள் வரத்தான் செய்கின்றன். அதற்க்கெல்லாம் நாம் சென்று எதிர்ப்புக் கருத்துகளைக் கூறவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை. காரணம் அது அவர்களின் கருத்து. சொல்லப்போனால் சமுதாயத்தின் மீதான அக்கறை என்று கூடக் கூறலாம். அதனையும் நாம் குறைகூறிவிட முடியாது.

நகைச்சுவையாக எழுதுவோர் நகைச்சுவையாக எழுதட்டும். சமூக அக்கரைப் பதிவிடுவோர் சமூக அவலங்களைத் தோலுரிக்கட்டும். வழமையாக பதிவுலகத்தில் கருத்து வேறுபாடுகள் என்பது அடிக்கடி நிகழ்வதே. அதனை விடுப்போம் அண்ணா.

அடுத்து தேவா அவர்களின் பதிவுகளை நீங்கள் படித்துப் பாருங்க அண்ணா. அவர் ஹிட்சுக்காக எழுதுறார் அப்படிங்கிறத கண்டிப்பா நான் முழுதுமாக மறுக்கிறேன். காரணம் அவர் பதிவுகளில் சிலவற்றையாவது படித்துப்பாருங்கள் . மேலும் தேவா அவர்களின் வலைப்பதிவிற்கும் கழுகு வலைப்பதிவிற்கும் சம்பந்தம் இல்லை.

கழுகு ஒரு குழு. நல்ல கட்டுரைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்ததில் ஆரம்பிக்கப்பட்டது. ஆதலால் ஹிட்ஸ் காக எழுதுவது வேறு கழுகின் கட்டுரைகள் வேறு. இருந்தபோதிலும் கழுகிர்க்கும் ஹிட்ஸ்கள் தேவையே. ஹிட்ச்கள் என்பது பதிவு எத்துனை பேரைச்சென்றடைகிறது என்ற நோக்கத்தில் சொல்கிறேன.. மீண்டும் வாங்க அண்ணா . நன்றி

TERROR-PANDIYAN(VAS) said...

@எழில்

//மற்றவர்களை மிரட்டும் நீங்கள் அவரை மிரட்டிப் பாருங்களேன்//

நல்லா பேசறிங்க எழில். சில சந்தேகம்

1. நீங்க மேல சொல்லி இருக்க வரிக்கு என்ன அர்த்தம்? யாரு எங்க மிரட்டி இருக்காங்க.. :)

2. பதிவ எழுதினவங்க சாந்தி. கழுகு ஒரு குழுமம். அப்படி இருக்க நீங்க ஆரம்பத்துல இருந்து தேவாவ மட்டும் தாக்க காரணம்?

3. ஜாக்கி பத்தி பேட்டி எடுத்த இதே கழுகுல தான் தேனம்மை மற்றும் சில மூத்த பதிவர் பேட்டி வந்துச்சி. அதுவும் ஹிட்ஸ்சா?

4. இப்படிதான் எழுதனும் சொல்லி கழுகு கட்டாய படுத்துதா? இப்படி இருந்தா ஆரோக்கியாமா இருக்கும் கருத்து சொன்னா தப்பா?

(எல்லாமே சந்தேகம் தான். இன்னும் நிறைய சந்தேகம் இருக்கு)

TERROR-PANDIYAN(VAS) said...

//யாரோ ஒரு எழில் வளவன் வரவில்லை எனில் எமது உலகில் சூரியன் உதிக்காதா?//

நானும் ஒரு கழுகு உருப்பினர் என்ற முறையில் இதுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிச்சிகிறேன். சபாஷ் மச்சி! அப்படினு தட்டி கொடுக்கர நண்பனவிட நீ ஏன் இப்படி எழுதி இருக்க கேக்கர (நாகரிகமான)விமர்சகர் என்னைக்கும் நம்ம எழுத்து மிளிர மறைமுகம உதவிதான் செய்யாராங்க. தொடர்ந்து வாங்க. உங்க ஆக்கபூர்வமான / அக்ரோஷமான.. :) கருத்துகளை பதிவு செய்யுங்கள். ஆனா தப்பு எங்க தேடி சரியான விஷயங்களை பாக்க தவறிடாதிங்க.

அட! எதிர்காலத்துல கழுகு நம்ம எதிரி அதனால எதிர்க்கனும் அப்படினு நினைச்சிடாதிங்க சொன்னேன்.. :)

Jey said...

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

( இந்தமாதிரி பதிவோட பின்னூட்டங்களிலும் அக்கப்போரா...)

எழில் இளவல் said...

கோமாளி செல்வா, TERROR-PANDIYAN(VAS) ,

சாந்தி அவர்கள் இக்கட்டுரையை எழுதியுள்ளார்கள் என்பது எனக்கு தெரிந்தது போல் , நான் தேவாவை மட்டும் எதிர்க்க வில்லை என்று உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன். என்னுடைய எண்ணம் தவறு போலும்.

நான் எதிர்ப்பது பதிவுலகக் காவலராக அவதாரம் எடுக்கும் அனைவரையும்தான். சமூக அக்கறை உடைய வினவு முன்னர் ஒரு முறை பதிவுலகக் காவலர் எடுக்க முனைந்தபோது எழுந்த எதிர்ப்பு தெரியும் என்று நினைக்கின்றேன்.

ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்ததை தெரிந்ததை எழுதட்டும். ஒரு வகை பதிவு பிடிக்காவிட்டால் புறக்கணிக்கலாம். ஆனால், இப்படி பதிவு எழுதக் கூடாது , அப்படி பதிவு எழுதக் கூடாது என்று கூறும் பதிவுலகக் காவலர் அவதாரம் தேவையற்றது என்பதுதான் எனது கருத்து.

கழுகிலும், தேவாவின் பதிவிலும், சவுந்தரின் பதிவிலும் நகைச்சுவை பதிவுகள் எழுதாதீர்கள் என்று பல முறை வந்துள்ளன. இவற்றை நீங்கள் அனைவருமே பல முறை படித்திருப்பீகள். அதுபோன்ற ஒன்று இல்லையென்று இப்பொழுது கூறுவது ஹி ஹி

இதுதான் எனது கடைசி பின்னூட்டமும். கடைசி வருகையும்.

நன்றி.

TERROR-PANDIYAN(VAS) said...

எழில் இளவல்

//சாந்தி அவர்கள் இக்கட்டுரையை எழுதியுள்ளார்கள் என்பது எனக்கு தெரிந்தது போல் , நான் தேவாவை மட்டும் எதிர்க்க வில்லை என்று உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன். என்னுடைய எண்ணம் தவறு போலும்.//

நீங்க போட்ட கமெண்ட்தான்

நல்ல கட்டுரை. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

ஆனால், கட்டுரை தவறான வலைப்பூவில் வெளிவந்து விட்டது போல் தெரிகின்றது. வாய் கிழிய பேசும் கழுகு குழும உறுப்பினர்கள், செயல் படும் தருணம் வரும்போது பொட்டிப்பாம்பாய் அடங்கிப் போய்விடுகின்றார்களே. அவர்கள் பதிவிலா நீங்கள் இக்கட்டுரையை வெளியிட வேண்டும்?


நீங்க சாந்தி அவர்களை ஆதரிக்கிறிங்க. நல்ல கட்டுரை சொல்லி நீங்களே சொல்லி இருக்கிங்க. அப்போ கட்டுரை கட்டுரையாளர் இரண்டும் உங்களுக்கு எதிர்ப்பு இல்லை. இப்போ உங்க குறி யார் மேல விளக்க முடியுமா?

//ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்ததை தெரிந்ததை எழுதட்டும். //

இப்படி கருத்து சொல்லூம் நீங்க எப்படி இந்த கட்டுரை பாராட்டறிங்க? இதான் நடுனிலையா?

//ஆனால், இப்படி பதிவு எழுதக் கூடாது , அப்படி பதிவு எழுதக் கூடாது என்று கூறும் பதிவுலகக் காவலர் அவதாரம் தேவையற்றது என்பதுதான் எனது கருத்து. //

இப்படி பதிவு எழுதகூடாது, அப்படி பதிவு எழுத கூடாது என்று கட்டாயபடுத்த பட்டதா? ஒரு ஆரோக்கியமான ஆலோசனையாக எடுத்துகொள்ள கூடாதா? பிடிக்கவைல்லை என்றால் எப்பொழுதும் போல நீங்கள் எழுதுங்கள். சமுக சிந்தனை இல்லாதவர்கள் காவல்துறை இடம் ஒப்படைக்கபடுவர், அவர்களூக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடும் இப்படி ஏதாவது கழுகு கூறியதா? எங்கு வந்தது நண்பரே பதிவுலக காவல்?

//இதுதான் எனது கடைசி பின்னூட்டமும். கடைசி வருகையும்.//

விமர்சிக்க விரும்பவில்லை... :)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes